பெர்லின் சுவர் வீழ்ந்த இருபதாண்டு நிறைவை ஜெர்மனி கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதே நேரம், பெர்லின் சுவரை விட உயரமான, நீண்ட சுவர் இஸ்ரேலில் இருப்பதை உலகம் மறந்து விட்டது. இஸ்ரேலில் பாலஸ்தீன பிரதேசங்களை பிரிக்கும் மதில் சுவர் கட்டப்பட்டு முடியும்தருவாயில் 750 கிலோ மீட்டர் நீளமானதாக இருக்கும். இது இடிக்கப்பட்டபெர்லின் சுவரின் நீளத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இஸ்ரேலியர்களின் சுவர் எட்டு மீட்டர் உயரமானது. அதாவது பெர்லின் சுவரை விட இரு மடங்கு அதிகம். பாலஸ்தீனரின் வயல் நிலங்களையும் ஊடறுக்கும் இந்த சுவர், இஸ்ரேலியரின் அப்பட்டமான நில ஆக்கிரமிப்பாகும்.
பெர்லின் சுவர் வீழ்ச்சியடைந்த இருபதாண்டு நிறைவு தினத்தன்று, பாலஸ்தீனர்களும், வெளி நாட்டு ஆதரவாளர்களும் சேர்ந்து இஸ்ரேலிய சுவரை வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்பார்த்ததைப் போல, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. Palestinians break Israel's wall
No comments:
Post a Comment