Wednesday, November 11, 2009

இலங்கையின் இறுதிப்போர் - மேற்கத்திய குறிப்புகள்

இந்த ஆவணப்படத்தை தயாரித்த ஊடகவியலாளர், 2001 ம் ஆண்டின் பின்னரான அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் நீட்சியாகவே, இலங்கையின் இனப் போரையும் கருதுகின்றார். இலங்கையில் நடந்து முடிந்த போர் பற்றிய மேற்கத்திய கண்ணோட்டம் எவ்வாறு அமைந்திருந்தது, என்பதை அறிந்து கொள்ள உதவும்.


6 comments:

ramesh said...

ஈழப்பிரச்சனையை மேற்கத்திய நாடுகள் இரண்டு முகங்களோடு அணுகியது. புலிகள் தோற்கடிக்கப் படவேண்டும் அதே நேரம் இலங்கையும் யுத்தத்தில் வெற்றியடைய கூடாது. இது எப்படி சாத்தியம். ஆனதே. ஈராக்ல. சதாம் கொல்லப்பட்டார். ஆட்சி அதிகாரத்தை தனக்கு கீழ்ப்படிபவர்களிடம் கொடுத்தாயிற்று. ஆனாலும் யுத்தமும், மரணமும் தொடர்கதையாய். ஆப்கனிலும் இது தான் நிலைமை. ஈழத்திலும் இப்படி தான் நிலைமை ஆகும். பெரும் பகுதியை சிங்கள ராணுவம் கைப் பற்றினாலும் யுத்தமும், மரணமும் தொடரும் என்றே மேற்கத்திய நாடுகள் கருதின. அதனால் தான் ஈழத்தில் புலிகளை ஒழிக்க முடியாது. பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்றெல்லாம் யுத்த காலத்தில் கதைத்தார்கள். ஆனால் மேற்குலகம் நினைத்ததற்கு மாறாக யுத்தம் முடிவடைந்தே விட்டது. இது எப்படி சாத்தியம் என மேற்குலகம் வினா எழுப்பி இருக்கலாம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தோற்று கொண்டு இருக்க, ஈழ மண்ணில் சிங்கள ராணுவம் எப்படி ஜெயித்தது. அவ்வளவு பலமுள்ளவர்களா? ஒரு புண்ணாக்கும் கிடையாது. மத தீவிரவாததை எதிர்த்து எந்த வல்லரசும் ஜெயிக்க முடியாது. ஆப்கனில் 80ல் ரஷியா உதை வாங்கியது. இப்போது அமெரிக்கா உதை வாங்குகிறது. நாளை சீனா உதை வாங்கலாம். ஆனால் ஈழத்தில் நடந்தது மத வன்முறையல்ல. இன மோதல். அதோடு பூகோள காரணம் காட்டி இந்தியாவை துணைக்கழைத்து கொண்டது. புலிகளின் சில செயல்(விவேகம் என்று நினைத்து பின் வாங்கிய சில விவேகமற்ற பின் நகர்வு மற்றும் எவ்வளவு நாளைக்கு அந்த குறுகிய நிலப்பரப்பை தற்காக்க முடியும்) மேலும் சகட்டு மேனிக்கு விமானத் தாக்குதல் என்று எல்லாம் சேர்ந்து வெற்றியை ஈட்டினாலும் வெற்றி வெற்றி தானே. இந்த வெற்றி மீதுள்ள கடுப்பால் கூட மேற்குலகம் மனித உரிமை மீறல் மற்றும் வேறு சில விசாரனைகள் என்று இலங்கையின் காட்டுமிராண்டி அரசை மிரட்டலாம். மற்றப்படி பாதிக்கப்பட்ட தமிழிழ மக்கள் மீது எந்த கரிசனமும் கிடையாது. சரி. மேற்குலக நாடுகள் பயங்கரவாததிற்கு எதிரான போரில் வெல்வார்களா. நிச்சயம் முடியாது. பயங்கரவாதத்திற்கும், சுதந்திர போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்கள் எப்படி ஜெயிப்பார்கள். அடுத்த நூற்றாண்டு மேற்குலகம் மத மற்றும் இன மோதல்களால் சின்னா பின்னமாகும். இன்றைய பல அவலங்களுக்கு மேற்குலகமே காரணம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சரி. ஈழம் சாத்தியமா. சாத்தியமே. மேற்குலகம் சிதையும்போது.

ஜோதிஜி said...

உங்கள் ஒளி ஒளி அமைப்பும் வந்த ஒரே பின் ஊட்டமும் உண்மையிலே ஊட்டச்சத்து போலத்தான் இருக்கிறது. இலங்கை வரலாற்றை பல் வேறு தளங்களில் கோணங்களில் பார்த்து படைத்துக்கொண்டு வரும் எனக்கு உங்கள் தளத்தை இன்று கிடைத்த வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன். மிக மிக அற்புதம். இதை விட இந்த பிரச்சனையை வேறு எந்த வார்த்தைகளாலும் புரிந்து கொள்ள முடியாது.

வாய்ப்பு இருந்தால் வந்து பகிர்ந்து கொள்ளுங்கள். வோட்டு மூலம் நகர்த்த வேண்டிய பதிவு இது.

வாழ்த்துக்கள்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

சிறந்த பின்னூட்டம், ரமேஷ்!

Haazi said...

this video is not streaming..can you suggest another link to this video ( Like Youtube)

Your articles are good..but sometime there mistakes in Islamic base articles..

Good point is your allowing Positive and negative comments in every posts

Kalaiyarasan said...

Thank you for the comment Haazi.
The video is streaming here. Some videos don't stream in some countries. Unfortunatelly, there is no You tube video under this title.
I try to omit mistakes in Islam base articles.

Anonymous said...

good artical