Tuesday, October 06, 2009

IMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநாட்டில் அமளி

(1 Oct. 09) துருக்கியின் தொழிற்துறை நகரான இஸ்தான்புல்லில் சர்வதேச நாணய நிதியத்தின் மகாநாடு ஆரம்பமாகிய தினத்தன்று அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. தலைமை உரை நிகழ்த்திக் கொண்டிருந்த ஐ.எம்.எப். அதிபர் மீது பார்வையாளர் பகுதியில் இருந்து செருப்பு வீசப்பட்டது. பேரவைக்குள்ளே ஐ.எம்.எஃப். எதிர்ப்பைக் காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர். துருக்கியில் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புகள் பலமாக இருப்பதும், உலகமயமாக்கலுக்கு எதிராக போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Shoe Thrown At IMF Chief In Istanbul protest

2 comments:

Anonymous said...

செருப்புகள் ஆயுதமாகட்டும். முதலாளித்துவம் இந்த நூற்றாண்டில் நன்றாக‌ செருப்பால் அடிபடுகிறது. துருக்கி தோழர்களுக்கு நமது வாழ்த்தும், வணக்கமும்.

பாரதி தம்பி said...

துருக்கி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்