Monday, October 12, 2009

ஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரைப்படம்

லிபியா இத்தாலியின் காலனிய அடிமைத் தளைகளால் கட்டுண்டிருந்த காலம். முழு லிபிய மக்களும் இத்தாலியின் மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். அவர்களின் மானசீக தலைவர் ஒமார் முக்தார், தள்ளாத வயதிலும் விடுதலைபோராளிகளை வழிநடத்தினார். பாலைவன கெரில்லாக்களை எதிர்த்துப் போரிட முடியாத ஆக்கிரமிப்பு இராணுவம் மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்தது. பயிரிட்ட வயல்களை கொளுத்தியது. இருப்பினும் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியவில்லை. இத்தாலிய ஆக்கிரமிப்புப் படைகளின் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய "பாலைவனச் சிங்கம்" (Lion of the Desert) என்ற திரைப்படம், கடந்த வருடம் வரையில் இத்தாலியில் தடை செய்யப்பட்டிருந்தது. அந்தனி குயின் ஒமார் முக்தாராக நடித்த இந்த திரைப்படத்தை, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் பார்த்து இரசித்திருக்கிறேன். ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகியிருந்த அந்தக் காலத்தில், ஊர் மக்களை திரட்டி சனசமூக நிலையத்தில் வீடியோவில் போட்டுக் காண்பித்தார்கள். விடுதலைப் போராட்டம் என்றால் என்னவென்று, அன்று பாமரரும் தெளிவு பெற்றனர்.

லிபிய விடுதலைப் போராட்டத்தின் வீர காவியமான "பாலைவனச் சிங்கம்" முழு நீள திரைப்படத்தை இன்றைய பதிவில் இணைத்துள்ளேன்.

Part 1

Part 2

Part 3

Part 4

Part 5

Part 6

Part 7

Part 8

Part 9

Part 10

Part 11

Part 12

Part 13

Part 14

Part 15

8 comments:

பீர் | Peer said...

நானும் பள்ளிக்காலத்தில் பார்த்திருக்கிறேன். அப்போதே என்னை புரட்டிபோட்ட படம்.

களப்பிரர் - jp said...

இதுவரை இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை. அறிமுகபடுத்யதற்கு நன்றி. சிறப்பாக இருக்கும் என்று தோன்றுவதால் நல்ல காபி டவுன்லோட் செய்கிறேன் !!

பதி said...

கல்லூரிக் காலத்தில் சில முறை பார்த்து இரசித்திருக்கின்றேன்.

உண்மைத்தமிழன் said...

அருமையான திரைப்படம்.. பல முறை பார்த்திருக்கிறேன்..!

சென்ஷி said...

அருமையான திரைப்படம். இதைத் தமிழில் மொழி மாற்றம் செய்து பாலைவனச்சிங்கம் என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர்.

Kalaiyarasan said...

மொழிமாற்றம் பற்றிய தகவலுக்கு நன்றி, சென்ஷி.

எஸ் சக்திவேல் said...

Video no longer available. (as of now)

Nasar said...

மேக்கன்னஸ் கோல்ட் என்கிற படத்தை விட
ஒமர் முக்தார் படம் நான் பலமுறை பார்திருக்கிறேன்
விடுதலையின் வீர காவியம் ஒமர் முக்தார் திரைப்படம்....