Thursday, October 22, 2009

ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவத்தை வில்லன்களாக சித்தரிக்கும் துருக்கி சினிமா படம் ஒன்று அமெரிக்காவில் திரையிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஈராக் போர் குறித்து வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் படம் முழுவுதும், அமெரிக்கர்களை கெட்டவர்களாக காண்பிப்பதால், "இது ஒரு அமெரிக்க விரோத திரைப்படம்" என்று காரணம் கூறப்பட்டது. அமெரிக்கர்கள் ஒரு திருமண விழாவில் குழுமி இருக்கும் பொது மக்கள் மீது கண்மூடித் தனமாக சுட்டுத் தள்ளுதல், தடுத்து வைக்கப்பட்ட கைதிகளை நீதிக்கு புறம்பாக கொலை செய்தல், அபு கிரைப் சிறையில் கைதிகளின் உடல் பாகங்களை அறுத்து விற்றல் போன்ற பல காட்சிகளே அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்ப காரணமாக இருந்தன. இதுவரை வந்த பல ஹோலிவூட் படங்கள் அரேபியரை "பயங்கரவாதிகளாக, கெட்டவர்களாக, வில்லன்களாக" சித்தரித்துள்ளன. அத்தகைய திரைப்படங்கள் உலகம் முழுவதும் (அரபு நாடுகளில் கூட) திரையிடப்பட்டன. அதையிட்டு அமெரிக்காவில் எவரும் ஆட்சேபிக்கவில்லை. "ஓநாய்களின் பள்ளத்தாக்கு - ஈராக்" என பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், துருக்கி தேசியவாத-இஸ்லாமியவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய திரையரங்குகளில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது.

"ஓநாய்களின் பள்ளத்தாக்கு - ஈராக்" என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் சில பகுதிகள்:



1 comment:

தங்க முகுந்தன் said...

உண்மைகளை மறைக்க ஒரு பெரியவனின்(தானாக எண்ணுபவன்) சதி!