-"புஷ், டோனி பிளேர் ஆகியோர் போர்க்குற்றவாளிகளாக தண்டனை வழங்கப்பட வேண்டும்."
- "காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்திற்கு எழு டிரில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்."
லிபிய அதிபர் கடாபி முதன்முறையாக ஐ.நா. மன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில், ஐ.நா. சபை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். வழங்கப்பட்ட 15 நிமிடங்களை விட அதிகமாக ஒரு மணித்தியாலமும் முப்பது நிமிடங்களும் உரையாற்றிய கடாபி, ஒரு கட்டத்தில் அவையினர் முன்பு ஐ.நா.சாசனத்தை கிழித்து வீசினார்.
1945 , ஐ.நா. ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டிலிருந்து, இதுவரை 65 போர்களை ஐ.நா. தலையிட்டு தீர்த்து வைக்க தவறி விட்டது என்று சாடினார் கடாபி. பாதுகாப்புச் சபை "பயங்கரவாத சபை" போன்று செயற்படுவதாகவும், அதன் நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ அதிகாரம் இரத்து செய்யப்பட வேண்டுமென்றும், அல்லது மேலதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஐ.நா. சபையின் வருடாந்த கூட்டத்தில் கடாபி ஆற்றிய உரையின் வீடியோ கீழே;
Part 2
Part 3
Part 4
7 comments:
பகிர்வுக்கு நன்றிபா
என்னா பி? கடாபியா?
அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி தோழா
முழு உரை தேடினேன், கலையரசன்...
கிடைக்குமா?
பிரதீப், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முழுமையான உரை கொண்ட வீடியோக்களை இணைத்துள்ளேன்.
அட, சத்தியமா தேடினேங்க... :)
அப்போ கிடைக்கல... மக்கு ஆயிட்டு வரேன். ஹிஹி
Text of Gadafi's speech (English)
http://www.btinternet.com/~davidbeaumont/msf/gadafi.htm
Post a Comment