Wednesday, October 21, 2009

கிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அறிக்கை

(கிறீசில் இருந்து கிடைத்த விசேஷ அறிக்கை)
ஐரோப்பிய நாடுகளின் கதவுகள் யாவும் அகதிகளுக்காக அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துருக்கிக்கு அருகில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டான கிறீஸ் இலகுவான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோர விரும்பும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் அகதிகள் முதலில் துருக்கி வருகின்றனர். அங்கிருந்து ஆட்கடத்தல்காரரின் துணையுடன் சிறு கப்பல்களில் கிறீஸ் நோக்கி பயணிக்கின்றனர்.

இவ்வாறு தான் துருக்கிக்கு அருகில் இருக்கும் கிரேக்க தீவுகளுக்கு பெருமளவு அகதிகள் வந்து சேர்கின்றனர். கிரேக்க அரசு, தஞ்சம் கோரிய அகதிகளை லெஸ்வொஸ் (Lesbos) என்ற தீவில் உள்ள தடுப்புமுகாமில் சிறை வைக்கின்றது. சிறைமுகாம் அதிகாரிகள் அகதிகளை என்ன செய்வது என்ற முடிவை எடுப்பார்கள். அனேகமாக முப்பது நாட்களுக்குள், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவைக் கொண்ட கடிதத்தை ஒப்படைப்பார்கள். அந்தக் கடிதத்துடன் விடுதலையாகும் அகதிகள் பலர் ஏதென்ஸ் நகர் வந்து சட்டவிரோதமாக தங்கிவிடுகின்றனர்.

வசதிக் குறைபாடுகளைக் கொண்ட தடுப்புமுகாமில் கால்நடைகளைப் போல அடைத்து வைக்கப்பட்ட அகதிகள் அன்றாடம் வதைபடுகின்றனர். கட்டிடத்தின் கொள்ளளவை விட மூன்று மடங்கு அகதிகள், அதாவது 900 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 19 அக்டோபர் அன்று, நரகவேதனையை பொறுக்கமுடியாத அகதிகள் தாம் இருந்த முகாம் கட்டிடத்திற்கு தீவைத்துள்ளனர். முகாமின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன், இரு அகதிகள் மயக்கமுற்றனர். லெஸ்வொஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி இரகசியமாக படம்பிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கிரேக்க சமூக ஆர்வலர்களால் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள "தடுப்புமுகாம் வீடியோவை" இத்துடன் இணைத்துள்ளேன்.

4 comments:

Unknown said...

துருக்கி வரை வரும் ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள் துருக்கியில் அடைக்கலம் கோர
வேண்டியது தானே. ஏன் ஐரோப்பிய நாடுகளுக்கே ஓடுகிறார்கள். உள் நாட்டு
பூசல்களினால் அதிகம் அல்லப்படுவது முஸ்லீம் நாடுகள் தானே. எத்தனை
முஸ்லீம் நாடுகள் அகதிகளை முறைப்படி பராமரிக்கிறது. தங்கள் மதத்து மக்களை
கூட அகதிகளாக ஏற்று கொள்வதில்லை. ஏன். பயம். தங்கள் தேசம் நாளை அகதிகளால்
சிக்கலில் சிக்குண்டால். ஆக ஐரோப்பிய தேசங்கள் மட்டும் தான் அகதிகளை
பராமரிக்க வேண்டுமா. மற்ற நாடுகளுக்கு அந்த கடமை இல்லையா. முக்கியமாக
முஸ்லீம் நாடுகளுக்கு. கொஞ்ச நஞ்சம் அகதிகளை வைத்து பராமரிப்பவனையும்
குற்றம் சொல்லிக் கொண்டு இருங்கள்.
ஏன் ஈழத்தமிழர்கள் ஐரோப்பாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும்
போகிறார்கள். பக்கத்தில் உள்ள பாக் கிற்கும், வ.தேசத்திற்கும் போகலாமே.
கடல் எல்லையில் வைத்தே சுட்டு கொன்று விடுவான். ஐரோப்பா முழுக்க பாலஸ்தீன
அகதிகள் இருக்கிறார்கள். ஆனால் ஆசிய முஸ்லீம் நாடுகள் முழுக்க பாலஸ்தீன
அகதிகள் இருக்கிறார்களா. ஏன் இல்லை. byநிஜந்த்

Unknown said...

துருக்கி வரை வரும் ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள் துருக்கியில் அடைக்கலம் கோர
வேண்டியது தானே. ஏன் ஐரோப்பிய நாடுகளுக்கே ஓடுகிறார்கள். உள் நாட்டு
பூசல்களினால் அதிகம் அல்லப்படுவது முஸ்லீம் நாடுகள் தானே. எத்தனை
முஸ்லீம் நாடுகள் அகதிகளை முறைப்படி பராமரிக்கிறது. தங்கள் மதத்து மக்களை
கூட அகதிகளாக ஏற்று கொள்வதில்லை. ஏன். பயம். தங்கள் தேசம் நாளை அகதிகளால்
சிக்கலில் சிக்குண்டால். ஆக ஐரோப்பிய தேசங்கள் மட்டும் தான் அகதிகளை
பராமரிக்க வேண்டுமா. மற்ற நாடுகளுக்கு அந்த கடமை இல்லையா. முக்கியமாக
முஸ்லீம் நாடுகளுக்கு. கொஞ்ச நஞ்சம் அகதிகளை வைத்து பராமரிப்பவனையும்
குற்றம் சொல்லிக் கொண்டு இருங்கள்.by நிஜந்த்

நிஜந்த் said...

துருக்கி வரை வரும் ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள் துருக்கியில் அடைக்கலம் கோர
வேண்டியது தானே. ஏன் ஐரோப்பிய நாடுகளுக்கே ஓடுகிறார்கள். உள் நாட்டு
பூசல்களினால் அதிகம் அல்லப்படுவது முஸ்லீம் நாடுகள் தானே. எத்தனை
முஸ்லீம் நாடுகள் அகதிகளை முறைப்படி பராமரிக்கிறது. தங்கள் மதத்து மக்களை
கூட அகதிகளாக ஏற்று கொள்வதில்லை. ஏன். பயம். தங்கள் தேசம் நாளை அகதிகளால்
சிக்கலில் சிக்குண்டால். ஆக ஐரோப்பிய தேசங்கள் மட்டும் தான் அகதிகளை
பராமரிக்க வேண்டுமா. மற்ற நாடுகளுக்கு அந்த கடமை இல்லையா. முக்கியமாக
முஸ்லீம் நாடுகளுக்கு. கொஞ்ச நஞ்சம் அகதிகளை வைத்து பராமரிப்பவனையும்
குற்றம் சொல்லிக் கொண்டு இருங்கள்.

Kalaiyarasan said...

லல்லு, நீங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வால் இவ்வாறு குற்றஞ்சாட்டுவது தவறு. பல உண்மைகளை வேண்டுமென்றே மறைப்பதன் மூலம் உங்களுடைய ஒரு பக்க நியாயத்தை நிறுவப் பார்க்கிறீர்கள். துருக்கியில் மட்டுமல்ல, ஈரான், ஜோர்டான் போன்ற முஸ்லிம் நாடுகளிலும் அகதிகள் வந்து குவிந்துள்ளனர். அங்கெல்லாம் அகதி முகாம்கள் இருக்கின்றன. ஐரோப்பாக் கண்டத்தை விட லெபனான் போன்ற அயலில் உள்ள முஸ்லிம் நாடுகளில் முகாம்களில் வதியும் பாலஸ்தீனர்கள் பல மடங்கு அதிகம். மேற்குலக நாடுகளுக்கு சென்ற ஈழத்தமிழ் அகதிகளை விட, இருபது மைல் தொலைவில் உள்ள இந்தியாவிற்கு சென்றவர்கள் அதிகம். இதனை நீங்கள் குறிப்பிடாமல் விட்டது ஆச்சரியத்திற்குரியது. நீங்கள் குறிப்பிடும் பாகிஸ்தானில் இரு தசாப்தங்களாக தங்கி விட்ட ஆப்கான் அகதிகள், பங்களாதேஷில் உள்ள மியான்மர் அகதிகள் இவர்களைப் பற்றிய விபரங்களை நீங்கள் தேடி அறிந்து கொள்வது நல்லது.