Thursday, May 11, 2017

முதலாளிகளை அகற்றி விட்டு தொழிலாளர்களே நிர்வகிக்க முடியமா?

தொழிலாளர்களே நிறுவனங்களை நிர்வகிக்க முடியமா? இந்தக் கேள்வியை பிரபல வலதுசாரி  எழுத்தாளர் ஜெயமோகனும் எழுப்பி இருக்கிறார். அரசிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைக் கட்ட மறுத்து, நாட்டை விட்டோடிய கிரிமினல் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரையில் இதைக் கேட்டுள்ளார்.

அவரது கூற்றின் படி, அவர்கள் முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர். அதுவும் ஒரு கலை தான். அதற்கென்று தனித் திறமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகிறார். இடதுசாரிகள், அல்லது மார்க்சிஸ்டுகள் எதிர்பார்ப்பது போல தொழிலாளர்கள் நிர்வாகத்தை பொறுப்பெடுப்பது சாத்தியமில்லை என்று வாதாடுகிறார்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:
//மார்க்சியச் செவ்வியல் பார்வையில் மூலப்பொருட்கள், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் என்பதில் நிர்வாகத்திற்கான இடம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல. அதை உழைப்பாளிகள் தாங்களே செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திலிருந்துதான் மார்க்சியம் தொடங்குகிறது. நிர்வாகிகளான முதலாளிகளை முழுமையாக அகற்றி மூலப்பொருட்களையும் முதலீட்டையும் கைப்பற்றி தொழிலாளர்சமூகம் தாங்களே நிர்வாகத்தை நடத்தி உற்பத்தி வினியோகம் அரசமைப்பு ஆகியவற்றை ஆற்றுவவதற்குப்பெயர்தான் மார்க்ஸியப்பொருளியல்.
ஆனால் நடைமுறை அப்படி அல்ல. எப்படி அறிவியலாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தன்னியல்பான திறமைகளால் உருவாகி எழுந்து வருகிறார்களோ அதே போல உருவாகிவருபவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் குன்றாத தன்னம்பிக்கையும் புதுப்புது வாய்ப்புகளாகத் தேடும் கற்பனைவளமும் ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன்தான் மூலப்பொருட்களையும் உழைப்பையும் மூலதனத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி சக்தியாக மாற்றுகிறது. ஓர் அறிவியலாளரும் சிந்தனையாளரும் எப்படி மாற்றீடு செய்யப்பட முடியாதவர்களோ அப்படித்தான் முதலாளிகளும். அவர்களைத் தொழில்முனைவோர், பெருநிர்வாகிகள் என்ற சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன்.//

மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமா என்று சந்தேகம் எழுப்புவோர் முதலில் முதலாளித்துவம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். வருங்கால சோஷலிச சமுதாயத்திற்கான மையக்கரு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து தான் தோன்றுகிறது.

முதலாளிகளைப் பற்றிப் பேசினால், சினிமாவில் வருவது போன்று, தனி ஒரு நபர் முதல் போட்டு கம்பனி நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணத்தில் தான், ஜெயமோகனும் விஜய் மல்லையாவை "தொழில் முனைவோர்" என்று எழுதி இருக்கிறார். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே, பெரிய நிறுவனங்களின் கட்டமைப்பு மாறி விட்டது. ஒரு தொழிலதிபர் நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

குறிப்பாக, கார்பரேட் நிறுவனங்களில், பெரிய வரையறுக்கப் பட்ட வர்த்தக நிறுவனத்தில் கூட, தனி ஒருவரை முதலாளியாகக் காண முடியாது. அதை ஒரு நிர்வாகிகள் குழு தான் நடத்துகின்றது. அந்த நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வைத்திருப்போர் ஒரு குழுவாக ஒன்று கூடி நிர்வகிப்பார்கள்.

அது பெரும்பாலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரர் கூட்டமாக இருக்கும். அவர்களில் பலர் முதல் போட்டு விட்டு, இலாபத்தை எதிர்பார்க்கும் உரிமையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். சிலர் தமக்கு இலாபத்தில் பங்கான டிவிடன்ட் பணம் கிடைத்தால் போதும் என்று வீட்டில் இருப்பதுமுண்டு.

அதே நேரம், சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் கற்பனை செய்வது போன்று, பங்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, ஒரு சில பங்குகளை வாங்குவதால் மட்டும் ஒரு சாமானியன் முதலாளியாக முடியாது. ஒரு பங்கு வாங்கி வைத்திருப்பவரை விட, ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்கு மட்டுமே பங்குதாரர் கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பெருமளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே கம்பனியில் உரிமை உண்டு. அவர்களைத் தான் முதலாளிகள் என்று அழைக்கிறோம். 

உண்மையில் பெரும் மூலதனத்தை செலுத்தியோர், அதாவது முதலாளிகள், கம்பனியை நிர்வகிக்கும் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை.  சிலநேரம், தலைமை நிர்வாகிக்கு பங்குகளில் ஒரு பகுதியை கொடுத்து, அவரையும் பங்குதாரர் ஆக்கி இருப்பார்கள். (அதை விட போனஸ் தனியாகக் கிடைக்கும்.) ஏனையோர் சம்பளம் வாங்கிக் கொண்டு நிர்வாக வேலை செய்கிறார்கள். அதாவது, அதிகம் சம்பாதிக்கும் மூளை உழைப்பாளிகள். அவர்கள் வணிக முகாமைத்துவம், அல்லது அது போன்ற ஏதாவதொரு துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிவுஜீவிக் குழுவாக இருப்பார்கள்.

ஆகவே, வணிகம் பற்றியோ, நிர்வாகம் பற்றியோ எந்த அறிவுமற்ற, சிலநேரம் கல்வியறிவு எதுவுமற்றவர்கள் கூட, பங்குதாரர் என்ற பெயரில் கம்பனியின் நிர்வாகக் குழுவில் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், ஏன் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது? அதாவது, பணம் படைத்த முதலாளிகளை மட்டுமே கொண்ட, பங்குதாரர்களின் நிர்வாகக் குழுவிற்குப் பதிலாக, தொழிலாளர்களின் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக் குழு அமைக்க முடியாதா? எது எப்படியோ, அவர்களுக்கு கீழே நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றவர்கள் சம்பளத்திற்கு தானே வேலை செய்கிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்களில், தலைமை நிர்வாகிக்கு சில பங்குகள் கொடுப்பதன் மூலம், அவரையும் பங்குதாரர் குழுவில் உறுப்பினர் ஆக்குகிறார்கள். அது ஏன் ஒரு சோஷலிச பொருளாதார நிர்வாகத்தில் சாத்தியப் படாது? அதாவது, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் ஒரு நிர்வாகி முதலாளிகளில் ஒருவர் ஆகிறார். ஆனால், சோஷலிச நிறுவனத்தில் ஒரு நிர்வாகி தொழிலாளிகளில் ஒருவர் ஆகிறார். அது மட்டும் தானே வித்தியாசம்? அவரது கடமையும், வேலையும் ஒன்று தானே?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை, பலர் தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. உண்மை நிலவரம் வேறு. இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது, இங்கே ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பங்குதாரர் எனப்படும் முதலாளிகள் குழுவிடம் உள்ளது. அதற்கு மாறாக, அதே நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் தொழிலாளர் குழுவிடம் இருந்தால் அது தவறா?

மேலும், பங்குதாரர்களான முதலாளிகளுக்கு, அந்தத் தொழில்துறை சார்ந்த அடிப்படை அறிவிருக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக, தொழிற்சாலையும், அதன் உற்பத்தி பற்றியும் அனுபவ அறிவு கைவரப் பெற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தை மேற்பார்வை செய்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அடிப்படையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. ஏனென்றால், ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களால், ஒரு பொதுத் தேர்தலில் வாக்களித்து தெரிவான பிரதிநிதிகள் தான் தொழிலாளர் நிர்வாகத்தில் இடம்பெறுகிறார்கள்.  இன்றைய நிறுவனங்களின் முதலாளிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா? இல்லையே! நாம் அன்றாடம் சந்திக்கும் சர்வாதிகாரத்தை, சாதாரணமாக எடுத்துக் கொள்வது எப்படி?  

இன்றைய காலத்தில், "ஜனநாயகம்" இருப்பதாக சொல்லப்படும் நாடுகளில், தனியார் நிறுவனங்கள் வளர்ந்து, பொருளாதாரத்தில் பெரும் பகுதியை கட்டுப்படுத்துகின்றன. அது எப்படி ஜனநாயகம் ஆகும்? அதிகாரமற்ற அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிந்தெடுப்பதால் மட்டுமே, அந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக சொல்ல முடியுமா?

மேலதிக விபரங்களுக்கு,
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

3 comments:

Chengon said...

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்களது முதலாளித்துவ பொருளியலில் ...என்ற கட்டுரையில் முலாளித்துவத்துக்கு மாற்றான புதிய பொருளாதார முறைக்கான வீரியமிக்க விதை/கரு ஒன்று புதைந்துக் கிடக்கிறது. அக்கருவையும் அதன் வீரியத்தையும் மக்கள் புரிந்துக் கொண்டால் விஜய மல்லையாக்கள் இல்லாத புதிய பொருளாதார முறை உருவாகி வளருவதற்கான புதிய நிலமைகள் நிலவி லருகிறது.
இதனை மக்களும் மார்க்சீயர்களும் சோசலிச சிந்தனை கொண்ட தொழில் முனைவோர்களும் தங்களை போன்ற அறிஞர்களும் புரிந்துக் கொள்ளாமல்
விஜய மல்லையாக்கள் போன்ற முதலாளிகளும் தொழில் முனைவோர்களும் தோன்றுவதற்கும் வளர்வதற்கும் துணை புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை மக்களும் சோசலிச சிந்தனையாளர்களும, தொழில் முனைவோர்களும் அவர்களின் அமைப்புகளும் புரிந்து கொண்டு புதிய பொருளாதார முறைய தோற்றுவிக்க வேண்டும். அதற்கு தங்களை போன்றவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காகவே எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட புதிய நிலைமைகளை முதலாளிகளின் பார்வையில் சரியாக புரிந்துக் கொண்டு, தைரியமாக வெளியிட்டுள்ளீர்கள்.
மார்க்சீயர்கள் இதுவரை சரியாக புரிந்துக் கொள்ளாமல் மறுத்து வரும் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி.
சமூகத்தின் புதிய உண்மை நிலமயை யார் வெளிப்படுத்தினாலும் அது வரவேற்புக்குரியதே. உண்மை எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள சொன்னார் லெனின். அதுவே எதிர்காலத்தில் சரியான பாதையில் நடை போட வைக்கும்.
இந்த புதிய பொருளாதார நிலைமைகளையும், இதன் அரசியல் பொருளாதார அடிப்படைகளையும் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன், சோவியத் யூனியனும் அணுக்குண்டு கண்டு பிடித்தவுடன் மார்க்சீயர்களும், புரட்சியாளர்களும் புரிந்துக் கொண்டிருந்தால், புதிய அரசியல் பொருளாதார திட்டங்களை வகுத்திருந்தால், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு சற்று மாறியிருக்கும், மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.
தங்களுக்கு 1985 வாக்கில் இப்புரிதல் ஏற்பட்டு, அதனை அப்போதே சரியாக வெளிப்படுத்த முடிந்திருந்தால், சமூகத்திற்கு பெரும் பயன் விழைந்திருக்கும். புரட்சிகர, முற்போக்கு சக்திகளில் திறமைகளும், தீவிர முனைப்பும் கொண்ட பல்லாயிரம் இளைஞர்கள் சரியான புரிதலுக்கு வந்து அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்தோ தனியாகவோ ஆக்க பூர்வமாக செயல்பட்டு பெரிய சாதனைகள் புரிந்திருப்பர். மக்களின், சோசலிச தொழில் முனைவோரின் புதிய அமைப்புகளும் தோன்றியிருக்கும். அவை சமூகத்தை மேலும் முன்னேற்றியிருக்கும்.
தங்களின் கருத்துக்கள் காலம் தாழ்ந்து வெளி வந்துள்ளது. இனியாவது மக்கள் நலம் நாடுவோர் சமூகத்தின் புதிய நிலைமைகளையும், வாய்ப்புகளையும் புரிந்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ தொழில் முனைவோர்களை விட சோசலிச தொழில் முனைவோர்கள், மக்கள் அமைப்புகள் சிறப்பாக செயல் பட வேண்டும், மக்களை வேகமாக முன்னேற்ற வேண்டும் என்பதே இவ்விசயத்தை மக்கள் பார்வையில் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பு. இது வெறும் இலட்சிய பார்வையல்ல நடைமுறை சாத்தியமே என்பதை எதிர்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.
தாங்கள் குறிப்பிடும் புதிய நிலைமைகளும், முதலாளிகளின் புதிய பொருளாதார திட்டங்களும் உருவானதற்கான அரசியல் பொருளாதார அடிப்படைகள் என்ன?.
மார்க்சீயர்களின் சோசலிச பொருளாதாரத்தால் உலகமெங்கும் ஒழுங்கு மிகுந்த சோசலிசத்தை விரைவாக கொண்டு வரமடியாமல் பின்னடைவு ஏற்பட்டதேன்?.
இன்றிருப்பது புரட்சிகர கால கட்டமா? சீர்திருத்தக் காலகட்டமா?. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான பழைய ஏகாதிபத்தியம் தான் இன்றளவும் இருக்கிறதா? அதன் அடிப்படை தன்மைகளில் மாற்றம் ஏற்படவில்லையா?. முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான சுதந்திர பொருளாதாரம் எனும் தொழில் முனைவோரின் எல்லையற்ற, கட்டுப்பாடற்ற போட்டி பொருளாதாரம் தான் இன்றும் இருக்கிறதா?.
இது போன்ற பல அடிப்படை விசயங்கள் உள்ளன. இவை பற்றி பெருமளவுக்கு சரியாக புரிந்துக் கொள்ளாமல் மேல் மட்டத்தில் உள்ள புதிய நிலைகளை மட்டும் புரிந்துக் கொண்டவர்களால் எதிர்காலம் பற்றிய விசயங்களில் தவறான கணிப்புக்கே வரமுடியும்.
அமெரிக்காவும் ரஸ்யாவும் அணுக்குண்டு கண்டுபிடித்தவுடனேயே இதுவரை இருந்து வந்த அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையே மாறி விட்டது. ஏகாதிபத்தியங்களாலும் மக்களாலும் படை பலத்தால் வெல்ல முடியாது. அழியாமல் இருக்க வேண்டுமானால் சமாதானம் செய்தேயாக வேண்டும். சமாதானம் கட்டாயமானால் ஏகாதிபத்திய யுத்தங்கள் வராது. ஏகாதிபத்திய யுத்தங்கள் வராவிட்டால் புரட்சி வராது. அதாவது புரட்சி கர காலகக்கட்டம் முடிவடைந்து விட்டது, சமாதான/சீர்திருத்த காலகட்டம் ஆரம்பித்து விட்டது என்பதே பொருள்.
...2