"அங்கர் வட்" - கம்போடியாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்துக் கோவில். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தப் புராதன சின்னத்தைப் பார்ப்பவர்களுக்கு மறைந்து போன கம்போடிய பொற்காலம் நினைவிற்கு வரும். அன்றைய கிமேர் பேரரசான கம்போடியாவில் இந்துநாகரிகம் பரவியிருந்தபோது இந்த மாபெரும் கோவில் கட்டப்பட்டது. (சிலர் நினைப்பது போல, கம்போடியா இராஜராஜ சோழனின் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. தென்னிந்திய வணிகர்களால் பரப்பப்பட்ட இந்து மதத்தை தழுவிக்கொண்ட உள்ளூர் அரச வம்சத்தின் சுதந்திரத் தேசமாக இருந்தது.)
இப்போது அந்தக் கோவிலுக்கு என்ன வந்தது ?
ஒரு முறை, அயல்நாடான தாய்லாந்தின் பிரபல நடிகை சுவன்னா, அங்கர் வட் கோவில் தாய்லாந்திற்குச் சொந்தமாக்கப்படவேண்டும் என்று கூறியதாக வந்த செய்தி கலவரத்தைத் தூண்டிவிட்டது. சீற்றமுற்ற கம்போடியர்கள் வீதிகளில் தாய்லாந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாய்லாந்துத் தூதுவராலயம் முற்றுகையிடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டன அல்லது தீயிடப்பட்டன.
கலவரம் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்குமிடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான எல்லை மூடப்பட்டது. விமானப்போக்குவரத்துகள் ரத்துச்செய்யப்பட்டன. தாய்லாந்துப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகை மன்னிப்புக் கோரினார். தான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை என வாதிட்டார். கம்போடிய ஜனாதிபதி ஹன் சென் நடந்த கலவரத்திற்காக மன்னிப்புக் கோரினார். கலவரத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமெனவும் அறிவித்தார். இவ்விரு நாடுகளிலும் உள்ள தேசியவாதிகள்தான் பிரச்சனைக்குக் காரணம் என யாரும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைவிட நீறு பூத்த நெருப்பாகவிருக்கும் பிற பிரச்சனைகள் என்ன?
இந்த இரு அயலவர்களும் கடந்த காலத்தில் அடிக்கடி எல்லைபற்றி தர்க்கித்தமை முன்பே தெரிந்த விடயம்தான். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்போடியாவை ஆண்ட பிரஞ்சுக் காலனிய அரசு, தாய்லாந்துடன் எல்லைகளை வகுத்து ஒப்பந்தம் போட்டது. இதன்படி சிலவிடயங்கள் பரிமாறப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது பிரஞ்சுக்காரரை விரட்டிவிட்டு கம்போடியாவை ஆக்கிரமித்த யப்பானியருடன் தாய்லாந்து இன்னொரு ஒப்பந்தம் போட்டது. இதன்படி, மேலும் சில கம்போடியப் பிரதேசங்கள் தாய்லாந்து வசமாகின. இதற்கு மாறாக ஜப்பானியர்கள் தாய்லாந்தூடாக, (பிரிட்டிஷ்) இந்தியாமீது படையெடுக்க அனுமதிக்கப்பட்டது. போர்முடிந்து யப்பானியர்கள் பின்வாங்கி ஓடிப்போக, திரும்பிவந்த பிரஞ்சுக்காரர்கள் இரண்டாவது ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு முன்னிருந்த எல்லைகளைக் கொண்டுவந்தனர். வியட்னாம் போரின்பின் பிரஞ்சுக்காரர்கள் வெளியேறவே ஆட்சிக்கு வந்த உள்ளூர் கம்போடியர்கள் தாய்லாந்துடன் எல்லை குறித்துப் பிரச்சனைப்பட்டனர். இது எல்லையில் இராணுவ மோதலில் போய்முடிந்தது. பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. வழக்கில் கம்போடியாவிற்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்தது. அப்போது எல்லைக்குச் சமீபமாகவிருந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த அங்கர் வட் கோயில் பிரதேசம் பற்றிப் பேசப்படவில்லை. அன்றைய தீர்வுகளால் திருப்தியடையாத தாய்லாந்துக் காரர்கள் இப்போது கோயிலை வைத்து எல்லைப்பிரச்சனையை மீண்டும் தொடக்க நினைத்திருக்கலாம். பெரும்பான்மையான தாய்லாந்துக்காரரும், கம்போடியர்களும் பொளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பனிப்போர்க்காலத்தில் தாய்லாந்து சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. வியட்னாமிலும் கம்போடியாவிலும் சண்டையிட்ட அமெரிக்கத் துருப்புகள் தாய்லாந்தைத் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். "ஆசியாவில் சோவியத் விஸ்தரிப்பை"த் தடுக்கும் புனிதக் கடமையில் கூட்டுச்சேர்வதாக தாய்லாந்து அறிவித்தது. கம்யூனிச கிமேர் றூஷ் இயக்கம் கம்போடியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு எதிர்க்கட்சிகளுக்கும், அகதிகளுக்கும் தாய்லாந்தில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. நீண்டகால உள்நாட்டப்போர் முடிவுற்றபின்பு வந்த ஜனநாயகக் கம்போடியாவில், மேற்குலகின் நம்பிக்கைக்குரிய ஆளாக தாய்லாந்து அரசியல் மத்தியஸ்தம் வகித்தது. தொன்னூறுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களின் பின்புதான் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. கம்யூனிஸ்டுகளல்லாத கம்போடியக் கட்சிகள்கூட தாய்லாந்தின் அரசியல் மத்தியஸ்தத்தை அவநம்பிக்கையுடன் நோக்கின. அதற்குக் காரணம், போரால் அழிவுற்ற தமது நாட்டை மீளக்கட்டியமைக்க தாய்லாந்து போதியளவு உதவிகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. சமாதானம் வந்தவுடனேயே ஓடிவந்து முதலீடு செய்த தாய்லாந்து வர்த்தக நிறுவனங்கள் காடுகளை அழிக்கின்றன. மீள்முதலீடு செய்வது கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிருப்தியற்ற கம்போடிய அரசாங்கம் மலேசியா, சிங்கப்பூருடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய நினைத்ததை தாய்லாந்து விரும்பவில்லை.
கம்போடியாவில் தாய்லாந்தின் பொருளாதார மேலாண்மை சாதாரண வர்த்தக முதலீடுகளுடன் நின்றுவிடவில்லை. கலாச்சார ஆதிக்கம் குறிப்பாக இளஞ்சமுதாயத்தை குறிவைக்கின்றது. தாய்லாந்துத் திரைப்படங்கள், பாடல்கள் என்பன இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. சாதாரண இளைஞர்கள் தாய்லாந்து நடிக-நடிகையரைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு, அவர்களின் உருவப்படங்களை ( தற்போது சர்ச்சயைக் கிளறியிருக்கும் சுவன்னா உட்பட) தமது படுக்கையறையில் மாட்டி அழகுபார்க்குமளவிற்கு சினிமா மோகம் இளைஞர்களை ஆக்கிரமித்துள்ளது. (அங்கேயுள்ள நிலையை நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் கலாச்சார ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சினிமாவோடு ஒப்பிடலாம்). அண்மையில் நடந்த தாய்லாந்து எதிர்ப்புக் கலவரத்திற்குப் பின்னர் தாம் ஒரு காலத்தில் ஆராதித்த மனங்கவர்ந்த நடிகை சுவன்ணாவின் படங்களை இளைஞர்கள் கிழித்தெறியத் தொடங்கியுள்ளனர். தாய்லாந்துத் திரைப்படங்கள் அளித்த மதிமயக்கத்தில் கிடந்த மக்களுக்கு, அவற்றை உற்பத்தி செய்து அனுப்பும் நாட்டின் பொருளாதார மேலாண்மை தெரிந்திருக்கவில்லை. தற்போது திடீரென விழித்துக்கொண்டவர்களாய் தாய்லாந்தின் பொருளாதாரப் புறக்கணிப்புகள் பற்றி பேசத்தொடங்கியுள்ளனர்.
கம்போடியாவில் பெரும்பான்மையான ஹொட்டேல்கள், உணவு விடுதிகள் ஆகியன தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமானவை. தொலைத்தொடர்புத் துறையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தப்பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்த அல்லது பெரும் முதலாளிகளைக் கொண்ட தாய்லாந்து தன்னைச் சற்றியிருக்கும் பின்தங்கிய வறிய நாடுகளான லாவோஸ், கம்போடியாவில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி முதலிட்டு வந்தது. அந்நாடுகளில் முதலிட்ட தாய்லாந்து வர்த்தகர்கள் பலனடைந்த அளவிற்கு உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. "உள்ளூர் மக்களின் நலன்களைப்பற்றி எந்தச் சிந்தனையுமில்லாமல், நாம் பெருமளவில் முதலிட்டு இலாபமீட்டி வந்தோம். எம்மை பொருளாதாரக் காலனியவாதிகள் என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு வெற்றிகரமாகவும் அதேநேரம் தீவிரமாகவும் எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. மக்களின் அதிருப்தியை அந்நாட்டு அரசியல் வாதிகள் தேசிய உணர்வைத்தூண்டப் பயன்படுத்துகின்றனர். அதனைக் கண்டிக்கும் நாம் , எமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்காக மேலைநாடுகளுக்கெதிரான தேசியவாதம் வளர்ப்பது முரண்நகையாகவுள்ளது." என ஆசிரியர் தலையங்கம் தீட்டியது திடீரென விழித்துக்கொண்ட தாய்லாந்தின் பிரபல "பாங்கொக் போஸ்ட்" பத்திரிகை.
கம்போடிய அரசாங்கம் தனக்கும் கலவரத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டாலும், ஆளும் கட்சிகள் தாய்லாந்து எதிர்ப்புணர்வால் ஆதாயம் அடைகின்றன. தாய்லாந்தை எதிரியாகக் காட்டும் கம்போடியத் தேசியவாதம் வளர்த்துவிடப்பட்டிருக்கலாம். தாய்லாந்தினுள்ளும் சில புத்திஜீவிகள் தமது அரசின் தன்னலம் கருதும் மேலாண்மைப் போக்கை விமர்சிக்கின்றனர். பாங்கொக் போஸ்டும் இத்தகைய சுடலை ஞானத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தது. அயல் நாடுகளுடன் நட்பும், வெறுப்புமான உறவு தொடர்ந்த பதட்டநிலைக்கே வழிவகுக்கும். முதலீடுகளால் எமக்கு வரும் ஆதாயத்தை மட்டும் பார்க்காமல் நாம் கம்போடிய மக்களுக்கு என்ன திருப்பிச் செய்துள்ளோம் என்றும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள்.

7 comments:
நல்ல தகவல்கள் !
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
/--கலாச்சார ஆதிக்கம் குறிப்பாக இளஞ்சமுதாயத்தை குறிவைக்கின்றது. தாய்லாந்துத் திரைப்படங்கள், பாடல்கள் என்பன இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. சாதாரண இளைஞர்கள் தாய்லாந்து நடிக-நடிகையரைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு, --/
இந்தியாவிலும் அதுபோலத்தான் ஹாலிவுட் நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும் அதிக மவுசு.
/-- அங்கேயுள்ள நிலையை நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் கலாச்சார ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சினிமாவோடு ஒப்பிடலாம் --/
இந்தியாவில் அமெரிக்க மோகம் அதைவிட அதிகம். மேற்க்கத்திய நாடுகளின் இசைக்கு இந்தியாவில் இருக்கும் மோகம் சொல்லி மாளாது. நமது பாரம்பரிய இசையை ச்சீ என்று சொல்லுமளவிற்கு வந்துள்ளது.
ஒரு கலைஞனுக்கு இந்திய அளவில் பெரிய விருதைக் கொடுத்தால் மகிழாதவர்கள், வெளிநாட்டு விருது கிடைத்தால் மோட்சம் அடைந்தது போல் மகிழ்கிறார்கள்.
கோவி கண்ணன், உங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
//ஒரு கலைஞனுக்கு இந்திய அளவில் பெரிய விருதைக் கொடுத்தால் மகிழாதவர்கள், வெளிநாட்டு விருது கிடைத்தால் மோட்சம் அடைந்தது போல் மகிழ்கிறார்கள்.//
ஆமாம், நான் கூட நினைத்தேன். ஸ்லம்டொக் மில்லியனர் வர்த்தக நோக்கோடு எடுக்கப்பட்ட ஒரு சராசரி படம். அதற்கு எப்படி ஆஸ்கார் விருது கொடுத்தார்கள் என்று. இந்தியர்களை வளைத்து எப்படி கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற வித்தை ஹாலிவூட்டிற்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இலங்கையை பாலிவூட் விழுங்கிக் கொண்டிருக்கிறது, இந்தியாவை ஹாலிவூட் விழுங்குகின்றது.
Informative post. Thank you.
அரிய தகவல்கள்!
அறியத் தந்தமைக்கு நன்றிகள்!!
Thank you Bala & இளைய கரிகாலன்.
Post a Comment