மலேசியா உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. கிறிஸ்தவர்களும் "அல்லாஹ்" என்ற சொல்லை பாவிக்கலாமா? என்பதே அந்த வழக்கு. மலேசியாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர்கள் "அல்லாஹ்" என்ற சொல்லை பாவிக்க தடை இருந்தது. மலே கத்தோலிக்கர்களின் பத்திரிகையான "ஹெரால்ட்", அந்த தடையை மீறியிருந்தது. குறிப்பாக மலே மொழி பேசும் கிறிஸ்தவ சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப் படுத்திய அந்தப் பத்திரிகை நீதிமன்றுக்கு இழுக்கப்பட்டது. வாதங்களை விசாரித்த நீதிபதி, அல்லாஹ் என்ற வார்த்தையை கிறிஸ்தவர்களும் பயன்படுத்தலாம் என தீர்ப்பளித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள், தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தன. "அல்லாஹ் முஸ்லிம்களுக்கே மட்டுமே சொந்தம்." என உரிமை கொண்டாடின. கோலாலம்பூர் நகரில் சில கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. தேவாலயங்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதாக கூறிய மலேசிய பிரதமர், "அல்லாஹ் மீதான தடையை" ஆதரித்து பேசினார்.
அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் கடவுளை (மட்டும்) குறிக்கும் என்று தான், பிற மதத்தவர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றார்கள். சில முஸ்லிம் பாமரர்களும், மத அடிப்படைவாதிகளும் அல்லாஹ் என்ற வார்த்தையை ஒரு முஸ்லிம் மட்டுமே உச்சரிக்க முடியும் என வாதிடுகின்றனர். இது ஒரு வகையில் "இறைவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை" என்ற திருக் குர் ஆனின் அடிப்படைக்கு முரணானது. "இறைவன் ஒருவனே" எனில், அது உலகமாந்தர் அனைவருக்கும் பொதுவான இறைவனையே சுட்டி நிற்கும். அது போலத்தான், "அஸ்ஸலாமு அழைக்கும்" (உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக) என்ற அரபு சொற் தொடரையும் முஸ்லிம்கள் மட்டுமே கூற வேண்டும் என அடம் பிடிப்பவர்களைக் காணலாம்.
இஸ்லாமிய மதம் அரபு மொழியை அடிப்படையாகக் கொண்டது. திருக்குர்-ஆன் அரபு மொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. (மொழிபெயர்ப்புகள் இருந்த போதிலும், இஸ்லாமிய மாணவர்கள் மூல மொழியிலான அரபிலேயே படிக்கின்றனர்.) இஸ்லாமியப் படையெடுப்புகள் ஈராக் வரையிலான மக்களை அரபு மொழி பேசுவோராக மாற்றின. இருப்பினும் ஈரானுக்கு அப்பால், அரபு மொழி மத அனுஷ்டானங்களுடன் மட்டும் நின்று விட்டது. சாதாரண மக்களின் பேச்சு மொழியாக மாறவில்லை. இருப்பினும் முஸ்லீமாக மக்கள், சில அரபுச் சொற்களை தமது பெயர்களிலும், அன்றாட பேச்சு வழக்கிலும் சேர்த்துக் கொண்டனர். அவ்வாறு தான், அல்லாஹ் என்ற அரபுச் சொல், முஸ்லிம்களின் கடவுளைக் குறிக்கும் என்ற தப்பபிப்பிராயம் தோன்றலாயிற்று.
தமிழர்கள் "கடவுள், இறைவன், ஆண்டவன்" என்று சொன்னார்கள். சமஸ்கிருதக்காரர்கள் "பகவான்" என்றார்கள். ஆங்கிலேயர்கள் "God " என்றார்கள். பிரெஞ்சுக்காரர்கள் "Dieu " என்றார்கள். அவ்வாறே அரபு மொழி பேசுவோர் "அல்லாஹ்" என்றார்கள். அரபு மொழியில் "இலாஹ்" என்ற பெயர்ச் சொல்லுடன், அல் என்ற விகுதி சேர்ந்து அல்லாஹ் என்றானது. அது இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பாவனையில் இருந்துள்ளது. அரேபியாவில் வாழ்ந்த மக்கள், வேறெந்த பெயரில் கடவுளை அழைத்திருப்பார்கள்? ஒரு வேளை அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால்?
சவூதி அரேபியாவில், ஜுபைல் நகருக்கு கிழக்கே உள்ள பாலைவனத்தில், உலகிலேயே மிகப் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அனேகமாக கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அரேபிய கிறிஸ்தவர்கள் வழிபட்ட ஸ்தலமாக இருக்கலாம். இன்று அந்த இடத்திற்கு எந்த ஆராய்ச்சியாளரும் செல்லாதபடி, சுற்றி வர வேலியிடப்பட்டுள்ளது. (சவூதி) அரேபிய மக்கள் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்த உண்மையை, இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை, அரேபிய மக்கள் பல தெய்வ வழிபாட்டில் இருந்து விலகி இஸ்லாமைத் தழுவியவர்கள். மெக்காவிலும், வேறு பல அரேபிய பிரதேசங்களிலும் பல தெய்வ வழிபாடு நிலவியது உண்மை தான். இருப்பினும் அயல் நாடுகளில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. இன்றைய சிரியா, ஜோர்டான், யேமன், ஓமான் நாட்டு மக்களின் முன்னோர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள்.
அந்த நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு வகை அரபு மொழியை பேசியவர்கள். அதை வட்டார வழக்கு மொழி எனலாம், அல்லது அரபு போலத் தோன்றும் இன்னொரு மொழி எனலாம். இறைதூதர் முகமது நபிகள் தலைமை தாங்கிய இஸ்லாமியப் படைகளின் வெற்றிக்கு அந்த மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தது. இதற்கு மொழி ஒற்றுமை ஒரு காரணியாக இருந்திருக்கலாம். அதுவே பின்னர் அந்தப் பிரதேச மக்கள் அனைவரும் இஸ்லாமியராக மாற ஊக்குவித்திருக்கலாம். ஒரு முக்கிய காரணம் மட்டும் இஸ்லாமியரின் வரலாற்று நூலில் பதியப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லாதோர் அதிக வரி செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரிச் சுமை காரணமாகவே பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர். அந்த வரி அறவிடும் முறை இன்றும் மலேசியாவில் பின்பற்றப் படுகின்றது. மலேசியாவில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும், பௌத்தர்களும் பிரத்தியேக வரி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிற மதத்தவர் கட்டும் வரியைக் கொண்டு, ஏழை மலே முஸ்லிம்களிற்கு சலுகை செய்து கொடுக்கப்படுகின்றது.
பண்டைக் கால அரபு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது அதிக வரி செலுத்திய போதிலும், அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யவில்லை. கிறிஸ்தவர்கள் தமது மத வழிபாட்டை இடையூறின்றி தொடர முடிந்தது. அதனால் தான் இன்றைக்கும் ஈராக், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அந்த நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அரபு தான் தாய்மொழி. அவர்கள் தாம் கடவுளாக வணங்கும் இயேசுவை எப்படி அழைப்பார்கள்? "அல்லாஹ்" என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? இத்தாலிக்கு தெற்கே இருக்கும் சிறிய தீவு, மால்ட்டா. அந்த தேசத்து மக்கள் மால்ட்டீஸ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தமது பாஷையில் கடவுளை "அல்லா" என்று அழைக்கிறார்கள்.அதற்கு காரணம், மால்ட்டா தேச மக்களின் மூதாதையர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள். மால்ட்டீஸ் மொழி கிட்டத்தட்ட அரபு மொழி போன்றிருக்கும்.
மலேசியாவில் இன்று அல்லாஹ் என்ற வார்த்தையை வைத்து எழுந்துள்ள சச்சரவு மொழி சார்ந்ததல்ல. அது இனப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணம். மலேசியாவில் 60 வீதமான மக்கள் மலே மொழி பேசுவோர். (முஸ்லிம்கள்) ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் தான் உள்ளது. மீதி 40 வீதமான மக்கள், சீனர்கள், இந்தியர்கள், மற்றும் பழங்குடியினர். அவர்களில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றுவோர் அதிகம். இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மலேசிய அரசை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அரசுப் பணிகளில் இருந்து புறக்கணிக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும் தனியார் துறையில் கோலோச்சுகின்றனர். மலேசியா கடந்த காலங்களில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் எதிரான கலவரங்களை கண்டுள்ளது. இப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதம் சார்ந்த கலவரம். என்ன விலை கொடுத்தேனும், மலேசிய அரசு இஸ்லாமிய-மலே பேரினவாதத்தை பாதுகாக்கத் துடிக்கின்றது. (பிரிட்டிஷ் காலத்தில்) வந்தேறுகுடிகளான சீனர்களையும், இந்தியர்களையும் ஒதுக்க நினைத்தாலும், கூடி வாழ வேண்டிய கசப்பான நிலைமை. பின்-காலனித்துவ மலேசியா அரசியல், தவிர்க்கவியலாது மதம், மொழி, இனம் சார்ந்த கலவையாகி விட்டது. இந்த அரசியல் சித்து விளையாட்டுக்குள் "அல்லாஹ்" படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்.
38 comments:
//"அல்லாஹ்" படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்.
//
super
//(சவூதி) அரேபிய மக்கள் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்த உண்மையை இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.//
அரேபியாவில் கிருத்தவர்கள், யூதர்கள், நெருப்பை வணங்கும் யஜுஸிகள் தனித்தனி கூட்டங்களாக வாழ்ந்ததை இஸ்லாமிய வரலாற்றுப் பதிவுகளெங்கிலும் காண முடிகிறது.
//அவர்களைப் பொறுத்த வரை அரேபிய மக்கள் பல தெய்வ வழிபாட்டில் இருந்து விலகி இஸ்லாமைத் தழுவியவர்கள்.//
அரேபிய மக்களல்ல 'முஸ்லிம்கள்' எனப்படுவோர்.
//முஸ்லிம்கள் அல்லாதோர் அதிக வரி செலுத்த வேண்டியிருந்தது.//
முஸ்லிம்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு மிஞ்சிய செல்வத்தில் இரண்டரை சதவீதம் 'ஜகாத்' என்ற வரியும் முஸ்லிமல்லாதவர்கள் அதைவிட மிகக்குறைந்த அளவில் 'ஜிஸ்யா' என்ற வரி செலுத்தினார்கள்.
ஜகாத்தில் ஒரு பகுதியும் ஜிஸ்யாவும் பாதுகாப்பு பணிகளுக்காக செலவிடப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாத குழுவினர் ஒரு பகுதியில் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருந்தால் அப்பகுதி முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜிஸ்யாவிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
//இந்த வரிச் சுமை காரணமாகவே பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.//
வரிச்சுமை காரணமாக இஸ்லாத்தை தழுவினர் என்பது முரண்பாடானது. முஸ்லிம்கள் ஜிஸ்யாவைவிட கூடுதலான ஜகாத் செலுத்தவேண்டும்.
சத்தியங்கள் மறைக்கப்படும்..அழிவதில்லை. அசத்தியங்கள் உரைக்கப்படும்..நிலைப்பதில்லை
முத்துவாராப்பா, எனது கட்டுரைக்கு மெருகூட்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு முதற்கண் நன்றிகள்.
இஸ்லாமிய வரலாறு இவற்றை எல்லாம் பதிவு செய்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் நான் இவ்விடத்தில் குறிப்பிடுவது சவூதி அரேபிய ஆட்சியாளர்களையும், மக்களையும். இன்று நூறு வீதம் இஸ்லாமியர்களாக உள்ள சவூதி அரேபிய மக்கள் ஒரு காலத்தில் கிருஸ்தவ மதத்தையும் பின்பற்றினார்கள் என்பதை வெளிப்படையாக கூற மாட்டார்கள். இஸ்லாமியர் கூடுதல் வரியும், இஸ்லாமியர் அல்லாதோர் குறைந்த வரியும் செலுத்தினார்கள் என்பது வரலாற்றை திரிப்பதற்கு சமமானது. மேலும் நான் இங்கே இஸ்லாம் பலவந்தமாக திணிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும். அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள், வாள் முனையால் அன்றி, வரி விதிப்பால் தமது மதத்தை பரப்பினார்கள் என்பதை ஒரு முற்போக்கு அம்சமாகப் பார்க்கிறேன். இதனால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
Islam Enge Epdi Thondriyathu Please Vilakkam Tharungale
உண்மை, அல்லா படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்.
மதம் பிடித்தால் மனிதம் அழியும்!
சிங்கக்குட்டி, வால்பையன் இரத்தினச் சுருக்கமான பின்னூட்டங்களுக்கு நன்றிகள். குளிர் நிலா, இஸ்லாம் தோன்றிய வரலாறு குறித்த தொடர் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன். அதுவரை உங்கள் தேடலில் நிறைய தகவல்களை கண்டடைவீர்கள்.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். அல்லாஹ் என்ற சொல் அனைத்து மொழி மற்றும் மதத்தவருக்கும் உரியது. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவ்வாறு சொல்பவர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் அவர்கள் இறுதி துாதராக வந்த பின் இஸ்லாம் தோன்றியது. அவர்கள் வந்த காலத்தில் அரேபிய மற்றும் அனைத்து உலக மக்களும் யுதர்களகவோ, கிறிஸ்த்துவர்களாகவோ, இந்துக்களகவோ, மற்றும் இன்னும் பிற மதங்களை சார்ந்தவர்களாகவோ இருந்தார்கள் என்பது மறுக்கபடாத உண்மை. யார் அல்லாஹ் எங்களுக்கும் மற்றும் உரியவர் என்று சொல்கிறார்களோ அவர்கள் தான் தீயவர்கள். இஸ்லாமிய மதம் அனைத்துலக மக்களுக்கும் உரியது. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.
அல்லாஹ் என்ற பதம் அரபி மொழியில் கடவுளை குறிக்கும் சொல் தான். எனினும் மலாய் மொழியில் கடவுளைக் குறிப்பிட ”துஹன்”(tuhan) அல்லது “தேவா”(dewa) என்ற சொற்கள் இருக்கும்போது எதற்காக இஸ்லாமியர்கள் பாவிக்கும் ஒரு சொல்லை பாவிக்க நினைக்கிறார்கள்??
//இந்த அரசியல் சித்து விளையாட்டுக்குள் "அல்லாஹ்" படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்.//
:)
தயவு செய்து அனைத்து மதத்தினருக்கும் அல்லாவை பிரிச்சுக் கொடுங்க
///இஸ்லாம் தோன்றிய வரலாறு குறித்த தொடர் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன்///--- அப்பாடா..! தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தோன்றியது பற்றி அறிந்து கொள்ள அரபி பள்ளி/கல்லூரிகளோ, அரபி கற்ற ஆலிம்களோ, குரான்/ஹதீஸ் தமிழ் மொழியாக்கங்களோ, இஸ்லாமிய தமிழ் இணைய வலை தளங்களோ, இஸ்லாம் பற்றி தமிழ் நூல்களோ எதுவும் இல்லாமல் தவியாய் தவிக்கிறார்களாம். வாருங்கள், கலையரசன் அவர்களே. இஸ்லாம் என்றால் என்ன என்றே தெரியாமல் அதுபற்றி எந்த அறிவும் அற்று தவிக்கும் தமிழக முஸ்லிம்களுக்கு கற்பிக்க வாருங்கள்.
'அல்லாஹ்' என்ற அரபி வார்த்தை, அரபி பேசும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தம் அன்று.
உலக மக்கள் அனைவருக்கும் ஒரே இறைவன்தான்.
மலேசிய கிருத்துவர்களின் தாய் மொழி அரபியா? கண்டிப்பாய் மலேய மொழியாக இருக்கும். பின்னர், அவர்கள் எதற்காக மலேய மொழிக்குள் அரபியை கலக்கிறார்கள்? நம் தமிழ் கிருஸ்துவர்கள் தேவன்-பரமபிதா-கடவுள் என்றுதானே சொல்கிறார்கள்? இது தவறு என்கிறீர்களா? இவைகளுக்குப்பதில் தமிழ் கிருத்துவர்களும் இனி, அல்லாஹ் என்று தேவாலயங்களில் சொல்லச்சொல்கிரீர்களா? அமெரிக்க/பிரிட்டிஷ் சர்ச்சுகளிலும் இனி GOD என்பதற்கு பதில் 'அல்லாஹ்' என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் கருத்தை கிருத்துவர்கள் வரவேற்பார்களா?
.
அல்லா எனது அரபிச் சொல்.
அது இஸ்லாமியர்களின் கடவுளின் பெயர் அல்ல.இஸ்லாத்தில் கடவுள் பெயர் இல்லாதவர்.
தமிழில் "கடவுள்" என்பதை அரபியில் "அல்லா" என்கிறார்கள்.
முருகனின் கந்தபுராணம் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டால் "கடவுள் முருகன்" என்பது >"அல்லா முருகன் " என்று அரபியில் வரும்.
அரபி பைபிளில் "கடவுளின் மைந்தன் இயேசு" என்பது "அல்லாவின் குமாரன் இயேசு" என்றும் வரலாம்.
அரபி மொழி வல்லுனர்கள் மேலும் விளக்கலாம். மதத்தை தவிர்த்து மொழியை மட்டும் அணுகலாம்.
.
அரபி என்பது மொழி.
குரான் அதில் முதன் முதலில் எழுதப்பட்டது என்பதற்காக "அல்லா" என்ற அரபு வார்த்தை ஒரு மதத்தினருக்கானது அல்ல.
.
.
அரபி மொழி பேசும் கிறித்துவர்களுக்கான பைபிளில் அல்லா என்றே உள்ளது.
The word Allah appears throughout Arabic translations of the Bible, since it is simply the Arabic name for Almighty God. Insha'llah, the examples below will help quell the doubts of
http://www.islamic-awareness.org/Quran/Sources/Allah/BibAllah.html
.
அஸ்ஸலாமு அலைக்கும் என்னும் முகமன் முஸ்லிம்களுக்கே உரியது என்று பல பேர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். என் நண்பர், அரபி தாய்மொழியாகக் கொண்ட கிறிஸ்தவர் அவர் அடிக்கடி ஸலாம் சொல்வதை கேட்டிருக்கிறேன். மேலும் அல்லா என்ற அரபி சொல் பொதுவான ஒரு பாலின சொல். அது ஆணையோ, பெண்ணையோ குறிப்பது அல்ல. அது ஒரிறையை குறிக்கும் சிறப்புச் சொல். தமிழில் "கடவுள்" என்ற சொல்லைப் போல். ஆனால் ஏசு என்ற மனிதருக்கு அந்த சொல் பொருந்தாது. ஏனெனில் அல்லா என்ற சொல் பரம்பொருளை குறிக்கும்.
ஜஸ்யா வரி மூலம் இஸ்லாம் புகுத்தப்பட்டது என்பதும் வரலாற்றைத் திரிப்பதற்கு சமம்.
ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.
முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத் ' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.
முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத் ' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.
தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும்,
இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத் ' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும்.
இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது.
எனவே 'ஜகாத் ' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.
ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.
குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?
ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத் 'தை விதிக்க முடியாது.
ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.
ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.
வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.
அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?
எனவேதான் 'ஜிஸ்யா ' வந்தது.
இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.
சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?
சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா ' விதிக்கப்பட்டது.
தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,
வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.
இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.
சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.
இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா '.
இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.
அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டன.
அவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.
T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :
'"ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல".
ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.
' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
"அப்பாடா..! தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தோன்றியது பற்றி அறிந்து கொள்ள அரபி பள்ளி/கல்லூரிகளோ, அரபி கற்ற ஆலிம்களோ, குரான்/ஹதீஸ் தமிழ் மொழியாக்கங்களோ, இஸ்லாமிய தமிழ் இணைய வலை தளங்களோ, இஸ்லாம் பற்றி தமிழ் நூல்களோ எதுவும் இல்லாமல் தவியாய் தவிக்கிறார்களாம். வாருங்கள், கலையரசன் அவர்களே. இஸ்லாம் என்றால் என்ன என்றே தெரியாமல் அதுபற்றி எந்த அறிவும் அற்று தவிக்கும் தமிழக முஸ்லிம்களுக்கு கற்பிக்க வாருங்கள்".
சரியாகச் சொன்னீர்கள்
அன்பான முஸ்லிம் நண்பர்களுக்கு, இஸ்லாமிய கல்விமான்கள் எழுதிய இஸ்லாமிய வரலாற்று நூல்கள் யாவும் முஸ்லிம்களால் மட்டுமே படிக்கப்படுகின்றன. இவை யாவும் தான் சார்ந்த மதத்தின் மேன்மையை போதிப்பது மட்டுமல்லாமல், எந்த வித விமர்சனங்களையும் கொடிருப்பதில்லை. அத்தகைய காரணங்களால், இஸ்லாமியரல்லாதவரால் அவை யாவும் தீண்டப்படுவதில்லை. இதனால் முஸ்லிம்கள் பற்றிய தப்பான கருத்துகள் இலகுவாக பிற மதத்தவர்களை பற்றிக் கொள்கின்றன. இந்த நூல்களை எல்லாம் முஸ்லிம்கள் மட்டுமே கற்றுத் தெளிய வேண்டும் என்பது, பழைமைவாத சமூகத்தில் மட்டுமே சாத்தியம். ஏற்கனவே இந்தக் கட்டுரையில் கூறியபடி, அல்லாஹ் என்பதை ஒரு முஸ்லிம் மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்பதும், உங்களுடைய ஒரு தலைப்பட்சமான பின்னூட்டங்களுக்கும் அடிப்படை ஒன்று தான்.
அருமையான விளக்கங்கள்
நேசகுமார் என்ற ஒரு இஸ்லாமிய அறிஞர் சில வருடங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் மதத்தின் குறைகளை மிக அழகாக அம்பலப்படுத்தினார். இணையத்தில் நேசகுமார் என தேடவும் மிக அருமையான விஷயங்கள் கிடைக்கும்
நல்ல பதிவு ஐயா.
/கிழக்கு மலேசியாவின் பூமிபுத்திரா என்று சொல்லப்படும் பூர்வ குடி மக்களிடையே கிருஸ்துவர்கள் அதிகம். அவர்களின் தாய் மொழியும் மலாய் மொழியுடன் சம்மந்தப்பட்ட சில கிளை மொழிகளாக இருப்பதால் மலாய் மொழி பயன்பாடு மிகவும் அதிகம். மலேசிய அமைப்பு உருபெரும் முன் இந்தோனேசிய மொழி வழி தங்களின் கிருஸ்துவ மதப்போதனையை பெற்றுக் கொண்டு இருகின்றார்கள். 400 வருடமாக தங்கள் சொல்லும் தூவன் அல்லஹா என்ற சொல் இப்பொழுது மட்டும் தடை ஏன் என்பது அவர்களின் வாதம்.? அதுவும் இப்பொழுது என்ன வந்தது இவர்களுக்கு கிழக்கு மலேசியா முஸ்லிம் மக்கள் 400 வருமாக எந்த குறைக்கூறலும் சொல்லாத போது மேற்கு மலேசியாவின் இஸ்லாமியர்கள் மட்டும் ஏன் இந்த சொல்லுக்கு தடை ஏற்படுத்துகின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர் .நியாமான கேள்விதான்.
http://manilvv.blogspot.com/
அல்லாஹ் என்ற அரபு வார்த்தை தனித்துவமானது, இதற்கு ஆண் பால், பெண் பால் வேறுபாடோ பன்மையோ கிடையாது. இது இஸ்லாத்தின் ஏகத்துவத்தை வலியுறுத்தும் வார்த்தை . ஏனைய மத கடவுள் பெயர்களின் இவ்வாறு இல்லை அவற்றுக்கு பால் வேறுபாடோ பன்மையோ இருக்கலாம் .
//இஸ்லாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள், தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தன. "அல்லாஹ் முஸ்லிம்களுக்கே மட்டுமே சொந்தம்." என உரிமை கொண்டாடின.//
ஏன்?
///அந்த நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அரபு தான் தாய்மொழி.அவர்கள் தாம் கடவுளாக வணங்கும் இயேசுவை எப்படி அழைப்பார்கள்? "அல்லாஹ்" என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?///
-- இதற்காகத்தான்.
முதலில் 'அல்லாஹ்' என்ற அரபி சொல்லுக்கு உரிய இலக்கணம் தெரிந்து கொள்ளுங்கள். இச்சொல்லுக்கு இருமை,பன்மை கிடையாது. பால் கிடையாது. மனிதர் அல்லாத உயர்திணைக்கு மேம்பட்ட வேறு ஒரு 'இறை திணை'. அல்லாஹ் பிறக்கவும் இல்லை பிறக்கப்படவும் இல்லை. பெற்றோர்/உறவினர்/சகோதரர்/பிள்ளை/சந்ததி கிடையாது. ஒப்புமை/இணை கிடையாது. எக்காலமும் அறிந்து இயக்க வல்லது. அண்ட சராசரம் மற்றும் அதில் உள்ளவை அனைத்தும் படைத்து இயக்குவது அல்லாஹ். தமிழில் அல்லாஹ் என்ற சொல்லை இலக்கணப்பூரணமாய் சரியாக்கும் ஒரு வார்த்தை கிடையவே கிடையாது. வேறு வழி இல்லாமல் (ஆண்பால் போல தெரியும்) 'இறைவன்' என்ற சொல்லை முஸ்லிம்கள் ஆளுகிறார்கள்.
360 சிலைகளை காபாவில் வைத்து தினம் ஒரு கடவுளாக வணங்கிய அன்றைய இனைவைப்பாளர்கலான மக்காவாசிகள் கூட, 'அவை அனைத்தும் அல்லாஹ் அல்ல' என்று தெள்ளத்தெளிவாக நம்பி இருந்தனர். அவ்வளவு 'தெளிவான அறிவாளிகளையே' முஸ்லிம்கள் காட்டுமிராண்டிகள் என்கிறோம். இந்த இலக்கண அடிப்படையில் இயேசுவை அல்லாஹ் என்று சொல்ல முடியாது. இயேசு வானைப்பார்த்து கையேந்தி கூப்பிட்டாரே, ...கடவுளே என்று, அவரைத்தான் 'அல்லாஹ்' என்று கிருத்துவர்கள் கூற வேண்டும்.
முஸ்லிம்கள் அல்லாத பதிவாளர்கள் உங்களிடம் "அல்லாஹ்" படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்.
என்னபா இது என்னுடைய கிருத்துவ மேனேஜர் பெயர் அப்துல்லாஹ் அதாவது அப்துல் அல்லாஹ் (இறைவனின் அடிமை)இஸ்லாம் மொழிக்கு அப்பார்பட்டது......
மலேசியாவில் அல்லாஹ் எனும் வார்த்தை பயன்பாடு மீதான நீதிமன்ற தீர்ப்புகளும், அதற்கான அரசாங்கம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் எதிர்ப்புகளும் அரசியல் சித்து விளையாட்டுகளுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.இன மத நல்லிணக்கத்தை பேணுவது அவர்கள் நோக்கமில்லை. மலாய் அல்லாத சிறுபான்மை இனங்களுக்கும், மதங்களுக்கும் எதிரான அவர்களின் மனப்போக்கு வெளிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. அல்லாஹ் எனும் வார்த்தை தொடர்பில் பெரும்பாலோர் கொண்டிருந்த கருத்தையே நானும் இது வரை கொண்டிருந்தேன். உண்மை விளக்கங்களை அளித்த கலையரசனுக்கு நன்றிகள்.
///என்னபா இது என்னுடைய கிருத்துவ மேனேஜர் பெயர் அப்துல்லாஹ் அதாவது அப்துல் அல்லாஹ் (இறைவனின் அடிமை)இஸ்லாம் மொழிக்கு அப்பார்பட்டது......///-- அட ஏங்க அவ்வளவு தூரம் போறீங்க?
நம்ம முஹம்மது நபியின் தந்தை பெயரும் அப்துல்லாஹ் தான். பல தெய்வ நம்பிக்கை கொண்ட இவர் காஃபிர். முஸ்லிம் அல்ல. முஹம்மது பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.
மேலே சகோதரி ரேஹான்னிஷா சொன்னது போன்ற குணங்களுடன், மேலும் தனக்கென எத்தேவையும் அற்ற - மனிதனால் உருவம் கற்பிக்கப்படாத ஒரு இறைவனை கொண்டிருக்கும் எவரும்-எம்மொழியினரும்-எம்மதத்தாரும் தன் கடவுளை அல்லாஹ் என்று அழைக்கலாம். ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
//தமிழர்கள் "கடவுள், இறைவன், ஆண்டவன்" என்று சொன்னார்கள். சமஸ்கிருதக்காரர்கள் "பகவான்" என்றார்கள். ஆங்கிலேயர்கள் "God " என்றார்கள். பிரெஞ்சுக்காரர்கள் "Dieu " என்றார்கள். அவ்வாறே அரபு மொழி பேசுவோர் "அல்லாஹ்" என்றார்கள்.//
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முந்திய அரபிகள் "அல்லாஹ்" என்ற இறைவனை அறிந்திருந்தார்கள். அதனால்தான் இறைத்தூதரின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ்-வாக இருந்தது. ஆனால் "அல்லாஹ்" என்ற பெயரை 'கடவுள்' இறைவன்' என்றெல்லாம் மொழிபெயர்க்க இயலாது.
//அரபு மொழியில் "இலாஹ்" என்ற பெயர்ச் சொல்லுடன், அல் என்ற விகுதி சேர்ந்து அல்லாஹ் என்றானது. //
"கடவுள், இறைவன், ஆண்டவன்" போன்ற வார்த்தைகளுக்கு நேரடி அரபிச் சொல் 'இலாஹ்' என்பது சரிதான். ஆனால் 'அல் + இலாஹ் = அல்லாஹ்' என்பது சரியல்ல.
முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையை குறிக்கும் அரபிச் சொற்றொடர் 'லா இலாஹ இல்லல்லாஹ்'. இதன் பொருள், லா இலாஹ் = இறைவன் இல்லை; இல்லல்லாஹ் = அல்லாஹ்வைத் தவிர.
இந்தச் சொற்றொடரில் 'இலாஹ்' என்ற வார்த்தையும் 'அல்லாஹ்' என்ற பெயரும் ஒருங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. 'அல் + இலாஹ் = அல்லாஹ்' என்றால் இந்தச் சொற்றொடருக்கு அர்த்தம் கொள்ளவே முடியாது.
//அரேபியாவில் வாழ்ந்த மக்கள், வேறெந்த பெயரில் கடவுளை அழைத்திருப்பார்கள்? ஒரு வேளை அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால்? //
அவர்கள் 'அல்லாஹ்'வை அழைக்க அல்லாஹ் என்ற பெயரையே பயன்படுத்தியிருப்பார்கள்; இயேசுவை அழைப்பதற்கு அல்ல.
அரபி மொழி பேசும் கிருஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்ற பெயரை இன்றும் உபயோகிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் மலாய் மொழி கிருஸ்துவர்களுக்கு இந்த அரபிச் சொல்லின் மீது அப்படி என்ன ஈடுபாடு வந்தது? ஹெரால்ட் பத்திரிக்கை அரபி மொழியில் வெளிவரவில்லையே? ஆங்கிலத்திலோ மலாய் மொழியிலோ வெளியிடப்படும் கட்டுரைகளில் இடையிடையே 'அல்லாஹ்' என்ற பெயர் பயன்படுத்தப் பட்டால், அது அக்கட்டுரையை படிக்கும் முஸ்லிம்களை குழப்புவதாக இருக்காதா? சர்ச்சையை உண்டாக்கி, கோர்ட்டில் வழக்குப் போட்டாவது 'அல்லாஹ்' என்ற பெயரை உபயோகித்தே தீருவோம் என்று மலேஷிய கிருஸ்துவர்கள் கங்கணம் கட்டி செயல்படுவது எந்த நோக்கத்தில்?
நம்பிக்கையின் வழியல் மார்க்கம். இறைவனை நாடுவதும் நம் உள்ளத்திலிருந்து வருவது. இறைவன் எல்லா
மொழியும் அறிவான்.
முஹம்மத் நபியை முதன் முதலில் எதற்காக எதிர்த்தார்கள். எதற்காக உதைத்தார்கள். அப்படி என்னதான் சொன்னார் அவர். "அல்லாஹ் ஒருவனே. GOD IS ONE. " இதுதான் அவை.வேற ஒண்ணும் பெருசா சொல்லவில்லை. Always monolithic religion is being targeted all the way until it becomes as polytheistic but failed over on Islam. that's why Islam is still shining and spreading continuously all over the world. ALLAH and ISLAM are unique. Read it with open heart and neutral mind. நல்லா காய்க்கிற மரம்தான் கல்லடி படும் னு சொல்வாங்க. இஸ்லாம் எதிர்ப்புலாதான் வளர்ந்துச்சு. இன்னும் வளரும்.
malaysia krithuvarkal allah endru azaippathil yarukkum atchebanai illai.anal atharkku pinnaal olinthu irukkum kulla narithanathaithaan ethirkkiraarkal.athu enna nari thanam enbathai unarbavarkal unarvaarkal.
அன்புள்ள கலையரசன்,
உங்களின் பல கட்டுரைகள் படித்துள்ளேன். சமூகம் சார்ந்த விஷயங்களை மிக நன்றாக ஆழ்ந்து ஆய்வு செய்கின்றீர்கள். உங்களின் ஆய்வுகட்டுரைகள் தொடரட்டும்.
மதம் சார்ந்த விஷயங்கள் எழுதும் போது நீங்கள் இன்னும் சற்று அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது என் கோரிக்கை.
"அல்லாஹ்" என்ற சொல்லை மலேசிய கிறிஸ்த்தவர்கள் பயன்படுத்த துடிப்பது சரியான நிலைபாடல்ல என்பதைச் சகோதரர் இப்னு பஷீர் அழகாக விளக்கியுள்ளார். அந்தக் கோணத்தில் நீங்களும் சிந்தித்து உங்கள் கருத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
"அல்லாஹ்" என்பது உலக மாந்தர் அனைவருக்குமான வணக்கத்துக்குரிய ஒரே நாயன் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. அந்த நிலைபாட்டில் ஒருவர் "அல்லாஹ்"வைப் பயன்படுத்துகின்றார் என்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால், கிறிஸ்த்தவர்கள் "ஏலீ ஏலீ லாமா சமக்தானீ - என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என, தன்னைச் சிலுவையில் அறையும் நேரம் தன் கடவுளை நோக்கிப் பிரார்த்தித்த இயேசுவை, தன்னை நோக்கி, கர்த்தரே, கர்த்தரே! என அழைத்தவர்களிடம், "நானல்ல, அந்தத் தீர்ப்பு நாளின் ராஜாவான அவனே கர்த்தர். நீங்கள் அவனையே கர்த்தர் என அழையுங்கள்" என மறுதலித்த அல்லாஹ்வின் படைப்பான இயேசுவையே "அல்லாஹ்" என்று அழைக்க விரும்புகின்றனர். இதனை எதிர்ப்பது எவ்வகையில் தவறு என்று நீங்கள் விளக்க வேண்டும்.
அத்தோடு, முஸ்லிம்கள் மீதுள்ள "ஜகாத்" என்ற கட்டாய ஏழை வரியோடுத் தொடர்புபடுத்தினால் மிக மிக குறைந்த அளவிலான ஜிஸ்யா வரியை நீங்கள் ஜகாத்தை விட பெரிய வரி என்றும் அந்த வரியைக் கொடுக்க முடியாததாலேயே வேற்று மதத்தினர் இஸ்லாத்திற்கு மாறினர் என்றும் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறியுள்ளதாக இங்கே உதயம் என்ற சகோதரர் கருத்துப் பதிந்துள்ளார். அவரின் கருத்தையும் ஆய்வு செய்து தாங்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இங்கே ஒரு அனானி சகோதரர், சில வருடங்களுக்கு முன் வாழ்ந்த, "நேசகுமார் என்ற ஒரு இஸ்லாமிய(!) அறிஞரை" அறிமுகம் செய்துள்ளார். அவரைக் குறித்த மேல் விவரங்கள் அறிய ஆசை. அந்த அனானி சகோதரருக்கு ஆட்சேபணை இல்லையேல், அவரைக் குறித்த விவரங்களை என் முகவரிக்கு (abusumaiya@gmail.com) அனுப்பித் தரலாம். நானும் அறிந்து கொள்வேனே!
மிக்க அன்புடன்
சகோ. அபூ சுமையா
அபு சுமையா, நன்றி. மலேசிய கிறிஸ்தவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை சர்ச்சையை கிளப்புவதற்காக பாவிப்பதாக சில நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அதில் ஓரளவு உண்மை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இது தொடர்பாக மேலதிக விபரங்களை சேகரித்து வருகிறேன். இஸ்லாமிய அறிஞர் எனக் கூறிக்கொள்ளும் நேசகுமார் போன்ற ஆசாமிகளை நான் நிராகரிக்கிறேன்.
ஒரு பிழை திருத்தம்:
//முஸ்லிம்கள் அல்லாத பதிவாளர்கள் உங்களிடம் "அல்லாஹ்" படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்// ---என்று நான் தவறாக எழுதிவிட்டேன்.
அது....
முஸ்லிம்கள் அல்லாத பதிவாளர்கள் உங்களிடம் "அல்லாஹ்" என்ற வார்த்தை படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. அவ்வார்த்தைக்கு தக்க இலக்கணம் தெரியாவிடின்/புரியாவிடின் பாவம், அவ்வார்த்தையை விட்டு விடுங்கள்.
--என்று இப்படி சரியாக இருந்திருக்க வேண்டும்.
ALLAH IS MENTIONED ALL MAJOR RELIGION SCRIPTURES IN THE WORLD INCLUDING HINDU SCRIPTURES
http://www.islamkalvi.com/religions/islam_hindu_comparision_01.htm
http://vapuchi.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/
அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம்
அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம்
அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா
அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய
பூர்வம் மாயா பரமந்த ரிஷா
அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம்
இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா
ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா
அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன
ஸித்தான ஜலசாரன் அதிர்டம்
குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ
ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ்
அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா
- அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10
தமிழில் : அல்லா முழுமையானவர், எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின் ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத் அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார். அல்லா எல்லாஎல்லா பூமியையும் இயக்குகின்ற இறைவன். பூமியின் பரிபாலனும் அவனே! இறவன் ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய எல்லாவற்றையும் படைத்தான். அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள்.
ஓம் ஹிர்ரீம் மந்திரம் மூலம் அசுர வர்க்கத்தை அழிக்கும் மஹாமத் அல்லவுடைய தூதர் ஏக இறைவனைத் தவிர வேறு த்ய்வமில்லை. உன் தேவனாகிய கர்த்தர் உன் சனத்தினின்றும், உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப் போல் ஓர் தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்குச் செவி கொடுப்பாயாக.
அல்லாஹ் என்பதன் அர்த்தமும் அதை யாருக்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்கின்ற அடிப்படை விளக்கமும் அற்ற அறிவிலிகள் கருத்துக்கள் சொல்வது எவ்வாறு சரியாகும்? ஒவ்வொரு மொழியிலும் ஒரு வார்த்தை அதன் பொருள்,அர்த்தம் எந்தெந்த அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளதோ அதில்தான் அதைப் பயன்படுத்துவது அருவுடமைக்கு அடையாளமாகும்.தமிழில் "பட்டி" குக்கிராமத்திற்கு சொல்லப்படும் அதே பட்டி என்ற வார்த்தை மலையாளத்தில் நாய்க்கு சொல்லப்படுகிறது இவ்வாறிருக்க பட்டி என்ற வார்த்தையை மலயாலத்தானிடத்தில் கிராமதிற்குதான் சொல்லவேண்டும் என வம்பு பேசினால் அவன் கம்பு எடுத்து அடிப்பான்.இந்த அடிப்படையில் அல்லாஹ் என்ற அரபி சொல்லிற்கு முழு விளக்கம் என்னவெனில்;ஆக்கல்,அழித்தல்,படைத்தல்,உணவளித்தல்,உயிர்ப்பித்தல்,போன்ற அத்தனை ஆற்றல்களையும் தன்னுள் அடக்கியுள்ள நித்திய ஜீவியும்,நிரந்தரமானவனுமாகிய யாராலும் உருவாக்கப்படாத,ஓர் சக்திக்கு சொந்தக்கரனுக்கே அல்லாஹ் என்று கூறப்படும்.பிறகு இவைகளில் எதற்குமே தகுதியற்ற கற்பனைகளாலும் கற்களாலும் உருவாக்கப்பட்ட சிலைகளுக்கும்,கடவுள்களுக்கும்,அல்லாஹ் என்ற பெயரை கூறிக்கொள்ள வழி தேடுவது எவ்வளவு பெரிய வடிகட்டிய முட்டாள்தனம் என்பதை சிந்திப்போரே அறிவாளியாவர்.
தோழர் மிஸ்டர் .கலையரசன் அவர்களே ,
மதம் சம்பந்தமான சீரியஸ் பதிவுகள் இடும் போது மிகவும்
ஜாக்கிரதையாக இருக்கவும் ஏனென்றால் இதற்கு முன்பும் கூட
கிறிஸ்தவ மதம் பற்றிய பதிவில் கூட பல முரண்பாடுகள் இருந்தன .
இப்போ இந்த பதிவில் கூட பல முரண்பாடுகள் இருக்கிறது ,
எனக்கு முன்பே பல முஸ்லிம் சகோஸ் இங்கே மிக அழகாக
விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் அதுவே போதும்
என்று நினைக்கிறன்
அல்லா என்கிற வாக்கியத்தின்(சொல்) உண்மையான அர்த்தம்
என்னவென்று தாங்கள் அறிந்து இருந்தால் இந்த பதிவு இடவேண்டிய
அவசியமே இருக்காது
இனிமேலாவது சென்சிடிவான பதிவிடும் போது நிதானம் தேவை ..
"அல்லாஹ் யாருக்கு சொந்தம்?"
பதில் ..அல்லா சொல்படி யார் நடக்கிறார்களோ
அவர்களுக்குதான் சொந்தம்
இதிலே கேள்வி என்ன இருக்கு ???
Yes
Post a Comment