"காஸா" என்ற கூண்டுக்குள் அகப்பட்ட, ஒன்றரை மில்லியன் மக்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவிக்கின்றன. ஹமாஸ் மீது நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறிய போதும்; முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் எல்லோரையும் இஸ்ரேலிய ஆயுதங்கள் பலி எடுக்கின்றன. கடைசியாக கூட ஐ.நா. சபை நடத்தி வந்த பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த அகதிகள் மீது இஸ்ரேலிய படைகள் குண்டு வீசியதில் நாற்பது பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இத்துடன் இரண்டாவது தடவையாக பாடசாலைகளை குறிவைத்து தாக்கி உள்ளது. போர் நடக்கும் வேளை பாதுகாக்கப்பட வேண்டியவை என்று "அப்பாவித்தனமாக" எதிர்பார்க்கப்படும்,வழிபாட்டு ஸ்தலங்கள், பல்கலைக்கழகம், மருத்துவ மனை, அம்புலன்ஸ் வண்டிகள், இவை எல்லாம் தாக்கப்பட்டுள்ளன.
இதுவரை அறுநூறு பேர் அளவில் கொல்லப்பட்டாலும், "சர்வதேச சமூகம்" முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கின்றது. "போரில் தர்மம் கிடையாது. எல்லாமே ஹமாஸ் இலக்குகள் தாம். ஹமாஸ் மக்களை கேடயமாக பயன்படுத்துவதால், பொது மக்களும் மரணிக்கின்றனர்." என்று நியாயவாதம் பேசுகின்றது இஸ்ரேலிய அரசு. "அது சரி தான். இஸ்ரேல் தனது தேசிய நலன்களை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கை அவசியம். ஹமாஸ் தான் சண்டையை தொடக்கி வைத்தது." இவ்வாறு பக்கப் பாட்டு பாடுகின்றன, அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும். இஸ்ரேலின் போர்க்கால குற்றங்களை யாரும் கண்டு கொள்ளாததால், தானே ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் போவதாக ஈரான் கூறுகின்றது.
அரபு நாடுகளில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மக்கள் எதிர்த்து வருகின்றனர். தமது அரசாங்கங்களின் கையாலாகாத தனத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கி சில நாட்களில், உணவு, மருந்து போன்ற நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு உதவிக் கப்பல் ஒன்று சைப்ரசில் இருந்து காஸா நோக்கி புறப்பட்டது. சர்வதேச தொண்டர்களுடன், சில சைப்ரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கப்பலில் சென்றனர். நிவாரணக் கப்பலின் வருகை குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இஸ்ரேலிய கடல் எல்லைக்கு சிறிது தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து, இஸ்ரேலிய கடற்படைகள் சுற்றிவளைத்தன. இருட்டில் எந்த அறிவிப்பும் இன்றி வேகமாக வந்த கடற்படைக் கப்பல் மோதியதால், நிவாரணக் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. கப்பல் மூழ்கும் தருவாயில் இருந்த போதும், ஒருவாறு சமாளித்து லெபனான் கரையை போய் சேர்ந்தது. கிப்ரால்டரில் பதிவு செய்யப்பட்ட "டிக்னிட்டி" என்ற நிவாரணக் கப்பலை தகர்த்த இஸ்ரேலின் பயங்கரவாத செயலை, எந்தவொரு உலகத் தலைவரும் கண்டிக்கவில்லை.
இதற்கிடையே இம்முறை இஸ்ரேல் நடத்தும் "அதி உயர் தொழில்நுட்ப" யுத்தத்தில், இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக பல சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. "வெள்ளை பொஸ்பரஸ்" என்ற தூள் விமான மூலம் தூவப்படுவதாகவும், இது எலும்பு மச்சையை தாக்கி புற்று நோயை உண்டாக்க வல்லது என்றும் கருதப்படுகின்றது. இதுவரை சில ஆங்கில மொழி பதிவர்கள் மட்டுமே வெளியிட்ட இந்த தகவலை,The Times பத்திரிகையும் உறுதிப் படுத்தியுள்ளது.
Massacring Gaza Kids - Not Seen on CNN
இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து ஆம்ஸ்டர்டாம் ஆர்ப்பரித்தது
You Tube தடை செய்த "காஸா படுகொலை வீடியோ"
________________________________________

Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy
7 comments:
அது சரி.... இஸ்ரேல் என்ன இந்தியாவா? என்னையும் அடி என் வீட்டையும் அழி..! என்பதற்கு... மதத்தின் பெயரால் மனம் இழந்த இந்த மிருகங்களை இனத்தோடு அளிப்பதே சரி என்பேன்...!!! மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா துடிக்கிறது...! மலேசியாவில் தமிழன் அழிப்பதும், பாகிஸ்தான், பங்களாதேஸ் இந்தியனை அழிக்கும் போதும், தமிழன் இனம் அளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவும் போது, நீங்கள் எல்லாம் எங்கே சென்றிகள் ..!!!
மும்பை குண்டு வெடிப்பின் போது அமைதியாக இருந்த சில நாடுகள் இப்போது காஸாவின் தாக்குதலின் போது கொதிப்படைவதின் காரணம் என்ன? நியாயம் கூட ஜாதி மதம் பார்த்து தான் வருகிறதா? உங்கள் கருத்தைச் சொல்லவும்...
மெட்டல் வகை குண்டுகளை உபயோகப் படுத்துகிறார்களாம். இது ஒரு புதுவகை அதி பயங்கர அழிவை உருவாக்கும் ஆயுதமாகும்.
விளைவுகளும், எதிர்விளைவுகளும் என்ற சமன்பாட்டில் இயங்குவதுதான் இயற்கை...
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை ஆதரிப்போர் எதிர்விளைவுகளின் போது புலம்பி திரிவர்.
////அது சரி.... இஸ்ரேல் என்ன இந்தியாவா? என்னையும் அடி என் வீட்டையும் அழி..! என்பதற்கு... மதத்தின் பெயரால் மனம் இழந்த இந்த மிருகங்களை இனத்தோடு அளிப்பதே சரி என்பேன்...!!! மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா துடிக்கிறது...! மலேசியாவில் தமிழன் அழிப்பதும், பாகிஸ்தான், பங்களாதேஸ் இந்தியனை அழிக்கும் போதும், தமிழன் இனம் அளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவும் போது, நீங்கள் எல்லாம் எங்கே சென்றிகள் ..!!!////
ஏய்,எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்காதே,
இசுலாமியர்களை கேவலமாக பேசும் இந்த அனானி நாயிக்கு அந்த வார்த்தைகளை இங்கே கழிந்து விட்டு போக ஈழத்தமிழனின் பெயர் தேவைபடுகிறது.
எனவே தான் இவன் இங்கே வந்து வக்கிரத்திற்காக இசுலாமியர்களை திட்டிவிட்டு திட்டியவன் R.S.S காரன் என்று தெரியாமலிருக்க தனது துனைக்காக ஈழத்தமிழனையும் சேர்த்துக்கொண்டுள்ளான்.
முடிந்தால் இந்த வக்கிரம் பிடித்தவன் தனது சொந்த பெயரில் வரட்டும்.
இதை R.S.S காரனை தவிர,பார்ப்பன பயங்கரவாத கூட்டத்தை தவிர,அந்த வகை பாசிஸ்ட்களை தவிர எந்த மனிதனும் இவ்வளவு வக்கிரமாக பேச மாட்டான்.
ச்சீ ச்சீ..இவர்களும் மனிதர்களா? !
"வெள்ளை பொஸ்பரஸ்" this is very danger, White phospores is burn air easily . so it is in kerozine, otherwise danger,
Isrel is not a country, this is a Eman (tamil word " God of death" )to palastena's people
விக்னேஸ்.
நாம் காணும் உலகம் பொதுவாக அப்படி தான் இருக்கிறது. யாராவது "நம்மவர்கள்" என்ற சொல்லை பாவித்தால், அது அவரது ஜாதி, மதத்தை, இனத்தை சேர்ந்தவர்களோடு தன்னை அடையாளப் படுத்துகிறார் என்று அர்த்தம். தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று (இன அடிப்படையில்) கொதிப்படைவர்கள், உலகில் பிற இனங்கள் பாதிக்கப்படும் போது கண்டுகொள்வதில்லை. அதே போல, காசாவில் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் என்று மத அடிப்படையில் கொதிப்படைபவர்கள் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால், காசாவுக்கு குரல் கொடுக்கும் ஐரோப்பியர்கள் எந்த இன,மத சார்புமற்று மனிதர்கள் என்ற அடிப்படையில் அக்கறைப் படுகின்றனர். எமது மக்கள் மத்தியிலும் அப்படியான சிந்தனை வரவேண்டும். பெரும்பாலான மக்கள் ஜாதி, மத, இன அடிப்படையில் தான் அவர்களது பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள். அந்த கட்டமைப்பை தகர்த்து எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வை கொண்டு வருவது தான் நல்லெண்ணம் கொண்டோரின் கடமையாக இருக்க வேண்டும்.
@superlinks Your words seem u r an uneducated person. Deal with thoughts, not uneducated words
Post a Comment