நேசநாடுகளின்(அமெரிக்கா, இங்கிலாந்து) படைகள் பிரான்சு கடற்கரையில் இறங்கிய நிகழ்வை நாசிசத்திற்கு எதிரான வெற்றியாக சரித்திர நூல்கள் எழுதி வருகின்றன. ஆனால் அதற்கு முன்னரே சோவியத் படைகள் ஜேர்மன் நாசிப் படைகளை போரில் வென்றதை வேன்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச கெரில்லாக்கள் விடுதலைக்காக போராடியதையும் எந்தவொரு வரலாறும் குறிப்பிடுவதில்லை.
வீடியோ 1: 9 May 2010 நாசிசத்திற்கு எதிரான வருடாந்த வெற்றி விழா
வீடியோ 2: 1941 ஸ்டாலினின் உரை (ஆங்கில உப தலைப்புகளுடன்)
7 comments:
1939 முதல் 1941 வரை சோவியத் யூனியனும் ஜெர்மனியும் சேர்ந்தே செயல்பட்டன. அவர்களது நட்பு ஒப்பந்தத்தின் பேரில் போலந்து இரண்டாகத் துண்டாடப்பட்டு, கிழக்குப் பகுதியை சோவியத் யூனியனும் மேற்குப் பகுதியை ஜெர்மனியும் கபளீகரம் செய்தன.
பிறகு ஜெர்மனி எடுத்துக் கொண்ட பகுதிகள் முழுக்கவும் திரும்ப போலந்துக்கு கிடைத்தன, ஆனால் சோவியத் யூனியன் முழுங்கியது முழுங்கியதுதான்.
போலந்த் வீழ்ச்சியே இரண்டாம் உலக மகா யுத்தத்தின் ஆரம்பம் என்பது மறுக்க முடியாத சரித்திரம். ஆக, அதில் பெரிதும் சம்பந்தப்பட்ட ஹிட்லர்-ஸ்டாலின் ஒப்பந்தத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்?
1941-ன் வீடியோவை இங்கு காட்டுவது மூலம் என்ன நிறுவ எண்ணுகிறீர்கள்? அது ஒரு பிரச்சார வீடியோ அவ்வளவே. சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர் வேறெதையும் பேச இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி, டோன்டு ராகவன்
பிரிட்டன், ஜேர்மனி நட்பு ஒப்பந்தத்தின் பேரில் ஹிட்லர் செக்கோசஸ்லோவாக்கியாவை முழுங்கிய கதையையும் சொன்னீர்கள் என்றால் நல்லது.
ஆனால் பிரிட்டன் அந்தச் முழுங்கலில் ஒரு பங்கும் ஏற்கவில்லை. சேம்பர்லேன் செய்த சொதப்பல்தான் ம்யூனிக் ஒப்பந்தம். அதை பிரிட்டன்/பிரென்சு தேசத்து சரித்திரம் மறைக்காமல் சேம்பர்லேனின்/பிரெஞ்சு அதிபரின் கையாலாகாத்தனத்தை விடாது சாடியது.
துரோகத்துக்கு பெயராக ம்யூனிக் ஒப்பந்தம் மாறியது மேற்குலகப் பத்திரிகைகளின் செயல்பாடுகளால்தான்.
ஆனால் சோவியத் யூனியன் செய்த கொள்ளைகளை அந்த தேசத்தில் அப்போது யாரும் சாடவில்லை என்பதே நிஜம்.
அவர்களை விடுங்கள், சோவியத் யூனியனின் அல்லக்கைகளாக செயல்பட்ட மற்ற தேசங்களில் இருந்த கம்யூனிஸ்டு கட்சியினரும் அவற்றை மூடி மறைத்தனர் என்பதும் நிஜம்.
வரலாற்றில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவற்றை சம்பந்தப்பட்ட நாடுகள் எவ்வாறு கையாண்டன என்பதுதான் முக்கியமாகப் பார்க்க வேண்டியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெர்மனிக்கு எதிராக ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்ள ஸ்டாலின் வேண்டி வேண்டி அழைத்தாலும், தாங்கள் கொம்பு சீவி விட்ட கடா ஸ்டாலின் மீது பாயும் என்ற நம்பிக்கையில் அதனை பிரிட்டன் தலைமையிலான ஏகாதிபத்தியம் ஊதாசினம் செய்தது. இது வரலாறு. வேறு வழியின்றி, ஜெர்மனியோடு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டார். ஜெர்மானிய படையெடுப்பிற்கு பின், போலந்தின் கிழக்கு பகுதியும் ஜெர்மன் வசம் விழுந்தால், சோவியத்திற்கு அபாயம் என்பதால்தான் போலந்து சோவியத்தால் பிடிக்கப்பட்டது. போலந்தின் வீழ்ச்சியே இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்பம் என்று ஒரு மடையனும் ஏன் ஹிட்லரே ஒத்துக்கொள்ளமாட்டார். பிரெஞ்சு வசமிருந்த ஜெர்மன் பகுதிகள், ஆஸ்திரியா ஆகியவைகளை முதலில் ஜெர்மன் ஆக்கிரமித்தது. பிரிட்டன் பிரதமராக ஜெம்பர்லின் இருந்தார். அவர் ஒரு புறம் கையெழுத்திட மறுபுறம் சில பத்திரிக்கைகள் அவரை திட்டின. இதனால் சேம்பர்லைன் தலைமையிலான பிரிட்டன் ஏகாதிபத்தியம் செய்தது சரியாகிவிடுமா? என்ன ? டோண்டு ! கம்பியூனிசம் ஸ்டாலின் என்றாலே ஏன் உங்களுக்கு பேதி பிடுங்கிக் கொண்டு வருகிறது என்று தெரியவில்லை. உங்களோடும் திருவாளர் அதியமானோடும் பேசுவது வீண் என்றாலும், கலையகத்தின் மற்ற வாசகர்கள் தவறான கருத்துக்கு ஆட்படக் கூடாது என்பதற்காக தான் இது.
விவாதத்தில் பங்கு கொண்டு விரிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஆதவன். ஸ்டாலின்- ஹிட்லர் ஒப்பந்தத்தை காட்டியே அப்பாவி மக்களை மதிமயக்கும் தந்திரம் கடந்த அறுபது வருடங்களாக ஏகாதிபத்தியம் செய்து வருவது தான். டோண்டுவும் அதைத் தான் வழிமொழிகிறார். யுத்த காலத்தில் இரண்டு பகையாளிகள் தமக்கு இடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது வழமை. அதைத் தான் அன்று சோவியத் யூனியனும், ஜெர்மனியும் செய்து கொண்டன. அதை ஏதோ நட்புறவு ஒப்பந்தம் போல திரிபுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்தது கூட யுத்த தந்திரம் தான். இரண்டு இராணுவங்கள் தமது முன்னரங்க நிலைகளை மாற்றிக் கொண்டன. நடந்தது இரண்டாவது உலகப்போர். எதிரி நாட்டுக்கு எதிராக வியூகம் வகுப்பதைப் பற்றித் தான் வல்லரசுகள் சிந்தித்துக் கொண்டிருந்தன. யுத்தம் நடைபெற்ற காலங்களில் அமெரிக்க ஆயுதங்கள் சோவியத் யூனியனுக்கு அனுப்பபட்டன. உலக அரங்கில் அமெரிக்கா சோவியத் ஆதரவு பிரச்சாரம் செய்தது கொண்டிருந்தது. ஜெர்மனி என்ற பொது எதிரிக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதற்காக அமெரிக்கா கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவுமில்லை. சோவியத் முதலாளித்துவ நாடாக மாறவுமில்லை.
//இரண்டு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்தது கூட யுத்த தந்திரம் தான்.//
இன்னுமா யுத்த தந்திரம் தொடர்கிறது? சோவியத் யூனியன் தான் விழுங்கிய போலந்தின் பகுதிகளை திருப்பித் தரவேயில்லையே? இன்னும் போலந்தின் அந்தப் பகுதிகள் போனது போனதுதானே. அதற்கு நீங்கள் பதில் கூறாமல் தவிர்ப்பது என்ன சாமர்த்தியமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன் டோண்டு,
பிரான்ஸ் விழுங்கிய ஜெர்மன் பகுதியையும், இந்தியா விழுங்கிய காஷ்மீர் பகுதியையும், அமெரிக்கா விழுங்கிய மெக்சிகோ பகுதிகளையும், இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. போனது போனது தான். இதை பற்றி எல்லாம் நீங்கள் கண்டுகொள்ள மாட்டீர்கள். போலந்து ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை திருப்பிக் கேட்டால், ஜெர்மனி போலந்திடம் இழந்த பகுதிகளை திருப்பிக் கேட்கும். அதே போல ஜெர்மனி பிரான்சிடம் இழந்த பகுதிகளையும் திருப்பிக் கேட்டால், ஹிட்லர் காலம் மீண்டும் வருகிறது என்பதற்கு அறிகுறி. அதைத் தான் விரும்புகிறீர்களா டோண்டு?
யுத்தத்தில் வென்றவர்கள் தமது புவியியல் பாதுகாப்பு கருதி சில பகுதிகளை முன்னரங்க காவல் நிலை போல வைத்துக் கொள்கின்றன. அன்று சோவியத் யூனியனும் அவ்வாறு தான் போலந்தின் கிழக்குப் பகுதியை தன்னுடன் சேர்த்துக் கொண்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் மாஸ்கோவிற்கு வரவிருக்கும் ஆபத்து சில நூறு கிலோ மீட்டர் தள்ளிப் போடப் பட்டது. வரலாற்றில் ஒரு ஹிட்லர் தோற்கடிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் ஒரு ஹிட்லர் தோன்ற மாட்டான் என்பதற்கு என்ன நிச்சயம்? மீண்டும் ஜெர்மனி வல்லரசாகி பிராந்திய விஸ்தரிப்புக்காக ரஷ்யா மீது படையெடுக்க மாட்டாதா? எதிர்கால அபாயத்தை கருத்தில் கொண்டு சோவியத் யூனியன் பல மாற்றங்களை செய்தது. உதாரணத்திற்கு ரயில் தண்டவாளங்கள் கூட மாற்றப்பட்டன. ஐரோப்பாவில் குறுகலான ரயில் தண்டவாளங்களையும், சோவியத் நாடுகளில் அகலமான தண்டவாளங்களையும், நீங்கள் இன்றைக்கும் காணலாம்.
போரில் சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்ட போலந்தின் பகுதிகளுக்கு நஷ்ட ஈடாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகள் போலந்துடன் இணைக்கப் பட்டன. இந்த மாற்றங்கள் எல்லாம் அன்று நேச நாடுகளாக இருந்த பிரிட்டன், அமெரிக்காவின் ஒப்புதலின் பேரில் நடந்த விஷயங்கள். தனியாக சோவியத் யூனியனை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பது அறியாமை. போலந்து தனது பகுதிகளை சோவியத் யூனியனிடம் தாரை வார்த்து விட்டு சிறிய நிலப்பரப்பில் ஒடுங்கியிருப்பது போன்ற என்ணத்தை தோற்றுவிக்கும் கருத்துகளை பரப்பாதீர்கள். போலந்து இன்றைக்கும் ஐரோப்பிய கண்டத்தின் பெரிய நாடுகளில் ஒன்று.
Post a Comment