

டென்மார்க், கோபன்ஹெகன் நகரில் புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் தொடர்பாக கூட்டப்பட்ட சர்வதேச மாநாடு ஆரம்பமாகியது. கூடவே பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாற்றுக் கருத்தாளரும், தமது குரலை ஒலிக்கச் செய்வதற்காக தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். ஆர்ப்பாட்டக்காரரை மேற்கொண்டு நகரவிடாது பொலிஸ் சுற்றி வளைத்தது. மணித்தியாலக் கணக்காக தெருவில் இருத்தி வைக்கப்பட்டனர். சிறுநீர் கழிப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. இதனால் பலர் தமது காற்சட்டைகளில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. இறுதியாக 700 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். கோபன்ஹெகன் மாநாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனுப்பி வைத்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
2 comments:
நாகரீகத்தின் மேன்மையுற்ற கனவான்களாகவும், ஜனநாயக காவலர்களாகவும் தம்பட்டமடிக்கும் ஐரோப்பிய, மேலைத்தேயங்களில் அடிப்படை சுதந்திரங்களில் ஒன்றான கருத்துச்சுதந்திரமே வினாக்குறியாக வளைந்து நிற்கின்றது. மேலைத்தேய மாயைகளை கிழித்தெறியும் சரியான ஆவணம் தான்.
நன்றி, பிரகாஷ். மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இவற்றை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவதே "கலையகத்தின்" பணி. இது போன்ற செய்திகள் வெகுஜன ஊடகங்களில் வருவதில்லை.
Post a Comment