Showing posts with label ஈழ அகதி. Show all posts
Showing posts with label ஈழ அகதி. Show all posts

Wednesday, April 07, 2010

கோரம்! தீயில் கருகிய ஈழ அகதிப் பெண் - வீடியோ சாட்சியம்

தமிழக போலிஸ் வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளானதால், மனமொடிந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த ஈழ அகதியின் வாக்கு மூலம். கரூர் அகதி முகாமில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பத்மாதேவி, மூன்று காவலர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளானார். விடுவிக்கப்பட்டு முகாம் திரும்பிய அபலைப்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த வேளை காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மனித உரிமைகள் அமைப்பினருக்கு வழங்கிய சாட்சியம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.