Thursday, November 25, 2010

சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ

காஸா நோக்கி சென்ற நிவாரணக் கப்பலில் இஸ்ரேலிய படையினர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 31, காஸா முற்றுகைக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, "மாவி மார்மரா" என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இஸ்ரேலிய கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பினுள் கப்பலை வழிமறித்தனர். இஸ்ரேலியரின் திடீர் தாக்குதல் காரணமாக, 20 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் சிறைப் பிடிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களும், கப்பல் பயணிகளும் துருக்கிய பிரஜைகள் ஆவர். அதனால் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு முறிந்தது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தாக்குதல் நடந்த போதிலும், துருக்கியினால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.

"Kurtlar Vadisi - Filistin" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் "குர்த்ளர் வாடிசி" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப் பட்டது. 


"மாவி மார்மரா" படுகொலை தொடர்பான முன்னைய பதிவுகள்:
அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்
ஐ.நா.அறிக்கை: "அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது"

2 comments:

கோலா பூரி. said...

நம்ம சினிமாக்களையே இன்னமும் புரிந்து கஒள்ள முடியலை. இதில் துருக்கி சினிமால்லாம் ரசிக்கமுடியும்னு தோணல்லியே?

வானம் said...

@கோமு,
நம்ம சினிமாவ புரிஞ்சுகிட்டா பைத்தியம் புடிச்சி பாயை பிராண்டிகிட்டு இருக்க வேண்டியதுதான். நீலப்படம் எடுக்க முடியலையேங்குற ஆதங்கத்தோடதான் இப்ப நிறையப்பேர் படம் எடுக்குறாங்க.