ஜனாதிபதி அனுர குமார, முன்னொரு காலத்தில், அதாவது அரசும் புலிகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில், "தமிழின படுகொலையை ஆதரித்து", அல்லது "தமிழ் மக்களுக்கு எதிரான" ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் படுகிறது.
அதற்கு "ஆதாரமாக" இந்தப் படத்தை பகிர்ந்து உள்ளனர். சரி, இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டத்தில் இருந்த பதாகைகளில் என்ன எழுதி இருக்கிறது என்று யாராவது வாசித்து கூற முடியுமா?
//வன்னிப் புலிகளுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சக்தியை கட்டி எழுப்புவோம்.// என்று ஒன்றில் எழுத பட்டுள்ளது.
கவனிக்கவும்: "தமிழர்களும்"!
//LTTE தலைவர்களை Hague(ICC) இல் விசாரி// என்று இன்னொன்றில் உள்ளது.
கவனிக்கவும்: "தலைவர்களை"!
இது எப்படி தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்? கண்ணுக்கு எட்டிய வரையில் "தமிழர்களை அழிக்க வேண்டும்" என்பது மாதிரியான எதையும் காணவில்லை.
இப்போது எழும் கேள்வி, புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை எப்படி தமிழர்களுக்கு எதிரானதாக கருத முடியும்? ISIS க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை முஸ்லிம்களுக்கு எதிரானதாக கருத முடியுமா?
"ஏன் புலிகள் தமிழர்கள் இல்லையா?" என்று யாராவது ஒரு அறிவாளி கேள்வி கேட்க கூடும். அப்படி பார்த்தால் "அரச படையினர் சிங்களவர்கள்...", "ISIS உறுப்பினர்கள் முஸ்லிம்கள்..." இப்படி ஏதாவது சாட்டுபோக்கு சொல்லி தப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட ஆயுதபாணிகளை எதிர்த்தால் அது ஒட்டு மொத்த இனத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கருதுவது கூட இனவாதக் கண்ணோட்டம் தான்.
அதை விட ஈழப் போர் (இதையும் "ஈழ போராட்டம்" என்று திரிப்பார்கள். போராட்டம் அல்ல போர்) நடந்த காலத்தில் ஒரு பக்கம் அரச படையினரும் மறுபக்கம் புலிகளும் போரில் ஈடுப்பட்ட இரண்டு தரப்பினர் ஆவர். ஒரு தரப்பான புலிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "தமிழின அழிப்பு ஆதரவு" என்று ஒரு தற்குறி மட்டுமே சொல்ல முடியும். இப்படி பாருங்கள்.
அரச படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "சிங்கள இன அழிப்பு ஆதரவு" என்று கூற முடியுமா? எப்போதுமே இனவாதிகள் அவ்வாறு தான் திரிப்பார்கள்.
மக்கள் தான் இனவாதிகள் விரித்த வலையில் விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment