Monday, November 01, 2010

ஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்

"இஸ்ரேலுக்கு ஆதரவு, இஸ்லாமியருக்கு எதிர்ப்பு" என்ற போர்வையின் கீழ் உலகம் முழுவதும் பாஸிச சக்திகள் தம்மை பலப்படுத்தி வருகின்றன. இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை மூலதனமாக இட்டு, அரசியல் கட்சி நடத்தும் நெதர்லாந்தை சேர்ந்த ஹெர்ட் வில்டர்ஸ் தான் அவர்களின் உதாரண புருஷர். வில்டர்சின் அரசியல் கட்சி, இன்று நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய பெரிய கட்சியாக கூட்டரசாங்கத்தில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தின் பாஸிச கட்சியான English Defence League (EDL), இங்கிலாந்துக்கு ஒரு ஹெர்ட் வில்டர்ஸ் தேவை என பிரச்சாரம் செய்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை 30 அக்டோபர், EDL உறுப்பினர்கள், ஆம்ஸ்டர்டம் வந்து "வில்டர்ஸ் ஆதரவு ஆர்ப்பாட்டம்" செய்தனர். அவர்கள் தமது பாஸிச புரட்சியை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக போலும், Dutch Defence League என்ற முன் பின் கேள்விப்பட்டிராத அமைப்புடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஸிச எதிர்ப்பாளர்களுடன் கலகம் மூளலாம் என்ற அச்சத்தில், தலைநகரின் மத்தியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் Antifa என்ற அமைப்பு, எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியது. வெளிநாட்டு குடியேறிகள், கால்பந்து ரசிகர்கள் ஆகியோரும் Antifa வுடன் இணைந்து, பாஸிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். "ஐரோப்பா இஸ்லாமிய மயமாகின்றது" என்று பாசிஸ்ட்கள் மேடை போட்டு முழங்கிக் கொண்டிருக்கையில், இடையூறு செய்தவர்களை போலிஸ் அப்புறப் படுத்தியது.

நெதர்லாந்து தொலைக்காட்சி பாஸிச எதிர்ப்பாளர்களை "முரட்டு கால்பந்து ரசிகர்கள்" என்று குறிப்பிட்டது. இதே தொலைக்காட்சிகள் தான் வில்டர்சின் இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுகளுக்கு மேடை போட்டுக் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற உதவின. வில்டர்ஸ், EDL போன்ற நவ-பாஸிச சக்திகள் வெறுமனே இஸ்லாமியரை மட்டும் விரோதிகளாக பார்க்கவில்லை. அகதிகள், வெளிநாட்டுக் குடியேறிகள் ஆகியோரையும் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் வெளியேற்ற விரும்புகின்றனர். பாஸிச கொள்கைக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்: "யூத-கிறிஸ்தவ கலாச்சாரம்". ஐரோப்பிய பாசிஸ்ட்களை பொறுத்த வரை, வெள்ளையினத்தவர்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் ஒன்றில் இஸ்லாமியர்கள் அல்லது கருப்பர்கள். "நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம், கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். அதனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்." என்று அப்பாவித்தனமாக நம்பும் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். பாசிஸ்ட்கள் மிகத் தந்திரமாகத் தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவின் பெரிய சிறுபான்மை இனமான இஸ்லாமியரை ஒடுக்குவது தான் கடினமான காரியம். மற்றவர்களை இலகுவாக மூட்டை கட்டி, அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பி விடலாம்.

ஆம்ஸ்டர்டாமில் EDL பாசிஸ்ட்களுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை காட்டும் வீடியோ இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.




Press release antifa!-amsterdam antifa

Press Release: EDL demonstration embarrasment, anti-fascists very satisfied with counter-protests.

Antifa! Amsterdam is positive about the course of the demonstrations and actions today in Amsterdam.
In many ways today it became crystal clear that no'one over here wants the kind of fascist street-activism as the right-wing English Defence League hopes to export to mainland Europe.

The demonstration of the EDL / DDL was an outright failure, not more than 50 protesters eventually took the trouble to show their support for Wilders. This while the organization, even after the forced relocation to a midle of nowhere spot in the western docklands, still said this week to expect up to1,000 supporters.
In the end, the meager turnout (in particular on the part of the Dutch Defence League, only a few of the protesters were Dutch) and the fierce resistance that they were confronted with should be an omen about the future prospects of their crossing of the channel.

This while simultaneously a broad range of hundreds of people and dozens of groups showed throughout the city their disapproval and anger about the coming of the racist scum to the capital.
Antifa! Amsterdam expresses support and appreciation to each and everyone who has gone out on the streets today against racism and xenophobia.
From the hundreds of protesters who protested at 1941 general strike monument, the dozens of activists that spread over the city to prevent that the EDL would still showup in the center, to the many people who decided to ignore the emergency orders from the mayor and went in direct action in the docklands.
The great variety of people who have come today in opposition is a clear signal, from young immigrants to experienced activists, from soccer fans to social organizations.
In particular, the presence of Jewish individuals and the reform movement in Iran, for whom the EDL pretends to speak, and the high turnout of football fans that the EDL consider as their natural support, show that people are not deceived by the EDL.

In summary Antifa! Amsterdam considers the day as overwhelmingly successful, and calls on everyone to keep fighting, in resistance against discrimination, hatred, fear and extreme right violence.

8 comments:

Anonymous said...

//நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம், கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். அதனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்.//

கிறிஸ்தவ விசுவாசம் எந்த மனிதனையோ, சக்திகளையோ நம்பி உருவானதல்ல. இது கிறிஸ்துவை மாத்திரம் நம்பி உருவானது. உங்கள் மேற்கோள் ஆதாரமற்றது.

Kalaiyarasan said...

இது ஒன்றும் தவறான மேற்கோள் அல்ல. எத்தனையோ பேர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னிடமே நேரடியாக கூறியிருக்கிறார்கள். "ஐரோப்பியர்களுக்கு முஸ்லிம்களை மட்டும் தான் பிடிக்காது. எங்களோடு எப்போதும் பாசமாகத் தான் இருக்கிறார்கள்." என்பன போன்ற கருத்துகளை தமிழ் ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

Anonymous said...

//ஐரோப்பியர்களுக்கு முஸ்லிம்களை மட்டும் தான் பிடிக்காது. எங்களோடு எப்போதும் பாசமாகத் தான் இருக்கிறார்கள்.//

ஆச்சரியமாக இருக்கின்றது. பிரமைக்குள் இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். முஸ்லிம்களையோ அல்லது எவரையுமோ வெறுத்து கிறிஸ்துவை அன்பு செய்ய முடியாது.

காந்தியின் கூற்றின் காரணத்தை அவர்கள் நினைவிற் கொள்வது நன்று:
"I like your Christ, I do not like your Christians. Your Christians are so unlike your Christ."

Kalaiyarasan said...

//முஸ்லிம்களையோ அல்லது எவரையுமோ வெறுத்து கிறிஸ்துவை அன்பு செய்ய முடியாது.//

முற்றிலும் உண்மை. தங்களைப் போல புரிந்துணர்வு கொண்டவர்கள் மிகக் குறைவு என்பது சமூக யதார்த்தம்.

Pradeep.P said...

""பாசிஸ்ட்கள் மிகத் தந்திரமாகத் தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவின் பெரிய சிறுபான்மை இனமான இஸ்லாமியரை ஒடுக்குவது தான் கடினமான காரியம். மற்றவர்களை இலகுவாக மூட்டை கட்டி, அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பி விடலாம்.""

நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும்.... இங்கு ஹெர்ட் வில்டர்ஸ் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் மக்கள் மனதை மாற்ற காரணமே morocco மற்றும் algerian செய்கின்ற கிரிமினல் வேலைகள் தான் காரணம் என்று கூறுவது ???

Kalaiyarasan said...

கிரிமினல்கள் எல்லா சமூகங்களிலும் தான் இருக்கிறார்கள். மொரோக்கோ சமூகத்தினர் மத்தியில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகம். ஆரம்ப பாடசாலைக் கல்வியுடன் இடைநிறுத்துபவர்கள் அதிகம். அவர்கள் வாழும் பகுதிகளில் வசதிக் குறைபாடு இருக்கிறது. இத்தகைய பிரச்சினைகளை அரசு தீர்க்கவில்லை. அதனால் பின்தங்கிய சமூகத்தில் இருந்து கிரிமினல்கள் உருவாகுவதை தடுக்க முடியாது. அறுபது வருடங்களுக்கு முன்னர், பெரும்பான்மை ஐரோப்பியர்கள் வறுமையில் வாடினார்கள். அதனால் அன்று ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் "வெள்ளையின கிரிமினல்களின் பிரச்சினை" இருந்தது. இன்று வெள்ளையின சமூகத்தின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதால், கிரிமினல்கள் உருவாவது குறைவு. ஆனால் இன்றைக்கும் வெள்ளையினத்தவர் மத்தியில் நிறைய மாபியா கிரிமினல்கள் உண்டு. ரோமானியா, முன்னாள் யூகோஸ்லேவியா, போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் வெள்ளயினத்தவர்களும் மொரோக்கோ, அல்ஜீரியர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கிரிமினல் வேலைகள் செய்கின்றனர்.
அவர்களைக் காட்டி, வெள்ளையினத்தவர்கள், அல்லது கிறிஸ்தவர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்று கூற முடியுமா? கிரெடிட் கார்ட் மோசடி, குழு வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் பற்றி அடிக்கடி பிரிட்டிஷ் ஊடகங்களில் செய்தி வரும். அதற்காக தமிழர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்று கூற முடியுமா? மொரோக்கோ, அல்ஜீரிய சமூகங்களிலும் ஒரு சிறிய தொகையினர் மட்டுமே கிரிமினல்கள். பெரும்பான்மையானோர் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் தான்.

RAZIN ABDUL RAHMAN said...

சகோ கலையரசன் அவர்களே.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்

Kalaiyarasan said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ரஜின்.