Friday, October 24, 2008

வீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை. நீண்டகால போரினால் களைப்படைந்த சராசரி யாழ்ப்பாண மக்கள், சமாதானத்திற்காக ஏங்குகின்றனர், என்ற யதார்த்தத்தை பதிவு செய்த தொலைக்காட்சி வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு யுத்தம் காரணமாக இலங்கையின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி தருகின்றது. போர்ச்சூழல் உருவாக்கிய பொருளாதாரக் கஷ்டங்கள், மரணபயத்துடன் அஞ்சி அஞ்சி வாழும் நிலைமை, போன்றவற்றை சாதாரண மக்களை பேட்டி கண்டு,அவர்களின் பிரச்சினையை உலகம் பார்க்கும் வகை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. பெரும்பாலான ஊடகங்கள் போரைப் பற்றி மட்டுமே அறிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சாதாரண மக்களின் அவலங்களை தேடிச் சென்று படம் பிடித்த, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

DAYS IN JAFFNA



Thanks to: International Network of Sri Lankan Diaspora
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

3 comments:

Sri Rangan said...

கலையரசன்,நல்ல முயற்சி.மக்களின் உண்மையான வாழ்நிலைகளை எடுத்துவந்து, யுத்தப் பிரபுக்களுக்கு முன் மக்களது மனவிருப்பை(...) காட்டியது உண்மையில் அவசியமான விஷயமே!

புகழன் said...

தக்க சமயத்தில் வெயிட்டுள்ளீர்கள்.

நன்றி.

Anonymous said...

Thanks of lot for your efforts.Good work...please continue your services...

Kesava