Showing posts with label சிக்காகோ பல்கலைக்கழகம். Show all posts
Showing posts with label சிக்காகோ பல்கலைக்கழகம். Show all posts

Monday, October 19, 2009

இஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்கலைக்கழகம்

(15 Oct.,Chicago,USA) சிக்காகோ பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த சிறப்பு விரிவுரையாளரான இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மேர்ட் மாணவர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார். விரிவுரையாற்றிய மண்டபத்திற்கு வெளியே சுமார் 150 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டபத்தினுள்ளேயும் ஒல்மேர்ட்டை பேச விடாமல் தடுத்து குழப்பம் விளைவித்தனர். "ஒல்மேர்ட் போர்க் குற்றவாளி" என்ற கூக்குரல்கள் மண்டபத்தின் நாலாபக்கத்தில் இருந்தும் கேட்டன. காஸா இராணுவ நடவடிக்கையில் கொள்ளப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் பெயர்கள் சத்தமாக வாசிக்கப்பட்டன. ஒல்மேர்ட்டின் ஆட்சிக்காலத்தில் தான் காஸா பல்கலைக்கழகம் இஸ்ரேலிய படையினரால் தகர்க்கப்பட்டது. அப்பேர்ப்பட்ட கிரிமினலை சிக்காகோ பல்கலைக்கழகம் விரிவுரையாற்ற அழைத்த செயலை கண்டித்தனர். ஒல்மேர்ட் பதவியில் இருந்த போது தான், லெபனான், காஸா மீதான இராணுவ நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை இங்கே நினைவுகூரத்தக்க்கது.
மண்டபத்தினுள் ஊடகவியலாளர்கள் கூட கமெராக்கள் கொண்டு வரக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்தது. இருப்பினும் மாணவ ஆர்வலர்கள் இரகசியமாக எடுத்துச் சென்ற வீடியோ கருவி மூலம், அங்கே நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளனர்.