Showing posts with label அல் ஜசீரா. Show all posts
Showing posts with label அல் ஜசீரா. Show all posts

Sunday, September 13, 2009

இலங்கையில் தொடரும் ஊடகப்போர் (வீடியோ)

இலங்கையில் தற்போது துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்பது ஓய்ந்துள்ளபோதிலும், ஊடகங்களுக்கு எதிரான போர் தொடர்கின்றது. முன்னெப்போதும்இல்லாதவாறு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒரு ஊடகவியலாளருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசை விமர்சிக்கும்ஊடகவியலாளர் யாவரும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், பிறஊடகங்களினது வாயை அடைக்க விடுக்கபட்ட எச்சரிக்கையாகவே இதனை கருதஇடமுண்டு. ஊடக சுதந்திரம் குறித்து ஆய்வு செய்யும் அல் ஜசீராவின் நிகழ்ச்சித்தொடரில் இலங்கை தொடர்பாக வந்த வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.


Saturday, January 31, 2009

ராமேஸ்வரம் அகதிகள் பற்றிய ஆவணப்படம்

அல் ஜசீரா தொலைகாட்சி, இலங்கையில் நடக்கும் தமிழின விரோத போர், மற்றும் ஈழத்தமிழர் படும் துன்பங்கள் குறித்த அறிக்கைகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வரும் குறிப்பிடத்தக்க சர்வதேச ஊடகமாகும். ராமேஸ்வரம் அகதிகளின் அவலத்தை நேர்கண்ட ஆவணப்படம் ஒன்றை அண்மையில் அல் ஜசீரா ஒளிபரப்பியது.

Those who’ve been able to escape the fighting in Sri Lanka face new hardships. Many leave everything behind, in search of safety in neighbouring India. Thousands of refugees have attempted to make the dangerous voyage from the north of Sri Lanka to state of Tamil Nadu, as Al Jazeera’s Matt McClure reports from Rameswarem.

Sri Lankan refugees face hardships (Al Jazeera English, 29 Jan 09 )