நீங்கள் நீண்ட காலமாக கட்ட முடியாமல் கஷ்டப் படும் மின்சாரக் கடன் பாக்கி, திடீரென ஒரு நாள் மின்சார சபையின் கணனியில் இருந்து அழிக்கப் பட்டால், எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள்? பல்லாயிரக் கணக்கான துருக்கி மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
துருக்கியில் ரொபின் ஹூட் பாணியில் இயங்கும், கம்யூனிச ஹேக்கர் அமைப்பான ரெட் ஹேக், கோடிக் கணக்கான டாலர் மின்சாரக் கடன் பாக்கியை அழித்து விட்டுள்ளது. (http://www.techworm.net/2014/11/redhack-hacks-turkeys-electric-distribution-company-website-delete-bills-worth-1-5-trillion-turkish-lira.html)
துருக்கி மின்சார சபையின் கணனிக் கோப்புகளுக்குள் நுளைந்து, சுமார் 1.5 ட்ரில்லியன் லீரா (668523705000.00 US Dollar ) தொகையை அழித்து விட்டது. இதனால் மின்சார விநியோக நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரெட் ஹேக் அமைப்பு, தாங்கள் எவ்வாறு கோப்புகளை அழித்தோம் என்ற விபரத்தை, வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணைப்பு இங்கே:
http://vimeo.com/111586164
Türkiye Elektrik İletim A.Ş. Hacked REDHACK from RedHack on Vimeo.
யார் இந்த ரெட் ஹேக்? துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய, இளம் மார்க்சிய - லெனினிச கணனித் துறை நிபுணர்கள். 1997 ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். இது வரை காலமும், துருக்கி இராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்பு துறை போன்றவற்றின் இணையத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். துருக்கி அரசு, ரெட் ஹேக் "ஒரு பயங்கரவாத இயக்கம்" என்று அறிவித்துள்ளது. ஆனால், துருக்கி மக்களுக்கு அவர்கள் "நவீன காலத்து ரொபின் ஹூட்கள்".
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்!
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்!
No comments:
Post a Comment