இந்த வருடமும், பல உலக நாடுகளின் நகரங்களில், பல்லாயிரக் கணக்கான உழைக்கும் மக்கள் பங்குபற்றிய மே தின பேரணிகள் இடம்பெற்றன. சில நகரங்களில், பொலிஸ் அடக்குமுறை, தீவிர வலதுசாரிகளின் சீண்டுதல்கள் காரணமாக வன்முறைக் கலவரம் ஏற்பட்டது.
சுவீடன்
பல தசாப்தங்களாக, சமூக ஜனநாயக கட்சியின் "சமதர்ம" ஆட்சி நடக்கும் சுவீடனில், மே தினம் விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக, தீவிர வலதுசாரிக் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இம்முறை மே தின ஊர்வலத்தை, பாசிஸ்டுகள் குழப்ப முயன்ற வேளை, கைகலப்பு ஏற்பட்டது.
துருக்கி
இஸ்தான்புல் நகரில் மே தின ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது. பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், வங்கிகள் அடித்து நொறுக்கப் பட்டன.
கனடா
மொன்றியல் நகரில், கடந்த சில நாட்களாகவே, அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மே தினத்தன்று,கனடிய மாணவர்களும், தொழிலாளர்களும் இணைந்து பேரணி ஒழுங்கு படுத்தி இருந்தனர். பொலிஸ் ஊர்வலத்தை கலைக்க முயற்சித்ததால், அங்கு கலவரம் மூண்டது.
No comments:
Post a Comment