Wednesday, October 13, 2010

இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள்


அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 12 ம் தேதி, கொலம்பஸ் என்ற கொலை வெறியனை நினைவு கூர்ந்து விழா எடுக்கிறார்கள். "கொலம்பஸ் தினம்" ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு முக்கியமான விடுமுறை தினம். கொலம்பஸ் அமெரிக்காவை "கண்டுபிடித்த" கதையை பாலர் பாடசாலையில் இருந்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். யார் இந்த கொலம்பஸ்? கரீபியன் தீவுகளில் வாழ்ந்த இரண்டு லட்சம் மக்களை இரு வருடங்களில் இனவழிப்பு செய்த சாதனையாளன். ஒன்பது வயது சிறுமிகளைக் கூட பாலியல் அடிமைகளாக்கிய கயவன். அமெரிக்காவில் முதன் முதலாக அடிமை வாணிபத்தை அறிமுகம் செய்த அயோக்கியன். இன்று உயிரோடிருந்தால், மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பான்.
அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? கொலம்பஸ் தானே எழுதி வைத்த தினக்குறிப்புகள் இருக்கின்றன. கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ், கொடுமைகளால் மனம்வருந்தி எழுதிய குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் அமெரிக்க மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. இன்று யாரும் இவற்றை நினைவு கூற விரும்புவதில்லை. வரலாற்றுப் பாடநூல்களும் சம்பிரதாயத்திற்காக என்றாலும் குறிப்பிடுவதில்லை. இனவழிப்பு செய்த கொலம்பஸை தேசிய நாயகனாக விழா எடுத்துக் கௌரவிக்கும் வெட்கக்கேடு அமெரிக்காவில் நடக்கின்றது. இதை அறியாத பல தமிழர்கள், அமெரிக்கர்கள் நாகரீமானவர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப் பட வேண்டுமென அரசுக்கு பிரேரணை செய்தது Knights of Columbus என்ற அமைப்பு. இது ஒரு வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறிக் கொள்கை கொண்ட கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் கொலம்பஸை தமது பிள்ளைகளுக்கு கத்தோலிக்க ஆதர்ச நாயகனாக காட்டினார்கள். 1934 ம் ஆண்டு, ஜனாதிபதி பிராங்கலின் ரூஸ்வெல்ட் கொலம்பஸ் தினம் என்ற விடுமுறை நாளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதன் முதலாக அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. செவ்விந்திய பூர்வீக குடிகள், பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்றும் கூற முடியாது. Leif Ericson என்ற கடலோடி தலைமையில், ஸ்கன்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள், கனடாவில் நியூபவுன்லாந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தனர்.

12 அக்டோபர் 1492 ம் ஆண்டு, கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்த காலத்தில், அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சமாதான விரும்பிகளான அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தினக்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார்.
"அவர்கள் தம்மிடம் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதற்கெல்லாம் இல்லை என்று மறுப்புக் கூறுவதில்லை....."
"அரவாக்ஸ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்களது சமூகத்தில் குற்றவாளிகள் இல்லை, கைதிகள் இல்லை, சிறைகள் இல்லை. எமது கப்பலான சாந்தா மரியா கரைதட்டி உடைந்த பொழுது, கப்பலில் வந்தோரையும், பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த ஒரு பொருளையேனும் அவர்கள் ஒளித்து வைக்கவில்லை..."

இவ்வாறு மனமுவந்து உதவி செய்த நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைம்மாறு என்ன? அந்த மக்களை அடிமைகளாக்கி தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினான். இருப்பதை பங்கிட்டு மகிழச்சியாக வாழ்ந்த மக்கள், இன்னலுற்று மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக தற்கொலை செய்தனர். அரவாக்ஸ் பெண்களை கொலம்பஸின் ஆட்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தால், அவர்கள் 9 , 10 வயது சிறுமிகளை தேடிச் சென்றார்கள்..."

அரவாக்ஸ் அடிமைகளை இறக்கும் வரை இரத்தத்தை பிழிந்து வேலை வாங்கினார்கள். ஒரு செவ்விந்திய அடிமை தினசரி குறிப்பிட்ட கோட்டா தங்கம் எடுத்துக் கொடுக்கா விட்டால், தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். அடிமை முறைக்கு எதிர்ப்புக் காட்டிய அரவாக்ஸ் தொழிலாளியின் மூக்கையும், காதுகளையும் அறுத்தனர். அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடி பிடிபட்டால் உயிரோடு கொளுத்தினார்கள். கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். தப்பியோடியவர்களை வேட்டையாடும் நாய்கள், அவர்களை கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாக பிய்த்து விடும். கொலம்பஸின் ஆட்கள் தமது வேட்டை நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டி உணவளித்தார்கள்! ஸ்பெயினில் இருந்து நீண்ட கடற்பயணம் செய்து வந்தவர்களை விருந்தாளிகளாக ஏற்று உபசரித்த அரவாக்ஸ் மக்களுக்கு, கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் அப்படியானது. தான் செய்த கொடூரங்களுக்காக கொலம்பஸ் வருந்தியதாக தெரியவில்லை. கிறிஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருக்க கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்காக கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். செவ்விந்திய குடிமக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை விதித்தான். கிறிஸ்தவர்கள் அல்லாதோரை கொன்றாலும் பாவம் இல்லை அல்லவா?

ஜெர்மனியில் ஹிட்லரை தேசிய நாயகனாக கொண்டாடினால் உலகம் எந்தளவு அதிர்ச்சி அடையும்? மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன்? உலக வரலாறு முழுவதும் இனப்படுகொலையாளர்கள் மாவீரர்களாக போற்றப் பட்டு வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன்.... உதாரணத்திற்கு சில. இதையெல்லாம் தெரிந்தாலும் மூடி மறைக்கும் அறிவுஜீவிகள் தான்; ஸ்டாலின், மாவோ எத்தனை பேரை கொலை செய்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். "மேலைத்தேய நலன்களுக்காக கொலை செய்பவர்கள் பரிசுத்தவான்கள். அதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கலாம்."

19 comments:

Anonymous said...

கொலம்பஸ் கொலைகாரன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா, பாப்பரசர்கள், முகம்மது நபி, பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸே, ஒபாமா எல்லோரும் கொலைகாரர்கள்தான். இதிலென்ன மாற்றுக்கருத்து. இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதர்களாக இருக்க முடியாது.

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Hai said...

ஆள்வோர் யாரை கொண்டாட விரும்புகிறார்களோ அவர்களை நாயகனாகக் கொண்டே வரலாறு எழுதப்பட்டு வருவதுதானே வழக்கம். அந்த வரலாறு எவ்வாறு எழுத வேண்டுமென தீர்மானிப்போரும் அவர்களே. பின்னர் என்ன யாரெல்லாம் ஆள்வோரின் சித்தாந்தங்களுக்கு மாறுபடாத கொள்கை கொண்டவர்களும் கொண்டிருப்போரும் வரலாற்றில் நாயகர்களாகவும் எதிப்போர் தேச/நாயகர்களின் விரோதிகளாயும் ஏனையோர் நாயகர்களுக்கு துணை புரினந்தார்கலெனவும் வரலாறு தொடர்கிறது.

Rajan said...

கொலம்பஸ் அயோக்கியன்தான், சந்தேகமில்லை! மாவோ, ஸ்டாலினும் அயோக்கியர்கள்தானே? முதவாலித்துவவாதிகள் அவர்களுக்கு குடைபிடிக்கிறார்கள். கம்யுனிசவாதிகள் இவர்களுக்கு குடைபிடிக்கிறார்கள் அவ்வளவுதான்!

மார்கண்டேயன் said...

கலையரசன், இதுக்கும் தனியா புத்தகம் போடணும்க . . . இன்னும் இது மாதிரி எத்தனையோ ?, பயனுள்ள தகவல், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Anonymous said...
கொலம்பஸ் கொலைகாரன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா, பாப்பரசர்கள், முகம்மது நபி, பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸே, ஒபாமா எல்லோரும் கொலைகாரர்கள்தான். இதிலென்ன மாற்றுக்கருத்து. இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதர்களாக இருக்க முடியாது.

intha listil unga peyaraiyum elithikollunga

Anonymous said...

பிரபாகரனை இதனுடன் சேர்த்த பொறம்போக்கு கையில் கிடைத்தால் சங்குதான்.

Anonymous said...

//intha listil unga peyaraiyum elithikollunga//

//பிரபாகரனை இதனுடன் சேர்த்த பொறம்போக்கு கையில் கிடைத்தால் சங்குதான்.//

உண்மையை ஏற்றுகொள்ள முடியாதவர்கள் புலம்புகிறார்கள். முடிந்தால் நியாயத்தை சொல், புலம்பாதே!

//பொறம்போக்கு//

இது உன் காட்டுமிராண்டித்தனத்தைத் காட்டுகிறது. பிரபாகரன் செய்த கொலைகளுக்கு உன் அகராதியில் என்ன பெயர்? உன் மிரட்டலை சிங்கள இராணுவத்திற்கு காட்டியிருக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் மக்கள் முள்ளிவாக்காலில் மாண்டபோது எங்கே போனாய்?

வானம் said...

//
Anonymous said...
கொலம்பஸ் கொலைகாரன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா, பாப்பரசர்கள், முகம்மது நபி, பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸே, ஒபாமா எல்லோரும் கொலைகாரர்கள்தான். இதிலென்ன மாற்றுக்கருத்து. இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் மனிதர்களாக இருக்க முடியாது.
//
பட்டியலில் ஸ்டாலின்,மாவோ,செ குவேரா,பிரபாகரன் ஆகியோரைச்சேர்த்தது உங்களைப்பொறுத்தவரை சரிதான்.ஆனால் கருணாவின் கைக்கூலி என்ற பெயரில் வருவதை விட்டுவிட்டு அனானிமஸ் என்று வரத்தேவையில்லை.
நாய் போல நக்கிப்பிழைக்கும் உன் போன்றோரும் மனிதனாக வாழப்போராடிய அவர்கள் மீதுதான் தவறுபோல. என்ன செய்வது,ஈனப்பிறவிகளுக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடினார்கள்.

Anonymous said...

//பட்டியலில் ஸ்டாலின்,மாவோ,செ குவேரா,பிரபாகரன் ஆகியோரைச்சேர்த்தது உங்களைப்பொறுத்தவரை சரிதான்.ஆனால் கருணாவின் கைக்கூலி என்ற பெயரில் வருவதை விட்டுவிட்டு அனானிமஸ் என்று வரத்தேவையில்லை.
நாய் போல நக்கிப்பிழைக்கும் உன் போன்றோரும் மனிதனாக வாழப்போராடிய அவர்கள் மீதுதான் தவறுபோல. என்ன செய்வது,ஈனப்பிறவிகளுக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடினார்கள்.//

நான் இங்கே குறிப்பிட்டது பிரசித்தி பெற்றவர்களை, உன் போன்றவர்களுக்குத் தேவையென்றால் கருணா, பிள்ளையான், டக்ளஸ், பாரதி போன்றவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன். 3வது நபர் யாரென்று யோசிக்கிறீர்கள் போல் உள்ளது? இன்னும் பல பெயர்பட்டியல் உள்ளது. தேவைப்பட்டால் சொல்லுங்கள் இமெயில் அனுப்புகிறேன். என்னை கருணாவின் கைக்கூலி என்று சொல்ல உமக்கென்ன யதார்த்தம் தெரியும். நீர் கருணா(நிதி)யின் கைக்கூலியோ அல்லது பார்ப்பனர்களுக்கு விலைபோன தமிழனோ? நாய் போல நக்கிப்பிழைப்பது நீர் நானல்ல. அழிந்துகிடக்கும் தமிழீழத்திலிருந்து என் மக்களுக்காக உழைப்பவன் நான் என்ன யாரென்று பார்த்து காட்டிக்கெடுக்கவா அனானிமஸ் முகத்திரையை கிழிக்கப்பார்க்கிறாய்? ஈனப்பிறவி என்று சொல்ல என்ன தைரியம்? ஸ்டாலின், மாவோ, செ குவேரா, பிரபாகரன் கொலை செய்தால் அதுவும் கொலைதான். மனிதநேயமற்ற உம்போன்ற ஈனப்பிறவி கருத்துச் சொல்வதுதான் சாபக்கேடு.

Massy spl France. said...

கொலம்பஸ் பற்றிய பல திடுக்கிடும் வரலாற்று செய்திகளை தமிழில் அறிய கொடுத்தமைக்கு நன்றி.

வானம் said...

//ஈனப்பிறவி என்று சொல்ல என்ன தைரியம்? //
உரிமை பறித்து உயிரையும் பறித்தவனையும்,உரிமைக்காக போராடியவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பேசும் உம்மை எப்படி அழைப்பது என்று கூறவும்.

//ஸ்டாலின், மாவோ, செ குவேரா, பிரபாகரன் கொலை செய்தால் அதுவும் கொலைதான். //
::- நீ எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்::-

//மனிதநேயமற்ற உம்போன்ற ஈனப்பிறவி கருத்துச் சொல்வதுதான் சாபக்கேடு.//
லட்சம் பேரைக்கொன்றுவிட்டு அந்த இன அழிப்பை வெடி வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்களை பார்த்தபோது சிலருக்கு மனிதாபிமானம் காட்டத்தேவையில்லை என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

Anonymous said...

//உரிமை பறித்து உயிரையும் பறித்தவனையும்,உரிமைக்காக போராடியவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பேசும் உம்மை எப்படி அழைப்பது என்று கூறவும்.//

கொலைக்கு கொலைதான் தீர்வு எனும் மனிதநேயமற்றவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?

Anonymous said...

//::- நீ எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்::-//

இப்போது எங்கேபோனது ஆயுதங்கள்?

Anonymous said...

//லட்சம் பேரைக்கொன்றுவிட்டு அந்த இன அழிப்பை வெடி வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்களை பார்த்தபோது சிலருக்கு மனிதாபிமானம் காட்டத்தேவையில்லை என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.//

உரிமைக்கான போராட்டத்தில் எதிரியின் நிராயுதபாணிகளான பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அந்தமக்களின் வேதனை எப்படியிருந்திருக்கு என்பதையும் சிந்திக்க வேண்டும். கொலைக்கு கொலைதான் தீர்வு என்பது நடைமுறைக்கும் சாத்தியமற்றது.

வானம் said...

உங்களின் பதில்கள் மூலம் நீங்கள் யார், நீங்கள் ‘சேவை’ செய்யும் மக்கள் யார் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.
இறுதியாக ஒன்று,
எதிரி இருக்கும்வரைதான் துரோகிக்கு மதிப்பு. தற்போதைய நிலையில் சற்று கவனத்துடன் ‘சேவை’ செய்யவும்

Anonymous said...

//எதிரி இருக்கும்வரைதான் துரோகிக்கு மதிப்பு. தற்போதைய நிலையில் சற்று கவனத்துடன் ‘சேவை’ செய்யவும்//

உங்கள் கொலைவெறிக்கு நியாயத்தை கற்பிக்க முடியவில்லையென்றால் உங்களுக்கு தெரிந்தது துரோகிப் பட்டம் கொடுப்பது. 21ம் நூற்றாண்டிலும் கற்கால சிந்தனை உள்ளவர்களுக்கு எந்தப்பட்டம் கொடுப்பது?

ARV Loshan said...

கொலம்பஸின் கோரமான, அதிர்ச்சியான மறுபக்கத்தைக் காட்டினீர்கள்.
நன்றிகள்..
அந்த மக்களும் எம் போல பாவம்

எருமை said...

கொலம்பஸின் கோர முகத்தை அறிய செய்ததற்கு நன்றி !