"அமெரிக்கா என்றால் சொர்க்கம்" என்ற நாகரீக வெகுளிகளின் மனக்கோட்டை நமது கண்முன்னால் தகர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கையில், முதலாளிகள் மட்டும் அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டு கரை ஒதுங்குகின்றனர். கடவுளும் கைவிட்டுவிட்ட சாதாரண மக்கள், வேலை இழந்து, வீடிழந்து, வீதிக்கு விரட்டப்படுகின்றனர். உயிரை மட்டும் இழக்காத அமெரிக்க மக்கள், தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக கூடாரங்களுக்குள் தஞ்சமடைகின்றனர். ஆனால் இப்போதும் சில "நாகரீக வெகுளிகள்" தம்மைச் சுற்றி அப்படி எதுவும் நடக்கவில்லை என்று, மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் தீக்கோழி போல பாசாங்கு செய்கின்றனர்.
இதோ உண்மையான அமெரிக்கா! கூடாரங்களுக்குள் குடியிருக்கும் ஏழை அமெரிக்கா!! தொலைக்காட்சி கமெராக்கள் பதிவுசெய்த சலனப்படங்கள் :
முன்னைய பதிவு :
சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு
________________________________________
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
3 comments:
AMERICA ALWAYS WINS ALWAYS
sattathia mathikkindra poruppulla makkal ulla varai.
DON'T IMAGINE.
Thank you for comment,and thank you revealing your nostalgie. You still don't want to believe in fall of American empire.
மாடு இளைச்சாலும் அதோட கொம்பு இளைக்காதுன்னு சொல்லுவாங்க. அமேரிக்கா காரங்களோட டெண்டோ அல்லது சிலசமயம் அவங்க வீடாக மாற்றி அமைத்த வாகனத்தையோ உள்ளே போய்ப் பார்த்தா நாம் வாயைப் பிளக்க வேண்டித்தான் இருக்கிறது, அவ்வளவு லக்சுரி. அந்த வசதி கூட இங்க நடுத்தர வர்க்கத்துக்கே கிடைக்காது. இப்ப கூட அந்த அமெரிக்கர் ஏதோ தட்டில் இரண்டு மூன்று வித உணவை எடுத்து வருகிறார், இங்கே சேரியில் வாழ்பவர்கள் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. நாடோடியாகப் பிறந்தாலும் அமெரிக்காவில் பிறக்க வேண்டும்.
Post a Comment