பாரிஸ் புறநகர் பகுதியான Nanterre நகரத்தில் Nahel என்ற 17 வயது அல்ஜீரிய இளைஞன் பொலிஸ் வீதி சோதனையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் கலவரம் வெடித்தது. பல வாகனங்கள், பேருந்து வண்டிகள், ஒரு டிராம் தீக்கிரையாக்கப் பட்டன. பஸ் பாதையில் காரோட்டிய குற்றத்திற்காக வீதிசோதனை இடும் போலீசார் மறித்துள்ளனர்.
போலிஸ் ஓரிடத்தில் நிறுத்தி வைத்து பிஸ்டல் காட்டி மிரட்டியதாகவும், துப்பாக்கியால் தலையில்தாக்கியதாகவும் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். அந்த தாக்குதல் காரணமாக பிரேக்கில் இருந்து காலை எடுத்த படியால் வண்டி தானாக ஓடிச் சென்று மின்கம்பத்துடன் மோதியுள்ளது. அந்த அல்ஜீரிய இளைஞன் அந்த இடத்திலேயே பலியானான்.
அடுத்த நாள் பாரிஸ் நகரில் Nahel இன் தாயார் தலைமையில் சுமார் 6000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. "பொலிஸ் கொலைகாரர்கள்!" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த பேரணிக்கு பொலிஸ் "பாதுகாப்பு" கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது. பிரான்சின் பல நகரங்களில் பொலிசை நோக்கி கற்கள் வீசப்பட்டன. பொலிசாருடன் மோதல்கள் இடம்பெற்றன.
பல நகரங்களில் கலவரம் நடந்தது. ஒரு வங்கி உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. சூப்பர் மார்க்கெட்டுகள் கொள்ளையடிக்கப் பட்டன. பாரிஸ் நகரில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் Louis Vuitton எனும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை பொது மக்களால் உடைத்து சூறையாடப் பட்டது. Aldi, Action போன்ற பல சூப்பர் மார்க்கெட்டுகள் தீக்கிரையாக்கப் பட்டன. பாரிஸ் வடக்கில் உள்ள ஓபர்வில்லியே ( Aubervilliers) புற நகரில் ஒரு பஸ் டிப்போ எரிக்கப் பட்டது.
பிரான்ஸ், மார்செய் நகரில் ஒரு பெரிய நூலகம் எரிக்கப் பட்டதாக ஒரு பொய்யான செய்தி பரவியது. ஐரோப்பிய தீவிர வலதுசாரி நாஸிகள், இந்திய ஆர்எஸ்எஸ் காவி சங்கிகள் பரப்பிய இந்த பொய்ச் செய்தியை, ஒரு சில ஈழத்து வலதுசாரி சங்கிகளும் பகிர்ந்திருந்தனர். இந்திய சங்கிகள் இதை நாளந்தா நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். ஈழத்து சங்கிகள் இதை யாழ் நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர்.
இது உண்மையில் வெள்ளையின நிறவெறியினரின் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரப்பப்பட்ட ஒரு fake news. ஐரோப்பாவில் எந்தவொரு உத்தியோகபூர்வ ஊடகமும் இதை தெரிவிக்கவில்லை. நவ- நாஸி இனவெறியர்கள் மார்செய் நூலகம் எரிப்பு என்ற பொய் செய்தியின் மூலம் வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிராக பரப்புரை செய்கின்றனர். இதனால் பாதிக்கப் படுவது புலம்பெயர்ந்த தமிழர்களும் தான். இதை உணர்ந்து நடக்க வேண்டும். தீவிர வலதுசாரிகள் சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது.
சர்வதேச சமூகம், ஐ.நா. சபை எல்லாம் பிரெஞ்சு காவல்துறையின் கொடுமைகளை, அரச மட்டத்தில் நிலவும் இனவெறியை வன்மையாக கண்டித்துள்ளன. ஆனால் இங்கே சில புலியின் நெளிஞ்ச செம்புகள் இனவெறி அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஒட்டுக்குழு வேலை செய்து கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment