Monday, March 30, 2015

சிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவை விமர்சித்த சிறுவன் சிறையில்

(எச்சரிக்கை: இந்தப் பதிவும், இதிலுள்ள வீடியோவும் சிங்கப்பூரில் இருப்பவர்கள் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.)

சிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவை பற்றி வானளாவப் புகழும் தமிழர்கள் பலரைக் கண்டிருப்பீர்கள். கை நிறைய பணம் கிடைக்குமானால், அவர்கள் ராஜபக்சவை பற்றிக் கூட புகழ்ந்து பேசத் தயாராக இருக்கிறார்கள். கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் அடிமைக் கூட்டத்தில், ஏராளமான (போலித்) தமிழ் தேசியவாதிகளும் இருக்கின்றனர். 

உலகம் முழுவதும் சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில், மக்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்ததைப் போன்று தான், சிங்கப்பூர் பிரஜைகளும் வாழ்கின்றனர். தங்களது கல்வி, தொழில் வாய்ப்பு, குடும்ப நலன், வசதியான வாழ்க்கை இவற்றை மட்டுமே முக்கியமாகக் கருதும் ஆட்டு மந்தைக் கூட்டமாக சிங்கப்பூர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஷேக்குகளின் சர்வாதிகார ஆட்சி நடக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும், லீகுவான்யூவின் சிங்கப்பூருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.   

இந்த உண்மைகளை யாரும் இணையத்தில் கூடப் பரப்ப முடியாது. அரச அடக்குமுறையை எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறைவாசம் கிடைக்கும். லீகுவான்யூ மறைவுக்குப் பின்னர், சிங்கப்பூரில் இருந்து கேட்ட கலகக் குரல் ஒன்று மிக வேகமாக நசுக்கப் பட்டது. 

ஆமோஸ் யி (Amos Yee) எனும் 17 வயது சிங்கப்பூர் சிறுவன், லீகுவான்யூவை விமர்சித்து ஒரு யூடியூப் வீடியோவை வெளியிட்டிருந்தான். அதற்காக அவனைக் கைது செய்துள்ள பொலிஸ், அவன் மீது இருபது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவும் அழிக்கப் பட்டு விட்டது. 

"இறுதியில் லீகுவான்யூ இறந்து விட்டான்" என்று வீடியோவில் பேச ஆரம்பிக்கும் ஆமோஸ் யி, "லீ  கொடூரமானவன்" என்று சாடுகின்றார். அப்படி சொன்னதற்காகவே பிரச்சினையில் மாட்டிக் கொள்வோம் என்று எல்லோரும் பயந்திருந்தார்கள். லீ ஆதரவாளர்கள் அறியாமையிலும், மாயையிலும் வாழ்கிறார்கள்.  

லீகுவான்யூ ஒரு சர்வாதிகாரி. ஆனால், தான் ஒரு ஜனநாயகவாதி என்று உலகம் முழுவதையும் ஏமாற்றிக் கொண்டிருந்தார். மக்களிடம் இருந்து அதிக வரி அறவிடும் அரசு, சுகாதாரத் துறைக்கு மிகவும் குறைவாகவே செலவிடுவதாக ஆமோஸ் கூறுகின்றார். சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகமாக இருப்பது மட்டுமல்ல, உலகிலேயே அதிகமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட மக்களைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது.

உலகில் உள்ள வழமையான சர்வாதிகாரிகளைக் காட்டிலும், லீகுவான்யூ வித்தியாசப் படுவதற்கு காரணமாக, அவரை இயேசு கிறிஸ்துவின் அரசியலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். ஒரு பக்கம் அதிகார மமதை கொண்டவராகவும், மறுபக்கம் கருணையுள்ளம் படைத்தவராகவும் காட்டிக் கொள்வதில், லீகுவான்யூ இயேசு கிறிஸ்துவை போன்றவர்.

ஆமோஸ் யி யை கைது செய்து தடுத்து வைத்துள்ள சிங்கப்பூர் காவல்துறையினர், மத நிந்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டுள்ளனர். அதாவது, லீகுவான்யூவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் பேசியதற்காக, தாங்கள் ஒரு 17 வயது சிறுவனை கைது செய்யவில்லையாம். மதத்தை இழிவு படுத்தியதற்காக கைது செய்தார்களாம். "சிங்கப்பூரில் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி நடக்கிறது. லீகுவான்யூ ஒரு சிங்கப்பூர் ராஜபக்சே," என்ற உண்மையைக் கூறினால் பலருக்குப் பிடிப்பதில்லை.  ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர், தங்களது அடிமை விசுவாசத்தையும், அடிவருடித்தனத்தையும் காட்ட வேண்டாமா?

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1. "சிங்கப்பூரின் ராஜபக்சே" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு
2. சிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
3. லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்


சிங்கப்பூர் அரச அடக்குமுறையாளர்கள் அழித்த யூடியூப் வீடியோவை, ஆமோஸ் ஆதரவாளர்கள் மீள்பதிவேற்றம் செய்து வருகின்றனர். 
சிங்கப்பூர் அரச ஆதரவு The Straits Times பத்திரிகையில் வந்த செய்தி

4 comments:

வலிப்போக்கன் said...

நிறைய பணம் கிடைக்குமானால், அவர்கள் ராஜபக்சவை பற்றிக் கூட புகழ்ந்து பேசத் தயாராக இருக்கிறார்கள். கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் அடிமைக் கூட்டத்தில், ஏராளமான தமிழர்களும். தமிழ் தேசியவாதிகளும் இருக்கின்றனர்.

Unknown said...

நான் சிங்கப்பூரில் தான் வசிக்கிறேன்..எதை வைத்து நீங்கள் லீயின் ஆட்ட்சியை கொடுங்கோல் ஆட்சி என கூறுகிறீர்கள்..இங்கு கருத்து சுதந்திரம் இல்லை..உண்மை தான்..ஆனால் மக்களுக்கு எது தேவையோ அதை நிறைவேற்றி வருகிறது...நம் நாட்டில் தினமும் நடக்கும் போராட்டம் இங்கு நடப்பதில்லை..கண்ணீர் புகை குண்டு இல்லை..கொலைகள், திருட்டுகள் மிக குறைவு..மக்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் வாழ்கின்றனர்..படிக்காத மனிதர்களே இல்லை...லீ தன் மகனை கூட உடனே அதிபர் பதவியை கொடுக்கவில்லை...லீ ஓய்வு பெற்றபிறகு வேறு ஒரு அதிபராக ஆக்கிவிட்டு 4 வருடம் தன் மகனை MP பதவியில் இருக்க வைத்து விட்டு அனுபவம் பெற்ற பிறகே அதிபர் பதவியை கொடுத்தார்..இங்கு இனவெறி, மொழிவெறி எதுவும் இல்லை..தமிழை அரசுமொழியாக்கிய பெருமை லீயையே சாரும்..சும்மா இந்தியால இருந்துகிட்டு சில மொள்ளமாரி பசங்க சொல்லுறத எல்லாம் மக்கள்ட்ட திணிக்க பாக்காதிங்க..இங்கே வசிப்பவர்களுக்கே சிங்கப்பூர் அருமை தெரியும்..

Anand said...

India Needs the leader like him at least for another 15 years.

Mj said...

Loosu modi 15 varusam irukkunumnu sollureengala anand