தமிழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி பிரச்சினை பற்றி பேச வாய் திறந்தால், ஒரே கேள்வியில் எங்களை மடக்குவார்கள். "சிங்களவன் சாதி பார்த்தா அடிக்கிறான்?" உண்மை தான். அவன் தான் "மோட்டுச் சிங்களவன்" ஆயிற்றே?(தமிழின வாதிகள் அப்படித் தான் அழைப்பார்கள்) தமிழர்கள் சாதி வாரியாக பிரிந்திருக்கிறார்கள் என்று மோட்டுச் சிங்களவனுக்கு தெரியுமா?
தமிழ் இனவாதிகள், சிங்களவர்கள் அனைவரும் சாதி வேறுபாடற்ற ஒரே இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரித் தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இனக் கலவரங்களை தூண்டி விட்ட சக்திகள், தமிழர்கள் சிங்களவர்களை விட தாழ்ந்த சாதி என்ற கருத்தை விதைத்தன. தமிழர் தீண்டத் தகாத சாதி என்ற கருத்துப் பட, "பறத் தெமலோ" என்று கோஷமிட்டு கொண்டு தான் அடித்தார்கள், கொன்றார்கள். சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்ட "பறத் தமிழர்கள்" அகதி முகாமிலும் தமக்குள்ளே சாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
தமிழ் தேசியம் தோன்றுவதற்கு முந்திய காலங்களில், தமிழர்கள் சாதிப் பிரச்சினைகளை மறைக்கும் வலுவற்று இருந்தனர். அதற்கு மாறாக சிங்கள தேசியம், தனக்குள்ளே இருந்த சாதிப் பாகுபாட்டை வெளித் தெரியா வண்ணம் பூசி மெழுகியது. (பௌத்த மதம் சாதியத்தை எதிர்ப்பது முக்கிய காரணம்.) இருந்தாலும் சிங்களவர்களிடையே அவ்வப்போது எழும் சாதிப் பிரச்சினைகள் குறித்து, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதித்து வந்தன. இன்றைக்கும் அது தான் நிலைமை. உண்மையில் இனப்பிரச்சினை கூட, இலங்கையின் ஆதிக்க சாதிக்குள் (வெள்ளாளர்+கொவிகம) எழுந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் வெடிக்க முன்னர், சாதிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. அவர்களுக்கு இடையே திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டிருந்தன.
தமிழர்கள் மத்தியில் ஆதிக்க சாதியாக இருக்கும் வெள்ளாளர்கள் அரசியல்-பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வந்துள்ளனர். அதே போல, சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்று வரை இலங்கையின் அரசியல்- பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். சிங்கள மொழியில் "கம" என்றால் ஊர், அல்லது வயல் என்று அர்த்தப் படும். தமிழில் கூட கமம் என்ற சொல் வழக்கில் உள்ளது.
வெள்ளாள- கொவிகம ஆதிக்கம் இலங்கையின் சரித்திரத்தை தனக்கேற்றவாறு எழுதி வந்துள்ளது. இந்து பார்ப்பனீய பாரம்பரியத்தில் சூத்திரர்களாக கருதப்படும் விவசாய சமூகம், இலங்கையில் உயர் சாதியினராக தலையெடுத்தது. "கௌதம புத்தரின் தந்தை ஒரு கமக்காரன்" என்பது பௌத்த- சிங்கள புளுகுகளில் ஒன்று. இலங்கையை ஆண்ட தலை சிறந்த மன்னராக கருதப்படும் பராக்கிரமபாகு ஒரு "வெள்ளாளர்" என்கிறது சிங்கள-கொவிகம கற்பிதம். (மகாவம்சம், பராக்கிரமபாகு சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றது.)
இன்றும் கூட அரசியல் தலைவர்கள் தாம் "வெள்ளாளரின் (கமக்காரர்களின்) மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களாக" காட்டிக் கொள்கின்றனர். அண்மைய உதாரணம், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏர் பூட்டி உழுத காட்சி. தமிழர்கள் மத்தியிலும் அது போன்ற பிரச்சாரங்கள் சர்வசாதாரணம். "கந்தன் நல்ல கமக்காரன்" போன்ற சாதிய முன்னேற்ற பாடங்கள், ஆரம்ப பாடசாலை தமிழ் பாடப் புத்தகத்தில் போதிக்கப் படுகின்றன.
வெள்ளாள- கொவிகம சாதியினர், தமிழ், சிங்கள சமூகங்கள் மத்தியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று காணப் படுகின்றனர். ஆரம்பத்தில் மதம், மொழி போன்ற கூறுகளும், பிற்காலத்தில் இனப் பிரச்சினையும் அந்தப் பிரிவினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இரு துருவங்களான ஆதிக்க சாதியினர், தத்தமது சமூகங்களில் தலித் சாதியினரின் எழுச்சியை அடக்குவதில் ஒரே மாதிரி செயற்பட்டுள்ளனர். நம் கண் முன்னாலே நடந்துள்ள சமீபத்திய உதாரணங்கள்: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம். வடக்கில் EPRLF என்ற இயக்கத்தில் அதிகளவு தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழ் வாலிபர்கள் இணைந்திருந்தனர். அதனால் அந்த இயக்கத்தினை "ஈழப் பள்ளர் புரட்சிகர முன்னணி" என்று உயர் சாதியினர் பரிகசித்தனர்.
ஆதிக்க சாதியினரின் "நல்ல காலம்", அது போன்ற இயக்கங்கள் காலப்போக்கில் நிலைத்து நிற்கவில்லை. தெற்கில் ஜே.வி.பி. யில் சிங்கள தலித் சாதியினர் அதிகளவில் சேர்ந்திருந்தனர். அரசு ஜே.வி.பி. கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்குவதற்கு சாதிய பாகுபாடும் ஒரு காரணம். 1988 - 1991 க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் குறைந்தது அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்கள். அதனால் தான் அவர்களை கொன்று குவிப்பதில் அரசுக்கு எந்த விட சங்கடமும் இருக்கவில்லை.
வெள்ளாள- கொவிகம சாதியினரின் ஆதிக்கம், காலனிய காலத்தில் தோன்றியது. காலனிய எஜமான்களின் தயவால் வளம் பெற்றது. அதனால், இன்றும் கூட தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய எஜமானுக்கு விசுவாசமாக உள்ளனர். காலனியாதிக்க ஐரோப்பியர்கள் இவர்களை எவ்வளவு தான் அலட்சியப் படுத்தினாலும், இன்று வரை இராஜ தந்திர உறவுகளை பேணிப் பாதுகாக்க விரும்புகின்றனர்.
தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் காலனிய விசுவாசம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. சீனாவும், இந்தியாவும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவளித்தார்கள் என்று திட்டித் தீர்க்கும் தமிழர்கள், மேற்குலக நாடுகளின் பங்களிப்பு குறித்து பேச மாட்டார்கள். மேற்குலக நாடுகள் புலிகளை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடும் சிங்களவர்கள், அந்த நாடுகளுடனான உறவுகளை துண்டிக்க மாட்டார்கள்.
ஏகாதிபத்தியம் எங்கேயும், எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ளவில்லை. அடிமைகளை சங்கிலியால் பிணைத்து உழைப்பை சுரண்டுவது ஒரு வகை. அடிமை உணர்வை மூளைக்குள் செலுத்தி உழைப்பை சுரண்டுவது இன்னொரு வகை. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் இரண்டாவது வகையை சிறந்தது எனக் கண்டார்கள்.
"கள்ளர், மறவர், அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்." என்றொரு ஈழத் தமிழ்ப் பழமொழி உண்டு. காலனிய ஆட்சிக் காலத்தில் வெள்ளாளர் என்பது ஒரு வர்க்கமாகவே இருந்தது. அவர்கள் பின்னர் சாதியாக பரிணாம வளர்ச்சி அடைவதை காலனிய ஆட்சியாளர்கள் எதிர்க்கவில்லை. மாறாக அது தமது காலனிய நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கும் எனக் கருதினார்கள். போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில் பணம் வாங்கிக் கொண்டு "டொன்" என்ற பட்டம் கொடுத்து வந்தார்கள். பணம் படைத்த தமிழர்களும், சிங்களவர்களும் அன்று டொன் பட்டம் பெறுவதை மதிப்பாக கருதினார்கள். அதனை உள்ளூர் பாமர மக்களுக்கு காட்டிப் பெருமைப் பட்டனர். ஒல்லாந்தர் காலத்தில் "வெள்" என்ற பட்டம் கொடுக்கும் வழக்கம் தோன்றியது. "வெள்" பட்டம் வாங்கியவர்கள் உயர்சாதி வெள்ளாளர்கள் ஆனார்கள். ஒல்லாந்தர்களுக்கு அது ஒரு மேலதிக வருமானம்.
"பறங்கிகள் 'டொன்' பட்டம் விற்றது போலவே, ஒல்லாந்தருஞ் சனங்களின் சாதி எதிர்ப்பை அறிந்து, பணங் கொடுத்தவர்களை 'வெள்' அல்லது 'மடப்பம்' என்று தோம்பிற் பதிந்தனர்." (யாழ்ப்பாணச் சரித்திரம், சே. இராசநாயகம்)
இருப்பினும் 19 ம் நூற்றாண்டு வரையில், வெள்ளாளர் என்ற சாதியை பற்றிய குறிப்புகள் இலங்கை சரித்திரத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்ற முதலியார்களும், வெள்ளாளர்களும் தம்மை ஸ்தாபனமயப் படுத்திக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் இது ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக நடைபெற்றது. சிங்களப் பகுதிகளில் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்பட்டதைப் போல, தமிழ்ப் பகுதிகளில் சைவ மத மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவத்தையும் சாதியையும் வளர்த்தவர்களில் ஆறுமுக நாவலர் முக்கியமானவர். ஆறுமுக நாவலர் ஒரு பக்கத்தில் வெள்ளாள சாதியினர் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளில் கல்வி கற்பதை ஊக்குவித்தார். மறு பக்கத்தில் தனது சமூகத்தினர் மத்தியில் சைவ மத கோட்பாடுகளை போதித்தார். ஆறுமுக நாவலர் உயர் சாதியினரை மட்டுமே சைவர்களாக்க பாடுபட்டார். அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
நாவலர் எழுதிய "சைவ வினா-விடை" என்ற நூலில், விபூதி பூசும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார். அதில் ஒன்று. "விபூதி பூசும் போது எதிரே கீழ் சாதியினர் வரக் கூடாது." பிராமணர்கள் வேதம் ஓதும் பொழுது சூத்திரர்கள் எதிரே வரக் கூடாது என்று எழுதி வைத்த மனுவுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? மனு சூத்திரர்களை பிராமண (இந்து) மதத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதே போல ஆறுமுக நாவலரும் தாழ்த்தப்பட்ட சாதியினரை சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து மதத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் ஆறுமுக நாவலர் நெருங்கிய தொடர்பை பேணினார். பார்ப்பனர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, வெள்ளாளர்களின் சாதிப் படி நிலையை உயர்த்துவதற்கு பாடுபட்டார். அதன் பயனாக சூத்திரர்களான வெள்ளாளர்கள் பூணூல் அணியும் சடங்கான தீட்சை பெறுதலை இலங்கையில் அறிமுகப் படுத்தினார்.
இவ்வாறு தான் சைவ மதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாக மாறியது. நாவலர் "சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்" என்று பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் அநகாரிக தர்மபால எவ்வாறு பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் வளர்த்தாரோ, அதே பணியை தான் நாவலர் வட இலங்கையில் ஆற்றினார். பௌத்த சிங்கள ஞானத் தந்தையையும், சைவத் தமிழ் ஞானத் தந்தையையும் இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது.
வெள்ளாள-கொவிகம ஆதிக்கம் செலுத்திய இலங்கை அரசு, தனது நாயகர்களுக்கு மரியாதை செலுத்த மறக்கவில்லை. அதற்கு சாட்சியமாக "தமிழினத் தலைவரான" பிரபல சாதியவாதி சேர். பொன் இராமநாதனின் சிலை இன்றைக்கும் கொழும்பு நகரில் பழைய பாராளுமன்ற முன்றலில் காணப்படுகின்றது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தில், சிங்களவர்கள் பக்கம் வழக்காடிய இராமநாதனுக்கு சிங்களவர்கள் சிலை வைத்ததில் வியப்பில்லை. தமிழர்களும் அவரை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு என்ன காரணம்? தமிழகத்தின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல, இராமநாதனும் தனது சாதியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒருவர். ஒரு சாதித் தலைவர் காலப்போக்கில் தமிழ் தேசியத் தலைவராக்கப் பட்டார்.
வெள்ளாள- கொவிகம சாதியினர் காலனிய காலகட்டத்தில் உருவான போதிலும், அவர்கள் தமது வேர்களை பண்டைய மன்னராட்சியில் தேடினார்கள். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ஆண்ட பரம்பரைக் கதைகள் ஒரே மாதிரித் தான் பேசப் படுகின்றன. பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் எல்லாம் கொவிகம சாதியை சேர்ந்தவர்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை திரித்தார்கள். சங்கிலியன் போன்ற மன்னர்கள் எல்லாம் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்பது போல தமிழர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள்.
பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் சமூகத்தின் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு, நவீன கல்வி பெறும் வசதி கிட்டியது. அன்றிருந்த படித்த மத்தியதர வர்க்கம் வெள்ளாள-கொவிகம சாதியில் இருந்து தான் தோன்றியது. அந்த சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகளுக்கு வரலாற்றை தமக்கேற்றவாறு மாற்றி எழுதுவதில் தடையேதும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, இலங்கை அரசியலில் அவர்களின் ஒரு பக்க சார்பான கருத்தியல், தேசியக் கோட்பாடாக கோலோச்சுகின்றது.
(தொடரும்)

17 comments:
Eye Opener.very interesting.
//அவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்கள். அதனால் தான் அவர்களை கொன்று குவிப்பதில் அரசுக்கு எந்த விட சங்கடமும் இருக்கவில்லை.//
நல்ல பதிவு,
இந்த ஜே வி இயக்கத்தில் தமிழர்களின் பங்களிப்பு எதுவும் இல்லையா?
ஜே.வி.பி குறித்து ஒரு விளக்க்மான பதிவு எழுதுங்கள்.
//வெள்ளாள-கொவிகம ஆதிக்கம் செலுத்திய இலங்கை அரசு, தனது நாயகர்களுக்கு மரியாதை செலுத்த மறக்கவில்லை.//
எப்படி,எபோது சிங்கள ,த்மிழ் ஆதிக்க வர்க்கங்களுக்கிடையே(சாதி) முரண்பாடு ஏற்பட்டது?
//இந்த ஜே வி இயக்கத்தில் தமிழர்களின் பங்களிப்பு எதுவும் இல்லையா?//
இருந்தார்கள். முதலாவது கிளர்ச்சியில் ஒரு சில யாழ்ப்பாணத் தமிழர்களும் பங்குபற்றினார்கள். இரண்டாவது கிளர்ச்சியில் கணிசமான அளவு மலையகத் தமிழர்கள் பங்குபற்றியுள்ளனர். இருப்பினும் பொதுவாக தமிழரின் பங்களிப்பு குறிப்பிட்டுக் கூறும் படி இருக்கவில்லை.
//எப்படி,எபோது சிங்கள ,த்மிழ் ஆதிக்க வர்க்கங்களுக்கிடையே(சாதி) முரண்பாடு ஏற்பட்டது? //
சிங்கள ஆதிக்க வர்க்கம்
பெரும்பான்மை வாக்குப் பலத்திற்காக சிங்களவர்களை திருப்திப் படுத்த கிளம்பினார்கள். ஜனநாயகத் தேர்தல்களில் பெரும்பான்மை இனம் சார்ந்த அரசியல் குறித்து தமிழ் தலைவர்கள் விழிப்பாக இருக்கவில்லை. மேலும் பௌத்த - சிங்கள மறுமலர்ச்சி காலப்போக்கில் இனவாதமாக மாறியது. ஆட்சியாளர்கள் அதனை அனுசரித்து போயினர்.
sankilian it is not vellalan he was a muthali ok muthaliyaar u don"t talk vellaalan that chankilian ok u read more about jaffna historical sepedu "seppueadu"
சங்கிலியன் வேளாளன் இல்லை அவன் முதலி அதாவது முதலியார் இது யாழ்ப்பாண ராட்சிய செப்பேடுகளும் மாந்திரிக ஏடுகளும் சொல்ற சாட்சியம் வரலாற்றை மாற்றாதீர்கள் மாப்பான முதலி தான் சங்கிலிய
Tamilnilam,
நீங்கள் கட்டுரையை பிழையாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு தடவை ஆறுதலாக வாசிக்கவும்.
//சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ஆண்ட பரம்பரைக் கதைகள் ஒரே மாதிரித் தான் பேசப் படுகின்றன. பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் எல்லாம் கொவிகம சாதியை சேர்ந்தவர்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை திரித்தார்கள். சங்கிலியன் போன்ற மன்னர்கள் எல்லாம் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்பது போல தமிழர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள்.//
மேலும் நீங்கள் கூறுவது போல சங்கிலியன் முதலியாராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் முதலியார் என்பது ஆங்கிலேயருக்கு சேவகம் செய்த நிர்வாகப் பிரிவினரின் பெயர். அது சாதிப் பெயர் அல்ல. ஒரு தொழிற் பெயர். ஆங்கிலேயருக்கு முன்னர் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் காலத்திலும் முதலியார் தொழில் செய்தவர்கள் இருந்திருக்கிறார்கள். செப்பேடுகள் பற்றிய தகவல்கள் பல சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் தமக்கேற்றவாறு திரித்தவை தாம்.
இந்த மாதிரி ஆய்வுகள் கட்டாயம் வேண்டியவை. சொல்லப் போனால் இது போல் நிறையப்பேர் எழுத வேண்டும். நாம் ரோமன் வரலாறு, கிரேக்க வரலாறு எல்லாம் படித்தோம். எம் சொந்த வரலாறு (இலங்கைவாழ் தமிழர் வரலாறு) படிக்கவில்லை.
1. இக்கட்டுரையில், வெள்ளாளர், கொய்கம என்பவர்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால், இலங்கைத் தமிழரதும், சிங்களவரதும் வரலாறுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால், அந்த வரலாறுகளை கி. பி. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது, கி. பி. 14ஆம் நூறறாண்டுக்கு முற்பட்டது என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியதை அறியமுடியும். ஏன் எனில், கி. பி. 1307, 1310, 1320களில் தென்னிந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கில் மனித வெளியேற்றம்(Exodus) நடைபெற்றிருப்பதுடன், அதனைத் தொடர்ந்தும் மனித வெளியேற்றம் நடைபெற்று வந்துள்ளது. கி. பி. 14ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மனித வெளியேற்றங்கள், டெல்கி சுல்தானியரின் தெனனோக்கிய ஆதிக்க விஸ்தரிப்புக்களால் ஏற்பட்டவை. கஜ. பி. 1307இல் விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பெருநகரை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவில் மனித வெளியேற்றம் ஆரம்பமானது. கி. பி. 1310ஆம் ஆண்டில் ஜெனரல் மாலிக் கபுர் என்பவன் 3000 குதிரைப் படையுடன் விந்திய மலையுடாக தென்னிந்தியாவை அடைந்து, இராமேசுவரம் வரை கொள்ளையிட்டு, பெரும் செல்வங்களுடன் தானாகவே டெல்கி திரும்பியிருந்தான். இதன் பின்னர் அவன் டெல்கி சுல்தான் ஆக்கப்படான். 1320களில், சுல்தானியர்கள் மதுரை, ஏனையவைகளைக் கைப்பற்றி, நிரந்தரமாக ஆட்சிய செய்ய ஆரம்பித்திருந்தனர். மாலிக் கபுரின் வருகையும், தென்னிந்தியரின் வெளியேற்றம் பற்றியும் ”வையாபாடல்” என்பதன் ஒரு பாட்டு குறிப்பிட்டுள்ளது.அது ”வன்னியர் தமது தேவியர் ஆனோர் வாழ்திடு தெருத்தனில் ஒருத்தன் தன்னுடைக் குதிரை மீதினில் ஏறி.... எனத் தொடங்குகிறது. இப்படி ஏற்பட்ட மனித வெளியேற்றமானது இலங்கையின் வடக்குக் கிழக்கு, தெற்குக் கரையோரப்பகுதிகளில் பெரும் குடியேற்றங்களை உருவாக்கி யிருந்ததுடன், இவர்கள் கடல்களை அண்டிய சகல ஆசியப் பகுதிகளிலும் தென் ஜப்பான்வரை குடியேறியிருந்தனர், அவுஸ்திரேலியாவிலும் குடியேறியிருந்தனர். இதனால் கிழக்கே ஜப்பான், கொரியா, மற்றும் நாடுகளில் தமிழ் மொழியின் செல்வாக்குப் பெருமளவில் காணப்படுவதுடன், இநநாடுகளில் மகாயாண பௌத்தமும் பரவியிருந்தது.
2. தென்னிலங்கைச் சிங்களவருள் கடற்கரைகளில் குடியேறியவர்கள் காலப்போக்கில் சிங்களவர்கள் ஆனார்கள். வடக்கில் குடியேறியவர்கள் நீர்வளம், மண் வளம் குறைந்த பகுதிகளில்தான் குடியேற முடிந்தது. நீர், மண்வளம் மிகுந்த பிரதேசங்களில் புர்வீகத் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்குதான் யாழ் குடாவினதும், வடக்கினதும் தடையடி நீர்வளம் பற்றிய ஆய்வும், மண்வளம் பற்றிய ஆய்வும் மிகமுக்கியமாகின்றன. புர்வீகக் குடிகள் நிலத்தில் 5 முதல் 6 அடி ஆளத்தில் நீர் கிடைத்த பகுதிகளில் வாழ்ந்து வந்திருந்தனர். விவசாயத்தில் ஈடுபட்டு வந்திருந்திருந்தனர். புதிதாகக் குடியேறியவர்கள் 20 - 50 அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் பகுதிகளிலும், கல் - செம்மண் பகுதிகளிலும் குடியேறியிருந்தனர். இவர்கள் டச்சுக் காலத்தில் கற்களை கிண்டியும், கிணறுகளைச் சற்று ஆழமாகக் கிண்டியும் விவசாயம் செய்ய ஆரம்பித்திருந்தனர். எதுவிதத்திலும் 1910ஆம் ஆண்டில்தான் வடக்கில் மாடுகளைக்கொண்டு இயக்கும் நீர் இறைக்கும் சூத்திரம் யாழ்குடாவில் புகுத்தப்பட்டு, சற்றுப் பெருமளவில் இந்த ஆழமான கிணறுகள் உள்ள பகுதிகயில் விவசாயம் விஸ்தரிக்கப்பட்டது. இது தமிழர்கள் மத்தியில் புதிய குட்டிபுர்சுவாக்களையும் உருவாக்கியிருந்தது. எதுவித்திலும், புர்வீக விவசாயக் குடிகள் மத்தியில் சமூகத்தில் நான்கு பிரிவுகள்தான் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒன்றினை ஒன்று இறுக இணைத்து சமூகமாகமாக நிலைத்து வந்தன. ஆனால், கி். பி. 17ஆம் நூற்றாண்டில் ஆழமான கிணற்றுப் பகுதிகளில் விவசாயம் உருவானதைத் தொடர்ந்து, கி. பி. 1692ஆம் ஆண்டுமுதல் இந்தியாவிலிருந்து அடிமைகள் யாழ்குடாவில் ஆயிரக்கணக்கில் விற்கப்பட்டனர். ஒரு அடிமையை கொணர்ந்து விற்க டச்சு நிர்வாகம் 10 Rix Dollars இனை அனுமதிக் கட்டணமாக வசூலித்திருந்தது. இந்த விபரங்களை டச்சு ஆவணங்களில் இருந்து அறியலாம். இப்படிக் கொணரப்பட்டவர்களை வாங்கிய பிற்காலக் குடியேறிகள், புர்வக சமூகத்தில் இருந்த பிரிவுகள் போல் வைத்து, ஆட்சியாளருடன் இணைந்து உருவாக்கப்பட்டதே ”தேவழமை” சட்டமும், அதிலுள்ள அடிமைகள் பற்றிய சட்டங்களும். புர்வீகக் குடிகள் மதத்தியில் அன்று அடிமை முறை இருக்கவில்லை.
3. பிற்காலக் குடியேறிகள், ஆட்சிக்கு வருபவர்களுடன் இணைந்து, புர்வீகக் குடிகளுக்கு எதிராகச் செயற்பட்டு வந்திருந்தனர். தாம் அவர்களை தமது நலன்களுக்கு எப்படிப் பயன்படுத்தியிருந்தனர் என்பதை டச்சு ஆட்சியாளர்கள் தமது குறிப்புகட்களில் பெருமையாகக் கூறிப்பிட்டும் உள்ளனர். இப்படியான குடியேற்றக்ளைவிட போர்த்துககேயரும், டச்சுக்காரரும் பல்லாயிரக் கணக்கானோரை தமது பொருளாதார இலாபங்களுக்காக இலங்கை புராகவும் குடியேற்றியிருந்தனர். வடக்கில் இப்படிக் குடியேற்றப்பட்வர்களுள் முக்கியமானவர்கள் சீலைக்குச் சாயமிட்டு, ஏற்றுமதி செய்வதுடன் தொடர்பானவர்கள். சாயக் கிழங்கு உற்பத்திக்குப் ”பள்ளர்” என்போரும், சீலை நெ்யவோர், சாயமிடுவோர், ... எனப் பல பிரிவினரும் குடியேற்றப்பட்டனர். கற்களை உடைத்து, நிலத்தை விவசாயம் செய்யக்கூடிய நிலமாக்கவும், கிணறுகளை ஆழமாக வெட்டவும்கூட பெருமெண்ணிக்கையானோர் வடக்கில் குடியேற்றப்பட்டிருந்தனர். இவர்களை கல்கொத்திகள், ஒட்டர்கள் என வெவ்வேறு பெயர்கள்கொண்டு அழைப்பர். மணல் பகுதிகளில் சுட்ட மண் வளையங்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்துக் கிணறு ”இறக்கும்” முறை புகுத்தப்பட்டது. இதற்காக பெரிய மண் வளையங்கள் வனைபவர்களும் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் பெரும் பானைகளையும் வனைந்தனர். இப்பாணைகள் எண்ணெய், சேகரிகட்கவும், துணிகளுக்குச் சாயமூட்டவும் பயன்படுத்தப்பட்டன.
4. மேற்குக் கரையோரப்பகுதிகளில் சங்கு, முத்துக் குழிக்கத் தென்னிந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடியேற்றப்பட்டிருந்தனர். தென்னிலங்கையிலும் இப்படி ஆயிரக்கணக்காணோர் குடியேறியிருந்தனர். இவர்களுள் ஒரு சாரார் காலப்போக்கில் ”வேள்ளாளர்”, கொய்கம ஆகினர். தென்னிலங்கையில் இப்படியானவர்கள் உட்புறச் சிங்களவரையும், கண்டி இராச்சியச் சிங்களவரையும் திருமணம் செ்யதும், அங்கு காணிகபளை வாங்கி குடியேறியும், இன்று கொய்கம ஆகியுள்ளனர்.இன்று அரசியல் பேசும் சிங்களவர்கள் இவர்களே! வடக்கிலும், கரையோரப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள், பிரித்தானியாரால் அடிமைகள் ஒழிப்பு 1820 களில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வலிகாமத்தின் நடு விவசாயப் பகுதிகளில் காணிகளை வாங்கிக் குடியேறியும், திருமணங்களைச் செய்தும் ”வெள்ளாளர்” ஆக ஆரம்பித்திருந்தனர்! துரதிச்டவசமாக, சிங்களவரதும், தமிழரதும் சகூகங்கள் பற்றி ஆராய்ந்தவர்கள் அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராயாத நிலையில், கற்பனையில் விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன. இவற்றை ஆராய்ந்து சரியாக அறிந்தாலே, சிங்களவரதும், தமிழரதும் அரசியலைச் சரியாக அறியமுடியும். இன்று தென்னிலங்கையி் தீவிர சிங்கள தேரவாத பௌத்தத் தேசியவாதம் பேசுகின்றவர்கள் உண்மையில் பிற்கால வந்தேறு குடிகளும், தம்மைச் சிங்கள பௌத்தர்களாக ஆக்கிக்கொண்டவர்களும்தான். இதைப்போலவே யாழ் குடாவில் தீவிர தமிழ்ச் சைவத் தேசியவாதம் பேசுகின்றவர்கள் கரையோர வளமற்ற பகுதிகளில் பிற்காலத்தில் குடியேறியவர்கள்தான். இன்று நாடாளுமன்ற அரசியலிலும், உள்ளுர் ஆட்சி அரசியலிலும் தீவிரமாக ஈடுபடுபவர்களை ஆராய்ந்தால் இவை சுலபமாக விளங்கும்.ஆகவே, விடயங்களை விஞ்ஞான ரீதியாக ஆராயாது எழுதுவது, தொடர்ந்தும் தமிழரைக் கற்பனாவாதித்தினுள்தான் வீழ்த்தும்.
சும்மா வளவள என்று புழுகாதீங்க.வெள்ளாளருக்கு-முதலிகளுக்கு-பள்ளரகளுக்கு முந்தைய பெயர் என்ன. இந்தியாவில் 23 மாநிலங்களில் மள்ளரகள் ஒரு சாதியாக உள்ளனர். இந்தியாவில் 23 மாநிலங்களில் குடும்பர்கள் ஒருசாதியாக உள்ளனர். யாழ்ப்பாணத்தில் - இலங்கையில் இம் மள்ளர்கள் யார். மண்டையில அறிவு ஒண்ணு இருந்தா இதற்குப் பதில் எழுதிவிட்டு மற்றதை எழுது
மள்ளர் என்பது சாதி பெயரல்ல... அது படை தளபதிகளை, வீர தீர செயல் புரிந்தவர்களை பாராட்டி கொடுக்கப்பட்ட ஒரு காரணப்பெயர், சாதி பெயர் என்று புரட்டு பேசி திரியாதீர்கள்.
@ARUL KUMAR, இலங்கையில் மள்ளர் என்ற பெயரில் ஒரு சாதி இல்லை. அது இந்தியாவில் மட்டும் தான்.
mallar sangamam! தென்னிந்தியச் சாதி முறைக்கும் இலங்கைத் தமிழரின் சாி முறைக்கும் பெரும் வெறுபாடுண்டு. ஐயா பெரியவரே! இலங்கையில் ”மள்ளர்கள்” என்பவர்கள் இல்லை. எனக்கு மண்டையில் அறிவு இல்லை. உனக்குத் தெரிந்தால் எழுது.!
Vellalar sathiya thavara solli avanga peruamaya srilankala kuraikanum,evlo fraud da vidunvinga
வேளாளன் மீது காழ்புணர்ச்சிகொண்ட கீழ்சாதி பயலுகதான் வேளாளரை கலப்புசாதி என புளுகுகிறார்கள்
Post a Comment