போர் நடைபெறும் இடங்களில் இருந்து தப்பி வரும் தமிழ் மக்களை, நலன் புரி முகாம்கள் என்ற பெயரில் இலங்கை அரசு தங்க வைத்து வருகின்றது. ஆனால் முட்கம்பி வேலிகளால் தனிமைப்படுத்தப்படும், இந்த முகாம்களை விரிவு படுத்தி மாதிரி கிராமங்களாக மாற்றி வருகின்றது. விடுதலை செய்வது என்ற பெயரில் மக்களை வதைக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. போராளிகளையும், மக்களையும் பிரித்து வைக்கும் இந்த யுக்தியை, இதற்கு முன்னரே மலேசியாவில் "கம்யூனிச எதிர்ப்பு போரில்" பிரிட்டிஷ் அரசும், இந்தியாவில் "மாவோயிச எதிர்ப்பு போரில்" இந்திய அரசும் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தனிமைப் படுத்தும் கிராமங்களுக்கு பிரிட்டிஷ் அரசு நிதி உதவி வழங்கலாம் என பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. (பார்க்க:Barbed wire villages raise fears of refugee concentration camps)
5 comments:
குண்டு போட்டு கொல்றாங்க... முட்கம்பி வேலிகள் எத்தனை நாளைக்கோ... இங்கேயும் சிங்கள காட்டுமிராண்டிகளின் கரம் நீளத்தானே செய்யும்..
பின்னூட்டத்திற்கு நன்றி, tamil cinema.
தகவலுக்கு நன்றி newspaanai.
பாரண்ட இனம் இன்று பதுங்கு குழியில் ...
தமிழன் நடிகருக்கு பாலாபிஷேகம் செய்வதிலும் நடிகைக்கு கோயில் கட்டுவதிலும் பிஸியாக இருக்கிறான்.
அம்மா கால் கிடைக்காதா என ஏங்கும் எங்கள் கட்சிகாரர்கள்..
மீண்டும் ஹிட்லர் ..???
என்னத்த சொல்ல... ???
பின்னூட்டத்திற்கு நன்றி, வண்ணத்துபூச்சியார்.
Post a Comment