Wednesday, June 06, 2012

லெனினிச பார்வையில், ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை

இடதுசாரிகளை, தேசியவாதிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சில 'முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள்', இரண்டு நாடுகளின் உதாரணங்களை அடிக்கடி எடுத்துக் காட்டுவார்கள். லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை ஆதரித்ததையும், கார்ல் மார்க்ஸ் அயர்லாந்தின் சுதந்திரத்தை ஆதரித்ததையும் சுட்டிக்காட்டி மடக்கப் பார்ப்பார்கள். ஆகவே, இவ்விரு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்சிய- லெனினிசப் பார்வை அவசியமாகின்றது.


லெனின், மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை எடுத்துக் காட்டி தத்துவார்த்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த காலத்திய பூகோள அரசியல் நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு தேசியத்தின் சுதந்திர உரிமையை அங்கீகரித்த லெனினும், மார்க்சும், தாம் சார்ந்த பிற தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது புறக்கணித்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? அயர்லாந்து, நோர்வேயின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரித்தார்களா? இவற்றை ஆராயாமல், 'லெனின் நோர்வீஜிய தேசியத்தையும், மார்க்ஸ் ஐரிஷ் தேசியத்தையும் ஆதரித்தார்கள், ஆகவே அனைத்து இடதுசாரிகளும் தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும்,' என்று வாதிடமுடியாது.


"நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான பொருளாதார, மொழியியல் பிணைப்புகள், ரஷ்ய, ஸ்லாவிய தேசங்களைப் போல நெருக்கமானது. ஆனால், நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான ஒன்றியம், (நோர்வேயின்) விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல.... நெப்போலியனின் யுத்த காலத்தில், நோர்வே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மன்னர்களால் நோர்வே சுவீடனுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. நோர்வேயை பணிய வைப்பதற்காக, சுவீடன் படையனுப்ப வேண்டியிருந்தது." - லெனின் (தேசங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக)


போலந்து மார்க்சியவாதியும், லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டவருமான ரோசா லக்சம்பேர்க்கின் கட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, லெனின் அந்த பத்தியை எழுதினார். இதிலே லெனின், நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை, அந்தக் காலத்திய ஐரோப்பிய சரித்திரப் பின்னணியுடன் விளக்குவதை கவனிக்க வேண்டும். சுமார் நானூறு வருடங்கள், நோர்வே டென்மார்க் அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது. நோர்வே மக்கள் பேசிய "பழைய நோர்வீஜிய" மொழியின் மேல், டேனிஷ் மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதனை சிலர் "டேனிஷ் ஏகாதிபத்தியம்" என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும், டேனிஷ் மொழி, சில திருத்தங்களுடன் நோர்வேயின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில், டென்மார்க்கின் கலாச்சார ஆதிக்கத்திற்கு பழக்கப் பட்ட நோர்வீஜியர்கள், சுவீடனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பின்னரும், டென்மார்க்கின் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவரைத் தான், நோர்வேயின் மன்னனாக முடி சூட்டினார்கள். நோர்வீஜிய மத்தியதர வர்க்கத்திற்கும், டேனிஷ் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான நெருக்கம், சுவீடிஷ் மத்தியதர வர்க்கத்துடன் இருக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த நெப்போலியனின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் போர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. டென்மார்க்-நோர்வே அணி, பிரான்சின் பக்கம் நின்றதால், நெப்போலியனின் தோல்வி, அவர்களையும் பாதித்தது. பிரிட்டன், ரஷ்யா, சுவீடன் போன்ற போரில் வெற்றி பெற்ற நாடுகள், தாம் விரும்பிய படி, தேசங்களை மறுசீரமைத்தன. அதன்படி, டென்மார்க், நோர்வேயை சுவீடனுக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டது.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், மிகவும் பின்தங்கிய வறிய நாடான நோர்வேக்கு, வேறு தெரிவு ஏதும் இருக்கவில்லை. ஒன்று, சுவீடனின் ஒரு பகுதியாக மாறுவது, அல்லது, டென்மார்க்குடன் சேர்ந்து தண்டப்பணம் செலுத்துவது. மேலும், நோர்வீஜியர்கள், சுவீடனிடம் இருந்து விடுதலை அடைவதற்கு முன்னரே, தமக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றி இருந்தனர். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து, நிலப்பிரபுக்களினதும், பூர்ஷுவாக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய லெனின், சுதந்திரத்தின் பின்னர் நோர்வே குடியரசாக மாறும் என்று எதிர்பார்த்தார். ஆனால், நோர்வீஜியர்கள் முடியாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை தெரிந்தெடுத்தனர். 1917 , போல்ஷெவிக் புரட்சி நடப்பதற்கு முன்னரே, லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார். அதே போன்று, புரட்சியின் பின்னர், ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்திற்கு சுதந்திரம் வழங்கினார். பிற்காலத்தில், இவ்விரண்டு நாடுகளும், அமெரிக்க சார்பு அணியில் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கது.

லெனின் எதிர்பார்த்த, பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஊக்குவிக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, நடைமுறையில் பலிக்கவில்லை. அது லெனின் விட்ட தவறா? அல்லது நோர்வே, பின்லாந்து நாடுகளின் பாட்டாளி மக்கள் விட்ட தவறா? இதற்கான விடை, தத்துவார்த்த நடைமுறைகளை மேவும், பூகோள அரசியல் சதுரங்கம் விளையாட்டினுள் மறைந்திருக்கின்றது. அதனை, லெனினோ அல்லது கார்ல் மார்க்சோ எழுதியிருக்கப் போவதில்லை. ஏனெனில், இவை எல்லாம் சராசரி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள். அவற்றை காலத்தால் அழியாத புரட்சிகர சித்தாந்தமாக குறிப்பிட முடியாது.

முதலாம் உலகப்போரின் முடிவில், பெர்லின் நகரில் ஜெர்மன் சோவியத் அரசமைத்த புரட்சியாளர்களுக்கு உதவும் நோக்குடன், லெனின் செம்படைகளை அனுப்பி வைத்தார். ஜெர்மனி செல்வதற்கு முன்னர், இடையில் இருந்த போலந்தில் ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், போலந்து தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பினால், லெனினின் நோக்கம் நிறைவேறவில்லை.

தேசியவாதிகளின் வலதுசாரி சார்புத் தன்மையும், வர்க்க விரோத மனப்பான்மையும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தடைக் கல்லாக இருக்கும் என்பதை, லெனின் மிகத் தாமதமாகத் தான் உணர்ந்து கொண்டார். அல்லா விட்டால், தேசியங்கள் குறித்த கோட்பாட்டை எழுதும் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா? ஸ்டாலின் தனது சொந்த நாடான ஜோர்ஜியாவில், வலதுசாரி ஜோர்ஜிய தேசியவாதிகளை போரிட்டு அடக்க வேண்டியேற்பட்டது. ஒரு வருட காலமே பூரண சுதந்திரத்தை அனுபவித்த ஜோர்ஜியா, சோவியத் யூனியனின் குடியரசானது.

பின்லாந்து போன்று, ஜோர்ஜியாவையும் வலதுசாரித் தேசியவாதிகளின் போக்கில் விட்டிருந்தால், அங்கே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படைகளைக் குவித்திருக்கும். ஒரு தேசியத்தின் (உதாரணம்: பின்லாந்து) பூரண சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக இடதுசாரிகளைப் புகழ்வதும், இன்னொரு தேசியத்தின் சுதந்திரத்தை (உதாரணம்: ஜோர்ஜியா) மட்டுப் படுத்தியதற்காக இடதுசாரிகளை இகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் நோக்கம், அதனை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசாக்குவதாகும். பின்லாந்தும், நோர்வேயும் அமெரிக்க சார்பு அணியில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் சிறந்த நட்புறவைப் பேணி வந்துள்ளன.

கம்யூனிஸ்டுகளின் தேசிய சுயநிர்ணயக் கொள்கை, ஒரு குறிப்பிட்ட தேசியத்தின் மொழிக்கு, கலாச்சாரத்திற்கு எதிரானதல்ல. மாறாக, பெரும்பான்மை இனத்தின் பேரினவாத வெறி அடக்கப் பட்டு, சிறுபான்மை இனங்களின் கலாச்சார சுதந்திரத்தை உறுதிப் படுத்தியதே வரலாறு. சோவியத் யூனியனில் ரஷ்ய பேரினவாதிகள் அடக்கி வைக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவில், செர்பிய பேரினவாதிகள் வாலாட்ட முடியவில்லை. சோவியத் யூனியனில் ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலினும், யூகோஸ்லேவியாவில் குரோவாசிய சிறுபான்மையினத்தை சேர்ந்த டிட்டோவும் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் தான் சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழி பொது மொழியாக இருந்தது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி பொது மொழியாக இருந்தது. ஆனால், அதற்கு காரணம் பேரினவாத அடக்குமுறை அல்ல. நாம் எவ்வாறு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அது போன்று பல்வேறு இனங்கள் தொடர்பாடக் கூடிய பொது மொழி ஒன்றின் தேவை காரணமாக இருந்தது. சோவியத் யூனியனிலும், யூகோஸ்லேவியாவிலும் சிறுபான்மை மொழி பேசும் இனங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரம், இன்று வரை அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை அழிய விடாமல் காப்பாற்ற உதவியிருக்கிறது. முதலாளித்துவம் கோலோச்சிய மேற்கத்திய நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது?

அயர்லாந்து மக்கள் தமது மொழியை மறந்து விட்டார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆங்கில மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். நோர்வேயிலும் அது தான் நிலைமை. பழைய நோர்வீஜிய மொழி, தொலை தூரத்தில் தனித்திருக்கும் தீவான ஐஸ்லாந்தில் மட்டுமே, இன்று வரை பேசப் பட்டு வருகின்றது. இன்று டென்மார்க்கினால் ஆளப்படும் பேரோ தீவு மக்கள், டேனிஷ் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, பண்டைய நோர்வீஜிய மொழியை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பழைய நோர்வீஜிய மொழியை பேசத் தெரிந்தவர்கள் யாரும், இன்று நோர்வேயில் இல்லை. டேனிஷ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த தற்கால நோர்வீஜியர்கள், தமக்கென தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட சுவீடிஷ்காரரைப் போன்று வர விரும்பியதில் என்ன தவறு? லெனினின் மனதில் அத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததை, ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அளித்த விளக்கத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்ய, ஸ்லாவிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமையை, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகளுடன் லெனின் ஒப்பிடுவதைக் கவனிக்கவும். தமிழும், மலையாளமும் போல, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகள் ஒரே வேர்களைக் கொண்டுள்ளன. லெனினின் எதிர்பார்ப்பு பிழைக்கவில்லை. சுவீடனிடம் இருந்து விடுதலை பெற்ற நோர்வே, தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.


"நோர்வீஜிய, சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை காரணமாக, நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்கு ஆதரவாக, சுவீடிஷ் பாட்டாளி மக்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது. சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், சுவீடிஷ் தேசியவாதத்தினால் பீடிக்கப் படவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகின்றது. ஸ்வீடிஷ் அரச பரம்பரை,பூர்ஷுவாக்கள் வழங்கிய சலுகைகளை விட, நோர்வீஜிய பாட்டாளி மக்களுடனான சகோதரத்துவம் உயர்வாகப் பட்டது." - லெனின்

இடதுசாரிகள், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டும், என்று வற்புறுத்தும் தமிழ்த் தேசியவாதிகள், லெனின் முன்மொழிந்த பாட்டாளிவர்க்க சகோதரத்துவம் என்ற நிபந்தனையை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். சில இடதுசாரி வேஷம் போட்ட தமிழ்த் தேசிய அபிமானிகள் கூட நுனிப்புல் மேய்கின்றனர். நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனினின் கூற்றுக்களை, ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்ப்போம். பண்டைய வரலாற்றுடன் ஒப்பிட வேண்டுமானால், நோர்வேயை தமிழீழத்துடனும், சுவீடனை சிறி லங்காவுடனும், இந்திய- சோழ சாம்ராஜ்யத்தை டென்மார்க்குடனும் ஒப்பிடலாம். பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தை, நெப்போலியன் போர்களுடன் ஒப்பிடலாம்.

அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா? இது போன்ற கேள்விகள் எழுப்புவதையே விரும்பாதவர்கள் தான், இடதுசாரிகளுக்கு வகுப்பு எடுக்கின்றனர். லெனின் நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். ஆனால், அந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இடதுசாரிகள் எல்லோரும் குருட்டுத்தனமாக தேசியவாதத்தை நிபந்தனை இன்றி அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?


"ஒடுக்கப் படும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகள், ஒடுக்கும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேண வேண்டும்," என்பது, ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு மார்க்சியவாதிகள் முன்வைக்கும் நிபந்தனையாகும். ஏற்கனவே, பல சர்வதேச இடதுசாரிகள் தமிழ்த் தேசிய எழுச்சியை ஆதரித்துள்ளனர். எந்த நிபந்தனையின் பேரில், எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்த ஆதரவு வழங்கப் பட்டது, என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். "சிறி லங்கா ஆட்சியாளர்களை, பிரிட்டிஷ் நவ-காலனிய கைக்கூலிகளாகவே," சர்வதேச இடதுசாரிகள் கருதுகின்றனர். "ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானது," என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டே இடதுசாரிகள் ஆதரவு வழங்க முடியும்.

அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த மார்க்சும், நோர்வேயின் விடுதலையை ஆதரித்த லெனினும், மேலைத்தேய ஏகாதிபத்தியத்தை பலவீனப் படுத்துவதை கருத்தில் கொண்டிருந்தனர், என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. தொன்னூறுகளில், சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா போன்ற கம்யூனிச வல்லரசுகளை உடைக்கும் நோக்குடன், மேற்குலகம் புதிய குடியரசுகளை அங்கீகரித்தது. அதே நேரம், பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்), போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை, தத்துவார்த்த, அல்லது பூகோள அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம்.

Saturday, June 02, 2012

பௌத்த சங்கம் பாதுகாக்கும் சிங்கள வேளாள சாதியம்

[ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்] 
(பகுதி - இரண்டு)
கண்டிய ராஜ்யத்தை ராஜசிங்க பரம்பரையினர் ஆண்ட காலம் முழுவதும், மன்னரை கொலை செய்வதற்காக, ஏராளமான சூழ்ச்சிகள், சதியாலோசனைகள் நடந்துள்ளன. முடி தரித்த தலைக்கு நிம்மதி இல்லை என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றவாறு, எல்லையில் அன்னியப் படைகளையும், அரச மாளிகைக்குள் சதிகாரர்களையும் சமாளிப்பதற்கே, கண்டி அரசனுக்கு நேரம் போதாமல் இருந்திருக்கும். கண்டி அரசவையில் நடந்த சூழ்ச்சிகளை வைத்து, ஒரு விறுவிறுப்பான சரித்திர மர்ம நாவல் எழுதலாம். ராஜசிங்க வம்சத்தின் ஒவ்வொரு அரசனையும், கொல்வதற்கு சூழ்ச்சி செய்ததும், கொலை முயற்சியில் இருந்து பாதுகாத்ததும், மன்னனுக்கு நெருக்கமான அதிகார்களும், புத்த மதகுருக்களும் தான். மன்னன் கீர்த்திஸ்ரீ, மல்வத்த விகாரை சதி முயற்சியில் இருந்து உயிர் தப்பினான். ஆனால், அந்தச் சம்பவமானது நிலப்பிரபுக்களின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது, என எடுத்துக் காட்டியது. சுமார் 200 அல்லது 300 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை ஆண்ட கடைசி மன்னன் ஆங்கிலேயரால் சிறைப் பிடிக்கப் பட்டாலும், நிலப்பிரபுக்களின் வர்க்கம் ஆங்கிலேயருடன் சில உடன்படிக்கைகளை செய்து கொண்டது.

இலங்கையை ஒல்லாந்தர்கள் (டச்சுக் காரர்கள்) ஆண்ட காலத்திலும், கண்டி ராஜ்யத்தை கைப்பற்ற முடியவில்லை. கண்டி நாட்டு படையினரின், கெரில்லா போர் முறையும், நவீன ஆயுதம் ஒன்றின் பாவனையும், டச்சு காலனிய படைகளை நெருங்க விடாமல் தடுத்தன. அன்றைய காலத்தில், டச்சுக் காரராலேயே நவீன ஆயுதமாக கருதப்பட்ட ஒரு வகை துப்பாக்கி, இன்றைக்கும் நெதர்லாந்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. கண்டிய படைகள், காலி, மாத்தறை ஆகிய இடங்களை கைப்பற்றியதுடன், கொழும்பு நகரையும் முற்றுகையிட்டிருந்தன. இந்தியாவில் இருந்து உதவிக்கு மேலதிக துருப்புகள் வந்திரா விட்டால், இலங்கையில் ஐரோப்பிய காலனியாதிக்கம் 18 ம் நூற்றாண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும். (Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck http://databases.tanap.net/ead/html/1.10.106/pdf/1.10.106.pdf) இத்தனை பலம் பொருந்திய கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு காரணம், ஆளும் வர்க்கத்தினுள் நிலவிய ஒற்றுமையின்மை, போட்டி, பொறாமைகள், எதேச்சாதிகாரம் என்பன ஆகும்.

குறிப்பாக, கடைசி கண்டிய மன்னனான விக்கிரம ராஜசிங்கன் காலத்தில், "துரோகிகளை களை எடுக்கும் நடவடிக்கை" அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருந்தது. அரசவையில் இருந்த மந்திரி பிரதானிகள் (அதிகார்கள்), மன்னனின் உத்தரவின் பேரில் கொல்லப் பட்டனர். சில அதிகார்கள் ஒன்று சேர்ந்து, அரசனை கொலை செய்ய திட்டமிட்டமை அம்பலமானதும், அதிலே சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்யும் படலம் தொடங்கியது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். எஹலப்பொல என்ற அதிகார், ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்து எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தான். ஆங்கிலேயர்கள், அவ்வாறு தான் கண்டி ராஜ்யத்தை கைப்பற்றினார்கள். 1815 ம் ஆண்டு, எஹலப்பொலவும், எஞ்சியிருந்த அதிகார்களும் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி, சில வருடங்களின் பின்னர் கண்டி ராஜ்யத்தை ஒரு சுதந்திர நாடாக, அதிகார்கள் கையில் திருப்பி ஒப்படைப்பதாக எழுதப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறிய ஆங்கிலேயர்கள், இலங்கை முழுவதையும் ஒரே நாடாக ஆண்டார்கள்.

கண்டி ராஜ்யத்தின் ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்ற ஆங்கிலேயர்கள், அங்கு நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை மறு சீரமைத்தனர். புத்த மடாலயங்கள், நிலங்களின் மீதான அதிகாரத்தைக் கொண்டிருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், ஒரு ஆணைக்குழுவை அமைத்தார்கள். நிலங்களை அளவை செய்வதும், கணக்கிடுவதும், அந்த ஆணைக்குழுவின் பொறுப்பாக இருந்தது. சொத்துக் கணக்கெடுப்பு என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆங்கிலேயர்கள் பறித்துக் கொண்டனர். அப்படி இருந்தும், புத்த மடாலயங்கள் பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப் பட்டது. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, சொத்துக்களின் எண்ணிக்கை, வரவு, செலவுக் கணக்குகளை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தம், இன்றும் கூட பெருமளவு மாற்றத்திற்கு உட்படவில்லை. நிலப்பிரபுக்களான மடாதிபதிகள், தமக்கு சொந்தமான நிலங்களை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார்கள். பல பெரிய மடாலயங்களின் தலைமை மதகுருக்களுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும், பல இலட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்தன. இதிலே வேடிக்கை என்னவென்றால், பெருந்தோட்ட உரிமையாளர்களான சில மடாதிபதிகள், இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளரை வைத்து வேலை வாங்கி இருக்கிறார்கள். பிற்காலத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்திய உழைப்பாளிகளின் தேவை முடிந்ததும், இனவாதம் பேசி திருப்பி அனுப்பினார்கள். 

சிங்கள-பௌத்த பொருளாதார கட்டமைப்பில், சாதி அமைப்பின் படி நிலை வளர்ச்சி பிறிதாக நோக்கப் பட வேண்டும். கண்டி ராஜ்யத்தில் ஆதிக்க சாதியாகவிருந்த ராதலர்கள், ஆங்கிலேய நிர்வாகிகளுடன் ஒத்துழைத்தனர். இருப்பினும், இலங்கை முழுவதும் புதிதாக உருவாகிக் கொண்டிருந்த "வெள்ளாளர்கள்" என்ற புதிய சாதியினருக்கு இடம் கொடுத்து ஒதுங்க நேர்ந்தது. இன்று ராதலர்கள், தம்மை வெள்ளாளரின் உட்பிரிவாக அழைத்துக் கொள்கின்றனர். ஆரம்பத்தில், வெள்ளாளர்கள் என்பது ஒரு சாதியாக இருக்கவில்லை. நிலவுடமையாளர்களின் நிலங்களை மேற்பார்வை செய்யும் வேலை பார்த்து வந்தனர். ஒரு விகாராதிபதி (நிலப்பிரபுவான புத்த மதகுரு), பல்லாயிரம் ஏக்கர் காணிகளை, "பங்கு" என்ற பெயரில் சிறு சிறு துண்டுகளாக பிரித்திருப்பார்.

அந்த பங்குகளை நிர்வகிப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் சிலர் இருந்தனர். அவர்கள் இரண்டு வகையாக அந்த நிலங்களை பராமரித்தனர். ஒன்று, அவர்கள் தாமே அந்த வயல்களுக்கு சொந்தக்காரர்கள் போல் உழுது பயிரிட்டு, அறுவடையில் ஒரு பகுதியை நிலப்பிரபுவுக்கு கொடுப்பார்கள். இரண்டு, வயல்களை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு மேற்பார்வை பார்ப்பார்கள். பிற்காலத்தில், நிலப்பிரபுக்களின் அதிகாரம் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் பிடுங்கப் பட்டதும், நிலங்களை மேற்பார்வை செய்தவர்கள் "வேளாளர்கள்" (சிங்களத்தில் : கொவிகம) என்ற சாதியாக மாறி விட்டனர். 

நிலப்பிரபுவான மடாதிபதியின் நிலங்களை மேற்பார்வை செய்யும் சாதிகளை சேர்ந்தோர், அந்த ஊர் விகாரைகளில் நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு பணிவிடை செய்யும் அந்தக் கடமையை "நில காரிய" என்று அழைப்பார்கள். நில காரியம் செய்வோர் பெரும்பாலும், உயர்சாதியினர் அல்லது இடைநிலைச் சாதியினர் ஆவர். அதைத் தவிர, வயல்களில் வேலை செய்யும் கூலி உழைப்பாளிகளும், குடிமைத் தொழில் செய்யும் பிற பணியாட்களும் தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப் பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நாடு முழுவதும் முதலாளித்துவ பொருளாதார முறை பரவியதால், கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்வது அதிகரித்தது. அதனால், அடிமை முறையும் தகர்ந்தது. 

மத்திய கால நிலப்பிரபுத்துவ அமைப்பு, இன்றைக்கு ஏறத்தாள அழிந்து விட்டது. ஆயினும், இன்றைக்கும் இந்தியாவில் சில எச்ச சொச்சங்களை காண முடிவதைப் போல, அண்மையில் இலங்கையிலும் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மகியங்கன எனும் இடத்தில் உள்ள ஊர் ஒன்றில், இன்னமும் மத்திய கால அடிமை உழைப்பு முறை நிலவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அங்கிருக்கும் பௌத்த மடாலயத்திற்கு சொந்தமான விகாராதிபதி, இன்றைக்கும் நிலப்பிரபு போன்றே நடந்து கொள்கிறார். அந்த ஊர் மக்கள், விகாராதிபதிக்கு சொந்தமான வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர்.

கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் காட்டுக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர். காட்டை அழித்து, அதனை கிராமமாக்கி, தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தாமே பயிரிட்டுக் கொண்டு வாழ்ந்தனர். அந்த தன்னிறைவு கண்ட சமுதாயத்தில், பௌத்த மடாதிபதிகள் நுழைந்த பின்னர் தான் பிரச்சினை ஆரம்பமாகியது. அந்த நிலம் முழுவதும் தமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடிய மடாதிபதிகள், மக்களை கொத்தடிமைகளாக்கி உழைப்பை சுரண்டி வந்தனர். அங்கே, அரச இயந்திரத்தின் அங்கமாக செயற்படும் பொலிஸ் நிலையம் ஒன்றுள்ளது. பொலிஸ் அதிகாரிகளும், மடாதிபதிகளுக்கு சார்பாகவே நடந்து கொள்கின்றனர். கடந்த கால ஜேவிபி கிளர்ச்சியை காரணமாக வைத்து, பலரை கொன்று அரச பயங்கரவாத்தினால் அடக்கி வைத்தனர். மகியங்கனையில் அல்லலுறும் அடிமைகள் பற்றிய ஆவணப் படத்தை இங்குள்ள இணைப்பில் பார்க்கலாம். (21st century slaves)

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பெரும் செல்வாக்கு மிக்க, மல்வத்த, அஸ்கிரிய பௌத்த சங்கங்கள், அரசியலில் இருந்து தள்ளி இருக்கப் போவதாக அறிவித்தன. ஆனால், நடைமுறை வேறாக இருந்தது. பல மடாதிபதிகள், நேரடியாக அரசியலில் ஈடுபடா விட்டாலும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, விகாரைக்கு சொந்தமான நிலங்களின் மீதான உரிமை, அவற்றால் கிடைக்கும் வருமானம், இவற்றை நிச்சயப் படுத்திக் கொள்வது. இரண்டாவதாக, நிலப்பிரபுக்களாகவும், முதலாளிகளாகவும் இருந்த மடாதிபதிகளின் ஆதரவு, அரசியல்வாதிகளுக்கு தேவைப் பட்டது. மூன்றாவதாக, இலங்கையில் இன்றைக்கும் மாற்ற முடியாத, வெள்ளாள ஆதிக்க சாதி அரசியல். இலங்கையில் உள்ள பௌத்த மடாலயத்தின் தலைமை மதகுருவாக வருபவர், வெள்ளாளர் சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகும். கரவா, சலாகம போன்ற இடைநிலைச் சாதியினர், தமக்கென தனியான பௌத்த சங்கங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில், அதிக வருமானம் ஈட்டும் பௌத்த மடாலயங்களில், ஸ்ரீபாத (சிவனொளிபாத மலை), தலதா மாளிகை ஆகியன பிரபலமானவை. இந்த இடங்களுக்கு வந்து குவியும், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளால் அதிக வருவாய் கிடைக்கின்றது என்று ஒரு காரணத்தைக் கூறலாம். ஆனால், மகியங்கன, திஸ்ஸ மகரகம, தம்புள்ள போன்ற இடங்களில் அமைந்துள்ள ரஜ மஹா விகாரைகளும் பெருமளவு பணத்தை கணக்கில் காட்டுகின்றன. பௌத்த சமயத்துடன் தொடர்புடைய இடங்களை விளம்பரப் படுத்தி, அதிகளவு யாத்ரீகர்களை வரவழைக்கும் வியாபார நோக்கம், சில நேரம் இன முரண்பாடுகளையும் உருவாக்கி விடுகின்றது. உதாரணத்திற்கு, இந்தியாவில் இருந்து சங்கமித்தை வந்திறங்கிய புனிதஸ்தலம் என்று கூறி, மாதகலில் (யாழ்ப்பாணம்) புதிதாக பௌத்த விகாரை ஒன்று கட்டப் பட்டது. இன்று, பெருமளவு தென்னிலங்கை யாத்ரீகர்கள் வருகை தருவதால், மாதகல் மடாலயமும் தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றது. இந்த இலக்கை அடைவதற்காக, ஒரு பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ், அரசுடனும், இராணுவத்துடனும் ஒத்துழைத்திருப்பார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்ததைப் போல், மதத்தையும், அரசியலையும் பிரித்து வைக்கும் தைரியம், இலங்கையை ஆண்ட தலைவர்களுக்கு இருக்கவில்லை. பௌத்த மத பாசிச சக்திகளின் பலத்தை, பண்டாரநாயக்க கொலைக்குப் பிறகு தான் எல்லோரும் புரிந்து கொண்டார்கள். சிங்கள-பௌத்த சமூகக் கட்டமைப்பின் வேர்கள், எங்கெங்கெல்லாம் பரவி இருக்கின்றன என்பதை, இன்று வரைக்கும் யாரும் ஆராயவில்லை.

(முற்றும்)

இந்தத் தொடரின் முதலாவது பதிவை வாசிப்பதற்கு:
ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள், இணையத் தளங்கள்:
1.Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck
2.The Kandyan Kingdom
3.21st century slaves
4.The Expedient Utopian: Bandaranaike and Ceylon
5.நோத் முதல் கோபல்லவா வரை 6."Monastic Landlordism" in Ceylon, Journal of Asian Studies, Volume 28, Issue 4(August 1969)
------------------------------------

இந்த விடயத்துடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுக் கட்டுரைகள்:
1.இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்
2.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள் 3.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Tuesday, May 29, 2012

சிதம்பரத்தின் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை



ஜான் மிர்தால் (Jane Myrdal)ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர்உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகாரகொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர்என்பத்தி ஐந்து வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாதுஎன அறிவித்துள்ளது இந்திய அரசுமாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்று குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.




யார் இந்த ஜான் மிர்தால்?

ஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர்அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள்இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபெல் பரிசு தரப்பட்டுள்ளதுஇத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.

தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால்தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார்உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்குஇயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர்தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார்அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்ஜனநாயகவாதி, எழுத்தாளர்பேச்சாளர்.

இவர் சில காலம் இந்தியாவில் தங்கியும்பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார்1983 ம் ஆண்டு இவர் எழுதிய இந்தியா காத்திருக்கிறது(India Awaits) என்ற நூல் தமிழ் உள்பட பல மொழிகளில்பல பதிப்புகள் வெளிவந்துள்ளதுஇதே போலவே கடந்த ஆண்டில் இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள்,பிரதிபலிப்புகள்விவாதங்கள்(Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார்இந்த நூல் இந்தியாவின் கல்கத்தாடில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்மாணவர்கள்முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்திதெலுங்குவங்காளிதமிழ்,பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது.முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர்இது மட்டும் அல்லாது தம்மைஅறிவாளிகளாககருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்பல ஐரோப்பியஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளதுஎனவே,இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.


மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?

மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள்தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால்அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்ததுஇதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்ததுஅப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளதுதாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதுமாணவர்கள்இளைஞர்கள்,அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார். 


பொய்யே தொழிலாகக் கொண்ட சிதம்பரம் இந்த மட்டும் ஒரு வரியில் தம் பொய்யை நிறுத்தியது நமக்கு வியப்பு இல்லை.

இவருடைய சமீபத்திய நூல்மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது.இந்தியாவின் போலீசையும்ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளதுமாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளதுகுறிப்பாக மாணவர்கள்அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்யவில்லைஆயினும்அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.



ஸ்வீடனும் இந்தியாவும்

ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லைஇது துரதிர்ஷ்டமே.

ஸ்வீடன் நாட்டின் அறிவாளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்ஐரோப்பிய மக்களுக்கு இந்தியாஇலங்கைமலேசியா போன்ற அடிமைப்பட்ட நாடுகளில் வெள்ளையின அரசாங்கங்கள் நடத்தும் படுகொலைகளையும் கொடுங்கோல் ஆட்சியையும் வெளிக் கொண்டுவந்ததில் இவர்களது பணி மிகவும் முக்கியமானதுஇந்த வகையில் ஜான் மிர்தால் அவர்களின் குடும்பம் அளப்பறிய பணியாற்றியிருக்கிறது.

அடிப்படைப் பொருளாதாரக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள்அரசியல் ஊழியர்கள் தாம் அவசியம் படித்துத் தேற வேண்டிய அடிப்படை நூல்கள்ஆய்வுகள் பலவும் ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளால் வெளியிடப் பட்டுள்ளது என்றால் அது மிகையல்லஅதிலும் குறிப்பாகஇன்றளவும் இந்திய அரசு பொருளாதார ரீதியாக விவசாயிகளைப் பிரித்து ஆராயவும்அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தும் மூல விபரங்கள் குன்னர் மிர்தால் எழுதிய ஆசிய நாடகம்என்ற ஆய்வு நூலில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளதுஅவர் வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் இந்திய அரசால் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டு சிறிய (small)நடுத்தர (medium), பெரிய (Big)விவசாயிகள்நிலச்சுவான்தார்கள்(Landlords)என்று வகைப் படுத்தப் பட்டுள்ளனர்.இதனையே அரசின் திட்டங்கள் அடிப்படியாகக் கொண்டுள்ளன.

இவரைப்போலவேவெள்ளையர் ஆட்சியின் பொழுதுஇந்தியாவின் வறுமையின் காரணம் என்ன?, நாடு எப்படி வெள்ளையர்களால் கொள்ளையிடப் படுகிறது என்பதை ஒரு நீண்ட ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரும் புள்ளி விபரங்களுடன்இன்றைய இந்தியா (India Today)” என்ற ஒரு மிகப் பெரிய நூல் வெளியிட்ட ரஜனி பாமி தத் (Rajani Palme Dutt) என்ற அறிஞரும் ஸ்வீடன் நாட்டு வம்சாவழியில் வந்தவரே.



சிதம்பரமும் ஜான் மிர்தாலும்

இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஐரோப்பியக் கம்பெனிகள்அமெரிக்கக் கம்பெனிகளின் அதிகாரிகள்சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள்அழகிப் போட்டி நடத்தும் நிறுவனங்கள்மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவெறிப் பிரச்சாரகர்கள்ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்கள்நடிகைகள் இந்தியாவில் பயணம் செய்யவும்கூட்டங்கள் நடத்தவும்தொழில் நடத்தவும் சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சிறப்புச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறதுஏன்உலகறிந்த கொலைகாரன் ராஜ பக்சேவும் அவன் சகோதரர்களும் இந்தியாவுக்கு வரவும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும் இதே சிதம்பரம் தயங்கியதில்லைஇப்படிக் கொள்ளையர்கள்,கொலைகாரகள்சரச சல்லாபத் தொழில் செய்வோரை வரவேற்று அவர்களுக்கு ஜமுக்காளம் விரித்துஉடனிருந்து பாதுகாப்பும் உபச்சாரமும் செய்யும் சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவாளியை இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்புச் செய்துள்ளது நமக்கு வியப்பைத்தரவில்லை.

இந்தியப் பாரம்பரியம் பற்றி அடிக்கடி பேசும் சிதம்பரத்தின் முன்னோர்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த பரம்பரை என்பது தமிழர்கள் அறிந்த விஷயம்.தமிழரான சிதம்பரத்தின் முன்னோர்கள் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்இந்தியா,மலேசியாபர்மா போன்ற உலகின் பல நாடுகளில் வெள்ளையர்களின் துணையோடு வட்டிக் கடைகள் நடத்தச் சென்ற போது ஐரோப்பியரான ஜான் மிர்தாலின் குடும்பம் உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததுபோராடியதுஅது இன்றும் தொடர்கிறதுசிதம்பரம் கொள்ளைக்காரக் கம்பெனிகளுக்கு எடுபிடியாக,துணைவனாக இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்மிர்தால் போராடும் மக்களுக்கு துணையாக இருந்து அவர்களது நியாயத்தை பேசுகிறார்எழுதுகிறார்.

சிதம்பரத்தின் முன்னோர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்த காலத்தில் அதற்கு எதிராக சர்வதேச மக்களுக்காகக் குரல் கொடுத்த ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளின் மரபில் வந்தவர் ஜான் மிர்தால்சிதம்பரம் தன் முன்னோர்கள் சென்ற அதே துரோகப் பாதையில் செல்கிறார்மிர்தால் மக்களுக்காக பாடுபடுகிறார்.

எப்படி வேசமிட்டாலும் சிதம்பரம் போன்றவர்கள் இனம் இனத்தோடே சேரும் என்ற விதியை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


தடையை விலக்குக

கிடைக்கும் இடங்களில் எல்லாம் தம்மை ஒரு படிப்பாளியாக அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் தாம் உண்மையில் ஒரு ஒரு பொய்யர் மட்டும் அல்ல அறிவாளிகளின் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளார்.அறிவாளிகளைஆய்வாளர்களை இந்தியாவுக்குள் நுழையவும்ஆய்வு செய்யவும்,பேசவும்எழுதவும் அனுமதியில்லை என்று அறிவிப்புச் செய்திருக்கும் மன்மோகன் சிங் சிதம்பரத்தின் கூட்டணி ஒரு நேர்மையில்லாத ஒரு அயோக்கியர்களின் கூட்டணி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்இதை இந்திய மாணவர்கள் அறிவாளிகள் அனுமதிக்க முடியாதுகூடவும் கூடாதுஇந்திய அறிவாளிகள்,மாணவர்கள்இளைஞர்கள் பலவாறாக ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளுக்கு கடன் பட்டுள்ளார்கள்இந்த அநீதிக்கும் சிதம்பரத்தின் துரோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ் நாட்டு மாணவர்கள்இளைஞர்கள்அறிவாளிகளது கடமை

இந்திய அரசின் இந்த தடையை கண்டிக்க வேண்டியது அனைத்து சனநாயக சக்திகளின் கடமையும்கூட.

ஜான் மிர்தால் தமது வாழ்வின் நீண்ட பயணம் பற்றிய பேட்டி இங்கே:

Saturday, May 26, 2012

ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்


"சிங்கள- பௌத்த பேரினவாதம்" என்று எல்லோரும் சொல்கிறார்களே, அது யாரால் உருவாக்கப் பட்டது என்று தெரிந்து வைத்திருக்கிறார்களா? சிங்கள-பௌத்த மேலாதிக்கம் என்ற சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கியவன் ஒரு தமிழன்! இந்த உண்மையை, சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.


18ம் நூற்றாண்டில், கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன், இலங்கையின் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்தான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பௌத்த விகாரையின் கீழ், நிலங்களை பகிர்ந்தளித்தான். இதனால், பௌத்த சங்கங்களின் மடாதிபதிகள், நிலவுடமையாளர்களாக மாறினார்கள். சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் உருவான புதிய நிலவுடமையாளர்களின் சமூகம், இன்றைக்கும் இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளது. இவர்களின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பதற்கான சமூகப் புரட்சி ஒன்று அவசியமாகின்றது. இலங்கையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்காமல், "சிங்கள-பௌத்த பேரினவாத மேலாதிக்கம்" பற்றி ஐ.நா. சபை வரையில் சென்று முறையிட்டாலும், எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.


இலங்கை இன்றைக்கும் ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனித்துவ நாடாகும். அங்கே இன்னமும் நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப் படவில்லை. மாறாக, முன்னை நாள் நிலப்பிரபுக்கள், உள்நாட்டு முதலாளிகளாக, அல்லது அரசியல்வாதிகளாக தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர். பெரும்பாலான சிங்கள - தமிழ் அரசியல் தலைவர்கள், நிலவுடமைக் குடும்பங்களில் இருந்து, அல்லது "வெள்ளாளர்கள்" என்ற உயர்சாதியில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. 


அதே போன்று, பௌத்த மதகுருக்கள் ஒரு காலத்தில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தினார்கள். இரு தசாப்தங்களுக்கு முன்னர், "ஜாதிக ஹெல உறுமய" என்ற கட்சியின் கீழ் அணி சேர்ந்தார்கள். "என்ன இது? புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடலாமா?" என்று ஆச்சரியப் படுபவர்கள், ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் சிங்களப் பகுதிகளில், ஏராளமான நிலங்கள் புத்த விகாரைகளுக்கு சொந்தமாக இருந்துள்ளன. பௌத்த மடாதிபதிகள் நிலப்பிரபுக்களாகவும் இருந்துள்ளனர். இன்றைய முதலாளித்துவ உலகில், தமது இருப்பை நிச்சயப் படுத்திக் கொள்ளவும், சந்தர்ப்பம் கிடைத்தால் அதிகாரத்தை கைப்பற்றவும் விரும்புகின்றனர்.


திபெத் நாட்டிலும், இது போன்றே பௌத்த மடாதிபதிகள் நிலப்பிரபுக்களாக அதிகாரம் செலுத்தினார்கள். சீனக் கம்யூனிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சியின் பின்னர் தான், திபெத்தில் பௌத்த நிலப்பிரப்புகளின் ஆதிக்கம் முற்றாக மறைந்தது. இந்த உண்மையை உணராத, மேற்கத்திய பிரச்சாரங்களால் மதி மயங்கி தலாய் லாமாக்களை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள், தாம் அறியாமலே சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இருப்பையும் நியாயப் படுத்துகின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற போக்கைப் பார்க்கலாம். அங்கு ஒரு காலத்தில் பெரும் நிலவுடமையாளர்களாக இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், இன்று கிறிஸ்தவ கட்சிகள், பாசிச இயக்கங்கள் மூலம் தமது இழந்த அதிகாரத்தை மீளப் பெற விரும்புகின்றனர். ஹெல உறுமய, ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் சகோதரத்துவம் ஆகிய மதவாத பாசிசக் கட்சிகளின் சித்தாந்தங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. "இழந்த தாயகம், பண்பாட்டுப் பெருமைகள், அந்நிய இனத்தவரின் ஆக்கிரமிப்பு" , இது போன்ற கதையாடல்களும் பொதுவாகவே உள்ளன.


சுமார் 500 ஆண்டுகள், இலங்கை ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது. அதனால், தனித்துவமான சமூக, சாதிய, பொருளாதார மாற்றங்களுக்குட்பட்டது. இந்தியாவில் உள்ள, அல்லது தமிழ் நாட்டில் இருப்பது மாதிரியான, அதே மாதிரியான சாதியமைப்பு படிமுறை இலங்கையில் இல்லாததற்கான காரணமும் அது தான். ஐரோப்பியர்களுடன் ஒத்துழைத்த, அவர்களுக்கு காட்டிக் கொடுத்து சலுகைகள் பெற்ற, சாதிகள் தான் இன்று மேன் நிலையில் உள்ளன. சில சாதிகள் ஐரோப்பியராலேயே புதிதாக உருவாக்கப் பட்டன. 


முதலாவது ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் வந்த காலத்தில், இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன. ஆனால், இன்று பலர் நினைப்பதற்கு மாறாக, அந்த ராஜ்ஜியங்கள் "சிங்கள ஸ்ரீலங்கா, தமிழ் ஈழம்" என்று பிரிந்திருக்கவில்லை. (அவ்வாறான மொழிப்பிரிவினை ஆங்கிலேயர் காலத்தில் தான் தோன்றியது.) விகிதாசாரம் மாறுபட்ட போதிலும், மூன்று ராஜ்ஜியங்களிலும் சிங்கள, தமிழ் மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்தனர். குறிப்பாக, தமிழ் பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம், நீண்ட நெடுங் காலமாக கண்டி ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்தது.


அன்றைய இலங்கையில், மொழியுணர்வை விட, சாதி உணர்வு பிரதானமாகக் கருதப் பட்டது. (சிங்கள மொழியில் இன்றைக்கும்  இனம் என்பதை  ஜாதி  என்று அழைக்கின்றனர்.) மன்னர் பரம்பரைகள் கூட ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான். இந்தியாவில் உள்ளதைப் போல, இந்து மத வர்ணாச்சிரம அடிப்படையில், சத்திரிய சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே மன்னர்களாக சிம்மாசனத்தில் அமர முடியும். தமிழ் ராஜ்ஜியமாக இருந்தாலும், சிங்கள ராஜ்ஜியமாக இருந்தாலும் அது பொது விதியாக இருந்தது. உண்மையில், இலங்கையின் "ஆண்ட பரம்பரையை" சேர்ந்தவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. அனைவரும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் அழித்தொழிக்கப் பட்டு விட்டனர்.


ஏற்கனவே , கரையோரமாக இருந்த, யாழ்ப்பாண ராஜ்ஜியத்தையும், கோட்டே ராஜ்ஜியத்தையும் போர்த்துக்கேயர்கள் அழித்திருந்தார்கள். மலைகளை இயற்கையான பாதுகாப்பு அரண்களாக கொண்டிருந்த, கண்டி ராஜ்ஜியத்தை அவர்களால் அசைக்க முடியவில்லை. கோட்டே ராசதானியை ஆண்ட மன்னன், கிறிஸ்தவனாக மாறி, போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக ஆட்சி செய்தான். இருப்பினும், ஒரு "கிறிஸ்தவ சகோதர மன்னன்" என்பதற்காக அவனை விட்டு வைக்கவில்லை. யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், இதற்கு நேரெதிர் கொள்கையை பின்பற்றினான். ஒரு இந்து மத அடிப்படைவாதி போன்று நடந்து கொண்டான். மன்னாரில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தான்.


அதைக் காரணமாக காட்டியே, போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாண ராஜ்ஜியம் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்கள். போர்த்துக்கேயர்களும் பதிலுக்கு பல யாழ்ப்பாண மக்களை இனப்படுகொலை செய்தனர். சங்கிலி மன்னனின் குடும்ப உறுப்பினர்களை, கத்தோலிக்கர்களாக கட்டாய மத மாற்றம் செய்து, கோவா (இந்தியா) வுக்கு நாடுகடத்தினார்கள். போர்த்துகேய ஆட்சிக் காலத்தில், யாழ் குடாநாட்டில் வாழ்ந்த 90 சதவீத தமிழர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தனர். போர்த்துக்கேயர்கள் அதனோடு திருப்தியடையவில்லை. இலங்கை முழுவதும், (கண்டி ராஜ்ஜியம் தவிர) ஆயிரக் கணக்கான சைவக் கோயில்களையும், பௌத்த ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். அந்தக் கற்களை வைத்து தேவாலயங்களை கட்டினார்கள்.


இந்த சரித்திரப் பின்புலத்துடன், கண்டி ராஜ்ஜியத்தின் அன்றைய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். போர்த்துகேய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயிராபத்தை எதிர்நோக்கிய புத்தபிக்குகள் கண்டி ராஜ்ஜிய பரிபாலன எல்லைக்குள் தப்பியோடி புகலிடம் கோரினார்கள். கண்டி ராஜ்ஜியத்திலும் புத்த மதம் பலவீனமடைந்திருந்தது. இதற்கிடையே கண்டி மன்னனின் பரம்பரையில் தகுதியான வாரிசு கிடைக்கவிலை. 


அதனால், தமிழகத்தில், மதுரையை ஆண்ட நாயக்கர் பரம்பரையில் இருந்து ஒருவரை வரவழைத்தார்கள். அவன் தான், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற பெயரில், கண்டி அரசனாக முடி சூட்டிக் கொண்டான். தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகரப் பேரரசிற்குட்பட்ட சிற்றரசர்களாக, நாயக்கர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். இந்து வர்ணாச்சிரம தர்மப் படி, சத்திரியர்கள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகின்றேன். (இலங்கையின் தேரவாத பௌத்தம், பிராமண மேலாண்மையை ஏற்றுக் கொண்ட மதமாகும்.)


கீர்த்தி ஸ்ரீ, மன்னனான முடி சூட்டிக் கொண்டவுடன் செய்த முதல் வேலை, ராஜ்ஜியத்தின் சமுதாயக் கட்டமைப்பை அடியோடு மாற்றியது தான். அன்றைய காலங்களில், பிற உலக நாடுகளில் இருந்ததைப் போன்று, இலங்கையிலும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு நிலவியது. மன்னன் மிகப்பெரிய நிலப்பிரபுவாகவும், அவனுக்கு கீழே சிற்றரசர்கள், சிறிய நிலப்பிரபுக்களாகவும் விவசாயப் பொருளாதாரத்தின் நிர்வாக மையமாக விளங்கினார்கள். பௌத்த மதகுருக்கள், மடாலயங்களிலும், விகாரைகளையும் காலத்தைக் கழித்தார்கள். 


ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கம் அவர்களது அரசியல் நிலையை அடியோடு மாற்றியது. கரையோர மாகாணங்களை ஆண்ட போர்த்துக்கேயர்கள், தீவிரமான கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக இருந்தனர். இலங்கைத் தீவு முழுவதும், பௌத்த, சைவ மதங்களை வேரோடு அழித்து விடும் வெறியுடன் செயற்பட்டார்கள். இதன் எதிர் விளைவாக, கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னனுக்கும், பௌத்த மடாதிபதிகளுக்கும் இடையில் அரசியல் நெருக்கம் ஏற்பட்டது. இன்றைக்கு இலங்கை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள் போன்று, கண்டிய அரசனும் தன்னை ஒரு பௌத்த மதக் காவலனாக நிலை நிறுத்திக் கொண்டான். நமது கால அரசியல் மொழியில் கூறினால், "இலங்கையின் முதலாவது சிங்கள-பௌத்த பேரினவாத ஆட்சியாளன், "ஒரு தமிழனான" கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்!"


கீர்த்தி ஸ்ரீ மன்னன், கண்டி ராஜ்யத்தின் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை மறு சீரமைத்தான். நிலப்பிரபுக்களிடமிருந்த நிலங்களை பறித்தெடுத்து, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை பௌத்த விகாரைகளிடம் ஒப்படைத்தான். அதனால், ஒவ்வொரு ஊரிலும், பௌத்த மடாலயங்கள், நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாக மாறின. பௌத்த மடாலயத்தின் தலைமை மதகுருக்கள், புதிய நிலப்பிரபுவாக அரசியல்-பொருளாதார அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். 


நிலப்பிரபுவாக மாறிய தலைமை மதகுரு, "விகாராதிபதி" என்று அழைக்கப்பட்டார். இதனால் அதிகாரமிழந்த, பழைய நிலப்பிரபுக்கள் பொறாமை கொண்டனர். ஆயினும், காலப்போக்கில் அவர்களும் பௌத்த துறவிகள் வேடத்தில் மடாலயங்களுக்கு ஊடுருவி, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையில் இன்று ஆதிக்க சாதியாகவிருக்கும் வெள்ளாளர்கள் (சிங்களத்தில்: கொவிகம), அவ்வாறு தான் பௌத்த சங்கங்களின் தலைமையை கைப்பற்றினார்கள். இன்றைக்கு, பௌத்த சங்கங்களின் தலைமை மதகுரு வெள்ளாள சாதியை சேர்ந்திருக்க வேண்டுமென்பது, எழுதாத விதியாகும். வட இலங்கையிலும், சைவக் கோயில்களை நிர்வகிக்கும் ஆலய பரிபாலன சபை, வெள்ளாளரின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.


கோயில் திருவிழாக்களில் சாதிகளின் பங்களிப்பு என்பது, இலங்கையின் சிங்களப் பகுதிகளிலும், தமிழ்ப் பகுதிகளிலும், இன்றைக்கும் நிலவும் கலாச்சார ஒற்றுமை ஆகும். யாழ்ப்பாணத்தில் சைவக் கோயில்கள் வெள்ளாளரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும், ஏழாம் திருவிழா, பத்தாம் திருவிழா என்று, பிற சாதிகளுக்காக ஒதுக்கப் பட்ட திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இலங்கையின் பிரபல பௌத்த விகாரையான, கண்டி தலதா மாளிகையிலும், இது போன்று சாதிக்கொரு திருவிழா கொண்டாடுவது கடைப் பிடிக்கப் படுகின்றது. திருவிழாக்கள் மட்டுமல்ல, கோயில்களில் பணிவிடைகள் செய்வதும் அந்தந்த சாதியை சேர்ந்தவர்களின் கடமையாகும். சிங்களத்தில் அதனை "நில காரியம்" என்று கூறுகின்றனர். இடைநிலைச் சாதிகளை சேர்ந்தவர்கள் தான், நில காரியம் என்ற கோயில் பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். சைவக் கோயில்களில் கிரியைகள் செய்யும் இசை வேளாளர்கள், பண்டாரங்கள் போன்ற சாதிகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


அன்றைய கண்டிய ராஜ்யத்தில் மன்னனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள், "அதிகார்கள்" என்ற பிரபுக்கள். அரசவையில் மந்திரிகளாகவும், அதே நேரம் பெரும் நிலவுடமையாளர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த படியாக, அன்றைய ஆதிக்க சாதியாக இருந்தவர்கள், ராதலர்கள். (பிற்காலத்தில் இந்த ராதல சாதியினர், வெள்ளாளரின் உட்பிரிவாக மாறி விட்டனர்.) கீர்த்தி ஸ்ரீ கொண்டுவந்த சீர்திருத்தம், அதிகார்களினது பொருளாதார பலத்தைக் குறைத்தது. சில அதிகார்கள், மன்னன் கீர்த்தி ஸ்ரீ யை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர். மல்வத்த விகாரைக்கு விஜயம் செய்யவிருந்த மன்னனை, ஈட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்த மரணப் பொறி ஒன்றுக்குள் தள்ளி விட திட்டம் தீட்டினார்கள். அதற்கு மல்வத்த விகாரையை சேர்ந்த பிக்குகளும் உடந்தையாக இருந்தனர். ஆயினும், அந்த அரசவை சூழ்ச்சிகளிலும், "சிங்கள-தமிழ் வேற்றுமை" துளியும் தலைகாட்டியிருக்கவில்லை.


(தொடரும்)

Monday, May 21, 2012

ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்!

உலகில் இரண்டு இனங்கள், முற்றாக அழித்தொழிக்கப் பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு கீழே உள்ள தாஸ்மானியா தீவில் வாழ்ந்த பழங்குடி இனம், ஆங்கிலேயரால் ஒருவர் விடாமல் இனவழிப்பு செய்யப் பட்டது. இது நடந்தது 19 ம் நூற்றாண்டில். அது ஒரு கருப்பினம். ஆனால், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களைக் கொண்ட, வெள்ளையினம் ஒன்றும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் இனவழிப்பு செய்யப் பட்டது. யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இன்னுமொரு அதிசயம் காத்திருக்கின்றது. அந்த வெள்ளையினம் ஆபிரிக்காவில் வாழ்ந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் பேசிய மொழி திராவிட குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.

காலனிய காலகட்ட வரலாற்றின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. 16 ம் நூற்றாண்டில், ஆபிரிக்க கண்டத்திற்கு அருகில் உள்ள தீவொன்றில் வாழ்ந்த தனித்துவமான இனம் ஒன்றும் முற்றாக அழிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், அதுவே "ஐரோப்பியரின் முதலாவது காலனியப் படையெடுப்பும், முதலாவது காலனிய இனப்படுகொலையும் ஆகும். அங்கிருந்து தான், அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களை காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரும் பயணம் தொடங்கியது. "கிரான் கனாரியா" என்று அழைக்கப்படும் அந்த தீவுக் கூட்டம், இன்று ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் மனத்தைக் கவர்ந்த உல்லாச விடுதிகளால் நிரம்பியுள்ளது. அங்கு உல்லாசமாக பொழுதைக் களிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த மண்ணில் நடந்த இனவழிப்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Tenerife, Fuerto Ventura , இந்தப் பெயர்களை அறிந்திராத இளந் தலைமுறையை சேர்ந்த ஐரோப்பியர்கள் மிகக் குறைவு. வெதுவெதுப்பான காலநிலை, வெள்ளை மணல் கடற்கரை, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவுகள். காதல் ஜோடிகள், இளம் தம்பதிகள் தேனிலவை இன்பமாக கழிப்பதற்கு அங்கே தான் அடிக்கடி செல்வார்கள். இன்று அந்த தீவுகள் ஸ்பெயினுக்கு சொந்தமானவை. ஆனால், ஸ்பெயின் பெருநிலப் பரப்பில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன! அதே நேரம், ஆப்பிரிக்க கண்டத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன. மொரோக்கோ கரையில் இருந்து, வெறும் நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே! அதன் பூகோள அமைவிடம் காரணமாக, ஸ்பெயின் ஆபிரிக்காவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோரி வருகின்றது. இன்று அந்த தீவின் சனத்தொகையில் பெரும் பகுதி, ஸ்பெயினில் இருந்து வந்து குடியேறியவர்களின் வம்சாவளியினர் ஆவர். ஸ்பெயின் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்திரா விட்டால், அதுவும் தென் ஆப்பிரிக்கா போன்று ஒரு "வெள்ளையர் குடியேறிய நாடாக" கணிக்கப் பட்டிருக்கும்.

15 ம் நூற்றாண்டில், அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடிக்க கிளம்பிய கொலம்பஸின் கப்பல்கள், முதலில் கிரான் கனாரியா தீவுகளுக்கு சென்று தான் பயணத்தை தொடர்ந்தன. அந்த தீவுகளுக்கு அருகில் ஓடும் கடல் நீரோட்டம், தென் அமெரிக்கா வரையில் கொண்டு சென்று விடும். அதற்கு முன்னரே, போர்த்துகீசிய அல்லது ஸ்பானிய மாலுமிகள், அந்த தீவை கண்டு பிடித்திருந்தனர். அப்போதிருந்தே, ஸ்பானிய குடியேற்றவாசிகள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வருகையின் போது, அந்த தீவுகள் வெறுமையாக இருக்கவில்லை. அங்கு "குவாஞ்சே" (Guanche) என்றழைக்கப்படும் இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த நூறாண்டுகள், பூர்வீக மக்களும், ஸ்பானிய குடியேற்றவாசிகளும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். ஆயுதபலம் மிக்க ஐரோப்பியர்கள், கண்ணில் பட்ட குவாஞ்சே மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். நூறாண்டுகளாக தொடர்ந்த இனவழிப்புப் போரின் இறுதியில், மோசமான தொற்று நோய் ஒன்று பரவியது. வெட்ட வெளியில் கொன்று போடப்பட்ட சடலங்களில் இருந்தே, அந்த நோய்கிருமிகள் தோன்றி இருக்க வேண்டும். 16 ம் நூற்றாண்டின் இறுதியில், அந்த தீவுகளில் ஒருவர் கூட மிஞ்சாமல், பூர்வகுடி மக்கள் முற்றாக துடைத்தழிக்கப் பட்டனர்.

கிரான் கனாரியாவின் பூர்வ குடிகள் பற்றிய தகவல்கள், மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. அதனால் இன்றளவும், அவர்களை "மர்மமான பழங்குடி இனம்" என்றே குறிப்பிடுகின்றனர். பெருமளவு தகவல்கள், ஸ்பானிய குடியேற்றவாசிகளிடம் இருந்தே கிடைக்கப் பெற்றாலும், ரோமர் காலத்தில் மொரிட்டானியாவை (அல்லது மொரோக்கோ) ஆட்சி செய்த மன்னன் ஜூபா, சில குறிப்புகளை எழுதியுள்ளான். அதிலும், அந்த தீவுகளின் அமைவிடம் பற்றியே குறிப்பிடப் படுகின்றது. பூர்வகுடிகளான குவாஞ்சே மக்கள், முன்பு ஆப்பிரிக்க பெருநிலத்தில் வாழ்ந்து வந்ததாகவும், ஜூபா மன்னனால் சிறைப் படுத்தப் பட்டு நாடு கடத்தப் பட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர். முன்பு வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடிகள், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக ஒடுக்கப் பட்டு, கிரான் கனாரியா தீவுகளுக்கு தப்பியோடி, அவற்றை தமது புகலிடமாக்கி இருப்பார்கள், என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கின்றது. எது எப்படி இருப்பினும், கிரான் கனாரியாவின் பூர்வீக மக்களுக்கும், ஆபிரிக்காவுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனை உறுதிப் படுத்தும் தரவுகளை பின்னர் பார்ப்போம்.

கிரான் கனாரியா பூர்வகுடி மக்கள், கற்கால மனிதர்களைப் போல குகைகளில் வாழ்ந்தார்கள். ஆனால், சில தீவுகளில் கற்களைக் கொண்டு வீடுகள் கட்டப் பட்டிருந்தன. அனேகமாக, எல்லா தீவுகளிலும் பரவலாக காணப்பட்ட விசாலமான குகைகள், வீடு கட்டி வாழ வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்க மாட்டாது. அந்த மக்கள் குகைகளில் வாழ்ந்தாலும், ஆட்டுத் தோல் உடுத்தினாலும், "நாகரீகம் அடைந்திருக்கவில்லை" என்று கூற முடியாது. குடிமக்களை ஆட்சி செய்ய அரசர்களும், சட்டவிதிகளும் இருந்துள்ளன. அரசர்களும் குகைகளில் தான் வாழ்ந்தனர். பொதுவுடமைப் பொருளாதாரம் நிலவியது. குவாஞ்சே மக்கள், சிறந்த போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். சுமார் பத்தடி நீளமான தடியொன்றை ஊன்றிய படி, மலைப் பாறைகளை தாண்டி பாய்வதில் வல்லவர்கள். குவாஞ்சே மக்கள், தமது இறந்த உறவினர்களின் உடல்களை, எகிப்திய 'மம்மி' போன்று பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவக் கலை அறிந்திருந்தனர். பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், ஏராளமான மம்மிகளை அழித்து விட்டனர். இருந்தாலும், இன்றைக்கும் சில அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. எகிப்தில் இருப்பதைப் போன்று, கனாரி தீவுகளிலும் "பிரமிட்" கட்டிடங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் அழியாமல் பேணிப் பாதுகாக்கப் படும், பிரமிட்களை கட்டியவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கின்றது.
குவாஞ்சே மக்கள், பல தீவுகளில் தனித்து வாழ்ந்தாலும், ஒரே மொழி பேசினார்கள். அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்பது ஒரு சிறப்பம்சம்! கிட்டத்தட்ட அதே மாதிரியான மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். எழுத்து கூட ஒற்றுமையைக் கொண்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வாழும், துவாரக் இன மக்கள், பெர்பர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்களது அமாசிக் மொழியும், எழுத்தும் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. (துவாரக் இனமக்களைப் பற்றி அறிவதற்கு, நான் முன்பு எழுதிய சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை என்ற கட்டுரையை வாசிக்கவும்.) இன்றைய மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியாவில் வாழும் "பெர்பர்கள்" என்ற இனம், ஒடுக்கப்படும் சிறுபான்மையினமாக உள்ளது. "பெர்பர்கள்" என்ற சொல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் சூட்டிய இழிவுப் பெயராகும். இன்று, அவர்கள் பேசும் மொழியின் பேரில், "அமாசிக்" இனம் என்று அழைக்கப் படுகின்றனர். அமாசிக் மொழிக்கும், அந்த பிராந்தியத்தில் பேசப்படும் அரபி மொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு சொல் கூட ஒற்றுமையில்லை! எழுத்து வடிவத்தில் கூட, ஆங்கிலமும், சீன மொழியும் போன்று, மிகப் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம், அமாசிக் மொழிக்கும், கிரான் கனாரியா பூர்வகுடிகளின் மொழிக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.

மொழியியல் அறிஞர்கள் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார்கள். கனாரி தீவுகளில் பேசப்பட்ட மொழிக்கும், திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டுகின்றனர். பல சொற்களுக்கு இடையில் ஒற்றுமை இருப்பது, ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. குவாஞ்சே மக்கள் பேசிய மொழியின் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது. அநேகமான சொற்கள், பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரரால், அவர்களின் உச்சரிப்புக்கேற்ப தொகுக்கப் பட்டன. பொதுவாகவே, ஐரோப்பிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல சொற்களின் ஒற்றுமை மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கின்றன. Ere (குவாஞ்சே) - ஏரி(தமிழ்), Atidamane (அரசி) - ஆதி அம்மன், Xerco (காலணி) - செருப்பு, Irrichen (தானியம்) - அரிசி.... இப்படிப் பல. (மேலதிக தகவல்களுக்கு: குவாஞ்சே மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள்) இந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, "முன் தோன்றிய மூத்த குடி தமிழினம்" என இனப் பெருமிதம் பேசுவது எமது அறியாமையைக் காட்டுகின்றது. மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். அது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஒரு மொழியானது பல்வேறு இனங்களுக்குள்ளும் பரவக் கூடியது.

வட ஆப்பிரிக்காவின் அமாசிக் மக்களுக்கும், கிரான் கனாரியாவின் குவாஞ்சே மக்களுக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமை, அவர்களது தோற்றம். இன்றைக்கும் அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியாவில் வாழும், அமாசிக் (பேர்பர்) மக்கள், ஐரோப்பிய வெள்ளயினத்தின் உடற்கூறுகளை கொண்டுள்ளனர்! வெள்ளயினத்திற்கே உரிய சிறப்பம்சம் என்று கருதப்படும், வெளுப்பான தோல் நிறம், நீலக் கண்கள், செந்நிறத் தலைமுடி, போன்ற உடற்கூறுகளை கொண்ட மக்களை நீங்கள் இன்றைக்கும் அங்கே பார்க்கலாம். கிரான் கனாரியா தீவுக் கூட்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி இனமும், வெள்ளையரைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை பிற்காலத்தில் வந்த ஸ்பானிய குடியேற்றவாசிகளும் குறித்து வைத்துள்ளனர். பெரும்பாலும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் கொண்ட ஆபிரிக்க கண்டத்தில், பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் வெள்ளையினம் எப்படித் தோன்றியது? இந்தக் கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. உலகில் இன்னமும் துலங்காத மர்மங்களில் அதுவும் ஒன்று.

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். மனிதர்களை கருப்பு, வெள்ளை என்று இனம் பிரித்துப் பார்க்கும் வழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. அண்ணளவாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு, தோல் நிறம் முக்கியமானதாகத் தெரியவில்லை. அதனால், "வெள்ளையர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? கருப்பர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?" என்றெல்லாம் அன்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. இயற்கை வளங்களுக்கான போட்டியே, மனித இன வரலாற்றில் முக்கியமானதாக இருந்துள்ளது. இனத் தூய்மை பற்றி பேசும் கடும்போக்காளர்கள் கூட, இறுதியில் பொருளாதாரத்தில் குறியாக இருப்பார்கள். வரலாறு அதனைத் தான் எமக்கு கற்பித்துள்ளது.

காலனித்துவ காலம் முழுவதும், வெள்ளையின நிறவெறியை நிலைநிறுத்த பாடுபட்ட காலனியாதிக்கவாதிகள், எதற்காக ஒரு வெள்ளயினத்தை பூண்டோடு அழித்தார்கள்? அது மட்டுமா? வட ஆப்பிரிக்காவில் இலட்சக் கணக்கில் வாழ்ந்த வெள்ளையின மக்களையும், காலனிய அடிமைகளாகத் தானே வைத்திருந்தார்கள்? அவர்களை "சகோதரர்களாக" நடத்தும் எண்ணம் ஏன் தோன்றவில்லை? பூமியில் அரிதாகக் கிடைக்கும் நிலம், உணவு போன்ற வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டி, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்கின்றது. "இனவுணர்வு","மொழியுணர்வு", "தேசிய உணர்வு", "மத உணர்வு"..... இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட குழுவின் பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக போடப்படும் திரைகள் ஆகும்.