மதம் மக்களை மடையர்கள் ஆக்குகிறது என்பதற்கு இந்த படம் சிறந்த சான்று.
மதங்கள் தோன்றிய பிரதேசங்களில் உள்ள காலநிலைக்கு ஏற்றவாறு தான் வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டன. அதை அப்படியே எல்லா இடங்களிலும் பிரயோகிப்பது மடத்தனம். எந்த மதக் கடவுளும் அப்படி செய்ய சொல்லி மனிதனை வற்புறுத்தவில்லை.
இலங்கை, தென்னிந்திய பிராந்தியம் பூமத்திய ரேகைக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ளதால் அங்கே வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும். அதனால் அங்கு வாழும் ஆண்கள், அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு சாமி கும்பிடுவதில் எந்த அதிசயமும் இல்லை. ஐரோப்பியர் வரும் வரையில், பொதுவாக ஆண்கள் மட்டுமல்ல, பல இடங்களில் பெண்கள் கூட இடுப்புக்கு மேலே எந்த உடையும் அணிவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்தளவு வெயில் கொளுத்தும்.
ஆனால், வட துருவத்தை அண்டிய நாடான கனடாவின் காலநிலை அப்படியா இருக்கிறது? குளிர்காலத்தில் வெப்பம் -20°C அளவுக்கு கூட இறங்கலாம். அந்த காலநிலையில் அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் உடுத்திக் கொண்டு சாமி கும்பிட்டால் குளிரில் விறைத்து இறக்க நேரிடலாம். கடும் குளிரில் முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றா விட்டால் பல நோய்களாலும், உடல் உபாதைகளாலும் பாதிக்கப் படலாம்.
ஆகவே, யாரும் அசட்டுத் துணிச்சலில் இது போன்ற கேலிக்கூத்துகளில் ஈடுபடாதீர்கள். மத நம்பிக்கை தவறல்ல. ஆனால் எதுவும் அளவோடு இருக்க வேண்டும். பக்தி முற்றி பைத்தியமாகி விடக் கூடாது.
பிற்குறிப்பு: கனடாவில் இந்த படம் எடுத்த நேரம் வெப்பநிலை -1°C ஆக இருக்கலாம்.
2 comments:
Always a unique content!
Thank you
Post a Comment