Tuesday, January 18, 2022

வட கொரியாவில் பிரபலமான இந்திய திரைப்படங்கள்!

 வட கொரியா நேரடி ரிப்போர்ட்



உங்களுக்குத் தெரியுமா? வட கொரியால் உள்ள திரையரங்குகளில் இந்திய சினிமாப் படங்களும் காண்பிக்கிறார்கள். வட கொரியர்கள் இந்திய சினிமாப் பாடல்களையும் விரும்பிக் கேட்கிறார்கள். வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணியாக சென்று வந்த இந்திய யூடியூபர் ஒருவர் வழங்கிய தகவல்கள் இவை. வட கொரிய மக்கள் இந்திய திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார்களாம். அதனால், இந்த வட இந்திய யூடியூபர் சென்றிருந்த நேரம் சாதாரண வட கொரிய மக்கள்அவரை "சல்மான் கான்" என்று அழைத்து பேச விரும்பினார்கள். அதை அவரது யூடியூப் சேனலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான இணைப்பு: 
https://www.youtube.com/c/TravellingMantra


மேற்கொண்டு அவர் தெரிவித்த தகவல்களை இங்கே தருகிறேன்.


வட கொரியாவில் 3 அரச தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே பார்க்கலாம் என்று ஒரு கட்டுக்கதை உலாவுகின்றது. அது உண்மை அல்ல! நீங்களே அங்கு சுற்றுலா பயணியாக சென்று நேரில் கண்டறியலாம். கீழே உள்ள படத்தில் வட கொரியாவில் பார்க்க கூடிய பத்துக்கும் மேற்பட்ட சேனல்களில் சிலவற்றை காணலாம். அவற்றில் பல வெளிநாட்டு சேனல்கள்! உதாரணத்திற்கு Russia Today, Al Jazeera, CCTV, TV Monde (பிரெஞ்ச்) இன்னும் பல.




வட கொரியாவில் ஒருவர் குற்றம் செய்தால், அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் கூட 3 தலைமுறைக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படும் கட்டுக்கதையில் எந்த உண்மையும் இல்லை. அது மட்டுமல்ல, ஒருவர் செய்த குற்றத்திற்காக அவரது வாழ்நாள் முழுவதும் தண்டிக்கப் படுவதுமில்லை. ஒருவர் முதலாவது தடவையாக செய்த குற்றம் என்றால் அரைவாசி தண்டனைக் காலத்திலேயே திருந்துவதற்காக வீட்டுக்கு அனுப்பப் படலாம். அவர் மீண்டும் குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும். இது வழமையாக பிற உலக நாடுகளிலும் உள்ள நடைமுறை தான்.



No comments: