முதலாளித்துவத்திற்கு எதிராக போராடியவர்களை, தெருவில் அடித்து நொறுக்கும் ஜெர்மன் பொலிஸ். |
G20 மகாநாட்டை எதிர்த்து நடந்த கலவரங்கள் தொடர்பாக நான் இட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு:
- வானில் வட்டமடிக்கும் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்கள்.
- டிரம்ப் தங்குவதற்கு எந்தக் ஹோட்டேலிலும் இடம் கிடைக்கவில்லை! (வரவேற்பில்லை) அதனால், அரச விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப் பட்டுள்ளார்.
- வங்கிகள் தமது ஊழியர்கள விடுமுறை எடுக்கச் சொல்லி இருக்கின்றன.
- கடைகள் மூடப் பட்டுள்ளன.
(5 July at 07:29 )
"Welcome to Hell", "நரகத்திற்கு நல்வரவு"! - ஜேர்மனியில் நடக்கும் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டம் பற்றிய மேலதிக தகவல்கள்:
உலகில் 20 தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒன்று கூடும் G20 மகாநாடு இன்று ஜேர்மனி, ஹம்பூர்க் நகரில் நடைபெறுகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி வர்த்தகம் பற்றிப் பேசவுள்ளனர்.
ஹம்பூர்க் நகரில் பூட்டப் பட்டுள்ள வர்த்தக நிலையங்கள். கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்று பலகை அடித்து மூடி இருக்கிறார்கள். |
முதலாம் உலகப் போர் முடிவில், வெற்றிகரமான பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்து ஹம்பூர்க் சோவியத் அமைக்கப் பட்டிருந்தது. ஜேர்மனியின் பிரதானமான துறைமுக நகரமான ஹம்பூர்க், இப்போதும் இடதுசாரிகளின் கோட்டையாக கருதப் படுகின்றது.
மகாநாட்டுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக போராட்டம் நடத்துவதற்காக ஒரு இலட்சம் ஆர்வலர்கள் நகரத்தில் கூடி இருக்கலாம் என்றும், அதில் ஆயிரக் கணக்கானோர் வன்முறையில் ஈடுபடலாம் எனவும் காவல்துறை கணக்கிட்டுள்ளது.
அங்கு எந்த நேரமும் கலவரம் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக வர்த்தக நிலையங்கள் மூடப் பட்டுள்ளன. பொதுமக்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
பொலிஸ் வண்டிகள் தாக்கப் பட்டன. ரயில் தண்டவாளங்களை தொடுக்கும் மின்சார வயர்கள் நாசமாக்கப் பட்டுள்ளன. இதனால் நகரில் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.
(6 July at 11:16)
"They are coming", "அவர்கள் வருகிறார்கள்" : போர்வெறி பிடித்த, நவ தாராளவாத கொடுங்கோலர்கள் வருகிறார்கள். |
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யவிருந்தவர்களுக்கு பொலிஸ் அனுமதி தர மறுத்தது. தண்ணீர் பீரங்கிகள் பொருத்திய வாகனங்களை கொண்டு வந்திருந்தது.
ஆர்ப்பாட்டக் காரர்கள் பொலிசாரை தாக்கியதாக சொல்லி தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தை கலைத்தது. தம்மை நோக்கி போத்தல்கள் வீசப் பட்டதாக, பொலிஸ் தனது தாக்குதலுக்கு நியாயம் கற்பித்தது. ஆனால் ஒரு குடிகாரன் மட்டுமே ஒரேயொரு போத்தலை வீசியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன.
ஹம்பூர்க் நகரில் பொலிஸ் வன்முறையை எதிர்த்து பெரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி நடந்தது. இதற்கிடையே, அயல் நாடுகளில் இருந்து ஜேர்மனிக்கு செல்ல முயன்ற அரசியல் ஆர்வலர்கள் தடுத்து வைக்கப் பட்டு, பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
(6 July at 23:00)
சக்திவாய்ந்த 20 உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள ஹம்பூர்க் நகரில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தெருக்களில் தடைகள் போடப் பட்டுள்ளன. வர்த்தக நிலையங்கள் உடைத்து சூறையாடப் படுகின்றன. பொலிசார் குறைந்தது நூறு பேரை கைது செய்துள்ளனர்.
ஹம்பூர்க் நகரின் சில பகுதிகளை பொலிஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. இராணுவம் வரவழைக்கப் பட்டுள்ளது.
அங்கு இரண்டாவது நாளாக கலவரம் நடக்கிறது. இடதுசாரிகளின் கோட்டைகளாக கருதப்படும் இடங்களில் பொலிஸ் வர விடாமல் தடுத்து வீதித் தடைகள் போடப் பட்டு வருகின்றன.
பல இடங்களில் BMW, பென்ஸ் போன்ற ஆடம்பரக் கார்கள் எரிக்கப் பட்டுள்ளன. நகரம் எங்கும் புகை மூட்டமாக காணப் படுகின்றது. ஜேர்மன் ஊடகங்கள் "உள்நாட்டுப் போர்" என்று வர்ணிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்து வருகின்றது.
(7 July at 22:59)
ஹம்பூர்க் நகரம் பற்றி எரியும் காட்சி. |
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்." - பழமொழி
இலங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் பேரழிவு தந்த போர்களை உருவாக்கி, இலட்சக் கணக்கான மக்களை அகதிகளாக அலையவிட்டவர்கள், G20 என்ற பெயரில் கூட்டம் போடுகிறார்கள். இன்னும் எத்தனை பேரைக் கொன்றொழிக்க திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை.
அதைக் கண்டு இரத்தம் கொதிக்காதவர்கள், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், "ஐயோ... காரை எரிக்கிறார்கள். கடைகளை உடைக்கிறார்கள்." என்று கூப்பாடு போடுகிறார்கள். தங்கள் நலனை மட்டும் பெரிதென எண்ணும் பச்சையான சுயநலவாதிகள்.
முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி காரணமாக, இலட்சக் கணக்கானோர் வறுமையில் வாழ்கிறார்கள். வேலையிழந்தவர்கள் எத்தனை இலட்சம்? அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் போது இப்படித் தான் இருக்கும். இது இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தார்மீகக் கோபம். தங்களை இந்த நிலைக்கு தள்ளிய முதலாளிகள், அரசுக்கு எதிரான கோபம். இது முதலாளித்துவத்தின் அவமானகரமான தோல்வி.
"தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்." - பழமொழி
"தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்." - பழமொழி
No comments:
Post a Comment