Wednesday, December 01, 2010

ஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்)


முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.

பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது.

கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.

இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக "தமிழினத் தலைவர்" சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள்.

லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது.

"தமிழர்களின் தலைமை" எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய "தமிழர்கள்" மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது.

நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, "வெள்ளாள கருத்தியல்" மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன.

ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப் பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

  1. சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
  2. முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
  3. நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
  4. அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.


முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், "முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப் படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், "யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. "முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல." வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள்.

 வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது.

இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை "வெள்ளாளக் கட்சிகளாக" கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

"ஆண்ட பரம்பரை நாம்" என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது.

"முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்." இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் "யூதர்களை நம்ப முடியாது." போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் "தொப்பி பிரட்டிகள்" போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப் பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர்.

மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந் தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

52 comments:

Mohamed Faaique said...

aarambame nallayirukku.... thodarungal....

என்.கே.அஷோக்பரன் said...

//தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல்//

மன்னிக்கவும். இந்த வரிகளோடு உங்கள் கட்டுரையைப் படிப்பதை நிறுத்திவிட்டேன். எல்லோருக்கும் தங்கள் கருத்தைச் சொல்ல உரிமையுண்டு ஆனால் பொது மேடையொன்றில் எழுதும் போது எமக்கு ஆழமாகத் தெரியாத கருத்துக்கள் பற்றி பேசக்கூடாது. இன்றைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருக்கிறதென்றால் அல்லது வடக்கு வரை ரயில் போகிறதென்றால் அல்லது வடக்கில் தொழிற்சாலைகள் இயங்கியதென்றால் அது இராமநாதன் போன்ற தலைவர்களினாலன்றி வேறில்லை. அவர்களுக்கு இருந்த தொலைநோக்கு அதற்குப் பிறகு வந்த எந்தத் தமிழ்த் தலைவனுக்கும் இருந்ததில்லை. கூத்தமைப்பு உட்பட.

என்.கே.அஷோக்பரன் said...

முஸ்லிம்கள் தமிழர்களா? அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில் தமிழருக்கு ஏதும் பிரச்சினையில்லை ஆனால் அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதற்குப் பதில் முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

மனசாட்சி said...

எனது பல சந்தேகங்கள் தீர்ந்தது தோழரே! மிக்க நன்றி !

ஆனால் "தெமழா" என்று கூப்பிட்ட மகிந்தைக்கு "தம்பிழா" என்று கூப்பிட எவ்வளவு காலம் வரும் ? அதுவும் நிகழும் கூடிய சீக்கிரத்தில்.

ராம ராஜ்யம் said...

இந்த தளத்தில் தங்களுடைய படைப்புகளை வெளியிடுங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தங்களுடைய படைப்புகள் சென்றடைய விரும்புகிறேன் நன்றி

புதியதாக ஆரம்பிக்க பட்ட தளம் http://tamil.forumta.net/forum.htm

Kalaiyarasan said...

என்.கே.அஷோக்பரன்,

//அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக "தமிழினத் தலைவர்" சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள். லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.//
மேற்குறிப்பிட்ட யாவும் உண்மையில் நடந்த சம்பவங்கள். அவற்றை நீங்கள் மறுக்கவில்லை. இராமநாதன் வடக்குக்கு ரயில், தொழிற்சாலை கொண்டுவந்ததற்கும், சிங்களவனுக்காக வாதாடி முஸ்லிம்களை பகைத்த செயலுக்கும் என்ன சம்பந்தம்?

Kalaiyarasan said...

//முஸ்லிம்கள் தமிழர்களா? அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில் தமிழருக்கு ஏதும் பிரச்சினையில்லை//

தமிழர்களை இலங்கையராக ஏற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார். தமிழர்களை சிங்களப் பேரினவாதம் எப்படிப் பார்க்கிறதோ, அதே மாதிரித் தான் தமிழ் பேரினவாதம் முஸ்லிம்களைப் பார்க்கிறது.

//ஆனால் அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதற்குப் பதில் முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள்.//

தமிழர்கள் தம்மை தனியான தேசிய இனம் என்று கருதுவதைப் போல, முஸ்லிம்களும் கருதுகிறார்கள். பல கசப்பான அனுபவங்களின் பின்னர் அவர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்கிறோம் என்பது நடைமுறைச் சாத்தியம் அல்ல. அதற்கான காலம் கடந்து விட்டது. முஸ்லிம்களை தனியான தேசிய இனமாக அங்கீகரிக்கிறீர்களா? "முஸ்லிம் ஈழம்" கோரிக்கை முன்வைக்கப் பட்டால் அதனை ஆதரிப்பீர்களா? இல்லை என்றால் என்ன காரணம்?

தற்போது மலையகத் தமிழரும் தம்மை தனியான தேசிய இனமாக கருதுகின்றனர். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் அவர்களுக்கு என்றும் தனியான நிர்வாகப் பிரிவு பற்றிய பேச்சு எழுமல்லவா? அத்தகைய "மலையக ஈழம்" கோரிக்கையை ஆதரிப்பீர்களா? இல்லை என்றால் என்ன காரணம்?

கடைசியாக ஒரு கேள்வி. "தமிழர்கள் என்றால் தமிழ் மொழி பேசும் மக்களைக் குறிக்கும்" என்ற அடிப்படையே தவறா? அப்படியானால் யார் தமிழர்கள்?

மனசாட்சி said...

என்.கே.அஷோக்பரன்,

//முஸ்லிம்கள் தமிழர்களா? அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில் தமிழருக்கு ஏதும் பிரச்சினையில்லை ஆனால் அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதற்குப் பதில் முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள்.//

நிச்சயமாக இல்லை சகோதரரே ! தங்களுடைய கருத்தை பொதுக்கருத்தாக கூற வேண்டாம். அவர்களுக்கும் தமிழர்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ள ஆசை தான். ஆனால் அரசியல்வாதியின் சுயநலத்தில் குடிமகன் பகடைக்காய் ஆக்கப்படுகின்றான்.. 3 மாதங்களுக்கு முன் தமிழ்வின்னில்(TAMILWIN) ஒரு கட்டுரை வெளியானது அதில் அவர்கள் சிறந்த முறையில் வரளாற்று ஆதாரங்களுடன் இப்பிரச்சினையை எடுத்துரைத்திருந்தனர்..

ஏன் இன்று கூட கருணா போன்றோர் மேடையில் எவ்வாறு (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள் + முஸ்லீம்களை) அழைக்கின்றர் தெரியுமா ? தமிழ் பேசும் மக்கள். பாவம் சூது, வாது தெரியாத பாமரன் அறிவானா அரசியல் வாதியின் நோக்கம்.. எம்முள் பிரிவனை இருந்தால் தானே அவனுக்கு வாழ்க்கை. இதில் முஸ்லீம் அரசியல் வாதிகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.

//முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள்.//

ஐந்தில் அவ்வாறு வளைந்ததினாலயே இன்னு ஐம்பதில் வளைய மறுக்கின்றது. அது அவர்களின் குற்றம் அல்ல.

kumar said...

#அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில் தமிழருக்கு ஏதும் பிரச்சினையில்லை.#
இது என்ன காமெடி? தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர் அல்லாமல் வேறெவர்? அவர்களை தமிழர் என்று அங்கீகரிப்பதற்கு சட்டபூர்வமான அமைப்பு ஏதேனும்
இருந்தால் சொல்லுங்களேன் ஐய்யா! அப்ளிகேசன் போட்டு காத்திருப்பார்களே?

என்.கே.அஷோக்பரன் said...

@basheer

இலங்கையில் சிங்களவர்கள், தமிழர் என்று இரண்டு இனங்கள் அல்ல சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என 3 பிரதான இனங்களுண்டு.

இலங்கையில் முஸ்லிம்கள் தங்களை தமிழர்களிலிருந்து பிரித்தே அடையாளப்படுத்தி வந்திருக்கிறார்கள். பிறப்புச்சான்றிதழிலும் அப்படித்தான்.

VIJAY said...

மிக்க அருமையான,நீண்ட ஆய்வின்(பொருளாதரம்,புவியியல் போன்ற தளங்களில்) அடிப்படையில் ஆக்கம் உள்ளது... வாழ்த்துக்கள்...

kumar said...

##இலங்கையில் சிங்களவர்கள், தமிழர் என்று இரண்டு இனங்கள் அல்ல சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என 3 பிரதான இனங்களுண்டு.##
சிங்களவர் = சிங்களம் பேசுபவர்கள் தமிழர்கள் = தமிழ் பேசுபவர்கள் அப்படியானால் அங்கே இரண்டு இனம் தானே ஐய்யா இருக்க வேண்டும் ? மூன்றாவதாக தமிழை தாய்மொழியாக கொண்ட முஸ்லீம்கள் ஒரு இனமாக உருவாக்கப்பட்டது எப்படி? தமிழர்களை பிரித்தாளும் நரித்தனம் என்று கொள்ளலாமா?

## பிறப்புச்சான்றிதழிலும் அப்படித்தான்.##
எப்படி? மொழி என்ற இடத்திற்கு நேராக முஸ்லீம் என்று நிரப்புகிறார்களா?

Denzil said...

இங்கே சவூதி அரேபியாவில் உடன் பணிபுரிந்த இலங்கை நண்பர் ஒருவரிடம் நீங்கள் தமிழா என்று கேட்டதற்கு, இல்லை நான் முஸ்லிம் என்ற பதில் கேட்டு அதிர்ந்து போனேன். அந்த பதிலுக்கான அர்த்தம் இப்பொழுது புரிகிறது.

மனசாட்சி said...

Denzil :

// இங்கே சவூதி அரேபியாவில் உடன் பணிபுரிந்த இலங்கை நண்பர் ஒருவரிடம் நீங்கள் தமிழா என்று கேட்டதற்கு, இல்லை நான் முஸ்லிம் என்ற பதில் கேட்டு அதிர்ந்து போனேன். அந்த பதிலுக்கான அர்த்தம் இப்பொழுது புரிகிறது. //

இது தமிழ்நாட்டவருக்கு வேண்டும் என்றால் புதிதாக இருக்கலாம் ஆனால் ஈழத்தவருக்கு இது ஒன்னும் புதிதல்ல. நீங்கள் ஒரு தமிழ்நாட்டவராயின் ஆச்சரியப்படுவதில் அர்த்தம் இருக்கின்றது ஆனால் ஈழத்தவராயின் அதில் உங்களுக்கு ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை !

ராஜரத்தினம் said...

//அப்படியானால் யார் தமிழர்கள்?//

அதற்கு தமிழ்நாட்டில் பல தகுதிகள் இருக்கிறது. தமிழ் பண்பாடு என்பது சைவ, முருக கடவுளின் பண்பாடு. எவன் ஒருவன் தமிழ் தய்மொழியுடன் இந்த பண்பாட்டை வெறுக்காதவனாக இருக்கிறானோ அவனே தமிழன். And it is obvious, I know you are not Tamil.

வலையுகம் said...

மனசாட்சி அவர்களுக்கு

//இது தமிழ்நாட்டவருக்கு வேண்டும் என்றால் புதிதாக இருக்கலாம் ஆனால் ஈழத்தவருக்கு இது ஒன்னும் புதிதல்ல. நீங்கள் ஒரு தமிழ்நாட்டவராயின் ஆச்சரியப்படுவதில் அர்த்தம் இருக்கின்றது ஆனால் ஈழத்தவராயின் அதில் உங்களுக்கு ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை !//
ஆம் உண்மைதான் நானும் சவூதியில் இதை அனுபவப்பட்டுயிருக்கிறேன்
இலங்கையை பொறுத்த வரை தமிழர் என்றால் இந்து என்று பொருள்
முசுலிம் என்றலே அவர் சொனிகாக்கா
அல்லாது சொனகர்
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் ஒற்றுமைக்கும் இலங்கை உள்ளவர்களின் ஒற்றுமைக்கும் வித்தியாசத்தை இலங்கை நண்பர்களிடம் நேரடியாக பேசிய போது
உணர்ந்தேன்

Kalaiyarasan said...

// And it is obvious, I know you are not Tamil.//

உங்களைப் பொறுத்த வரையில் தமிழ் இனவாதிகளும், இந்து மத அடிப்படைவாதிகளும் மட்டும் தான் தமிழர்கள் என்று நேரடியாகவே கூறலாம்.

ஹைதர் அலி said...

ராஜரத்தினம் R.S.S அம்பி
//அதற்கு தமிழ்நாட்டில் பல தகுதிகள் இருக்கிறது. தமிழ் பண்பாடு என்பது சைவ, முருக கடவுளின் பண்பாடு. எவன் ஒருவன் தமிழ் தய்மொழியுடன் இந்த பண்பாட்டை வெறுக்காதவனாக இருக்கிறானோ அவனே தமிழன். And it is obvious, I know you are not Tamil.//
இன்னும் சில தகுதிகள் விடுபட்டுவிட்டது
அய்யருக்கு அடிமையாக இருக்கனும்
பார்பனனுக்கு பல்லாக்கு துக்கனும்
சமஸ்கிருதம் சிறந்த மொழி என்றும்
தமிழ் மொழி நீச பாஷை என்று ஒத்துகிரனும்
தாழ்த்தப்பட்ட தமிழர்களால்லம் வேசி மவன்கள் என்பதை ஒத்துகிரனும்
இன்னும் நிறையா....

என்.கே.அஷோக்பரன் said...

@basheer

பிறப்புச்சான்றிதழில் எங்கே மொழி என்று ஒரு இடம் இருக்கிறது? இனம் என்பதற்கெதிரே முஸ்லிம் என்று தான் பதியப்படுகிறது, இது இன்று நேற்றல்ல, நாமறிந்ததிலிருந்து அப்படித்தான்.

ராஜரத்தினம் said...

//இன்னும் சில தகுதிகள் விடுபட்டுவிட்டது
அய்யருக்கு அடிமையாக இருக்கனும்
பார்பனனுக்கு பல்லாக்கு துக்கனும்
சமஸ்கிருதம் சிறந்த மொழி என்றும்
தமிழ் மொழி நீச பாஷை என்று ஒத்துகிரனும்
தாழ்த்தப்பட்ட தமிழர்களால்லம் வேசி மவன்கள் என்பதை ஒத்துகிரனும்
இன்னும் நிறையா//

அப்படீன்னு எந்த வேசி மகன் சொன்னான்?

ஹைதர் அலி said...

ராஜரத்தினம்
///அப்படீன்னு எந்த வேசி மகன் சொன்னான்?///

மனுஸ்மிர்தி சொன்னன்!

கீழ்ஜாதி தமிழர்களைப்பற்றி மனு இப்படிக் கூறுகின்றார்
“அடிமைத்தனம் சூத்திரர்களோடு பிறந்தது. அவர்களை யாரும் அதிலிருந்து விடுதலை செய்திட இயலாது”
(மனுஸ்மிர்தி அத்தியாயம் VIII சுலோகம்-413

“சிரீ பிரம்மா தீண்டத்தகாதவர்கள் அடிமைகளாகவே வாழ்ந்து அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றே நியமித்துள்ளார்
(மனு அத்தியாயம்-19,சுலோகம்-414)

இது போதுமா இன்னும் வேணுமா?

Issadeen Rilwan said...

வரலாறுகளுக்குள் நீந்தி தனக்கு சாதகமானதை எடுத்துக்கொண்டு போராட்டம் என்ற பெயரில் மாகாண மட்ட புதிய ஒரு போராட்டமொன்றை முறுக்கி விடும் எதிர்பார்ப்பு மாதிரி கட்டுரையாலரின் கால் ஒட்டம் கடந்து செல்கிறது.
1. மொழியை அடிப்படையாக்க் கொண்டு எதை இனங்காட்ட வருகிறீர்?
சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் யூதர்கள், கிறிஸ்துவர்கள் அறபு மொழியை சொந்த மொழியாக்க் கொண்டிருக்கிறார்கள்,
பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் பேசும் பிரதேச மொழியையே பேசுகிறார்கள்,
இவர்களை என்ன சொல்வீர்கள்? எப்படி அழைப்பீர்கள்?

2. இலங்கை வாழ், குறிப்பாக வட மாகாண வாழ் தமிழ் இந்துக்கள் உரிமைக்கான போராட்டம் என்று சிங்கள அரசாங்கத்திற்கெதிராக போராட்டத்தைத் தொடங்கும் போது வடக்கு வாழ் முஸ்லிம்கள் தான் முதலில் அகதியானார்கள், இந்த வரலாற்றை படித்திருக்கிறீர்களா?

3. சிங்கள, இந்து யுத்தம் முடிவுக்கு வந்த இந்த ஆண்டில் வடக்கிலும் முழு இலங்கையிலும் குண்டு வெடிப்புக்கும் உயிர் பழிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பலராலும் பேசப்பட்டு வருகிற நிலையில்,
வடக்கை தாயகம மண்ணாக கொண்ட புத்தள வாழ் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் குறித்து முயற்சிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் கட்டுரை எதனை எதிர்பார்த்தகாக அமைந்திருக்கிறது?
கட்டுரையில் நோக்கமாக எதை சொல்ல வருகிறீர்?
புதிதாக ஏன் தமிழ் முஸ்லிம் என்று பேச ஆரம்பித்திருகிறீர்?

4. தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என்கின்ற வேருபாடு இந்து மத்தில் அடிப்படை த்த்துவங்களில் ஒன்று என்று இந்துக்களே வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடும் நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதெல்லாம் அறிவாளிகளால் ஏற்றுகொள்ள முடியுமான ஒரு கதையா?

5. முஸ்லிம்களை பொருத்த வரை எந்த காலத்திலும் தாம் பேசும் மொழி மீது வெறி கொண்டதில்லை, கேட்பதையெல்லாம் படிப்பதையெல்லாம் பேசுவார்கள்,
மொழி மீது கொண்ட வெறி சில காலங்களில் சில சமூகத்தை வீழ்ச்சியிலும் மோதலிலும் மாட்டிவிட்டிருக்கிறது.
6. வரலாறுகளில் பல நல்லது கெட்டதுகள் காலத்திற்கு காலம் மாறி மாறி அரங்கேற்றப்படுகிறது, ஆனால் சம்பந்தமில்லாத, தேவையற்ற கதைகளை ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப் போட்டு தேவையற்ற பிரச்சினைகளை துவக்குவதும் அறிவாளிகளுக்கு அழகல்ல,
பத்திரிகை நீதித்துவத்திற்கும் அழகல்ல.

அதனால் காலத்திற்கும் சமூகத்திற்கும் தேவையானதை சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.

தொடர்ந்தும் சொல்வேன், கடவுள் உதவியுடன்.
நன்றி

Kalaiyarasan said...

Issadeen Rilwan,
இது கட்டுரை மீதான விமர்சனமாகத் தெரியவில்லை. ஏனெனில் கட்டுரையில் எடுத்தாளப்பட்ட மையக் கருவுக்கும் உங்களது விமர்சனத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இந்தியாவில் முஸ்லிம்களையும் சேர்த்து ஈழத்தமிழர் எனப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் ஈழத்திலோ முஸ்லிம்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று புரிந்து கொள்கின்றனர். இந்த முரண்பாடு எங்கே, எப்படி தோன்றியது என்பதை அலசுவதே கட்டுரையின் நோக்கம். அது கூட, "தமிழினவாதக்
கருத்துகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர் ஒரு முஸ்லிம்." என்று ஒரு அனானி பின்னூட்டமிட்டு குட்டையைக் குழப்பியதால் வந்த வினை. நீங்களாகவே முன் அனுமானம் எடுத்துக் கொண்டு கட்டுரையை வாசித்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

kumar said...

@ இஸ்ஸதீன் ரிள்வான்.
உங்கள் தவிப்பு புரிகிறது.ஆனால் நீங்கள் கட்டுரையாளரின் நோக்கத்தை மாசுபடுத்துகிறீர்கள்.தொடர்ந்து படித்தால் உண்மை புரியும்.
@ ராசரத்தினம்
/// தமிழ் பண்பாடு என்பது சைவ, முருக கடவுளின் பண்பாடு. எவன் ஒருவன் தமிழ் தய்மொழியுடன் இந்த பண்பாட்டை வெறுக்காதவனாக இருக்கிறானோ அவனே தமிழன்.///
வழக்கமாக ராமகோபாலன் வகையறா கூட்டம் இது போல் தமிழை தேவைப்படும்போது சேர்த்து கொள்ளும்.
ஆனால் நீச பாஷை என்று பூணூல் வகையறா சொல்லும்போது கண்டும் காணாதது போல் வேடிக்கை பார்க்கும்.
@ அசோக் பரன்.
/// இனம் என்பதற்கெதிரே முஸ்லிம் என்று தான் பதியப்படுகிறது ///
மன்னிக்கவும் எனக்கு இது புதிது.இங்கே இந்தியாவில் பிறப்பு சான்றிதழில் இனம் என்ற பகுதியில் இந்தியன்
என்றும்,மதம் என்ற பகுதியில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ பதிவது தான் வழக்கம்.

மனசாட்சி said...

என்.கே.அஷோக்பரன்

//பிறப்புச்சான்றிதழில் எங்கே மொழி என்று ஒரு இடம் இருக்கிறது? இனம் என்பதற்கெதிரே முஸ்லிம் என்று தான் பதியப்படுகிறது, இது இன்று நேற்றல்ல, நாமறிந்ததிலிருந்து அப்படித்தான்.//


சகோதரே, பிறப்புச்சான்றிதழில் 'இனம்' என்று உள்ளதா என தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் 'சாதி' என்று தான் உள்ளது. இந்துக்களில் பல்வேறு பட்ட சாதிகள் உள்ள நிலையில் அவரவர் சாதியை பதிகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் மத்தியில் அவர்கள் சாதி இல்லையென்பதால் அவர்கள் 'இலங்கை சோனகர்' என்று பதிகின்றனர்.

மேலுல்ல கட்டுரையை வாசித்த பின்னும் நீங்கள் இப்படி கூறுவது உங்கள் இனவெறியின் தன்மையை காட்டுவதாக நான் உணர்கின்றேன். இல்லையெனில், அதாரங்களுடன் உங்களின் கருத்துக்ளை முன் வைக்கவும்.

மனசாட்சி said...

Issadeen Rilwan

கட்டுரையில் நோக்கமாக எதை சொல்ல வருகிறீர்?
புதிதாக ஏன் தமிழ் முஸ்லிம் என்று பேச ஆரம்பித்திருகிறீர்?


சகோதரே, வெறும் தலைப்பையும், கீழுல்ல பின்னுட்டங்களையும் வாசித்து பின்னுட்டமிடுபது போல தோன்றுகின்றது. நன்றாக இன்னொரு முறை இந்த கட்டுரையை வாசித்தீர்களானால் இக்கட்டுரையின் நோக்கம் புரியும்.

RMD said...

இந்தியாவிற்கும்,இலங்கைக்கும் இடையே
மதங்களையும், இனங்களையும், வகைப்படுத்துவதில் வேறுபாடு உண்டு.

நாம் இந்திய நாட்டில் வாழும் அனைவரையும் இந்தியர் என்க்றோம்,பிறகு எந்த மாநினத்தில் வசிக்கிறோமா அதன் பேரால் அழைகப் படுகிறோம்.

நீங்கள் தமிழகத்தில் வசித்து வந்தால்(உங்கள் தாய்மொழி வேறாக இருந்தாலும்) தமிழர். உங்களுக்கு இந்ததிய அரசியலமைப்பு சட்டப்படி என்ன உரிமைகள் உண்டோ அனைத்தும் கிடைக்கும்.

மதம் என்பது தனிப்பட்ட விஷயம் அவ்வளவுதான்.இது மத சார்பற்றதாக நாடாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகளுல் ஒன்று. ஆனால் இலங்கை ஒரு மத சார்புள்ள நாடு.

இலங்கையின் அரசியல் சாசனம் இந்த சுட்டியில் காணலாம்.மற்ற மத்த்டினருக்கு சில விதிகளின் படியெ உரிமைகள் வழங்கப் படுகிறது.

மற்ற மத்த்தினர் ஒன்றாக இணைவது அதன் நலன்களுக்கு எதிராகவே சிங்கள அரசியல்வாதிகளால் பர்ர்க்கப்படுகின்றது. மற்ற இனத்தவர் மத‌த்தினாலும், சாதியினாலும் பிரிந்து கிடந்தால்தான் கஷ்டப் பட்டார்கள்,கஷ்டப் படுகிறார்கள்.

யார் தமிழன்,இல்லை என்பதை வரையறுப்பதை விட்டுவிட்டு கஷ்டப்படும் உறவுகளுக்கு ஏதாவது செய்யுங்கள்.
http://www.priu.gov.lk/Cons/1978Constitution/1978ConstitutionWithoutAmendments.pdf

Kalaiyarasan said...

RMS Danaraj,

//யார் தமிழன்,இல்லை என்பதை வரையறுப்பதை விட்டுவிட்டு கஷ்டப்படும் உறவுகளுக்கு ஏதாவது செய்யுங்கள். //

யார் தமிழன் என்று வரையறை செய்ய வெளிக்கிட்டது சில தமிழ் இனவாதிகள் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

//உங்களுக்கு இந்ததிய அரசியலமைப்பு சட்டப்படி என்ன உரிமைகள் உண்டோ அனைத்தும் கிடைக்கும்.
மதம் என்பது தனிப்பட்ட விஷயம் அவ்வளவுதான்.இது மத சார்பற்றதாக நாடாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகளுல் ஒன்று.//

இந்தியாவில் அனைவருக்கும் எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது போலவும், அங்கே மதப்பிரச்சினை, இனப்பிரச்சினை இல்லை என்பது போல காட்டும் அறியாமை அதிர்ச்சி அளிக்கிறது.

//மற்ற மத்த்தினர் ஒன்றாக இணைவது அதன் நலன்களுக்கு எதிராகவே சிங்கள அரசியல்வாதிகளால் பர்ர்க்கப்படுகின்றது. மற்ற இனத்தவர் மத‌த்தினாலும், சாதியினாலும் பிரிந்து கிடந்தால்தான் கஷ்டப் பட்டார்கள்,கஷ்டப் படுகிறார்கள்.//

மற்ற மதத்தவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்? சிங்களவர்கள் எல்லோரும் பௌத்தர்களா? சிங்கள கிறிஸ்தவர்களை எந்த இனத்தில் சேர்ப்பீர்கள்? சிங்கள இனத்தில் சாதிப் பிரிவினை இல்லையா?

Kalaiyarasan said...

//பிறப்புச்சான்றிதழில் 'இனம்' என்று உள்ளதா என தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் 'சாதி' என்று தான் உள்ளது.//

மனசாட்சி, நீங்கள் கூறியது மிகச் சரியானது.
தமிழ் இனவாதிகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார்கள். பிறப்புச் சான்றிதழில் சாதி என்று தமிழில், சிங்களத்தில் கேட்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் முன்பு சாதிப் பெயரை பதிந்து வந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் சாதியை குறிப்பிடுவது பண்பாடல்ல என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. சாதிக்கு பதிலாக இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கை சோனகர்,இந்திய சோனகர், கிறிஸ்தவர், மலே, பறங்கியர்
என்று பதியும் முறை வந்தது.

ஹைதர் அலி said...

//உங்கள் தவிப்பு புரிகிறது.ஆனால் நீங்கள் கட்டுரையாளரின் நோக்கத்தை மாசுபடுத்துகிறீர்கள்.தொடர்ந்து படித்தால் உண்மை புரியும்.//

கட்டுரையாளர் சரியான கோனத்தில் தன் எழுதியுள்ளார்
கட்டுரையாளரின் நோக்கம் தூய்மையானது என்பதில் மற்றுக் கருத்துயில்லை

இஸ்ஸதீன் ரிள்வான்.அவர்களுக்கு சகோதரர் என்ற முறையில் என்னுடைய அன்பான வேண்டுகோள்
கட்டுரையை இன்னும் ஒருமுறைப் படித்துவிட்டு காய்தல் உவப்பு இல்லாமல் கருத்து தேரிவிக்கும் படி
கேட்டுக் கொள்கிறேன்

என்.கே.அஷோக்பரன் said...

@மனச்சாட்சி

எனது பிறப்புச் சான்றிதழில்

இனம் என்பதற்கெதிரே இலங்கைத் தமிழர் என்றிருக்கிறது.

என்ன இது? இதுதான் நடக்கிறது என்று சொன்னா இனவாதியா?

என்.கே.அஷோக்பரன் said...

இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் வேறுபட்ட இனங்களாக அடையாளப்படுத்தப்படுவதற்கு இன்னுமொரு உதாரணம் இலங்கையின் தேசியக்கொடி -

செம்மஞ்சள் நிறம் - தமிழர்களையும்
பச்சை நிறம் - முஸ்லிம்களையும்
சிவப்பு - ஏனைய சிறுபான்மை இனங்களையும்
சிங்கம் - சிங்களவர்களையும்

குறிக்கிறது என்றுதானே வரையறுக்கப்படுகிறது?

நான் இங்கு சொல்ல வந்த கருத்து இதுதான். தமிழர்களுக்கு முஸ்லிம்ளோடான உறவில் நிறைய விரிசல்கள் அதிலும் குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதிலிருந்து அதிகமாக ஏற்பட்டது. முஸ்லிம்கள் இலங்கையில் தம்மை தனி இனமாக அடையாளப்படுத்தி வருகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல சிங்களம் பேசும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். இலங்கையில் வாழும் பல மலாயர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் இனம் எனும் போது முஸ்லிம்களாகவன்றி மலாயர்களாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆகவே ஈழத்தமிழர்கள் என்பதிலிருந்து முஸ்லிம்கள் வலிந்து பிரிக்கப்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. தமிழ்-முஸ்லிம் உறவுகள் ஒருவேளை பலமாக இருந்திருந்தால் இன்றைய இலங்கையரின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.

“சேர்.பொன்.இராமநாதனை - தொலை நோக்கற்ற தலைவர்” என்ற இடத்தில் தான் நான் உங்கள் கருத்தோடு முரண்பட்டேன்.

ராஜரத்தினம் said...

//தாழ்த்தப்பட்ட தமிழர்களால்லம் வேசி மவன்கள் என்பதை ஒத்துகிரனும்
இன்னும் நிறையா....//

எங்க ஊரல ரொம்ப அறுத்தா ஹைதர் அலி காலம் போல பேசறீயேம் பார்கள். அது சரிதான். மனு அவன் யார். அவன் என்ன சொன்னா எனக்கு என்ன? அவன் சொல்வதில் தவறு இருந்தால் அதை ஏற்றுகொள்ளவேண்டும் என்று எவனும் சொல்லமுடியாது. இந்து மதத்தில் நீ யார் சொன்னாலும் கேக்க தேவலை. எவனும் எங்களுக்கு ஏஜண்ட் கிடையாது. எங்கள் கடவுளை நாங்களே வணங்கிகொள்வோம். இந்தியாவில ஒருத்தன் அப்படிதான் அந்த சொலோகம், இந்த சுலோகம்னு சொல்லி திக்குவான் எங்கள் மதத்திற்கு எதிராக கக்குவான். நாங்கள் கடவுளை வணங்காமல் இருந்தாலும் இந்துதான். அவர்களை கடவுளை(அல்லா)கும்பிடலைனா அவன் மனிதனா (முஸ்லீம்)கூட இருக்க முடியாது சொல்ற கூட்டம் குறை கூற எந்த அடிப்படை தகுதியும் கிடையாது. இன்னும் நிறைய பேசலாம் அலி அவர்களே!

Kalaiyarasan said...

//இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் வேறுபட்ட இனங்களாக அடையாளப்படுத்தப்படுவதற்கு இன்னுமொரு உதாரணம் இலங்கையின் தேசியக்கொடி - //
ஆரம்பத்தில் தேசியக்கொடியில் சிங்கம் மட்டுமே இருந்தது. பின்னர் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான், தமிழர்களைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறமும், முஸ்லிம்களை குறிக்கும் பச்சை நிறமும் சேர்க்கப்பட்டன. செம்மஞ்சள் நிறம் இந்துக்களின் நிறமாக கருதப் படுகிறது. பச்சை நிறம் இஸ்லாமிய மதத்தின் நிறம். ஆகவே அந்த நிறங்கள் இனங்களை தான் குறிக்கின்றதா, அல்லது மதங்களை குறிக்கின்றதா?

//நான் இங்கு சொல்ல வந்த கருத்து இதுதான். தமிழர்களுக்கு முஸ்லிம்ளோடான உறவில் நிறைய விரிசல்கள் அதிலும் குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதிலிருந்து அதிகமாக ஏற்பட்டது.//
அதற்கு முன்னர் தமிழர்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீதான இனத்துவேசம் இருக்கவில்லையா? முஸ்லிம்களை தொப்பி பிரட்டி என்று அழைக்கும் வழக்கம் எப்போதிருந்து ஆரம்பமானது?

//முஸ்லிம்கள் இலங்கையில் தம்மை தனி இனமாக அடையாளப்படுத்தி வருகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல சிங்களம் பேசும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.//
இலங்கையில் சிங்களம் பேசும் தமிழர்களும் இருக்கிறார்களே?

//இலங்கையில் வாழும் பல மலாயர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் இனம் எனும் போது முஸ்லிம்களாகவன்றி மலாயர்களாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.//
ஆமாம், அவர்கள் மலேசியா அல்லது இந்தோனேசியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள். அவர்களுக்கென்று தனியான மொழியும் இருக்கிறது. இலங்கையில் வாழும் மலையாளிகள் இந்துக்களாக இருந்தாலும் மலையாளிகளாக அடையாள படுத்திக் கொள்கிறார்கள்.

//ஆகவே ஈழத்தமிழர்கள் என்பதிலிருந்து முஸ்லிம்கள் வலிந்து பிரிக்கப்பட்டார்கள் என்று சொல்லமுடியாது.//
இரண்டு இனங்களுக்கு இடையிலான இனத்துவேசம், முரண்பாடுகள், குரோதங்கள், கலவரங்கள் அந்த நிலைமைக்கு காரணம். அதே காரணங்களால் தான் தமிழர்கள் இலங்கையர் என்ற அடையாளத்தை துறந்து தமிழீழம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

//தமிழ்-முஸ்லிம் உறவுகள் ஒருவேளை பலமாக இருந்திருந்தால் இன்றைய இலங்கையரின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.//
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது. தனக்கு கீழே இன்னொரு சிறுபான்மை இனத்தை அடக்க கிளம்பிய தமிழ் இனவாதமும் அதற்கு தடையாக இருந்தது.

//“சேர்.பொன்.இராமநாதனை - தொலை நோக்கற்ற தலைவர்” என்ற இடத்தில் தான் நான் உங்கள் கருத்தோடு முரண்பட்டேன்.//
இல்லை. நீங்கள் எங்கேயும் முரண்படவில்லை. "இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவாக வாதாடி முஸ்லிம்களை பகைத்தது தொலைநோக்கற்ற செயல்" என்பதை நீங்கள் மறுக்கவில்லை. இராமநாதன் இன்று வாழ்ந்திருந்தால், தமிழினத் துரோகி ஆகியிருப்பார்.

Issadeen Rilwan said...

இருப்பதையே வாசித்தேன்,
இருந்ததையே விமர்சித்தேன்,
கடந்த முப்பது ஆண்டுகளாக சிங்களவர்கள் தீவிரவாதிகள் என்று எழுதி, பேசி, போராடி வந்தவர்கள், ஏன் யுத்த முடிவுக்கு பின் முஸ்லிம்கள் மீது வார்த்தை வீச்சுக்களை வீசுகிறீர்கள்?
இதுதான் எனது சிறிய கேள்வி,
கட்டுரையின் உள் நோக்கத்தை கேட்டபோது, சொல்லக்கூடாது என்பதற்காக கேள்வியே பிழை என்றால் என்ன சொல்ல முடியும் அல்லது என்ன தான் செய்ய முடியும்?
நானும் ஒரு தமிழன் தான்.
நன்றி

அபூ முப்ளிஹா said...

முஸ்லிம்கள் தமிழும் சிங்களமும் பேசுவதானால் உங்களுக்கு என்ன பிரச்னை? முஸ்லிம்கள் எப்பொழுதும் தனி இனமாக காட்டியதில்லை, முஸ்லிம்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் மேன்பாட்டு விளங்குவதாலும் முச்ளிமிகளின் மீது பொறாமை படுவதில் அர்த்தமில்லை முஸ்லிம்கள் எப்பொழுதும் தங்களை தனி இனமாக காட்டியதில்லை நீங்கள்தான் தனி இனமென்று கூரிவருகிரீர்கள், இனத்தால் இஸ்லாமியர்கள் மொழியால் தமிழர்கள் தேசியத்தால் நாங்கள் இலங்கையர்கள்.முஸ்லிம்களை தனிமைபடுத்த... காத்தான்குடி போன்ற காட்டுமிராண்டி முஸ்லிம் படுகொலைகளை நடத்திவிட்டு முஸ்லிம்களை தனி இனமாக சித்தரிப்பது பாசிச ஈழத்தின் அயோகியதனமாகும்.

TAJ mubara. said...

@ rajerathinam::::
//அதற்கு தமிழ்நாட்டில் பல தகுதிகள் இருக்கிறது. தமிழ் பண்பாடு என்பது சைவ, முருக கடவுளின் பண்பாடு. எவன் ஒருவன் தமிழ் தய்மொழியுடன் இந்த பண்பாட்டை வெறுக்காதவனாக இருக்கிறானோ அவனே தமிழன். And it is obvious, I know you are not Tamil.//
1.intha vilakkam yenakku pothavillai so innum yennenna thaguthigal irukkunu solla mudiyuma???
2.murugara mattum than tamilan vananganuma???

எஸ் சக்திவேல் said...

முஸ்லிம் மக்களுக்கு தமிழரால் இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூறுகின்றீர்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், முஸ்லிம்களால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கூறுங்கள் என்று சொன்னால் 'பேசாப் பொருளைப்" பேசிவிட்டாய் என்பீர்கள் போல. Why are you not talking about the big elephant standing in the room?

Kalaiyarasan said...

//முஸ்லிம் மக்களுக்கு தமிழரால் இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூறுகின்றீர்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், முஸ்லிம்களால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கூறுங்கள் என்று சொன்னால் 'பேசாப் பொருளைப்" பேசிவிட்டாய் என்பீர்கள் போல.//

சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினால்,
ஏன் புலிப் பயங்கரவாதம் குறித்தும் பேசவில்லை என்று கேட்கும் நடுநிலையாளர்கள் இவர்கள்.

எஸ் சக்திவேல் said...

எட்டடுக்கு மாளிகையில் இருந்து பதில் எழுதுகிறீர்கள் போல இருக்கிறது. நான் இதே கட்டுரையில் எழுதி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எப்போதாவது அதைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா?

Kalaiyarasan said...

//எட்டடுக்கு மாளிகையில் இருந்து பதில் எழுதுகிறீர்கள் போல இருக்கிறது.//

எட்டடுக்கு மாளிகையில் இருந்து கொண்டு கேள்வி கேட்பவருக்கு அங்கிருந்து தானே பதில் கூற முடியும்?

//எப்போதாவது அதைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா?//

தமிழர்களால் சிங்களவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பற்றி சிங்கள இனவாதிகளும், முஸ்லிம்களால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பற்றி தமிழ் இனவாதிகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ் சக்திவேல் said...

அதே "logic' இன் படி, தமிழரால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி முஸ்லிம் இனவாதிகளும் எழுதிக் கொண்டிருப்பார்கள். இதில் நீங்கள் எங்கே வருகிறீர்கள்?

Kalaiyarasan said...

//அதே "logic' இன் படி, தமிழரால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி முஸ்லிம் இனவாதிகளும் எழுதிக் கொண்டிருப்பார்கள். இதில் நீங்கள் எங்கே வருகிறீர்கள்?//

மன்னிக்கவும்,சக்திவேல். தமிழர்கள் எல்லோரும் இனவாதிகள் அல்ல.

Issadeen Rilwan said...

எழுதியதற்கு பதில் கேட்கிறார்கள் பல வாசகர்கள், தயவு செய்து அதற்கு பதில் சொல்லுங்கள்.

Kalaiyarasan said...

//எழுதியதற்கு பதில் கேட்கிறார்கள் பல வாசகர்கள், தயவு செய்து அதற்கு பதில் சொல்லுங்கள். //


Issadeen Rilwan, நான் முன்னரே பதில் கூறி விட்டேன். கட்டுரைக்கு சம்பந்தமில்லாத, அல்லது கட்டுரை பற்றிய உங்களின் தவறான புரிதலில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் பதில் கூறத் தேவை இல்லை. நீங்கள் எனது தளத்திற்கு புதியவர் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் உங்களது மனத்திருப்திக்காக சம்பந்தமில்லாத கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்.
//1. மொழியை அடிப்படையாக்க் கொண்டு எதை இனங்காட்ட வருகிறீர்?
சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் யூதர்கள், கிறிஸ்துவர்கள் அறபு மொழியை சொந்த மொழியாக்க் கொண்டிருக்கிறார்கள்,
பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் பேசும் பிரதேச மொழியையே பேசுகிறார்கள்,
இவர்களை என்ன சொல்வீர்கள்? எப்படி அழைப்பீர்கள்?//
நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. இந்தியாவிலும் அப்படித்தான். தமிழகத்தில் தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் தமிழர்கள் தான். இலங்கையில் தான் தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இன வேறுபாடு காணப்படுகின்றது. இதனை பெரும்பாலான தமிழகத் தமிழர்கள் அறியவுமில்லை, அல்லது அது பற்றிய தெளிவின்றி உள்ளனர். இலங்கையில் யதார்த்தமாக உள்ள தமிழ், முஸ்லிம் இன முரண்பாடுகளை அலசுவது மட்டுமே கட்டுரையின் நோக்கம். மாறாக நான் அப்படி ஒன்றை புதிதாக கண்டுபிடித்தேன் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல.

//2. இலங்கை வாழ், குறிப்பாக வட மாகாண வாழ் தமிழ் இந்துக்கள் உரிமைக்கான போராட்டம் என்று சிங்கள அரசாங்கத்திற்கெதிராக போராட்டத்தைத் தொடங்கும் போது வடக்கு வாழ் முஸ்லிம்கள் தான் முதலில் அகதியானார்கள், இந்த வரலாற்றை படித்திருக்கிறீர்களா?//
நண்பரே, கட்டுரையை ஆறுதலாக வாசித்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கூறும் காலகட்டத்திற்கு முந்திய காலத்திய பிரச்சனைகளை மட்டுமே கட்டுரை பேசுகின்றது. எல்லாவற்றையும் ஒரே கட்டுரையில் எழுதி விட முடியாது. தொடராக வரும் போது நீங்கள் கூறும் விடயங்களும் இடம்பெறும். பொறுமையாக இருக்கவும்.

//3. சிங்கள, இந்து யுத்தம் முடிவுக்கு வந்த இந்த ஆண்டில் வடக்கிலும் முழு இலங்கையிலும் குண்டு வெடிப்புக்கும் உயிர் பழிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பலராலும் பேசப்பட்டு வருகிற நிலையில்,
வடக்கை தாயகம மண்ணாக கொண்ட புத்தள வாழ் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் குறித்து முயற்சிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் கட்டுரை எதனை எதிர்பார்த்தகாக அமைந்திருக்கிறது?//

மேலே கூறப்பட்ட பதில்களை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும். நீங்கள் கூறும் தகவல்கள் எதுவும் இலங்கைக்கு வெளியே போவதில்லை. உதாரணத்திற்கு: புத்தளத்தில் அகதிகளாக வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றிய செய்திகள்.

//கட்டுரையில் நோக்கமாக எதை சொல்ல வருகிறீர்?
புதிதாக ஏன் தமிழ் முஸ்லிம் என்று பேச ஆரம்பித்திருகிறீர்?//

இதற்கும் முன்னர் ஒரு தடவை பதில் கூறி விட்டேன். எனது தளத்திற்கு வந்த பின்னூட்டங்கள் சில தமிழ், முஸ்லிம் என்று பிரித்து பேசின. அதாவது தமிழினவாதிகள் பரப்புரை செய்யும் தவறான கருத்துகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவர் ஒரு முஸ்லிம் என்று தெரிவித்தார்கள். இது பல தமிழகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணியது. இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் இன முரண்பாடு பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. எந்தவொரு தமிழ் ஊடகமும் அது பற்றி பேசுவதில்லை.

//4. தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என்கின்ற வேருபாடு இந்து மத்தில் அடிப்படை த்த்துவங்களில் ஒன்று என்று இந்துக்களே வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடும் நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதெல்லாம் அறிவாளிகளால் ஏற்றுகொள்ள முடியுமான ஒரு கதையா?//

நண்பரே, இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அவ்வாறு தாழ்த்தப்பட்ட இந்து சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறவில்லை. சாதிய சமூகமான யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மட்டுமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கும் மாறியதை யாழ்ப்பாண சரித்திரம் கூறுகின்றது. இந்தியாவிலும் கூட்டாக மதம் மாறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கடந்த நூறு வருடங்களாக தான் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களும் இந்துக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். அதற்கு முன்னர் உயர்சாதியினர் மட்டுமே இந்துக்களாக கருதப்பட்டனர்.

Issadeen Rilwan said...

நேரத்தை வீணடிக்காமல் சின்ன ரெண்டு செய்திகள்;
1. நோக்கங்களை வாசகர்கள் கண்டுபிடித்து விமார்சனப்படுத்தும் போது அவைகளை வாசகரின் தப்பான புரிதல் என்று கூறி இலகுவில் தொப்பி சுலற்றுவது எழுத்தாழருக்குரிய அழகல்ல.
2. வரலாறுகளில் புதிய பதிவுகளை கொண்டுவர முனைவதும்,
இந்து முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வேற்றுமை எண்ணத்தை விதைக்கவும் எடுக்கும் முயற்சியாக அமையக்கூடாது என்பதே எமது வேண்டு கோள்.

Nakkeran said...

அதென்ன "இராமநாதன் தமிழினத் தலைவர்" என்பதை ஏன் அடைப்புக்குள் போட்டுள்ளீர்கள்? அவர் காலத்தில் அவர்தான் தமிழினத்தின் தலைவர். யாரைப் பார்த்தாலும் இராமநாதன் சிங்களத் தலைவர்களை விடுவிக்க வாதாடியதை முஸ்லிம் மக்களுக்கு எதிராக இராமநாதன் இருந்தார் என்கிறார்கள். இது தவறு. இராமநாதன் ஒரு வழக்குரைஞர். அந்த காரணத்துக்காக அவர் சிங்களத் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். இதில் முஸ்லிம்கள் கோவிப்பதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? வரலாற்றில் முஸ்லிங்கள் சிங்களவர்களை பகைத்தது கிடையாது. ஒத்துத்தான் வாழ்கிறார்கள். தமிழனைத்தான் வெறுக்கிறார்கள். தமிழ்பேசும் முஸ்லிம்களின் அடையாளம் மொழியல்ல. மதம்தான் அவர்களது அடையாளம். விதி விலக்கு மலாய் இஸ்லாமியர். இராமநாதன் முஸ்லிம்களை தமிழ்ப்பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் என்று கூறியதற்கு கடுமையான எதிர்ப்பு முஸ்லிம்களிடம் இருந்து கிளம்பியது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள் முஸ்லிம்கள். போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள். நூற்றுக் கணக்கான தமிழர்களைக் கொன்றவர்கள் முஸ்லிம்கள். தமிழர்களை அவர்களது வீடுவாசல்களில் இருந்து துரத்தியவர்கள் முஸ்லிம்கள். நூறு விழுக்காடு தமிழாக இருந்த
ஏறாவூர்
ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜுன்மாதத்திலும் இடம் பெற்றன.
இதுதவிர முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர்.
மீனோடைக்கட்டு
மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம். ஆனால், தற்போது அது ஒருமுஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
திராய்க்கேணி
மீனோடைக்கட்டைப்போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களைஎல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன. இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது.
கரவாகு போன்ற தமிழ்க் கிராமங்கள் போர்க்காலத்தில் நூறு விழுக்காடு முஸ்லிம் கிராமங்களாக மாறிவிட்டன.

Kalaiyarasan said...

@Veluppillai Thangavelu
//அதென்ன "இராமநாதன் தமிழினத் தலைவர்" என்பதை ஏன் அடைப்புக்குள் போட்டுள்ளீர்கள்?//

இராமநாதன் எந்தக் காலத்திலும் தன்னை அப்படிக் கூறிக் கொள்ளவில்லை. அவரது காலத்தில் தமிழினம் என்ற ஒன்று உருவாகி இருக்கவில்லை. தமிழ் பேசும் சாதிகள் மட்டுமே இருந்தன. இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் தம்மை உயர்சாதி வெள்ளாளர்களின் பிரதிநிதிகள் என்று தான் காட்டிக் கொண்டார்கள்.

//யாரைப் பார்த்தாலும் இராமநாதன் சிங்களத் தலைவர்களை விடுவிக்க வாதாடியதை முஸ்லிம் மக்களுக்கு எதிராக இராமநாதன் இருந்தார் என்கிறார்கள். இது தவறு. இராமநாதன் ஒரு வழக்குரைஞர். அந்த காரணத்துக்காக அவர் சிங்களத் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். இதில் முஸ்லிம்கள் கோவிப்பதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது?//

அது தவறு தான். அவர் வழக்குரைஞர் மட்டுமல்ல அரசியல்வாதியாகவும் இருந்தார். இதே இராமநாதன் 77, 83 இனக்கலவரங்களில், சிங்களவர்களுக்கு ஆதரவாக வழக்காடி இருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? அவர் ஒரு வழக்குரைஞர் என்பதால் அவர் செய்தது சரி என்று வாதாடுவீர்களா? நீங்கள் சொல்வது போன்று, இராமநாதன் "தமிழினத் தலைவர்" அல்ல. அவர் ஒரு தமிழினத் துரோகி. நீங்கள் இன்னொரு இடத்தில் இஸ்லாமியத் தமிழர்கள் என்று கூறும் தமிழன மக்களுக்கு எதிராக வழக்காடிய இனத் துரோகி.

Kalaiyarasan said...

//வரலாற்றில் முஸ்லிங்கள் சிங்களவர்களை பகைத்தது கிடையாது. ஒத்துத்தான் வாழ்கிறார்கள். தமிழனைத்தான் வெறுக்கிறார்கள்.//

இது ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம். வரலாற்றில் ஆரம்பத்தில் சிங்கள, முஸ்லிம் இனப்பகை தான் இருந்தது. அதனால் தான் இலங்கையின் முதலாவது இனக் கலவரம் நடந்தது. அதை எப்படி உங்களால் மூடி மறைக்க முடிகிறது? முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாது.

//தமிழ்பேசும் முஸ்லிம்களின் அடையாளம் மொழியல்ல. மதம்தான் அவர்களது அடையாளம். விதி விலக்கு மலாய் இஸ்லாமியர்.//

ஒரு தேசிய இனத்திற்கு மொழி மட்டுமே அடையாளம் அல்ல. அமெரிக்கர்கள் ஒரு தனியான தேசிய இனமா? அல்லது ஆங்கிலம் பேசுவதால் ஆங்கிலத் தேசிய இனமா? உங்களது கருதுகோளின் படி, நாங்கள் அமெரிக்கர்களை தனியான தேசிய இனமாக வரையறுக்க முடியாதல்லவா? இந்தியாவில் நரேந்திர மோடி, பிஜேபி, ஆர்எஸ்எஸ் ஆகியன, பல்வேறு மொழிகளைப் பேசினாலும் ஒரே மதத்தை பின்பற்றும் இந்துக்களை தனியான இனம் என்று கூறுகின்றனர். அது எப்படி சாத்தியமாகும்? உங்களது கொள்கையின் படி அது தவறல்லவா?

//இராமநாதன் முஸ்லிம்களை தமிழ்ப்பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் என்று கூறியதற்கு கடுமையான எதிர்ப்பு முஸ்லிம்களிடம் இருந்து கிளம்பியது.//

இராமநாதனை விடுங்கள். உங்களது நிலைப்பாடு என்ன? உங்களைப் பொருத்தவரையில் முஸ்லிம்கள் தமிழர்களா? நீங்களே அவர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், முஸ்லிம்களை குறை சொல்லி என்ன பிரயோசனம்? இராமநாதனும் உங்களை மாதிரி ஒரு சாதி அபிமானியாக, இந்து மத அடிப்படைவாதியாக இருந்திருக்கலாம் அல்லவா? அவரது சுயரூபம் தெட்டத் தெளிவாக தெரிந்த காரணத்தினால் (முஸ்லிம்களுக்கு எதிராக வாதாடிய "வழக்குரைஞரை" எவனாவது நம்புவானா?) முஸ்லிம்கள் அவரை நிராகரித்து இருக்கலாம் அல்லவா? உண்மையில் ஒரு நேர்மையான அரசியல் தலைவர் அப்படிக் கூறியிருந்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.

//கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள் முஸ்லிம்கள். போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள். நூற்றுக் கணக்கான தமிழர்களைக் கொன்றவர்கள் முஸ்லிம்கள். தமிழர்களை அவர்களது வீடுவாசல்களில் இருந்து துரத்தியவர்கள் முஸ்லிம்கள். //

இதெல்லாம் ஒரு பக்கச் சார்பான இனவாதப் பிரச்சாரம். கிழக்கு மாகாணத்தில் நடந்த போரில் மூவின மக்களும் படுகொலை செய்யப் பட்டனர். ஆரம்பத்தில் தமிழ் விடுதலை இயக்கங்களில் முஸ்லிம்களும் போராளிகளாக இருந்தார்கள். அந்த ஒற்றுமையை குலைப்பதற்கு அரசு சதி செய்தது. முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கியது. அவர்கள் தமிழ்ப் பொது மக்களை கொலை செய்தது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதற்கு பதிலடி கொடுப்பதாக சொல்லிக் கொண்டு, தமிழ் இயக்கங்கள் முஸ்லிம் மக்களை கொலை செய்தன. இதனால், சிறிலங்கா அரசின் சூழ்ச்சி நிறைவேறியது. தமிழ் மக்களை கொலை செய்த முஸ்லிம் ஊர்காவல் படையினரை கண்டுபிடித்து மரண தண்டனை கொடுத்திருந்தால் தமிழ் இயக்கங்கள் நற்பெயரை சம்பாதித்திருக்கும். அதற்கு மாறாக, முஸ்லிம் பொது மக்களை கொலை செய்தது முட்டாள்தனம். அதனால் அரசுக்குத் தான் இலாபம்.

உங்களது கூற்றில் ஒரு பெரிய முரண்பாடு உள்ளது. உங்களைப் பொறுத்த வரையில், முஸ்லிம்கள் தனியான இனம் அல்ல. அவர்கள் "இஸ்லாமியத் தமிழர்கள்". அதாவது ஒரே தமிழ் இனம். அப்படியானால், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களே தமிழர்களை கொன்றார்கள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?

அதாவது ஒற்றுமை இல்லாத ஒரே தமிழினத்திற்குள் நடந்த படுகொலைகள். இதிலே நீங்கள் எந்தத் தமிழரை ஆதரிக்கிறீர்கள்? முஸ்லிம்களுக்கு மதம் முக்கியமாகப் படுகின்றது என்றால், நீங்களும் அப்படியான ஒருவராகத் தானே காட்டிக் கொள்கிறீர்கள்? நீங்கள் ஒரு இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ இருந்து கொண்டு, இஸ்லாமியத் தமிழர் என்று சொன்னதற்காக முஸ்லிம்கள் கோபம் கொள்கிறார்கள் என்று குறைப் படுவது ஏனோ? முதலில் நீங்கள் ஒரு தமிழனாக இருக்கப் பாருங்கள்.

தமிழர்களின் மதம் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே said...

உண்மை சகோ

Unknown said...

மொழி வேறு மதம் வேறு .... முஸ்லிம்கள் மதத்தை முன்னிறுத்தும் போது மொழியை வைத்து விமர்சனம் செய்வது முறையல்ல

Prithiviraj kulasinghan said...

//சகோதரே, பிறப்புச்சான்றிதழில் 'இனம்' என்று உள்ளதா என தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் 'சாதி' என்று தான் உள்ளது. இந்துக்களில் பல்வேறு பட்ட சாதிகள் உள்ள நிலையில் அவரவர் சாதியை பதிகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் மத்தியில் அவர்கள் சாதி இல்லையென்பதால் அவர்கள் 'இலங்கை சோனகர்' என்று பதிகின்றனர்.// எனது பிறப்புச் சான்றிதழில் தமிழில் சாதி என்றும் ஆங்கிலத்தில் race (இனம்) என்றும் இருக்கிறது.

//உங்களைப் பொறுத்த வரையில், முஸ்லிம்கள் தனியான இனம் அல்ல. அவர்கள் "இஸ்லாமியத் தமிழர்கள்". அதாவது ஒரே தமிழ் இனம்.//
முஸ்லீம் மக்கள் தனியான இனமா அல்லது தமிழருள் ஒரு பிரிவினரா என்பதை வெறுமனே வாய்ப்பாடுகளை வைத்துக் கொண்டு தீர்மானிக்க முடியாது. (அப்படி வாய்ப்பாடு வேண்டுமானால் லெனின், ஸ்டாலின் போன்றவர்களிடம் போக வேண்டும். எனினும் தேசிய இனங்கள் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் ஐரோப்பிய பிரதேசத்தை மையமாக வைத்து அவர்கள் வகுத்த வாய்ப்பாட்டை நாம் இன்று ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை)

இங்கு முக்கியமான கேள்வி முஸ்லீம் மக்கள் தங்களைத் தனியான இனமென்று கருதுகின்றார்களா? இது போலவே மலையக மக்கள் தங்களை தனியோரு இனமென்று கருதுகின்றார்களா? ஏனைய தமிழ் பேசும் மக்கள் தங்களை இவர்களுடன் இணைந்தவர்களான நினைக்கின்றார்களா? என்ற கேள்விகளையும் நாம் கேட்க வேண்டும். ஏனனில் இனம் கலாச்சாரம் என்பன உணர்வு சார்ந்தவை. அதனை வாய்ப்பாடுகள் மூலம் நிறுவ முடியாது.

முஸ்லீம்கள் தனியான இனம் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். (இனம் என்பது மாறாத ஒன்றல்ல. காலத்துக்குக் காலம் புதிய இனங்கள் தோன்றியிருக்கின்றன; மறைந்துமிருக்கின்றன) அதனால் என்ன? அவர்கள் எங்கள் எதிரிகள் என்று மாறி விடுவார்களா? அப்படியல்ல. அவர்கள் இன்னமும் எனக்கு சகோதரர்கள் தான்.
அவர்கள் தனியொரு இனமாயிருப்பது அவர்களின் கலாச்சாரத்தை வளர்க்க உதவும், அல்லது பாதுகாப்பானது என்று அவர்கள் நினைத்தால் அவர்கள் அப்படியே இருக்கட்டும். இணைவதன் மூலம் வளரலாம் என நம்பினால் அப்படியே நடக்கட்டும்.
அது போலவே எனது கலாச்சாரமும் பாதுகாப்பும் பங்கமில்லாமல் இருப்பதாக.