(மொஸ்கோ, 7 நவம்பர் 2010 )
மொஸ்கோவில் அக்டோபர் புரட்சியை நினைவு கூர்ந்து ஊர்வலம் சென்றவர்களை போலிஸ் கைது செய்தது. ஜோர்ஜியாவில் சோவியத் சின்னங்களையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் தடை செய்யும் சட்டம் அமுலுக்கு வருகின்றது.
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில், அக்டோபர் புரட்சியின் தினத்தை நினைவு கூர்ந்து இடதுசாரி கம்யூனிச கட்சிகள் ஊர்வலம் சென்றனர். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி(CPRF) ஒழுங்கு செய்த ஊர்வலத்தில், தீவிர இடதுசாரிகளான போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தகவலின் படி 50000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் ஊடகங்கள் 3000 என கணக்கிடுகின்றன. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, ஆளும் கட்சியை அனுசரித்து நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியானது, ரஷ்ய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள். அவர்கள் ஊர்வலத்தில் கொண்டு வந்த பதாகைகளும், எழுப்பிய கோஷங்களும் கைகலப்புக்கு காரணம் என போலிஸ் தெரிவிக்கின்றது. "போலிஸ் ஆட்சி ஒழிக!" என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை அப்புறப் படுத்துமாறு போலிஸ் அறிவுறுத்தியது. ஆனால் போலிஸ் உத்தரவுக்கு அடிபணிய மறுத்த போல்ஷெவிக் கட்சியினர், "போலிஸ் ஆட்சி ஒழிக!" என்று கோஷம் எழுப்பிய வண்ணம் ஊர்வலத்தை தொடர்ந்தார்கள். இதனால் ஆர்ப்பாட்டக்காரருக்கும் போலீசாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால், போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 5 பேரும், இடதுசாரி முன்னனி தலைவரான Sergey Udaltsov கைது செய்யப்பட்டனர். மொஸ்கோ நகரின் Tverskaya வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
Russian oppositionists ruin their own actions
இதற்கிடையே, முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில், சோவியத் சின்னங்களை தடை செய்யும் சட்ட மசோதா அமுலுக்கு வருகின்றது. ஜோர்ஜிய நாடாளுமன்றம் முதலாவது வாக்கெடுப்பில் அந்த சட்டத்தை அங்கீகரித்துள்ளது. அதன் பிரகாரம், முன்னாள் சோவியத் யூனியனில் பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் யாவும் தடை செய்யப்படும். சோவியத் மரபு என்ற போர்வையின் கீழ் ஜோர்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்படும் அபாயம் தோன்றியுள்ளது. கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் பாஸிச சட்டத்திற்கு, "சுதந்திர வரைபு" என்று முரண்நகையாக பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் Giya Tortladze : "ஜோர்ஜியா பயங்கரவாதத்தையும், கம்யூனிச மரபையும் ஜோர்ஜியா எதிர்த்து போராடும்..." எனத் தெரிவித்தார். இது குறித்த வீடியோ கீழே:

No comments:
Post a Comment