Friday, May 21, 2010

அமெரிக்க வறுமையில் செழிக்கும் இந்திய 'கால் சென்டர்'

இந்தியாவில் இருந்து கொண்டே, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்காக தொலைபேசியூடாக வேலை செய்யும் கால் சென்டர்கள் புற்றீசல் போல முளைத்துக் கிளம்பியுள்ளன. வெளிநாட்டு தொலைத்தொடர்பை ஒரு நொடிக்குள் தரத்துடன் வழங்கும் நவீன தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இத்தனை காலமும் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருந்த கால் சென்டர்கள் இந்தியாவுக்கு நகர்த்தப்பட்டன. இந்தியாவில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய தொழிலாளர் படை இருப்பது அதற்கு அனுகூலமாக இருந்தது.

கால் சென்டர் வேலைக்கு ஒரு அமெரிக்கனுக்கு கொடுக்கும் ஊதியத்தை விட மூன்றில் ஒரு பங்கு இந்தியனுக்கு செலவாகின்றது. இதனால் அமெரிக்க முதலாளிகளும் பெருமளவு அமெரிக்கர்களின் வேலைகளை பறித்து இந்தியர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பணியாளர்கள் இந்தியாவில் இருந்து தொடர்பு கொள்ளும் இந்தியர்கள் என்பதை மறைப்பதற்காக அவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலத்தில் பேச பயிற்சி கொடுத்தார்கள். கால் சென்டர் துறையால் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் புதிய நடுத்தர வர்க்கம் உருவானது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படும் கால் சென்டர்கள், அங்கே அனைவராலும் இரு கரம் நீட்டி வரவேற்கப்பட்டன. ஆனால் இந்தியா "ஒளிரக்" காரணமாக இருக்கும் கால் சென்டர்களுக்கு இருண்ட பக்கம் ஒன்றுண்டு. அமெரிக்காவில் பெருகி வரும் வறுமையால், பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள நாட்டில் ஒரு பகுதி மக்கள் நன்மை அடைகிறார்கள்!

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி. இழுத்து மூடப்படும் தொழிலகங்கள். உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக பணியில் இருந்து நீக்கப்படும் தொழிலாளர்கள். குடும்பத் தலைவன் வேலை இழந்தால், அவன் சம்பாத்தியத்தில் தங்கியிருக்கும் முழுக் குடும்பமும் வறுமையில் வாடுகின்றது. வீடு வாங்கிய கடன், மின்சாரம், தண்ணீர் பில்கள் போன்றவற்றை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். மாதக் கணக்காக கட்டாமல் விடுவதால் வட்டியுடன் ஏறிச் செல்லும் கடன்களை திருப்பி செலுத்த அவர்களிடம் பணம் இல்லை. ஆனாலும் இது அமெரிக்கா. தலைக்கு மேலே கடன் இருந்தாலும், அவற்றை திருப்பிச் செலுத்தும் படி வாழ்க்கை முழுவதும் வற்புறுத்திக் கொண்டிருப்பார்கள். அமெரிக்க கடன்காரர்களை விரட்டி விரட்டி கடன் அறவிடும் வேலையை, இந்திய கால் சென்டர் ஊழியர்கள் செய்கின்றனர். கிராமத்தில் இப்படியான தொழில் செய்பவர்களை "கந்து வட்டிக்காரனின் அடியாட்கள்" என அழைப்பார்கள். இன்றைய நாகரீக வளர்ச்சி காரணமாக "கால் சென்டர்" ஆக பரிணமித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "Call India" ஆவணப்படம் எதிரும் புதிருமான இரண்டு வேறு உலகங்களை ஒரு சேர காட்சிப் படுத்துகின்றது. அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களை சந்தித்து அவர்களின் மனக்குறைகளை பதிவு செய்துள்ளது. மறுபக்கம் கால் சென்டர்களின் வரவால் இந்தியாவில் எற்பட்ட செல்வச் செழிப்பை காட்டுகின்றது. "அமெரிக்க ஏழைகளை அமெரிக்க அரசு புறக்கணிக்கின்றது. அமெரிக்கா உலகம் முழுவதும் அள்ளிக் கொடுப்பதால், பிற நாட்டவர்கள் அமெரிக்கர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று கருதுகிறார்கள்." ஏற்றத்தாழ்வை தனது குறுகிய அரசியல் அறிவுடன் புரிந்து கொள்ள முனையும் ஏழை வயோதிபரின் மனக்குமுறல்.

காசுக்கு வழியின்றி அல்லல் படும் நேரம் பார்த்து அழைக்கும் இந்திய கால் சென்டர் ஊழியர்கள் மீது சீறும் அமெரிக்க எழைகள். அவர்களது வசவுகளையும், சில நேரம் இனவாத தூற்றல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கால் சென்டர் பணியாளர்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த படியால் தான், நிர்வாகம் அவர்களுக்கு ஆங்கிலப் புனை பெயர்களை சூட்டுகின்றது. அமெரிக்க ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொடுக்கின்றது. கால் சென்டர் குறித்த மாயைகள் அகல இந்த ஆவணப்படம் உதவும். நெதர்லாந்து தொலைக்காட்சி தயாரிப்பு என்ற போதிலும், உரையாடல்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் அமைந்துள்ளன.

17 comments:

அகல்விளக்கு said...

//கிராமத்தில் இப்படியான தொழில் செய்பவர்களை "கந்து வட்டிக்காரனின் அடியாட்கள்" என அழைப்பார்கள். இன்றைய நாகரீக வளர்ச்சி காரணமாக "கால் சென்டர்" ஆக பரிணமித்துள்ளது.//

மிகச்சரியான புரிதல்...

எல் கே said...

As a person who worked in the call center. i am strongly oppose this article.
//இந்தியர்கள் என்பதை மறைப்பதற்காக அவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலத்தில் பேச பயிற்சி கொடுத்தார்கள்.//

they dont want american english. they want only neutral english without any particular accent or slang. thats it.

//இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த படியால் தான், நிர்வாகம் அவர்களுக்கு ஆங்கிலப் புனை பெயர்களை சூட்டுகின்றது.///
its not in all call center. its specific to the client. i have worked in both kind of clients who want american name and other one who let u choose ur name (indian/american)

Please dont come to conclusion just based on a documentary film.

and also call center have multiple verticles.if u need more info u can mail me @ karthik.lv@gmail.com

அன்பரசு said...

I need this documentary video. send it to anbuit@gmail.com

Kalaiyarasan said...

Anbarasu,
You can order a DVD (29 euro) by contacting the publishers.

Postal address:
VPRO Publieksservice
C/O Bart Baas
Postbus 11
1200 JC Hilversum

e-mail address:
b.baas@vpro.nl

Telephone: 0031356712272

Kalaiyarasan said...

நன்றி அகல்விளக்கு & LK.

LK, எல்லா கால் சென்டர்களையும் பொதுமைப் படுத்த முடியாது என்பது சரி தான். எல்லாத் துறைகளிலும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் இங்கே எடுத்தாளப்பட்ட விஷயம் அமெரிக்க வாடிக்கையாளரைக் கொண்டுள்ள கால் சென்டர்கள் பற்றியது. அவற்றை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இடம் மாற்றியதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் வேண்டாத விளைவுகளையும் அலசுகின்றது. இரண்டு பக்க கதைகளும் கேட்கும் பொழுது தான் உண்மை புலப்படும்.

Jai said...

இந்தியாவுக்கு இதனால் என்ன இழப்பு? அல்லது கால் சென்டர் ஊழியர்கள் ஏன் இதை பற்றி கவலைபட வேண்டும்?அவர்களுக்கு தேவை வேலை. சம்பளம்...அவ்வளவுதான். அமெரிக்காவை பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

Kalaiyarasan said...

//இந்தியாவுக்கு இதனால் என்ன இழப்பு? அல்லது கால் சென்டர் ஊழியர்கள் ஏன் இதை பற்றி கவலைபட வேண்டும்?அவர்களுக்கு தேவை வேலை. சம்பளம்...அவ்வளவுதான். அமெரிக்காவை பற்றி அவர்களுக்கு என்ன கவலை?//

சிறந்த கொள்கை, வாழ்க.
இப்படிப் பட்ட மனம் படைத்தவர்கள் வாழ்வில் கஷ்டம் வரும் பொழுது பிறர் அனுதாபத்தை எதிர்பார்க்கக் கூடாது.

கால்கரி சிவா said...

//இந்தியாவுக்கு இதனால் என்ன இழப்பு? அல்லது கால் சென்டர் ஊழியர்கள் ஏன் இதை பற்றி கவலைபட வேண்டும்?அவர்களுக்கு தேவை வேலை. சம்பளம்...அவ்வளவுதான். அமெரிக்காவை பற்றி அவர்களுக்கு என்ன கவலை? //

That's correct. Americans give a damn to others. Their bosses do not care about their employees. They just want more more and more money. American businessmen worry about their country men. We worry about ours.

Jai said...

//சிறந்த கொள்கை, வாழ்க.
இப்படிப் பட்ட மனம் படைத்தவர்கள் வாழ்வில் கஷ்டம் வரும் பொழுது பிறர் அனுதாபத்தை எதிர்பார்க்கக் கூடாது.//

அமெரிக்க தொழிலாளிகள் நலம் கருதி இந்திய தொழிலாளிகள் கால் சென்டர் வேலை வேண்டாம் என புறக்கணித்தால் கால்சென்டர் ஊழியர்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டை காம்ரேடுகள் போடுவார்கள் என நம்பலாமா?

வரட்டு வேதாந்தம் சோறு போடாது.நாங்கள் பிழைக்கும் வழியை தான் பார்ப்போம். எங்க வேலையை கெடுத்துகிட்டு அமெரிக்கர்களுக்கு உதவணுமாம். ஏன்னா அவர்கள் பாவமாம்.எங்க வீட்டுல மட்டும் பாலாறும், தேனாறும் ஓடுது பாருங்க...

shiva said...

These indians make this problem all over the world.If you look into the middle east the kerala people are ready to work for any salary.So they spoil the job market there.same thing they did about 150 yrs ago by working as collies for their english masters all over the world for a very poor salary.Even today anyone can see these type of cheap labour used in those countries.

Kalaiyarasan said...

//வரட்டு வேதாந்தம் சோறு போடாது.நாங்கள் பிழைக்கும் வழியை தான் பார்ப்போம். எங்க வேலையை கெடுத்துகிட்டு அமெரிக்கர்களுக்கு உதவணுமாம். ஏன்னா அவர்கள் பாவமாம்.எங்க வீட்டுல மட்டும் பாலாறும், தேனாறும் ஓடுது பாருங்க...//

ஆப்கானிஸ்தானில் ஹெரோயின் போதைவஸ்துக்கான செடிகளை பயிரிடும் விவசாயிகளும் இதே நியாயத்தை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் திமிரான கருத்துகளின் மூலம் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நன்றி.

Jai said...

நேர்மையாக உழைத்து பிழைக்கும் வாய்ப்பு இருந்தால் ஆப்கன் விவசாயிகள் ஏன் ஹெராயின் விற்கபோகிறார்கள்?

மக்களுக்கு நேர்மையாக உழைத்து வருமானம் ஈட்டும் வழிகளை அதிகரிப்பதே ஒரு அரசின் கடமை. இல்லாவிட்டால் ஆப்கனின் நிலைதான் இந்தியாவுக்கும்.

Anonymous said...

அய்யா அனுதாப திலகமே, நெதர்லாந்தில் வேலையில்லா திண்டாட்டம் 2010-ல் 25% உயர்ந்து 5% ஆகி விட்டதாம். அதாவது நீர் நெதர்லாந்தில் உட்கார்ந்து கொண்டு இந்தியர்கள் செய்வதைதான் செய்கிறீர்கள்.

Anonymous said...

அமெரிக்க பெப்சியும் கோக்கும் உள்ளூர் டோரிநோவையும், காளிமார்க்கையும் கபளீகரம் செய்தபோது அமெரிக்கர்கள் கலங்கிக் கண்ணீர் வடித்தார்களா அல்லது நீர் தான் நெதர்லாந்தில் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருந்தீர்களா? மன்சன்ட்டோக்கள் அப்பாவி விவசாயிகள் வயிற்றில் அரளிவிதை விதைத்து தற்கொலைக்குத் தள்ளிய போது தியானத்தில் இருந்தீர்களா அல்லது போதையில் இருந்தீர்களா? இந்தியப் பண்பாட்டின் ஆணி வேரையே அமெரிக்க அக்குவேறு ஆணி வேறாய்ப் பிடுங்கி எறிந்து கொண்டிருக்கும் போது பூப்பறித்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன? அது சரி தமிழ் மனத்தில் படிப்பவநெல்லாம் கேனையன் என்று நினைத்துக் கொண்டால் பரங்கிக்காயை வெட்டினால் கூட பலாச்சுளை தான் கொட்டும். கொஞ்சம் பார்த்து எழுதுங்கள்.

shanuk2305 said...

mr KALAI

oruvan anupavikka aduthavan kastapaduvan.america imuuthalali profit perave india udhavukiradhu ithil america tholilali marmugamaga paadhikka paduvathoo kalathin kattayam

R Suresh said...

நல்ல பதிவு !

இந்தியா வைப்பற்றியும் இதுபோல அவப்போது எழுதுங்கள்...

Hai said...

கலை,
நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான்.ஆனால் எழுத எவ்வளவோ இருக்கையில் அவர்களுக்காக யோசிக்க வேண்டியதில்லை.

என்னதான் அமெரிக்கன் பாதிக்கப்பட்டாலும் நம்மால் அவர்களுக்கு ஆதரவாக கருத்துச் சொல்ல முடிவதில்லை.

அமெரிக்கனை முதலாளி வர்க்கம் என்றும் தொழிலாளி வர்க்கம் என்றும் பிரித்து அவர்களில் ஒரு கூட்டத்துக்கு நாம் கவலைப்படவும் இரக்கப்படவும் வேண்டியதில்லை.

சூப்பர் போலீசின் ஆழிவு பற்பல நாடுகளுக்கு விடிவு என்பது நீர் அறியாததா.

9/11 தாக்குதல் கூட அவர்கள் வினை விதைத்ததால் அறுத்த வினையே என்றே மனம் சமாதானம் சொல்லி தூரப்போகிறது.

//அமெரிக்க பெப்சியும் கோக்கும் உள்ளூர் டோரிநோவையும், காளிமார்க்கையும் கபளீகரம் செய்தபோது அமெரிக்கர்கள் கலங்கிக் கண்ணீர் வடித்தார்களா அல்லது நீர் தான் நெதர்லாந்தில் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருந்தீர்களா? மன்சன்ட்டோக்கள் அப்பாவி விவசாயிகள் வயிற்றில் அரளிவிதை விதைத்து தற்கொலைக்குத் தள்ளிய போது தியானத்தில் இருந்தீர்களா அல்லது போதையில் இருந்தீர்களா? இந்தியப் பண்பாட்டின் ஆணி வேரையே அமெரிக்க அக்குவேறு ஆணி வேறாய்ப் பிடுங்கி எறிந்து கொண்டிருக்கும் போது பூப்பறித்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன?//

அனானியின் ஆதங்கம் சரியே. ஆனால் ஏன் நண்பரே பெயரை மறைத்துக் கொண்டீர்.