நியூ யோர்க், செல்வம் கொழிக்கும் அமெரிக்காவின் ஒப்பற்ற தொழிற்துறை நகரம். அங்கே தற்போது அன்றாட சாப்பாடிற்கே அல்லலுறும் ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உணவிடும் கஞ்சித் தொட்டிகளும் பெருகி வருகின்றன. முன்னர் எப்போதும் இல்லாதவாறு, தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் கஞ்சித் தொட்டிகளின் முன்னால் காத்திருக்குப்பவர்களின் வரிசை முடிவின்றி தொடர்கின்றது. ஒதுங்க ஒரு கூரையற்றவர்கள் தான் ஏழைகள் என்ற நியதி மாறி வருகின்றது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பலரிடம் சாப்பாட்டிற்கு தேவையான பணம் கையிருப்பில் இல்லை. அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே வருகையில், வழங்கப்படும் சமூகநலன் கொடுப்பனவுகள் குறைந்து கொண்டே செல்கின்றது. வாடகை, மின்சாரம், நீர் போன்ற செலவுகளுக்கு செலவிட்ட பின்னர் உணவிற்கு போதாத சொற்ப தொகை.
No comments:
Post a Comment