கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்த "Tharmalingam Kalaiyarasan" என்ற பெயரிலான எனது முகநூல் கணக்கு, தற்போது நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.
இது மட்டுமே பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ள காரணம்: //We've reviewed your account and determined that it hasn't followed the Facebook Statement of Rights and Responsibilities. The violation of these terms has resulted in the permanent loss of your account. One of our main priorities is the comfort and safety of the people who use Facebook, and we don't allow credible threats to harm others, support for violent organizations or exceedingly graphic content on Facebook. To learn more about Facebook's policies, please review the Facebook Community Standards://
காஷ்மீர் பிரச்சினை பற்றிய பதிவொன்றின் பின்னரே, இந்திய அரசின் அழுத்தம் காரணமாக முடக்கப் பட்டுள்ளது எனத் தெரிகின்றது. (பார்க்க:முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு) ஏனெனில், அதே பதிவுகளை இட்ட வேறு சிலரின் முகநூல் கணக்குகளும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப் பட்டுள்ளன. இதனால் பலர் முகநூலில் வேறு பெயரில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனது புதிய முகநூல் கணக்கு :Kalai Marx (https://www.facebook.com/kalaimarx).
எனது புதிய முகநூல் கணக்கு :Kalai Marx (https://www.facebook.com/kalaimarx).
இந்த விபரத்தை உங்களது நட்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி.
அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் கருத்துச் சுதந்திர மறுப்பில் ஈடுபடுவதும், அடக்குமுறை அரசுக்களுடன் ஒத்துழைப்பதும் இதுவே முதல் தடவை அல்ல. இவ்வளவு காலமும் வணிக ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலைவை செய்து வந்த அரசுகள், இணையத்தில் கிடைக்கும் சுதந்திரம் குறித்து கவலையடைந்துள்ளன. ஒரு சாமானியனும் தனது கருத்துக்களை உலகிற்கு எடுத்துரைப்பது ஆபத்தான விடயமாக கருதுகின்றன. ஜனநாயகத்தின் பெயல் இயங்கும் அரசுகள், உண்மையில் ஜனநாயக மறுப்பாளர்கள் என்பது நிரூபணமாகின்றது.
ஆகவே, முகநூல் தணிக்கையில் இருந்து தப்புவதற்கு நாம் வேறு வழிகளை நாட வேண்டியுள்ளது. அதாவது "மாற்று முகநூல்" ஒன்றின் தேவை எழுந்துள்ளது. எனக்குத் தெரிந்த வரையில் தற்போதைக்கு இரண்டு தெரிவுகளை அறிமுகப் படுத்த முடியும். நீங்களும் அதில் இணைந்து கொள்வதுடன், உங்கள் நண்பர்களையும் அதில் சேருமாறு ஊக்குவிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
“Minds.com” என்ற மாற்று சமுக வலைத்தளம் Bill Ottman மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்டது. அவர் அமெரிக்காவைச் சார்ந்த “சுதந்திர மென்பொருள்”, “சுதந்திர இணையம்” ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர். (https://en.wikipedia.org/wiki/Minds).
அதில் வெளியிடப் படும் எமது தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன. அரசுக்களோ, அல்லது வணிக நிறுவனங்களோ அவற்றை பார்வையிட முடியாது. இதற்கு மாறாக, பேஸ்புக் நிறுவனம், எமது தகவல்களை அரசுகளும், வணிக நிறுவனங்களும் பார்வையிட தாராளமாக அனுமதித்து வருகின்றது. அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கிறது. அந்த அவலத்தில் இருந்து பாவனையாளர்களை மீட்பதே, மைன்ட்ஸ் உருவாக்கியவர்களின் நோக்கமாக உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பத்திரிகையில் வந்த இந்தக் கட்டுரையை வாசிக்கவும்:
அதில் வெளியிடப் படும் எமது தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன. அரசுக்களோ, அல்லது வணிக நிறுவனங்களோ அவற்றை பார்வையிட முடியாது. இதற்கு மாறாக, பேஸ்புக் நிறுவனம், எமது தகவல்களை அரசுகளும், வணிக நிறுவனங்களும் பார்வையிட தாராளமாக அனுமதித்து வருகின்றது. அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கிறது. அந்த அவலத்தில் இருந்து பாவனையாளர்களை மீட்பதே, மைன்ட்ஸ் உருவாக்கியவர்களின் நோக்கமாக உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பத்திரிகையில் வந்த இந்தக் கட்டுரையை வாசிக்கவும்:
Super-private social network launched to take on Facebook with support of Anonymous
http://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/super-private-social-network-launched-to-take-on-facebook-with-support-of-anonymous-10325307.html
http://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/super-private-social-network-launched-to-take-on-facebook-with-support-of-anonymous-10325307.html
VK (https://new.vk.com/)
பேஸ்புக் மாதிரி ரஷ்ய மொழி பேசும் மக்களிடையே பிரபலமான சமூக வலைத்தளம். ரஷ்யாவை தளமாக கொண்டு இயங்குவதால், இது "ரஷ்ய பேஸ்புக்" என்றும் அழைக்கப் படுகின்றது. ஆங்கிலம் மற்றும் பிற உலக மொழிகளிலும் பாவிக்க முடிகின்றது. தமிழ் மட்டும் இல்லை. தமிழ் பேசும் பாவனையாளர்கள் மிக மிகக் குறைவு. எதிர்காலத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்போம்.
மேற்குறிப்பிட்ட இரண்டு மாற்று சமூகவலைத்தளங்களிலும் ஏற்கனவே எனது கணக்குகள் உள்ளன. ஆகவே நீங்களும் என்னோடு நண்பர்களாக இணைந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
Minds இல் எனது கணக்கு:https://www.minds.com/Kalaiyarasan
VK இல் எனது கணக்கு:https://vk.com/kalaiyarasan
எனது பழைய முகநூல் கணக்கு முடக்கப் பட்டதை விமர்சித்து சில நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
நண்பர்களின் ஆதரவுப் பதிவுகள்:
Nandha Kumaran: நெதர்லாந்தை சேர்ந்த தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு பேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேஸ்புக் இந்த செயலை செய்துள்ளதாக தெரிகிறது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் குறிப்பாக பேஸ்புக்கின் கைவரிசையாக பார்க்க வேண்டியுள்ளது. சாதி, மதவெறி ஊட்டும் பிரச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பேஸ்புக், சமூக நலன் சார்ந்த பதிவுகளை முடக்குவதன் பொருள், அதன் வர்க்க பாசத்தை காட்டுவதல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ? (July 13)
Chinthan Ep: செய்தி: தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தைப் பொருத்தவரையில், நாம்தான் அவர்களது "விற்பனைப் பொருள்". அதிகமான பயனர்கள் அவர்களுக்குத் தேவை. அதனால்தான் யாராவது ஒருவரின் கருத்து பிடிக்காமல் ஏராளமானோர் எதிர்த்து பேஸ்புக்கிற்கு ரிப்போர்ட் செய்தால், உடனடியாக அந்த நபரின் அக்கௌன்டை முடக்குகிறது. ஏனெனில் பேஸ்புக்கிற்கு எண்ணிக்கைதானே முக்கியம். காசா? கருத்துசுதந்திரமா? என்றால், காசுதான் என்பார்கள் கார்ப்பரேட்டுகள்.
பின்குறிப்பு: தேசப்பற்றாளர்களே(?!?) காஷ்மீர் குறித்து என்ன சொன்னாலும் இப்படி டென்ஷன் ஆனா எப்படி? (July 13)
Joshua Isaac Azad: Facebook has permanently disabled the accounts of Marxist writer Kalaiyarasan and brother Ilyas Muhammed for their stand against Indian state terrorism on Kashmiris. Let's stand against Facebook censorship. Their new accounts Kalai Marx; Ilyas.
#StandWithKashmir #KashmirUprising #MartyrBurhanWani
Facebook has disabled the accounts of comrades Tharmalingam Kalaiyarasan, Subha D and blocked brother Ilyas Muhammed Raffiudeen for their stand against war crimes committed by the Indian state on Kashmiris. They've been exposing the Brahmindia's lies about Kashmir in the Tamil space. Recently they shared my post on martyr Burhan Wani for which I was blocked earlier, now they are. #StandWithKashmir #TamilsWithKashmiris
Martyr #BurhanWani
முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு
No comments:
Post a Comment