
கலையகத்தின் வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,
எனது வலைப்பூவில் புதிதாக கேள்வி-பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். பின்னூட்டங்களில் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டுமே எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம், "கேள்வி பதில்" பகுதிக்கு இருக்காது. கலையகத்தின் பார்வைப் புலத்திற்கு உட்பட்ட துறை சார்ந்த கேள்விகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை கேள்விகளையும் கேட்கலாம். இந்தப் பதிவிற்கான பின்னூட்டம் வழியாகவோ, அல்லது மின்னஞ்சல் (kalaiy26@gmail.com) மூலமாகவோ கேள்விகளை அனுப்பி வைக்கவும். மறக்காமல் தங்கள் பெயரைக் குறிப்பிடவும்.பொதுவாக சர்வதேச அரசியல் சம்பந்தமாக எந்த விதமான கேள்விகளையும் எழுப்பலாம். அதே நேரம் மதம், மொழி, கலாச்சாரம், சமூகம், வரலாறு, உலக நாடுகள் தொடர்பான கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன. வானத்தின் கீழே இருக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் விவாதிக்கலாம். ஆனால் நீங்கள் கேட்கப்போகும் கேள்விக்கான பதில், ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளில் காணக் கிடைக்கவில்லை என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ளவும்.
கலையக வாசகர் வட்டம் ஒரு குறிப்பிட்ட தராதரத்தைக் கொண்டிருப்பதால், சம்பந்தப்படாத, அர்த்தமற்ற, தேவையற்ற கேள்விகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன். உங்கள் கேள்விகள் பிற வாசகர்களுக்கும் பயன்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பிற்குறிப்பு: தனிப்பட்ட காரணங்களால், அடுத்து வரும் சில நாட்களுக்கு, அல்லது வாரக்கணக்காக புதிய பதிவிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகவே இந்த "அமைதியான" காலத்தை பயன்படுத்தி தங்கள் கேள்விகளை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.