கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்ள மக்களை இனப்படுகொலை செய்து, அவர்களது சொத்துக்களை சூறையாடிய காட்சியை சித்தரிக்கும் ஓவியம். இன்றைய கடாரம் மலேசியாவின் தனி மாகாணமாக உள்ளது. அங்கு வாழும் மக்கள் இன்றைக்கும் சோழப் படைகள் செய்த இனப்படுகொலைகளை நினைவுகூர்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், அன்றைய ராஜராஜசோழன், இன்றைய ராஜபக்சே மாதிரியான ஒருவன். |
---|
மதிகெட்ட தமிழினவாதிகள் மறைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை!
ராஜராஜ சோழனின் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பாண்டிய நாட்டையும், ஈழ நாட்டையும் ஆக்கிரமித்த சோழப் படைகள் அங்கு வாழ்ந்த மக்களை பிராமணர்கள், தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் பாராமல் இனப்படுகொலை செய்துள்ளனர். சோழப் படைகள் சென்றவிடமெல்லாம் மக்களை இனப்படுகொலை செய்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் வழமையானவை.
அயல்நாடுகளில் வாழ்ந்த மக்கள் சோழ இராணுவத்தைக் கண்டு அஞ்சினார்கள். ஆனால், படுகொலைகளையும், சூறையாடுவதையும் சோழர்கள் பெருமையாகக் கருதிக் கொண்டனர். பிற நாடுகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்த செல்வங்களில் ஒரு பகுதி கோயில்களுக்கு தானமாக வழங்கப் பட்டது. ஒரு கட்டத்தில் ராஜராஜசோழன் முன்னூறு கிலோ தங்கம் தானம் கொடுத்ததாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
சோழ நாட்டு பொருளாதாரம் கோயில் நகரங்களில் தங்கி இருந்தது. பெருமளவு நிலங்களை கையகப் படுத்தி வைத்திருந்த, கோயிலை மையமாகக் கொண்டு இயங்கும் நகரங்களில் ஆதிக்கம் செலுத்திய வணிகர் சங்கங்கள் அரசனுக்கு வரி கட்டுவதில்லை. ஆகையினால், அரச கஜானாவை நிரப்புவதற்காக அயல் நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை சோழர்கள் ஒரு கொள்கையாக வைத்திருந்தனர்.
(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, by Paul Michel Munoz)
******
ராஜராஜசோழன் - செங்கிஸ்கான் நட்புறவு வாழ்க!
ராஜராஜசோழன் - செங்கிஸ்கான் நட்புறவு வாழ்க!
"மொங்கோலிய- ராஜராஜசோழன்" செங்கிஸ்கானை, தமிழினவாதிகள் தமது "தமிழ்- செங்கிஸ்கான்" ராஜராஜசோழனுடன் ஒப்பிட்டு பெருமைப் படுவதில் தவறில்லை. அதற்காக "தமிழீழத் தேசியத் தலைவர் மகிந்த ராஜபக்ச...." என்ற மாதிரி தப்புத் தப்பாக எழுதி பதிவு போடுவது நல்ல நகைச்சுவை.
"மொங்கோலிய ராஜராஜ சோழன்" செங்கிஸ்கானின் படையெடுப்புகளை தடுப்பதற்காகத் தான் சீனப் பெருஞ்சுவர் கட்டப் பட்டது. அப்படி இருந்தும் மொங்கோலியப் படைகள் சீனாவை கைப்பற்றி ஆக்கிரமித்தன. செங்கிஸ்கானின் பேரனின் ஆட்சிக் காலம் வரையில் சீனா மொங்கோலிய சாம்ராஜ்யத்தின் கீழான அடிமை நாடாக இருந்தது.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பீரங்கியான "ஈழத்து மாரிதாஸ்" என அழைக்கப்படும் வாசு முருகவேள், மொங்கோலியாவை சீனாவுடன் போட்டு குழப்பிக் கொள்கிறார். இப்படி ஒரு அரைவேக்காட்டுத் தனமான பதிவு எழுத முன்னர் கொஞ்சம் வரலாறு படிக்க வேண்டும். பொல்லுக் கொடுத்து அடிவாங்கக் கூடாது.
தமிழ்த் தேசியத்தை தலைப்பாகையாக கட்டிக் கொண்டு "ராஜராஜ சோழன் எம் முப்பாட்டன்" என்று கூவும் சில தமிழர்கள் மாதிரி, "செங்கிஸ்கான் எம் முப்பாட்டன்" என்று சில மொங்கோலியர்கள் கூவுகிறார்கள். தமிழ்த் தேசியத் தந்தை ராஜராஜசோழன் என்றால், மொங்கோலியத் தேசியத் தந்தை செங்கிஸ்கான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
அது மட்டுமல்ல, உங்களுடைய ராஜராஜ சோழனும், அவர்களுடைய செங்கிஸ்கானும் ஒரே காலகட்டத்தில் ஒரே மாதிரி நடந்து கொண்டனர். உண்மையிலேயே அன்றைய செங்கிஸ்கானின் பேரரசு, சோழப் பேரரசுடன் நட்பாக இருந்தது. சீனாவில் சோழ வணிகர்களின் குடியிருப்பும் இருந்தது. அப்போது கட்டிய சைவக் கோயில் இன்னமும் இடிபாடுகளுடன் அங்குள்ளது.
தமிழ்நாடாக இருந்தாலும், மொங்கோலியாவாக இருந்தாலும் தேசியவாத/இனவாதக் கொள்கை ஒன்று தான். இனம் இனத்தோடு தானே சேரும்? இனி என்ன? மொங்கோலிய இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் இடையிலான மாமன், மச்சான் உறவை புதுப்பிக்க வேண்டியது தானே?
கடாரத்தில் சோழ படைகள் இனப்படுகொலை என்று ஒரு ஜப்பானிய ஓவியத்தை போட்டுள்ளீரே. அதுவென்ன கடார மியூசியத்தில் இருக்கிறதா. நானும் கடாரத்தில்தான் வாழ்கிறேன். சோழப்படைகளைக் கண்டு உள்ளூர் மன்னர்கள் மண்டியிட்டனர் என்பதே வரலாறு. போரே நடாவாதபோது படுகொலை எப்படி நடக்கும். அப்படியே போர் நடந்தாலும் மரணம் சம்பவிக்காமல் இருக்குமா? தாயம் ஆடினால் காய்கள் வெட்டப்படுவது இயல்பே. நானும் வரலாற்று மாணவந்தான். எந்த நூலும் சோழனை படுகொலைபுரிந்தான் என்று கூறவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Salasilah Raja Raja Meleayu என்ற மலாய் அரசர்களின் வரலாற்று ஆவனம் ராசராசனை புகழ்ந்தே பதிவிட்டுள்ளது. இன்றும் எங்கள் நாட்டின் சுல்தான்கள் தங்களை ராஜா சோழனின் வம்சம் என்றே கூறிக்கொள்கின்றனர். கொடுங்கோல் மன்னர்கள் இந்திய வரலாற்றில் மலிந்து கிடக்க ராஜராஜன் மட்டும் குறி வைக்கப்படுவது எதோ உள்நோக்கத்துடன் செய்யப்படுவதே. தமிழர்கள் இனப்பெருமை கொள்வது திராவிடதுக்கு ஆகாது. தமிழர்களை கொட்டி கொட்டி தமிழனையும் குழவி ஆக்கிவிட்டனர். முதல்ல அந்த ஜப்பானிய ஓவியத்தை எடுயா. எனக்கே சிரிப்பு வருது.
ReplyDeleteநான் மலேசியாவில் வாழும் தமிழன்.நான் வரலாற்று பட்டதாரி. நீர் குறிப்பிடுவது போல ராசராசன் இனப்படுகொலை செய்தான் என்ற குறிப்பு தாய்லாந்து, ம்லேசியா, இந்தோனிசியா போன்ற வரலாற்று ஆவனங்களில் குறிப்பிடபடவில்லை.ராசராசனின் படையுடன் மோத இங்கு எவனும் துணியவில்லை. போரை தவிர்க்க மண்டியிட்டனர் என்பதே வரலாறு. மேலும் பதினாறாம் நூற்றாண்டில் Tun Sri Lanang என்பவரால் எழுதப்பட்ட Salasila Raja Raja Melayu எனும் வரலாற்று ஆவனம் ராசராசனின் கீர்த்தையையும் அவனின் கடற்படை ஆற்றலையும் அவனது நாவாய்களின் சிறப்புக்களயும் புகழ்ந்துரைக்கிறது. இன்றும் எங்கள் நாட்டின் மலாய் அரசர்கள் சோழ மன்னரின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். போரெ நடவாதபோது படுகொலை புரிந்தான் என்று எழுதுவது அயோக்கியத்தனம். கொடுங்கோல் மன்னர்கள் ஆயிரம் இருக்க ராசராசன் குறிவைக்கப்படுவது ஒரே காரணம் தமிழர்கள் இனப்பெருமை பெற்றுவிடக்கூடாது என்பதே. அது போகட்டும். நீர் போட்ட ஓவியம் கடார படுகொலைன்னு எவனையா சொன்னான். அது ஜப்பானிய ஓவியம். கடாரத்தில் ஓவியம் போடுவதெல்லாம் நூறு ஆண்டுகளாகத்தான். ஓவிய பாணியை பார்த்தாலே தெர்யுது அது ஜப்பானிய ஓவியம்.
ReplyDeleteதோழர், வரலாற்றில் எந்த மன்னன் அந்நிய நாட்டு மக்களை படுகொலை செய்யவில்லை? அன்று இருந்தவர்கள் தமிழர்கள் இல்லை, அவர்கள் சேரர், சோழர், பாண்டியர். இவர்கள் அனைவரும் தமிழ் மொழி பேசினார்கள். அப்படித்தானே எடுத்துக்கொள்ள முடியும்?
ReplyDeleteராஜராஜ சோழன் = தமிழ் நாட்டு செங்கிஸ்கான்!
ReplyDeleteசெம அடி!
-
செங்கிஸ்கான் ஒரு படு பயங்கர கொலை-கொள்ளைக்கூட்ட தலைவனாகவே செயல்பட்டவன்.
-
அன்மைக்கால மனித வரலாற்றில் இதுவரை நாம் அறிந்திராத படு மோசமான (யூத) இனவழிப்பு செய்த இட்லரையும் கூட கோயில் கட்டி கும்பிட இன்றும் உலகம் பூராவும் குழுக்கள் இருக்கின்றன. இக்குழுக்களை மறைமுகமாக ஆதரிக்க சில வலதுசாரி அரசாங்கங்களும் உள்ளன. வெள்ளையர் இனத்தின் பெரும் போராளி,மாபெரும் படை வீரன் எனும் இந்த கோணலில்தான் இட்லர் இன்றும் இக்குழுக்களால் போற்றப்படுகிறான்.
எனவே, ராஜராஜ டுபாக்கூரை இந்தியாவின் இட்லர் என சொல்லலாமா?
இதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.
-
வாசு முருகவேள் = மாரிதாஸ். ஹா!ஹா!
-
ராஜ ராக பொறுக்கியைப்பற்றி இன்னுமொரு கோர முகத்தை தேவையான நேரத்தில் அறிய கொடுத்ததற்கு நன்றி.
அருமை நாராயணன். நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழர்களின் பேரில் திராவிடன் செய்யும் அநீதி நானும் கடாரத்தமிழன்தான்
ReplyDeleteதற்போதைய சுதந்திரமான ஜனநாயக காலகட்டத்திலேயே ஆள்பவர்கள் தவறுகள் செய்யும் போது மன்னர் ஆட்சி சர்வாதிகார காலங்களில் மன்னர்கள் மக்கள் மீது எவ்வளவு அட்டூழியங்கள் புரிந்திருப்பார்கள் என்பதை நாம் ஊகித்து கொள்ளலாம். ராஜராஜ சோழன் ஒரு தமிழர் என்பதால் அவர் செய்த கொடுமைகளை மறைத்து அவரை புகழ வேண்டும் என்று எதிர்பார்பது கண்டிக்கபட வேண்டியது.
ReplyDeleteகொஞ்சம் மூடிக்கொண்டு இருக்கவும் திராவிட நரியே
DeleteKadaram captured by rajendra chela. Raja raja cholan son.
ReplyDeleteதங்களுடைய பதிவுகளைப் பார்க்கும் போது தாங்கள் தமிழர் பெருமைகளைக் கண்டு வயிற்றெரிச்சல் படும் நபர் போல் தெரிகின்றது
ReplyDeleteதமிழ் இனப்படுகொலையாளி ராஜராஜ சோழனின் தற்போதைய தமிழக ஆதரவாளர்கள் யார் என்று பார்த்தோமானால் அவர்கள் ஜாதி வெறி கொண்டோராக இருப்பார்க்கள்.
ReplyDelete