முதலாளித்துவ சாத்தானுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு போப்பாண்டவர் அறைகூவல்! உலக கத்தோலிக்கர்களின் தலைவர், போப்பாண்டவர் பிரான்சிஸ் அண்மைக் காலமாக முதலாளித்துவத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த பொழுது, 21 ம் நூற்றாண்டின் சோஷலிசத்தை பின்பற்றும் எக்குவடோர், பொலீவியா போன்ற நாடுகளுக்கே முதலில் சென்றிருந்தார். அது அந்த அரசுக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப் படுகின்றது.
பராகுவே நாட்டுக்கு சென்ற போப்பாண்டவர், தலைநகர் அசுன்சியோனில் பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவரது உரையில் முதலாளித்துவத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இருந்தன. "தற்போதைய பொருளாதாரம் பிசாசின் சாணம்... பணத்தின் மீது பேராசை கொண்ட சர்வாதிகார அமைப்பு..., காலனியாதிக்கம் போன்று ஆண்களையும், பெண்களையும் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது..." என்று அவர் முதலாளித்துவத்தை கடுமையான சொற்களின் மூலம் தாக்கினார்.
கத்தோலிக்க போப்பாண்டவருக்கு, கம்யூனிச சின்னம் பொறித்த பரிசுப்பொருள் வழங்கப் பட்டது!
சிலுவையுடன், அரிவாளும், சுட்டியலும் சேர்ந்த வித்தியாசமான பரிசுப் பொருள் ஒன்றை, பொலிவிய ஜனாதிபதி ஏவோ மொராலேஸ், போப் பிரான்ஸிஸிடம் கொடுத்தார்.
எண்பதுகளில் பொலிவியாவை ஆண்ட வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் Luis Espinal, அதே மாதிரியான சின்னம் ஒன்றை வைத்திருந்தார். ஸ்பெயினில் பிறந்த பாதிரியார் லூயிஸ், பொலிவிய குடியுரிமை பெற்று, அந்நாட்டு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார்.
எசுயிஸ்ட் கத்தோலிக்க பாதிரியாரான லூயிஸ், பொலிவியாவின் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளராகவும், இடதுசாரி பத்திரிகையாளராகவும் இருந்தார். 21 மார்ச் 1980, வீட்டுக்கு வரும் வழியில் அவரைக் கடத்திச் சென்ற வலதுசாரி துணைப் படையினர், பல மணிநேரம் சித்திரவதை செய்த பின்னர் சுட்டுக் கொன்றனர்.
இடதுசாரி பாதிரியார் லூயிஸின் பிரபலமான கூற்று ஒன்று, அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளப் போதுமானது.
"மற்ற மனிதர்களுக்காக பேசும் தைரியமற்ற யாரும், கடவுளுடன் பேசுவதற்கு உரிமையற்றவர்கள்."
"மற்ற மனிதர்களுக்காக பேசும் தைரியமற்ற யாரும், கடவுளுடன் பேசுவதற்கு உரிமையற்றவர்கள்."
"அமெரிக்க ஜனாதிபதியாக ஒரு கருப்பரும், போப்பாண்டவராக ஒரு லத்தீன் அமெரிக்கரும் வரும் காலத்தில், அமெரிக்கா எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தும்." என்று 1973 ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ கூறிய தீர்க்கதரிசனம் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஆனால், போப்பாண்டவர், நேரடியாகவே தனது வீட்டுக்கு வந்து வாழ்த்துவார் என்று, பிடல் காஸ்ட்ரோ எதிர்பார்த்திருக்க மாட்டார்.
"நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!"
- அமெரிக்க வலதுசாரிகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் பதிலடி.
கியூபாப் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்காவுக்கு சென்ற போப்பாண்டவர் பிரான்சிஸ், பிரபல வலதுசாரி வார இதழான டைம்ஸ் நிருபரால் பேட்டி காணப்பட்டார். அப்போது, போப்பாண்டவரின் இடதுசாரி, மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, அமெரிக்க வலதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கப் பட்டது.
அமெரிக்காவில் உண்மையான இடதுசாரிக் கட்சி எதுவும் வெகுஜன அரசியலில் இல்லாத படியால், லிபரல்கள் இடதுசாரிகள் போன்று கருதப் படுகின்றனர். பிற உலக நாடுகளில் எல்லாம் "இடதுசாரி" என்ற சொற்பதம் பாவனையில் இருந்தாலும், அமெரிக்காவில் பொதுவாக "லிபரல்" என்று தான் அழைப்பார்கள்.
Pope Francis: I Am Not a Liberal
http://time.com/4044971/pope-francis-i-am-not-a-liberal/

"பல சக்தி வாய்ந்த மனிதர்கள் சமாதானத்தை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் யுத்தத்தால் வாழ்கிறார்கள். ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்று, ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்கு எதிராக திருப்பி விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்." - போப்பாண்டவர் பிரான்சிஸ்
http://theantimedia.org/10-things-pope-francis-said-that-may-signal-dark-sides-demise/%EF%BB%BF
http://theantimedia.org/10-things-pope-francis-said-that-may-signal-dark-sides-demise/%EF%BB%BF
கொடுக்கப்பட்ட இரண்டு இணையமும் துன்டிக்கப்பட்டுள்ளது அய்யா.
ReplyDeleteஒரு சந்தேகம், "இந்த மாதிரி போப் பதவியில் இருப்பவர் பேசுவது இது தான் முதல் முறையா அய்யா.." வாட்டிக்கன் என்பதே பெரும் முதலாலிகளின் கூடாரம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.