Monday, August 02, 2010

பாரிஸ் நகர காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம்

நடுத் தெருவில் கைக் குழந்தையையும், தாயையும் தற தறவென இழுத்துச் செல்லும் பிரெஞ்சு பொலிஸ் மிருகங்கள். பாரிஸ் பெரு நகரத்தில், பட்டப்பகலில் இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரான்ஸில் சட்டவிரோதமாக்கப்பட்ட ஆப்பிரிக்க குடியேறிகள் வதிவிடமின்றி தமக்கென கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

ஜூலை 21 ம் தேதி, அரச ஆணையின் பின்னர், போலீசார் அந்த கூடாரங்களை அப்புறப் படுத்தினார்கள். அப்பொழுது கர்ப்பிணித் தாய்மார், கைக் குழந்தைகளுடனான பெண்கள் என்று எவரையும் இரக்கம் பாராது வன்முறை பிரயோகித்து வெளியேற்றினார்கள். அங்கே நின்ற பார்வையாளர் ஒருவர், பிரெஞ்சு போலிஸ் அராஜகத்தை தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான செய்தி இணைப்பு:
Video of forced eviction in Paris suburb prompts shock

No comments:

Post a Comment