Tuesday, November 17, 2009
அமெரிக்க நிதியில் ஈரான் எதிர்ப்பு ஆயுதக்குழுக்கள்
சிலரைப் பொறுத்தவரை, அமெரிக்க-ஈரான் போர் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. இரு நாடுகளும் நேரடியாக மோதுவதை தவிர்த்து வந்த போதிலும், பதிலிப் போரில் ஈடுபட்டுள்ளன. ஈரான், ஈராக் நாடுகளின் வடபகுதி மலைகளில், குர்து இன மக்கள் வாழ்கின்றனர். ஈராக்கிய குர்தியர்கள், அமெரிக்க ஆதரவுடன் "குர்திஸ்தான்" சுயாட்சிப் பிரதேசத்தைக் கொண்டுள்ளனர். ஈரானிய குர்து மக்கள் எல்லை கடந்து வந்து, ஈராக்கிய-குர்திஸ்தானில் அடைக்கலம் தேடுகின்றனர். ஈராக்கிய மலைகளில் முகாமிட்டுள்ள (ஈரானிய) குர்து போராளிக் குழுக்கள், ஈரானுக்குள் ஊடுருவி தாக்கி வருகின்றனர். அனைத்து ஈரான் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமெரிக்க நிதி உதவி கிடைப்பது ரகசியமல்ல. ஈராக்கில் தளமமைத்துள்ள PJAK போன்ற ஈரான் எதிர்ப்பு இயக்கங்களை ஆராயும் ஆவணப்படம்.
ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்கா தரும் ஆயுத மற்றும் நிதியுதவி முழுக்க, முழுக்க சுயநலத்தின் பேரில் தானே. இதே ஆயுதக்குழக்கள் மீது நாளை தாக்குதல் நடத்தாதா. குர்திஷ் இனமக்கள் மீது எந்தவொரு அக்கறையும் இல்லை. அடித்து கொண்டு சாகட்டும் என்கிற உயரிய எண்ணத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திராகாந்தியும் ஈழத்தில் அதைதானே செய்தார். ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய பின் குர்திஷ் இன மக்களின் நிலை என்னவாகும். பாகிஸ்தானில் தொடங்கி ஈராக் வரை உள்ள பகுதிகளை சின்னாபின்ன படுத்துவது என்று முடிவு செய்து- மாறி, மாறி தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை கொடுக்க வேண்டியது. அப்பகுதி மக்களின் ஒற்றுமையின்மையையும், மத வெறியையும் பயன்படுத்தி இயற்கை வளங்களை சுரண்டுவதற்கும் இனக்குழுக்களின் மோதல் அவசியமாகிறது. அப்பிராந்தியத்தில் தொடரும் ஜனநாயகம் அற்ற போக்கையும் அமெரிக்கா பயன் படுத்திக்கொள்கிறது. சீனாவுக்கு அச்சப்படும் அமெரிக்கா சவூதியிடம் ஏன் அச்சப்படவில்லை, மதத்தை தாண்டி இந்த விஷயத்தை நேர்மையான முறையில, கையில் எடுத்தால் அப்பிராந்தியத்துக்குவிமோசனம் கிட்டும. ஒரு வேளை மொத்த பெட்ரோல் வளமும் சுரண்டப்பட்ட பிறகு அந்த பிராந்தியதில் அமைதி நிலவுமோ... என்னவோ. ஒரு சின்ன விண்ணப்பம். கலையகத்தின் உழைப்பு மேற்குலகத்திற்கு எதிரான கருத்துக்களோடு அடங்கிவிடக்கூடாது.
ReplyDeleteநன்றி, tamiluthayam , "மேற்குலகு" என்பதை இன்று அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியாக உலகெங்கும் ஆதிக்கம் செய்யும் விலங்காக பார்க்கிறேன். அதனால் தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
ReplyDelete