பாகிஸ்தானில் சமீப காலமாக பொது மக்கள் கூடுமிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு தாம் பொறுப்பல்ல என்று பாகிஸ்தானிய தாலிபான் அறிவித்துள்ளது. "இஸ்லாமாபாத் இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்களைக் கொன்ற குண்டுவெடிப்பு, மற்றும் பெஷாவர் பொது சந்தையில் நூறு பேர் இறக்க காரணமான குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அந்நிய சக்திகளே காரணம். அமெரிக்காவின் கூலிப்படை நிறுவனமான "Black water ", பாகிஸ்தான் அரசுடன் சேர்ந்து, பொது மக்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்க வைத்துள்ளது." இவ்வாறு தாரிக் எ-தாலிபான் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பாகிஸ்தானிய தாலிபான் இயக்க பேச்சாளர் அசாம் தாரிக் தோன்றும் இந்த வீடியோ அல் கைதா சார்பான இணையத் தளமொன்றில் வெளியாகியுள்ளது.
இவற்றை பாருங்கள் தோழர் இதற்கு உங்கள் பதில் என்ன ?
ReplyDeletehttp://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/#comment-12576
மண்ணிக்கவும்,
ReplyDeleteஅந்த பதிவின் சித்தார்தன் என்பவருடைய 28வது பின்னூட்டத்த்லிருந்து வாசிக்கவும்.
தோழர்,
ReplyDeleteஇது குறித்து ஏற்கனவே வினவுக்கு விளக்கம் அளித்துள்ளேன். அந்த விளக்கமும் நீங்கள் கொடுத்த பின்னூட்டத்தின் கீழே உள்ளது.
"இனியொரு"வுக்கு நான் எந்தப் பதிலும் அளிக்க கடமைப்பட்டவன் அல்ல. என்னிடம் வினவு விளக்கம் கேட்டதைப் போல, இனியொரு செய்யவில்லை. அந்த அளவு குறைந்த பட்ச நேர்மை கூட அவர்களிடம் இல்லை என்பது மட்டுமல்ல, "இனியொரு"வின் பதிலில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
"இனியொரு" வில் ஐ.என்.எஸ்.டி. பற்றி கட்டுரை எழுதிய அதே அசோக் வீட்டில் தான் எனக்கு ஐ.என்.எஸ்.டி. அறிமுகமானது. 2006 ம் ஆண்டு, அவரது நண்பர் சிவராஜா (அவரது பெயரும் பின்னூட்டத்தில் உள்ளது) ஐ.என்.எஸ்.டி.யை அறிமுகம் செய்து வைத்தார். அசோக்கின் நண்பரின் அழைப்பின் பேரில் ஐ.என்.எஸ்.டி. கருத்தரங்கில் கலந்து கொண்டேன். 1-3 பெப்ருவரி 2008 ல் அந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
முதன்முறையாக எனது வலைப்பூ 26 பெப்ருவரி வலையேற்றம் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, பல மாதங்களான பின்னர் தான் "இனியொரு"விற்கு கட்டுரை எழுதித் தருமாறு அசோக் கேட்டுக் கொண்டார். (எனது முதலாவது கட்டுரை எப்போது "இனியொரு"வில் பிரசுரமானது என்பதை நீங்களே தேடிப் பார்க்கலாம்.) இவ்வளவும் நடந்த பின்னர், ஜனவரி 2009 க்குப் பிறகு தான், எனக்கும் ஐ.என்.எஸ்.டி. க்கும் இடையில் நெருங்கிய உறவு இருப்பதாக கண்டுபிடித்தார்களாம். "இனியொரு" பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல பழகவில்லை.
உங்கள் விளக்கம் மிகவும் நேர்மையானது என்று நான் கருதுகிறேன் தோழர். நீங்கள் இது பற்றி தளத்தில் எழுதி அம்பலமாக்கிவிடுங்களேன் சனியன் தொலைந்தது என்று நிம்மதியாகவாவது இருக்கலாம்.
ReplyDelete