Friday, January 09, 2009

இடம்பெயர்ந்த ஈழத்தமிழரை தொடரும் இடர் (வீடியோ)

வட-இலங்கையில் நடைபெறும் போரால் அடிக்கடி இடம்பெயரும் தமிழ் மக்கள், இறுதியில் வந்தடையும் இடம் வவுனியாவில் உள்ள "நலன்புரி நிலையம்" ஆகும். எல்லைப்புற நகரமென்று வர்ணிக்கப்படும் வவுனியாவில், இலங்கை அரசும், ஐ.நா.அகதிகள் ஸ்தானிகராலயமும்(UNHCR) இணைந்து இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றை நடத்தி வருகின்றன. தற்போது யுத்தம் நடைபெறும் இடங்களில் இருந்து புதிதாக வருபவர்கள் மட்டுமல்ல, தொன்னூறுகளில் இடம்பெயர்ந்தவர்கள் கூட இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்படும் அச்சம் நிலவுவதால், அவர்களுக்கென விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. UNHCR உதவியால் சில குடும்பங்கள் அரச நிலங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

UNHCR தயாரித்த இந்த சலனப்படம், அடிப்படை வசதிகள் குறைந்த வவுனியா முகாமில், பரிதாபகரமான வாழ்க்கை வாழும், ஈழத்தமிழரின் இன்னல்களை விளக்குகின்றது.

Sri Lanka: Decades of Tamil Displacement
(Thanks to: UNHCR)


Sri Lanka: Decades of Muslim Displacement
(Thanks to: Ya TV)



வீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு

2 comments:

  1. my beloved
    it is not fate
    it is the mental desingn of the so called democracy
    leaders
    who are not leading any thing
    only war
    only hatered
    only suffering
    what a shame
    hope is the only thing that
    lives here
    easwara
    india
    bbliss47@gmail.com

    ReplyDelete
  2. Thank you for your comment, horseman.

    ReplyDelete