வாரந்தோறும் 10000 அமெரிக்கர்கள் பலவந்தமாக, அவர்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு வீதிக்கு வருகின்றனர். வெட்டவெளியில் கூடாரமடித்து தங்கி வரும் வீடற்றவர்கள், அமெரிக்க நகரங்களில் புதிய சேரிகளை உருவாக்கி வருகின்றனர். பலர் தமது வீடுகளை விட்டு எழும்ப மறுத்து வருகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். சில இடங்களில் கொலை கூட நடந்துள்ளது. ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன, அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
வீட்டுக்கடன் பிரச்சினையால் உருவான நிதி நெருக்கடியின் நேரடி விளைவு தான் இதுவென்றாலும், 2007 ம ஆண்டில் இருந்தே இந்தப்பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள் என்றதால் யாருமே அக்கறைப்படவில்லை. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, கடைசியில் வங்கிகளுக்கே அடிவிழுந்த பிறகு தான், உலகமே அலறித் துடித்தது. இப்போது கூட என்ன நடக்கிறது? நிர்வாகிகள், முகாமையாளர்கள், முகவர்கள், என்று பதவிகளில் ஓட்டிக்கொண்டு, வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கம் பணம் கொடுக்கின்றது. அமெரிக்க மூலதனத்தால் லாபமடைந்த முதலாளிகளும், நடுத்தர வர்க்கமும், வங்கிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். "வங்கிக் கொள்ளையரால்" ஏமாற்றப்பட்டு, குடியிருந்த வீடுகளை இழந்து, நிரந்தர கடனாளியாகி நடுத்தெருவுக்கு வந்த அப்பாவி மக்களைப்பற்றி யாரும் திரும்பிப்பார்க்கவில்லை. அரசாங்கம் வழங்கும் மீட்பு பணத்தில் ஒரு பகுதி, வங்கியில் பணி புரியும் மேல்மட்ட நிர்வாகிகளுக்கு சம்பளமும், போனசும் வழங்க பயன்படப் போகின்றது. இது குறித்து செய்தி வெளியிட்ட பிரிட்டிஷ் Guardian பத்திரிகை பதவி விலகிச் செல்லும் வங்கி மேலாளர்கள் கூட மில்லியன் கணக்கில் போனஸ் பணம் பெற்று செல்வதாக தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு (பகிரங்கப்படுத்தப் பட்ட) பிரிட்டனின் பெரிய வங்கியான Barclays தலைவரின் வருட சம்பளம் £250,000 ( 20,979,283.75 இந்திய ரூபாய்கள், 46,302,032.78 இலங்கை ரூபாய்கள்), ஆனால் போனசை சேர்த்தால், அவரது மொத்த வருட வருமானம் 36 மில்லியன் பவுன்கள்.
"நம்மூர் போல அமெரிக்காவில் வீட்டுக்கடன் தவணைப்பணம் கட்டத்தவறியவர்களை, ரவுடிகளை வைத்து மிரட்ட முடியாது. அதனால் தான் பங்குச் சந்தை சரிந்தது." என்று சில தமிழ்ப் பத்திரிகைகள் சிறுபிள்ளைத்தனமாக எழுதியிருந்தன. அமெரிக்காவில் அந்த வேலையை செய்ய ரவுடிகள் தேவையில்லை, அதை போலீஸ்காரர்களே செய்வார்கள். உதாரணத்திற்கு சில சம்பவங்கள். நியு ஒர்லின்சில், 'மத்திய அவசரகால முகாமையகம்' ஒரு வீட்டுக்காரனை எழும்பச் சொன்னது. சம்பந்தப்பட்ட வீட்டுக்காரன் கிட்ட வந்தால் சுடுவதாக மிரட்டியதால், போலிசின் உதவி கோரப்பட்டது. போலிஸ் தாக்குதல் பிரிவு, மிதமிஞ்சிய கண்ணீர்புகையை பிரயோகித்து, கடைசியில் அந்த நபரை சுட்டுக்கொன்றது. புளோரிடாவில் ஒரு நகரத்தில் இருந்த வீட்டை காலி பண்ண சொல்லி போலிஸ் நோட்டீஸ் அனுப்பியது. அந்த வீட்டின் குடும்பத்தலைவன், நோயாளியான முன்னாள் இராணுவவீரன். வீட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் வந்த போது, குடும்பத்துடன் வீட்டுனுள்ளே இருந்து கொண்டு, தன்னிடம் துப்பாக்கி இருக்கின்றது, என்று மட்டும் கூறிக்கொண்டிருந்தார். அயலவரின் வற்புறுத்தலால் இறுதியில், விட்டுக் கொடுத்தாலும், போலிசை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு நகரமும், கிராமமும் இது போன்ற சோகக் கதைகளை சொல்கின்றது. வீட்டை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்த போது, வீட்டினுள்ளே தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள், அல்லது தனிநபர்கள். வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டவர்கள். வீட்டை விட வேண்டிய நாள் வந்தால், தனது பிணத்தை வந்து பார்ப்பீர்கள், என்று ரியல் எஸ்டேட் கொம்பனிக்கு கடிதம் எழுதிய வயோதிப மாது. வீட்டை விட மறுத்து, கையில் கிடைத்ததை வைத்து எதிர்த்து போரிட்ட குடும்பத் தலைவர்கள். இந்தப்பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. (பார்க்க: As economy sinks, officials fear violent solutions)
வீடற்றவர்களாக வீதிக்கு வரும் தனிநபர்கள், அவர்கள் வயோதிபர் ஆனாலும், நோயாளி ஆனாலும், பொதுக் கட்டிடங்களின் கீழ், அல்லது பூங்காக்களில் உறங்க வேண்டிய பரிதாப நிலை. வீடுகளை இழந்த குடும்பங்கள் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள வெட்டவெளிகளில், சிலநேரம் நகரமத்தியில் இருக்கும் பூங்காக்களில் கூட, கூடாரங்களை அமைத்து தங்கி வருகின்றனர். Los Angeles, Chattanooga, Columbus, St. Petersburg, Seattle and Portland போன்ற அமெரிக்க நகரங்களில், இந்தக் கூடார வீடுகள் முகாம்களாக மாறிவருகின்றன. உண்மையில் அவை நமது நாட்டில் இருப்பதைப் போன்ற சேரிகள்.(பார்க்க:ECONOMY-US: No Joy in Hooverville)
இந்த நவீன சேரிவாசிகள், தமக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். போதைவஸ்து, மது, அடிதடி என்பன தடுக்கப்பட்டுள்ளது. சில சேரிகளை உள்ளூராட்சி சபை ஆதரவளித்து வருகின்றது. வேறு சில இடங்களில் சட்டவிரோதமாக பார்க்கப்படுகின்றன. இந்த நவீன சேரிவாசிகள் எல்லோரும், வீட்டுக்கடன் என்ற பொதுப்பிரச்சினையால் வீதிக்கு வந்தவர்கள். அவர்களில் சிலர் மூன்று படுக்கையறை கொண்ட பெரிய வீடுகளை சொந்தமாக வைத்திருந்தவர்கள். குடும்ப உறுப்பினர் யாராவது திடீரென கடுமையான சுகயீனம் அடைந்த பிறகு தான் சனியன் பிடிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவில் காசிருந்தால் மட்டுமே வைத்தியம் பார்க்கலாம், அல்லது கிடந்தது சாக வேண்டியது தான். தமது சேமிப்பை எல்லாம் வைத்தியம் பார்க்க செலவழித்ததால், வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார்கள்.
அமெரிக்காவில் இந்த நவீன சேரிகள் "Hoovertowns" என்று அழைக்கப்படுகின்றன. அது ஒரு காரணப்பெயர் ஆகும். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக, பல கோடி மக்கள் தொழிலை இழந்து, வீட்டை இழந்து வீதிக்கு வந்தார்கள். அப்போது அவர்கள் அமைத்துக்கொண்ட கூடார முகாம்கள், அல்லது சேரிகள், அன்றைய ஜனாதிபதி Hoover என்பவற்றின் பெயரால் அழைக்கப்படலாகின. RealityTrac என்ற நிறுவனம் செய்த ஆய்வின்படி, சமீபத்திய நிதி நெருக்கடியால் இன்னும் ஐந்து கோடிப் பேர் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அப்படியானால் அமெரிக்காவில் சேரிகள் பெருகப் போகின்றன என்று அர்த்தம்.
Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்! |
---|
முன்னைய பதிவுகள் :
வீடு வரை கனவு, காடு வரை கடன்
I live in Columbus, OH. Please let me know the parks where these people are. I will get you more photos and those guys feelings...
ReplyDeleteOtherwise, please stop fooling around other people. Do not write all your expectations. Hope you never seen real america yet
You are a big Joker !!!!!!!!
நல்லதே நடக்கும். நடக்கட்டும்.
ReplyDelete'அமெரிக்காவில் காசிருந்தால் மட்டுமே வைத்தியம் பார்க்கலாம், அல்லது கிடந்தது சாக வேண்டியது தான்'
ReplyDeleteஅமெரிக்காவில் காப்பீடு இருந்தால்
மருத்துவ வசதி கிடைப்பது எளிது,
நிபந்தனைகளுடன் மருத்து வசதி கிடைக்கும்.இல்லாவிட்டால் கடினம்.
எனவே பெரும்பாலோர் கைக்காசினை
மட்டும் நம்பி மருத்துவ சேவை பெறும் நிலையில் இல்லை.
உங்கள் பதிவில் ஏன் புளுகுகளை அள்ளி விடுகிறீர்கள்.
Dear Dreamer,
ReplyDeletePlease read the following news article from IPS:
ECONOMY-US: No Joy in Hooverville
By Heike Barkawitz
A homeless "tent city" in Los Angeles, California.
Credit:Pathpartners.org
NEW YORK, Oct 17 (IPS) - With a massive spike in the number of foreclosures and evictions over the past two years, communities throughout the U.S. have witnessed the sprouting of tent cities -- many of them home to once middle-class citizens fallen victim to the economic downturn.
Encampments have formed in or near large urban areas including Reno, Los Angeles, Chattanooga, Columbus, St. Petersburg, Seattle and Portland.
"[Starting] about four years ago, there has been an outbreak of tent cities popping up across the country. Today, we observe a slow but steady increase in homeless people," Michael Stoops, acting executive director of the National Coalition for the Homeless (NCFTH), told IPS.
According to a report by NCFTH, almost 61 percent of local and state homeless coalitions say that they have seen a growth in homelessness since the foreclosure crisis -- now at 10,000 homes per week -- began in 2007.
The phenomenon is similar to the social upheavals of the Great Depression of the 1930s -- an era frequently referenced these days -- when "Hooverville" ad-hoc shanty towns, some as big as 15,000 people, were erected around the country, named after the president at the time, Herbert Hoover.
Scott, a resident of the tent city in Los Angeles, told a television reporter, "I had one of those escalating, finance-charge, balloon-things that steps up every year and the payment just got too much so that I couldn't afford it anymore. I tried to work with the bank and they worked with me, gave me some extra time, but it's just getting too big. So they foreclosed."
Many residents of tent cities share Scott's fate. One woman told BBC that she used to live in a three-bedroom, two-bathroom house. When her husband fell ill, it became impossible to make ends meet.
"We have a lot of grandkids, too. They used to always come over and stay. They don't come here anymore, I don't want them to come here. We go there and see them at their house," she said. She and her husband now live in a mobile home at a camp.
Most tent cities have a community-spirit and are self-regulated, said Stoops, who has visited many of the encampments. "In most tent cities, there are certain rules -- like for instance no drugs, no alcohol and no violence," he told IPS.
He and his organisation supported the formation of tent cities. "[They] are of course not the solution, but necessary until adequate shelters and housing are found," he added.
"The tent city in St. Petersburg, Florida, is even supported by the government and some local, non-profit organisations provide support for tent cities across the country," Stoops said.
Jeremy Rosen, executive director of the National Policy and Advocacy Council on Homelessness (NPACH), expected a mild growth in the number of tent cities in the future due to the weak economy. "On the other hand, I suspect we'll see a definite rise in homelessness," he told IPS.
According to a document published by NPACH, the U.S. Department of Housing and Urban Development's (HUD) definition of homelessness "does not include children and families who have lost their homes but are temporarily staying in motels or with other people because other shelter is not available or appropriate."
These families have often lost their homes due to an event like eviction, foreclosure or a family crisis, but cannot find available and appropriate shelter.
"They become the 'hidden homeless', moving around from place to place -- sleeping in cars, on couches, sometimes in shelters, sometimes with friends and sometimes with family. Unfortunately, our country chooses to deny this reality and doesn't define many of these people as homeless," Rosen told IPS.
There are an estimated 600,000 children and youths who are considered homeless by other agencies, but not by HUD. "More than 60 percent of the homeless students identified by public schools are ineligible for HUD Homeless Assistance," the NPACH's report states.
"During the last seven years, we have seen homelessness increase. This is due to, for example, hurricanes or the unofficial economic recession with a foreclosure crisis," Stoops told IPS. "A month ago, over 900,000 homes were foreclosed and some of the people concerned will wind up homeless."
While "there exists more [government] sympathy for banks and people on Wall Street", he wryly added that "the capitalist society will allow even those people to wind up homeless."
In Chicago, Cook County Sheriff Tom Dart has taken unusual action and announced last week that he was suspending all foreclosure evictions.
"The move comes as a result of the growing number of evictions that involve renters, most of whom are dutifully paying their rent every month, only to later learn their landlord has fallen behind on mortgage payments and the building has gone into foreclosure," Spokesman Steve Patterson told IPS.
"These mortgage companies only see pieces of paper, not people, and don't care who's in the building. They simply want their money and don't care who gets hurt along the way," Dart said in an interview.
Dart wants mortgage companies to be forced to provide sufficient information to the Sheriff's Office in order to conduct an eviction.
According to a press release by the Cook County Sheriff's Office, foreclosure filings have steadily climbed in Cook County since 1999. In just two years, the number of foreclosure evictions has almost tripled.
The data firm RealtyTrac recently published a report stating that foreclosures were at an unparalleled high nationally, filings were up nearly 100 percent from a year ago and officials estimate that approximately half a million people could lose their homes as adjustable mortgage rates rise over the next two years. Many of those affected might eventually end up homeless, seeking help in a tent city or elsewhere.
As there are not nearly enough shelter beds for all the homeless people in the U.S., Stoops appealed for government compassion, saying that "every city should have one park or another space where homeless people are allowed to erect their tents."
"It is hard for homeless people to set up a homeless campsite because cops come and make them move on. The most recent count from the government, which is from 2005, says that 44 percent of the nation's homeless are unsheltered," he said.
(END/2008)
Dear Anonymous,
ReplyDeleteஅமெரிக்காவில் மருத்துவக் காப்புறுதி இருப்பது உண்மை தான். ஆனால் அது எல்லாம் உங்களைப் போன்ற நல்ல வருமானம் ஈட்டும், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான். மருத்துவக் காப்புறுதி அற்ற ஏழை அமெரிக்கர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். உங்களது கூட்டை விட்டு வெளியே வந்து, உண்மையான அமெரிக்காவைப் பாருங்கள். மேலதிக விபரங்களுக்கு மைகேல் மூர் இன் Sicko படத்தை பார்க்கவும். http://www.youtube.com/watch?v=8BJyyyRYbSk
அமெரிக்க பக்தர்களுக்கு குலை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னூட்டங்களைப் படித்தால் தெரிகின்றது. தாங்களும் ஒரு நேரம் எல்லாவற்றையும் இழந்து வீதிக்கு வர வேண்டிய நிலை வந்து விடுமோ என்று பயந்து சாகின்றனர். அப்படி ஒரு நிலை வந்தால் ஏழையாக சேரியில் வசிப்பதை விட, கார்த்திக் ராஜா என்ற கோழை மாதிரி, தன் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விட்டு தாங்களும் தற்கொலை செய்வார்கள்.
ReplyDeleteநன்றி வசந்த் அவர்களே! உங்கள் கருத்து மிகவும் சரி!அமெரிக்க பக்தர்களுக்கு குலைநடுக்கம் ஏற்பட்டுள்ளது உண்மைதான்!எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் ஊர்க்குருவி இப் பூவுலகுக்கு வந்தேதீரவேண்டும்!
ReplyDeleteIf every one has medical insurance in U.S.A., why Obama made it as an election issue? If you have got all the facilities in the life, it doesn’t mean every one else is same as u. The person who denies the existence of poor people in US, and a cruel system which exclude them from health care, is living in his own world. Better to describe as a frog in the well.
ReplyDeleteYou are absolutely right. The money is not going to the ordinary people. Every community there are so many houses are on sale... no body has money to buy. And no finance companies are going to loan you (unless you have a 20% down payment)
ReplyDeleteSir,
ReplyDeleteYou have given someone else blog as reference. I asked about exact situation. I can refer your blog to lots of people....Do you know exactly whats going on here.
I live here in Columbus, OHIO. I also I am used to travel as a freelance photographer. Please let us know how did you find the truth in the refered blogger's point of view
Do you know the Thiru'Kural'
Epporul yar yar vai ketpinum apporul mei porul kanpathu 'ARIVU'
Before raise your flags please find the truth....
Otherwise I can laugh at you
Dear Freelanse photographer,
ReplyDeleteYour argument is leading nowhere.
I am a member of "Indypendent Media Network", and we exchange news reports with each other. It's impossible to me, and anyone else to be everywhere.
The media organaization, IPS is the main source for this specific article about US, and I trust the authenticity of their reporting. You have to contact IPS journalists, to find out exact location in Columbus.
It seems, that you don't believe(or don't want to believe) the news. Would you ask same question to major news services such as CNN, BBC or FOX? How can you trust them? Why don't you go to Iraq and Afghanistan, to find the truth? You don't need to laugh at anyone giving false informations.
I have to remind the same Kural to you:
"Epporul yar yar vai ketpinum apporul mei porul kanpathu 'ARIVU'"
"Before raise your flags please find the truth...."
"Otherwise I can laugh at you"
(You have to judge yourself, before you point the finger on others.)
தனது கண்ணுக்கு முன்னாள் நடக்கும் விஷயங்களை கண்டும் காணாதது போல நடிக்கும் மனிதர்க்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத்தேவையில்லை. அவர்கள் இதுவரை காலமும் அமெரிக்கா என்றால் சொர்க்கபுரி என்று சொல்லி மக்களை ஏமாற்றி வந்தார்கள். அவர்களுக்கு வீடிழந்த ஏழைகள் பற்றிய படங்களை பார்க்க செய்திகளை கேள்விப்பட அவர்களுக்கு விருப்பமில்லை.
ReplyDeleteColombus, Ohio விலிருந்து வந்த நண்பரைப் போல, அனாமதேய பின்னூட்டமிடும் வேறு யாராவது "மெய்ப்பொருள் காண விரும்பும்" அன்பர்கள் இருந்தால், அவர்கள் முதலில் தமது உண்மையான பெயர், மற்றும் e-mail முகவரிகளை கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் அவர்கள் கோரும் தகவல்களை அனுப்பி வைக்க வசதியாக இருக்கும்.
ReplyDeleteFor more information, please watch the following video, which is related to this post.
வீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!
Your articles are realistic. Very few tell the truth about America. Well done. Keep it up.
ReplyDelete