//வகுப்புவாதம் தலைதூக்கும் போதெல்லாம் முதல் முதல் பாதிக்கப் படுவது புரட்சிகர இயக்கமாகும். ஆகவே தொழிலாளி வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டி, இனவெறியை தூண்டுவோருக்கு எதிராக விட்டுக்கொடுக்காத புனிதப் போராட்டத்தை நடத்தி, தங்களிடையே வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்களை பாதுகாத்து, அதன் மூலம் இன்று சிதைந்துள்ள தேசிய ஐக்கியத்தை மீண்டும் படிப்படியாக கட்டியெழுப்ப வேண்டும்.// - தோழர் சண்முகதாசன்
1977 இனக்கலவரத்தில், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பங்கிருந்தது. இனவாதப் பேச்சுகள் மூலம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் கடைகள் தாக்க வைத்திருக்கிறார்கள். "திருப்பி அடித்தல்" என்பது சாதாரண அப்பாவி மக்களை அடிப்பதென்று பொருள் அல்ல. எதிரி யார், நண்பன் யார் என்ற புரிதல் இல்லாத படியால் தான் தமிழ்த்தேசிய போராட்டம் பின்னடைவுக்கு உள்ளானது.
தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தொழிலாளி பத்திரிகையில் இருந்து ஒரு பகுதி:
//ஒரு நாட்டில் இனக்கலவரங்களை மூட்டுவோர் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள இனவெறி சக்திகளாகும். இவ் இனவெறி சக்திகளுக்கு அரசியல் ரீதியில் இனவெறி ஊட்டி வளர்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள் ஆவர். இத்தகையவர்களால் உருவாக்கப்படும் இனக்கலவரம் எந்தவொரு நாட்டிலும் கற்பனை செய்யப்படாத கொடூரத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். ஒரு இனக்கலவரத்தை தடுப்பதற்குரிய ஒரே வழி சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதும் வழங்குவதுமேயாகும். ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நசுக்கி இன அடக்குமுறையை செய்வதிலும் முதலாளித்துவ சமூக அமைப்பு எப்போதும் முன் நின்று வருவதைக் காண முடியும்.
எனவே இனங்களின் மத்தியில் உள்ள பிணக்குகளையும், ஒரு பெரும் இனம் சிறுபான்மை இனத்தை அடக்கும் நிலையை இல்லாமல் செய்வதற்குரிய ஒரே மார்க்கம் இனங்களின் மத்தியில் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் வர்க்கங்களும் தத்தம் இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகளை நிராகரித்து உழைக்கும் வர்க்கம் என்ற ரீதியில் ஐக்கியப் பட்டு தமது வர்க்க எதிராளிகளுக்கு எதிராக போரிடுவதே ஆகும்.//
சண்முகநாதனின் மறுபக்கம்
ReplyDeleteஒரு அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பு சிங்கப்பூர், இலங்கை மற்றும் யேமனின் முக்கோணத்தின் முக்கியத்துவத்தை லீ குவான் யூ புரிந்து கொண்டார்.
அவர் இலங்கைக்கு வந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து செய்தித்தாளில் கட்டுரைகள் எழுதினார். மாவோ சேதுங் கட்டுரைகளில் ஒன்றைப் படித்தார் மற்றும் இலங்கை பற்றி அறிய ஆர்வமாக இருந்தார். உடனடியாக அவர் சண்முகநாதனை சீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைத்தார், ஏனெனில் மாவோ ஒரு தோழரிடமிருந்து இலங்கை பற்றிய தகவல்களை நேரடியாக அறிய விரும்புகிறார்.
சண்முகநாதனின் மேற்கத்திய கல்வி மற்றும் ஆங்கில மொழி மேலாதிக்கம், சிலோனின் இன மோதலை மாவோவிற்கு ஒரு முதலாளித்துவ போராட்டம் என்று விளக்க அனுமதிக்கிறது.
கூட்டத்திற்குப் பிறகு, மோவா சிங்களவருடன் தொடர்பு கொள்ள முடிவு செய்தார். சீனர்கள் பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மையத்தை உருவாக்கத் தொடங்குகின்றனர். இன்றும் அதே பழைய கதை தொடர்கிறது.