Sunday, April 05, 2015

சமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கிய பயங்கரவாதி!


இன்றைய இஸ்ரேல் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. 22 July 1946, ஜெருசலேம் நகரில் இருந்த கிங் டேவிட் ஹோட்டல் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. தொண்ணூறு பேர் கொல்லப் பட்ட குண்டுவெடிப்பில் பலியானவர்களில் 28 பேர் பிரிட்டிஷ்காரர்கள், 41 பேர் அரேபியர்கள், 17 பேர் யூதர்கள். 



அந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஹகனா என்ற யூத தீவிரவாத இயக்கம், பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாக மாறியது. அதன் தலைவர் மேனாகிம் பெகின் இஸ்ரேலின் ஆறாவது பிரதமரானார். சமாதானத்திற்கான நோபல் பரிசும் பெற்றுக் கொண்டார்! ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?

*******



இந்தப் படத்தில் உள்ள, மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்திய, சர்வதேச பயங்கரவாத இயக்கத்தின் பெயர் நேட்டோ(NATO). 12 April 1999, செர்பியாவில் பொது மக்கள் பயணம் செய்த ரயில் மீது நடந்த தாக்குதலில், பெண்களும் குழந்தைகளுமாக 14 பேர் கொல்லப் பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை நடத்திய குற்றவாளிகள், இன்று வரையில் சட்டத்தின் முன்பு நிறுத்தப் படவில்லை. மாறாக பதவியுயர்வு கொடுத்து கௌரவிக்கப் பட்டனர்.

*******


கொலம்பியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினரும், இராணுவ ஒப்பந்தக் காரர்களும், 54 பருவ வயது மகளிரை வன்புணர்ச்சி செய்துள்ளனர். பாலியல் வல்லுறவு கொள்வதை வீடியோவில் ஒளிப்பதிவு செய்து விநியோகித்துள்ளனர். ஒரு தடவை, 12 வயது சிறுமியும் அமெரிக்க படையினரால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார். கொலம்பியாவில் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

தற்போது கொலம்பிய அரசுக்கும், மார்க்சிய FARC இயக்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கொலம்பியாவில் நீண்ட காலம் நடந்த ஆயுதப்போராட்டம் பற்றி நிபுணர்கள் குழுவொன்று தயாரித்த “Contribution to the Understanding of the Armed Conflict in Colombia” என்ற ஆய்வறிக்கையில் மேற்படி தகவல் எழுதப் பட்டுள்ளது.

2 comments:

  1. Menachem Begin is sixth Prime Minister of the State of Israel, not first.

    ReplyDelete
  2. Thank you Sathish Krishnan,
    I have corrected.

    ReplyDelete