Thursday, September 18, 2014

இஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது


1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி, ஒரு இரகசிய ஆவணத்தை கண்டுபிடித்தார். மத்திய கிழக்கு அரபு நாடுகளை, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்கள் தமக்குள் பங்கிட்டுக் கொள்வது சம்பந்தமான ஒப்பந்தம் அது. முதலாளித்துவ நாடுகளின் அயோக்கியத்தனத்தை உலகறியச் செய்யும் நோக்கில், ட்ராஸ்கி அந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கினார்.

 "Sykes-Picot ஒப்பந்தம்" என்று அழைக்கப் படும் அந்த உடன்படிக்கை, மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஏனெனில், துருக்கியிடம் அடிமைப் பட்டிருந்த அரேபியர்களுக்கு ஒரு தாயகத்தை உருவாக்கித் தர விரும்புவதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக, பிரிட்டன் லாரன்ஸ் எனும் உளவாளியை அனுப்பி, ஆயுதங்களும் கொடுத்து உதவி இருந்தது.

"நாகரிகமடைந்த மேன் மக்களின் நாடான" பிரிட்டன், தமது நலன் கருதி நடக்கிறது என்று, அரேபியர்களும் அப்பாவித்தனமாக நம்பினார்கள். ஆனால், துருக்கியின் பகுதியாக இருந்த அரேபிய நாடுகளை காலனிப் படுத்துவதே பிரிட்டனின் உண்மையான நோக்கமாக இருந்தது. அதற்காக, பிரிட்டனும், இன்னொரு ஐரோப்பிய காலனியாதிக்க நாடான பிரான்சும், "Sykes-Picot ஒப்பந்தம்" என்ற பெயரில், அரபு நாடுகளை தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

பிரிட்டன் எதற்காக அரேபியர்களை ஏமாற்றி, அவர்களின் நாடுகளை காலனிப் படுத்த வேண்டும்? முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு முன்னர், இந்தியா (பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கியது) பிரிட்டனின் ஒரு முக்கியமான "பணக்கார" காலனியாக இருந்தது. என்ன விலை கொடுத்தேனும், பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்தும் காலனியாக வைத்திருக்க விரும்பியது. ஆனால், இந்தியாவுக்கு வடக்குப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை நடுவில் வைத்து, இரண்டு சாம்ராஜ்யங்களும் பரஸ்பரம் எல்லைகளை தீர்மானித்துக் கொண்டன.

எதிர்பாராத விதமாக முதலாம் உலகப்போர் வெடித்து விட்டது. இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் நோக்கில், துருக்கியில் கலிபொலி எனும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள் இறக்கப் பட்டன. ஆனால், கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் பின்வாங்கி விட்டன. இதற்கிடையே, பிரிட்டனுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்தது. துருக்கி சுல்தான் சர்வதேச இஸ்லாமிய அகிலத்திற்கு (கிலிபாத்) தலைமை தாங்கும் கலீபாவாக கருதப் பட்டார். முதலாம் உலகப்போரில் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக, துருக்கி ஜிகாத் ஒன்றை அறிவித்து விட்டால் என்ன செய்வது?

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பேர் முஸ்லிம்கள். துருக்கி சுல்தானின் ஜிகாத்திற்கான அழைப்பை ஏற்று, இந்திய முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன செய்வது? அது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவாக இருந்திருக்கும். ஆகவே, பிரிட்டனுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி முஸ்லிம்களை பிரித்து ஆள வேண்டும். அரேபியர்களை துருக்கியரிடம் இருந்து பிரித்து விட வேண்டும். பிரிட்டன் அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய நோக்கம் அது தான்.

உண்மையிலேயே, துருக்கி சுல்தான் ஜிகாத் அறிவிப்பு செய்திருந்தார். அது யாருடைய கவனத்தையும் பெறவில்லை. அதற்குக் காரணம், இளம் துருக்கியர்கள் எனும் தேசியவாத அமைப்பு, ஏற்கனவே சுல்தானின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி இருந்தது. மேலும் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் அதிகார மையத்திலும், துருக்கி தேசியவாதிகள் ஊடுருவினார்கள்.

அரபு நாடுகளில் அதிகாரத்தில் இருந்த துருக்கி தேசியவாதிகள், அரேபியரை சிறுமைப் படுத்தினார்கள். இதனால், துருக்கி பேரினவாதத்திற்கு எதிரான அரேபிய தேசிய இன எழுச்சி ஒன்று உருவானது. பிரிட்டன் தன் பங்கிற்கு அதை எண்ணை ஊற்றி எரிய விட்டது. அரபு தேசியவாதிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், அரேபியர்கள் துருக்கியரிடம் இருந்து விடுதலை பெற்றதும், அவர்களின் நாடுகளை துண்டு போட்டது. இன்றுள்ள அரபு நாடுகளின் எல்லைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தீர்மானிக்கப் பட்டவை ஆகும். துருக்கி, ரஷ்யா ஆகிய வல்லரசுகளிடம் இருந்து, பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தான், நவீன அரபு தேசங்கள்.

வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், ஒரே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அரேபியர்கள் மட்டுமல்ல, பிரிட்டனை தமது நட்பு சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.

மேலதிக தகவல்களுக்கு: 
Setting desert on fire, T.E.Lawrence and Britain's secret war in Arabia; James Barr 
Lawrence In Arabia: War, Deceit, Imperial Folly, And The Making Of The Modern Middle East; Scott Anderson

3 comments:

  1. மீண்டும் மீண்டும் பழைய சம்பவங்களைக் கூறி, மேற்கு/அமெரிக்க/பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் என்று திசை திருப்ப ஒரு முயற்சி.
    உண்மை நிலை என்னவென்றால் : ISIL சுன்னி முஸ்லிம்கள் தவிர இந்த பகுதியில்/நாட்டில்/உலகத்தில் வாழக்கூடாது; அவர்கள் செத்தொழிய வேண்டும். அது வரை நாங்கள் ஜிஹாத் நடத்துவோம். முதல் கட்டமாக, எங்கள் CALIPHATE டில் அவர்களை எல்லா விதத்திலும் கொடுமைப்படுத்துவோம்; கொல்வோம்; கழுத்தை அறுப்போம்; உடைமைகளை பிடுங்கிக் கொள்வோம்/கொல்வோம்; அவர்கள் சொத்துக்களை இங்கு விட்டு விட்டு பிச்சைக்காரர் களாக ஓடட்டும்; எங்கேனும் போய் சாகட்டும். இங்கு ஷியா, சபைக், ஏழடி, சுபி, கிருஸ்தவர்கள் எவ்வளவு நூற்றாண்டுகளாக வாழ்ந்தவர் களானாலும் எங்களுக்கு முன்னே இங்கு வந்து காட்டை, மலைப் பிரதேசத்தை வியர்வை சிந்தி மேம்படுத்தியவர் ஆயினும் அவர்களுக்கு இங்கு வாழ உரிமை இல்லை;ஏனென்றால் நாங்கள் சொல்கிறோம். மீறி இங்கு இருந்தால், அவர்களிடம் சண்டை (ஜிஹாத்) செய்து 1. ஆண்களைக் கொல்வோம்; பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகள் ஆக்குவோம் ; பொருள்களைக் கைப்பற்றிக்கொள்வோம். இது தான் எங்களுக்கு அப்துல் நபி (ஸல்) சொல்லிக் கொடுத்ததுஎன்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  2. A comment sent does not appear: I do not know whether it has been "moderated" i.e. not published.

    The same in English now:

    Well, there is history of centuries of colonialism, etc. and hundreds of incidents/battles/wars. Let us not digress in trying to understand what happened in Turkey or Spain a few centuries ago.

    What we now see is simple to understand: We the Islamic State has occupied this area. Here, only those who practice religion like us will be allowed to live. All the rest, (they may be Shias, Sufis, Yezdis, Sabaks, Christians, Jews, or even Hindus) have no business to be here. They should convert or run or get killed. We are ruthless, in fact more ruthless than LET, JEM, Taliban: We simply kill, may be by stabbing, hanging or beheading: our choice. And when they run their assets will be forfeited to us; the immovable assets, they will leave anyway. Let them be the natives, who have been residing here for more than a thousand years, they maight have developed a forest into a agricultural field and a village or a township, with their own sweat and blood; we don't care. They can not live here. Well, like early Arab skirmishes, we are prepared to limit the killing to males; and take the women and children as slaves. Mohammed Nabi (SAL) has preached a religion of Love and Peace; but, we understand only this much: Wage Jihad and kill all other faith-followers.

    ReplyDelete
  3. Request to the blogger: Sir, The comment is straightforward and easy to understand. I request the blog-author to give his response: agreement/disagreement/counter-views. If the blog-author prefers not to publish response it would be better not to put any fresh post on ISIL.
    By the way, I find there is no other comment. Is the blog have only one reader -- yours faithfully?

    ReplyDelete