வெனிசுவேலாவின் சோஷலிச ஜனாதிபதியான சாவேஸ், மூன்றாவது தடவையாக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவேசின் வெற்றியின் இரகசியம் என்ன? அவரது கடந்த கால சாதனைகள் என்ன?
1. எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடான வெனிசுவேலாவில், எண்ணை விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் செலவிட்ட அளவை விட, சாவேசின் பதவிக் காலத்தில் நானூறு மடங்கு அதிகமாக, அதாவது அரசாங்க பட்ஜெட்டில் 43 % சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது.
(ஆதாரம்: Financial Times, http://www.ft.com/)
2. வெனிசுவேலாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. நானூறுக்கும் அதிகமான நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நடத்தப் படுகின்றன.
(Venezuela's economy Towards state socialism, http://www.economist.com/node/17527250)
(Venezuela's economy Towards state socialism, http://www.economist.com/node/17527250)
3. சாவேசின் சோஷலிச அரசியலுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. அவரது பதவிக் காலமான 1996 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், வறுமை பெருமளவு ஒழிக்கப் பட்டுள்ளது. 71 % இலிருந்து 27 % மாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாவேசின் ஆட்சிக் காலத்தில், குழந்தைகளின் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்துள்ளது. எழுத்தறிவின்மை விகிதாசாரம் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.
(POBREZA Y DESARROLLO SOCIAL EN VENEZUELA: Balance 2011 y perspectivas para el 2012 por Jesse Chacón (GISXXI), http://www.gisxxi.org/noticias/pobreza-y-desarrollo-social-en-venezuela-balance-2011-y-perspectivas-para-el-2012-por-jesse-chacon-gisxxi/#.UHNeV5hg8fU)
( Pourquoi Chavez ?, http://www.legrandsoir.info/pourquoi-chavez.html)
(POBREZA Y DESARROLLO SOCIAL EN VENEZUELA: Balance 2011 y perspectivas para el 2012 por Jesse Chacón (GISXXI), http://www.gisxxi.org/noticias/pobreza-y-desarrollo-social-en-venezuela-balance-2011-y-perspectivas-para-el-2012-por-jesse-chacon-gisxxi/#.UHNeV5hg8fU)
( Pourquoi Chavez ?, http://www.legrandsoir.info/pourquoi-chavez.html)
4. உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே திருப்திகரமான வாழ்க்கை வாழும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா தெரிவு செய்யப் பட்டுள்ளது. பணக்கார நாடுகளான கனடா, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு அடுத்ததாக, வெனிசுவேலா ஆறாவது இடத்தில் இருக்கிறது. (High Wellbeing Eludes the Masses in Most Countries Worldwide, http://www.gallup.com/poll/147167/High-Wellbeing-Eludes-Masses-Countries-Worldwide.aspx#2)
5. மேற்கத்திய ஊடகங்கள் சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில் ஜனநாயகத் தன்மை கிடையாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், 13 வருட ஆட்சிக் காலத்தில், 14 தேர்தல்கள் அல்லது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. அனைத்திலும் சாவேசும், அவரது கட்சியும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து தேர்தல்களையும் கண்காணித்து வந்த Carter Centrum ஐ சேர்ந்த Jennifer McCoy , தேர்தல்கள் யாவும் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Venezuelan Electoral System one of the Most Automated in the World, http://venezuelanalysis.com/analysis/7177)
(Venezuelan Electoral System one of the Most Automated in the World, http://venezuelanalysis.com/analysis/7177)
6. வெனிசுவேலா நாட்டு ஊடகங்கள் எல்லாம் சாவேசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஆதரவான பிரச்சாரம் மூலம் மக்களை மூளைச் சலவை செய்வதாக, மேற்கத்திய நாடுகள் குற்றஞ் சாட்டுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? வெனிசுவேலாவின் 116 தொலைக்காட்சி நிறுவனங்களில், 61 தனியார் நிறுவனங்கள். தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் சாவேசுக்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் 13 தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டுமே அரசு நடத்துகின்றது. மீதியுள்ள 37 ம், ஒன்றில் பிரதேச அரசாங்கத்தினால், அல்லது மக்களின் கூட்டுறவு நிறுவனமாக நடத்தப் படுகின்றன. ஆனால்.... ஆனால்... தனியார் தொலைக்காட்சி சேவைகள், மொத்த சனத்தொகையில் 61 % மான பார்வையாளர்களை சென்றடைகின்றன. தினசரி பத்திரிகைகளில் 80 % தனியார் கைகளில் இருக்கின்றன. நாட்டில் அதிகமாக விற்பனையாகும், பிரபலமான முன்னணி பத்திரிகைகள் எப்போதும் சாவேசுக்கு எதிராகவே எழுதிக் கொண்டிருக்கின்றன.
(Television in Venezuela: Who Dominates the Media?, http://www.cepr.net/documents/publications/2010_12_venezuela_media.pdf)
(Television in Venezuela: Who Dominates the Media?, http://www.cepr.net/documents/publications/2010_12_venezuela_media.pdf)
7. உலக நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளை கணிப்பிட்டு வரும் கனடிய நிறுவனமான Foundation for Democratic Advancement (http://www.slideshare.net/FDAdvancement/2011-fda-electoral-fairness-report-on-venezuela)(FDA), நேர்மையான முறையில் ஜனநாயக தேர்வு நடக்கும் நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலாவை தெரிவு செய்துள்ளது. அவர்களின் கணிப்பின் படி, வெனிசுவேலாவில் 83 % நேர்மையான ஜனநாயக தெரிவு இடம்பெறுகின்றது. மற்ற நாடுகளையும் ஒரு தடவை பார்ப்போமா? பின்லாந்து 30 %, அமெரிக்க 30 %, எகிப்து 0 %.
8. இந்த தடவை, சாவேசை எதிர்த்து தேர்தலில் குதித்த வேட்பாளர் Henrique Capriles, பற்றி மேற்கத்திய ஊடகங்கள் புகழ்ந்து பேசின. மாபெரும் ஜனநாயகவாதி என்றெல்லாம் பாராட்டின. அந்த வேட்பாளரின் கடந்த கால ஜனநாயக சாதனைகளை பார்ப்போமா? 2002 ம் ஆண்டு, வெனிசுவேலாவில் சதிப்புரட்சி நடந்தது. மியாமியில் (அமெரிக்கா) இருந்து வந்த ஆயுதக் குழுவொன்று கியூப தூதுவராலயத்தை முற்றுகையிட்டது. அப்பொழுது அந்தப் பிரதேச ஆளுநராக இருந்த Henrique Capriles, அந்த ஆயுதக் குழுவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, தூதுவராலயத்திற்கு சென்று கொண்டிருந்த மின்சார, நீர் விநியோகத்தையும் துண்டித்திருந்தார்.
(Ex embajador de Cuba en Venezuela: Capriles violó leyes internacionales, http://www.telesurtv.net/articulos/2012/04/12/ex-embajador-de-cuba-en-venezuela-capriles-violo-leyes-internacionales)
இந்த தேர்தலில் ஊகோ சாவேஸ் 54 % வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Henrique Capriles, 45 % வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
(Ex embajador de Cuba en Venezuela: Capriles violó leyes internacionales, http://www.telesurtv.net/articulos/2012/04/12/ex-embajador-de-cuba-en-venezuela-capriles-violo-leyes-internacionales)
இந்த தேர்தலில் ஊகோ சாவேஸ் 54 % வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Henrique Capriles, 45 % வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வெனிசுவேலா பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை2.வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
3.அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா
4.வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)
5."சோஷலிசம் இன்றேல் காட்டுமிராண்டியிசம்" - 5 வது சர்வதேசியம்
சிறப்பான பகிர்வு நிறைய தெரிந்து கொண்டேன்......நன்றி நண்பரே...
ReplyDeleteசாவேஸுக்கு ஆதரவு குறைந்து வருவதாகப் போட்டிருக்கிறார்கள். சென்ற முறை 63% வாக்குகளை வாங்கியவர் இம்முறை 54 % பெற்றிருக்கிறார். எதிர்கட்ட்சித்தலைவர் கடந்த முறையை விட 2.2 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார் ?
ReplyDeletehttp://news.yahoo.com/elected-chavez-may-face-economic-limits-220819271.html
முன்னர் சதி புரட்சி நடைபெற்ற போது எண்ணைய் நிறுவன மேலாளர்கள், அலுவலக நிர்வாகிகள் எல்லோரும் சாவேசுக்கு எதிராக திரும்பியதால், அன்றிலிருந்து பெரும்பான்மையான நிறுவனங்களை நிர்வகித்து வருவது தொழிலாளர்களே.... முதலாளித்துவ நாடுகளில் வழங்குப்படுவதை போல பல மடங்கு சம்பளம் இங்கு மிச்சம், எல்லா தொழிலாளர்களுக்கும் நல்ல ஊதியமும் கிடைக்கின்றது.
ReplyDelete2) ஊடகங்களை பற்றி சொல்லும் போது 24 மணி நேர தனியார் செய்தி ஊடகங்கள் எல்லாம் எப்பொழுதும் சாவேசு ஒரு சர்வாதிகாரி, சாத்தான் என்று மட்டுமே சொல்லிவருகின்றனர். இதை எதாவது ஒரு முதலாளித்துவ நாட்டில் உள்ள ஊடகங்கள் செய்தால் அந்த ஊடகமும் இருக்காது, ஊடகத்தை நடத்தியவர்களும் இருக்க மாட்டார்கள். உண்மையில் வெனிசுவேலாவில் இருப்பது தான் உண்மையான ஊடக சுதந்திரம்...
இந்தியாவில் இது போன்று பொதுயுடைமை ஆட்சி வர வாய்ப்பு உள்ளதா? ஒரு பொதுயுடைமை கடசி தலைவர் இந்தியாவில் அந்த வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளர்.உங்கள் கருத்து இது உண்மையா?
ReplyDelete//இந்தியாவில் இது போன்று பொதுயுடைமை ஆட்சி வர வாய்ப்பு உள்ளதா? ஒரு பொதுயுடைமை கடசி தலைவர் இந்தியாவில் அந்த வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளர்.உங்கள் கருத்து இது உண்மையா?//
ReplyDeleteவெனிசுவேலாவில் மொழிப்பிரச்சினை, இனப்பிரச்சினை இல்லை. அதனால், மக்கள் தமது பொருளாதார பிரச்சினைகளை மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் நிலைமை வேறு. பல நூறு இனங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட மதங்கள். இது போன்ற வேற்றுமைகளை விரிவு படுத்துவதே ஆளும் வர்க்கத்தின் அன்றாட கடமையாக உள்ளது. அதனால் அவர்களுக்கு இலாபம்.
இன்று கூட அவரது இறப்புச் செய்தியை வெளியிட்ட ஒரு செய்தி நிறுவனம் அவரை சர்வாதிகாரி என்றே வர்ணித்துள்ளது. சோசலிசமே வறுமையை ஒழிக்கும் கூர்மையான கருவி என்பதை என்றுதான் நம் மக்கள் புரிந்து கொள்வார்கள்?தம் பகைவர்களை அறியாது இருக்கின்றனரே. படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசியல் பார்வை இல்லையே.
ReplyDeleteஇந்தப் பதிவுக்கு நான் பாராட்டுத் தெரிவிக்க விரும்பவில்லை. நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன்.
ReplyDelete-குமரேசன்,
தீக்கதிர்.