இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு, சில வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. ஸ்பெயின் ஆட்சியைப் பிடிக்க விரும்பிய பாசிச படைகளை எதிர்த்து பல்வேறு இடதுசாரிக் குழுக்கள் போராடின. ஸ்பெயினின் சில பகுதிகள் பாசிச இராணுவக் கட்டுப்பாட்டின் கீழும், சில பகுதிகள் இடதுசாரிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்துள்ளன. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், சித்தாந்த அடிப்படையில் பிரிந்திருந்தனர். ஸ்டாலினிசவாதிகள், ட்ராஸ்கிசவாதிகள், அனார்கிசவாதிகள், மிதவாத சமூக-ஜனநாயக வாதிகள், ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள், விவசாயிகள் என்று அனைத்து பாட்டாளி வர்க்க மக்கள் கைகளிலும் ஆயுதங்களை வழங்கினார்கள். கிராமங்கள், நகரங்கள் தோறும், பாட்டாளிவர்க்க அதிகார சபைகள் ஏற்படுத்தப் பட்டன. பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
ஸ்பானிய புரட்சியில் இணைந்து கொள்வதற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சென்ற வெளிநாட்டு தொண்டர்களின் அனுபவத்தை கூறும் திரைப்படம் Land and Freedom.
பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட, இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட படங்களை தயாரித்த, Ken Loach இயக்கிய சிறந்த திரைப்படங்களில் ஒன்று. ஸ்பெயின் புரட்சியாளர்களுக்கு ஸ்டாலின் ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருந்த போதிலும், ஸ்டாலினிசம் போராட்டத்தின் தோல்விக்கு காரணம் என்பது இயக்குனரின் வாதம். இருப்பினும், தோல்வியடைந்த புரட்சிக்கு காரணம் என்று, ஒவ்வொரு இடதுசாரி இயக்கமும் ஒன்றை மற்றொன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை ஸ்பானிய மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், இடதுசாரி இயக்கத்தினுள் நிலவிய ஒற்றுமையின்மை காரணமாக, இறுதியில் பாசிச சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றின. எதிர்காலப் புரட்சியாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் சில, இந்த சினிமாவில் இருக்கலாம்.

நல்ல பதிவு..சில தகவல்கள் புதிது.படம் பார்க்கிறேன்.
ReplyDelete